Tuesday, April 5, 2011

ஒ தமிழ்த்தாயே - இந்திமாதாவை அறிமுகப்படுத்து ...

சில வருடங்களுக்கு முன்னால் பெங்களூரில் பேருந்தை விட்டு கீழே இறங்கியவுடன் எதிரப்பட்ட ஆட்டோகாரரிடம்   என் முதல் சம்பாஷனை:
'தமிழ் தெரியுமா'

'கொத்தில்லா சார் '

'ஹிந்தி ?'

'போலோ  சாப்'

'இதர் கே.ஆர் புரம் மே, காவேரி வாட்டர் டேன்க் பெஹ்லே ,ஸ்ட்ரைட் சலோ , லெப்ஃட் மே தோடா ஏக் கர் ...'

'உட்காருங்க சார்'

'கித்னே ரூபே ?'

'நூத்தி அம்பது ஆகும் சார்..'

'ஒ..என்னங்க நல்லா தமிழ் பேசறீங்க .. தெரியாதுன்னு சொன்னீங்க ?'

'உள்ள தள்ளி உட்காருங்க சார்.. லக்கேஜ் கீழ விழுந்துட போவுது ..'

'ஏங்க.. சொலுங்க .. ஏன் தமிழ் தெரியாதுன்னு சொன்னீங்க ?'

'வேண்டாம் சார் . விட்டுருங்க'

'எதுனாலும் சொல்லுங்க சார்.. கோவிச்சிக்க மாட்டேன் '

'ஹ்ம்ம் .. இவ்வளவு  கேவலமா ஹிந்தி தெரிஞ்சு வெச்சுகிட்டு அத நான் புரிஞ்சுக்குவேன்னு நீ நம்புறப்போ , என் தமிழ்  எப்படியும் உன்னோட ஹிந்திய விட மட்டமா இருக்க போறதில்லன்னு எனக்கு இப்போதான் நம்பிக்கை வந்துச்சு சார் ' 

'  ஒ.. சரி முன்னாடி பாத்து ஓட்டுங்க..'


இப்படி கேவலப்பட  ஆரம்பிச்சு இன்னும் அது தொடருது ..  இதற்கு ஆதி காரணம் யார் ?  ஏறக்குறைய சராசரி முப்பது வயசுல இருக்குற எந்த தமிழனுக்கும் தமிழ் தவிர வேற மொழியறிவு இல்லாம இருக்குறதுக்கு காரணம் யார்?

'நம்ம அப்பா காலத்துல 'இந்தி எதிர்ப்பு போராட்டம்'னு ஒன்னு பண்ணுனாங்க .. அதுல பத்த வெச்ச வேட்டு இதுன்னு சொல்லறாங்க .. அத சும்மா வேடிக்கை பாத்துட்டு இருந்தவன்தான் இன்னைக்கு வரைக்கும்  பசங்க மேல திணிச்சு அதை சப்போர்ட் பண்றான்.. அத பண்ணுனவங்க பேரப்பிள்ளைகள் எல்லாம் நல்லா ஹிந்தி கத்துகிட்டு   இப்போ மத்திய அமைச்சரவைல இருக்காங்க .. ' அப்படினு ஒரு கோஷ்டி சொல்லிட்டு இருக்கு.. ஆனா அது அந்த தலைமுறைக்கு மட்டும்தான் பொருந்துமே தவிர அதுக்கு அடுத்த தறுதலைமுறைகளான  நமக்கு இல்லை.

அப்போ எங்க இருக்கு இதோட ஆணிவேர்?-னு பாக்கும்போது , எப்போ ஹிந்திய ஆறாவதுல  இருந்து செகண்ட் லாங்குவேஜா தமிழுக்கு ஒரு ஆப்சனா வெச்சாங்களோ அங்கதான் இது தொடங்குது. அப்போ பள்ளிகூடத்துல தமிழும் ஹிந்தியும் நமக்கு ஒரு இம்சைதான் .. ஆனா தமிழ்ல எதோ பார்டர் பாஸ் வாங்கிடுவோம்-னு இருந்த நம்பிக்கை ஹிந்தில இல்லாம போய்டுச்சு..

தப்பு பண்ணிடாங்க தமிழக பாடப்பிரிவு  குழுவினர்.. ஆறாவதுக்கு அப்புறமும் ஹிந்தில பாஸ் ஆனாதான் முழு பாஸ்னு சொல்லியிருந்தா எப்படியோ படிச்சு கொஞ்சமாவது சமாளிக்கிற   அளவுக்கு ஹிந்தி கத்துட்டு இருந்திருப்போம்.  ஹிந்தி எனக்கு புரியலைன்னு நம்ம பசங்க யாராவது புலம்புனா அத ஏத்துக்க முடியாது .. ஏன்னா தமிழ்ல மட்டும் நீ என்ன சுலபமாவா படிச்ச ?

'உரைமுடிவு காண்பா னிளையவ னென்ற
நரைமுடி மக்க லுவப்ப 
நரைமுடித்து சொல்லால் முறைச் செய்தான்
 சோழன் குலவிச்சை கல்லாமல் பாகம் படும் 'னு பல் வலிக்கிற மாதிரி  மனப்பாடம் பண்ணி பாஸ் பண்ணுன நமக்கு ஹிந்தியும் ஒன்னும் பெரிய விசயமா இருந்திருக்க முடியாது.  இருந்திருந்தாலும் படிச்சு தொலைச்சிருந்தா பிரச்சனை இருந்திருக்காது .

ஆக அவனுகளுக்காவது ஹிந்திய அவசியப்பாடமா வைக்கனும்னு புத்தி இருந்திருக்கணும் .. இல்ல நமக்காவது அத படிக்கணும்னு சுயபுத்தி இருந்திருக்கணும்.. ரெண்டுப்பக்கமும் தப்பு பண்ணி ,இப்போ ஹிந்தி பேசறவங்கள கண்டா ஏதோ அவதார் - பேண்டோரா கிரகத்துல இருந்த வந்தமாதிரி ஒதுங்க வேண்டியிருக்கு..

சரி பட்டபடிப்புதான் தமிழர்களை கை விட்டுடுச்சு .. பிடித்தமான படபடிப்பு கை கொடுக்கும்னு பாத்தா அதுவும் கெடயாது.. சத்தியமா 'சோலே'க்கு
அப்புறமா லகான் மட்டும்தான் நம்ம ஊருல தியேட்டர்ல போட்டாங்க.. 
பெங்களூர்ல ஒரு இல்லத்தரசி அசால்ட்டா தமிழ்,தெலுகு,கன்னடம்,ஹிந்தி ,இங்கிலீஷ் பேசுறாங்க.. ஏன்னா அவங்க உபேந்திராவோட 'ஏ' , 'உப்பி தாதா' மட்டும் நோடரதில்ல .. சுப்ரமணியபுரம் , மதராசப்பட்டினமும்   பாக்கறாங்க.. பொம்மரிலுவும் சிம்மாத்ரியும்  'சூடு'றாங்க  ,சீனி கம் , லவ் ஆஜ்கல் -னு 'தேகோ'றாங்க , இன்செப்சன் , சால்ட் எல்லாம் 'See'றாங்க..

ஆனா நம்ம புண்ணியவதிகளும் சரி , ஆபீஸ் முடிஞ்சா நாமளும் சரி , நாதஸ்வரமும்  சூப்பர் சிங்கர் 344 ,ஜாக் ஜாக் ஜாக்பாட் -னு ஒரு குறுகிய வட்டத்துல சுத்த ஆரம்பிப்போம்.த்ரீ இடியட்ஸ்-ஐ கூட நண்பர்கள்னு ரீமேக் பன்னுனாதான் பாப்போம்.   இப்படி இருந்தா ஹிந்தி வந்து என்ன கத்துக்கோ கத்துக்கோனு கெஞ்சுமா..? தமிழ்நாட்ட விட்டு வெளிய வாடான்னு பொறுமையா இருந்து அப்புறம் அது வேலையை ஆரம்பிக்கும்..  

ஆந்தரா பசங்கள மட்டும் பல்ராம் நாயுடுன்னு   கிண்டல் பண்றோமே , அவங்க யாராவது ஹிந்தி தெரியாம இருக்காங்களா ? அதுக்கும் காரணம் இருக்கு ... ஆபீஸ்லயும் சரி வேற எடத்துலயும் சரி - நம்ம சரவணன் , சிவா , காயத்ரி , சுப்ரமணி,பூர்ணிமா  எல்லாம் ஒன்னா சேர்ந்து  சுத்துவோமே தவிர , அட நம்ம கூட சுனில் சிங்கும் ,ஸ்ரீராம்  பெனர்ஜீயும்,  ரேகா த்ரிவேதியும் இருக்காங்களே , அவங்களோட பேசி நாமளும் ஹிந்தி கத்துக்குவோம்னு துளி நெனப்பு கூட வராது..
உனக்கு இருக்குடா ஒரு நாளுன்னு  ஹிந்தி மொறைச்சு பாத்துட்டே இருக்கும்.

இப்போ அடுத்த மாநிலத்துக்கு வந்து அடிபட்டப்பின்னாடி ,யார் ஹிந்தில பேசுனாலும் அது நம்மள பத்தி இருக்குமோனு பயந்து பயந்து  வேற வழியில்லாம ஊருக்கு போகும்போது பழைய புத்தகக்கடைல  'முப்பது நாளில் ஹிந்தி கத்துக்கொள்வது எப்படி?'னு ஏழு கழுத வயசுல வெக்கமே இல்லாம வாங்கி படிக்க ஆரம்பிப்போம்.  அதுக்கு அப்புறம் எந்த அளவுக்கு ஹிந்தி வரும்னு தெரிஞ்சுக்க விருப்பப்பட்டா பதிவோட தொடக்கத்துல இருந்து படிங்க.

இனி புத்தகத்தை நம்புனா ஆகாதுன்னு ஒரு ஹிந்தி பையனை/பொண்ணை புடிச்சு ஹிந்தி கத்துகுடு-ன்னு கேப்போம். அதுவும் நம்ம இங்கிலிஷ்ல பீட்டர் விடுறத பாத்துட்டு ஒரு ஆர்வக்கோளாறுல சொல்லிகொடுக்க ஆரம்பிக்கும்..  அப்புறம் நம்ம வேகத்தை பாத்துட்டு சந்தேகமா ,கொஞ்சம் அட்வான்ஸ்டா போகும்போதுதான் இந்த மந்திக்கு  எதுக்கு இப்போ ஹிந்தி-னு யோசிக்கும்.  இதெல்லாம் ஒரு ஜென்மமானு ஒதுங்கி ஒதுங்கி பாத்துட்டு கடைசில எல்லார் முன்னாடியும் 'உங்களுக்கு சொல்லிகொடுத்து கொடுத்து மேரா ஹிந்தி மர்கயா'னு அவமானப்படுத்தும்.அப்புறம் நாம பாத்தா ஒ நஹி தேகோ தான்..

(பதிவுக்கு சம்பந்தமான ஒரு பிரேக்  - நானாவது தமிழ் அதிகம் தெரிஞ்ச ஒரு மாநிலத்துல இருந்து சமாளிக்கிறேன்.. என் நண்பர் ஒருத்தர்.. பேர் சொல்ல விருப்பமில்லை..'மேரா நாம் கோபிநாத் ஹேய்'னு தன்னை அறிமுக படுத்தகூட தெரியாது..அவர் ஏதோ நம்பிக்கைல புனே போய் மூணு மாசம் ஆகுது.. அவர் படுற பாட நெனைச்சா சிரிப்பும் , கூடிய சீக்கிரம் ஹிந்தி கத்து தொலைச்சுடுவானே-னு நெனச்சா பொறாமையாவும் இருக்கு ) 

இப்படி எல்லாம் கேவலப்படனுமா தமிழர்களே .. உடனே ஹிந்தி கத்துக்கோங்க ..
சமீபத்துல அக்கா பையனோட சேர்ந்து மேட்ச் பாக்கும்போது ' இருபது ரன் எடுத்தா இந்தியா ஜெயிக்கும்'னு சொன்னப்போ 'இருபதுனா  எவ்ளோ மாமா?-னு கேக்கும்போது வருத்தமாத்தான் இருக்கு .. ஆனா வருங்காலத்துல  வெளிய போய் அவமானப்படுறத காட்டிலும்   உள்ளூர்ல தமிழ் தெரியலைன்னு உள்ளுக்குள்ள வேதனைபடுறது பரவாயில்லன்னு தோணுது..

 உள்ளூர்ல தமிழ் தெரியலேன்னா நமக்குதான் அவமானம்.. வெளியூர் போய் ஹிந்தி தெரியலைன்னு முழிச்சா தமிழர்களுக்கே அவமானம்.

பதிவ  படிச்சுட்டு திட்டுற தமிழ்குடிதாங்கிகள் தயைகூர்ந்து தங்கள் கிணறு  தாண்டி வெளியே வந்து மாநில கடலில் மிதந்து ,அனுபவபட்டு பிறகு நன்றாக ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வேண்டுமானாலும் திட்ட வேண்டுகிறேன்..

'தமிழ் வாழ , தமிழர்கள் வாழ ..........ஹிந்தி கத்துகோங்க '    

32 comments:

Anonymous said...

ஹிந்தி தெரியாமல் தமிழன் தாழ்ந்து போகவில்லை. உயர்ந்தே வாழ்கிறோம்.

VJR said...

பரிதாபத்துக்குரியப் புரிதல்கள். வேறென்ன சொல்ல?

எந்த ஒரு இந்திய மொழியும் தெரியாமல் இங்கு வந்து வியாபாரம் செய்த மேலை நாட்டவனை நினைத்து ஆச்சரியப்படுகிறேன்.

இந்தி நாம் கற்றுக்கொள்ளவில்லையே என்று கவலைப்படுவதைவிட்டு, தமிழை தமிழ்நாட்டைவிட்டு பரப்பாமல் இருக்குறோமே என்று வருத்தப்படலாமா? என ஏன் யோசிக்கக்கூடாது?

லண்டனிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் ஃப்ரெஞ்சு,இத்தாலி,ஸ்பெயின்,ஜெர்மனிக்காரர்களிம் ஆங்கிலத்தில் பேசினால் அடிக்க வருவானாம்.

any way good writing.

Anonymous said...

இது ஒரு முட்டாள்தனமான பதிவு . கட்டாயப்படுத்தி ஒரு மொழியை கற்று தர வேண்டும் என்பது சர்வாதிகாரம். எதற்காக ஹீந்தி தெரியவில்லை என அவமானப்பட வேன்டும்/ தமிழ் தெரியவில்லை என்று இங்கு வரும் வட இந்தியர்கள் வெட்கி தலைகுனிகின்றார்களா? திமிரோடு தலைக்கனத்தோடு ஹிந்தியில் தானே பேசுகிறார்கள்? ஹிந்தியில் பாஸானால் தான் பாஸ் ஆக்க வேண்டும் என்று சொல்கின்றீரே நீங்கள் எல்லாம் உண்மையான தமிழரா?

Barari said...

டில்லிக்காரர் தமிழகம் வந்து ஹிந்தி பேசினால் மிக உயர்வாக மதிக்கப்படுவார்.அதே சமயம் தமிழர் டில்லி போய் ஹிந்தி தெரியவில்லையானால் அது தமிழருக்கு கேவலம்.என்ன அளவுகோல் இது?சவூதி/ஜெர்மனி/பிரான்ஸ் செல்ல முறையே அரபி ஜெர்மனி பிரன்ச் கற்றுக்கொண்டுதான் போவீர்கள் போல் தெரிகிறது.(மேற்கண்ட நாடுகளில் ஆங்கிலம் பேசுபவர்களை ஒரு பூச்சியை போல் பார்ப்பார்கள்)

பனிமலர் said...

அப்போ இந்தி மட்டும் போதாது, அரபி, பிரஞ்சு, பானிசு மற்றும் அனைத்து மொழிகளையும் தமிழக அரசு தன் பாடத்திட்டத்தில் தான் கற்றுக்கொடுக்கனும் என்று சொல்வீர்கள் போல இருக்கு. ஏன் அரபிக்கு, மலேயாவுக்கும் வேலை போவோர்கள் எல்லாம் எப்படி அந்த மொழியில பேசுவார்களாம்.

இது எப்படி தெரியுமா இருக்கிறது, நான் மட்டும் கட்டட பொறியியல் படிக்கும் போது எனக்கும் கணணி கத்துக்கொடுத்து இருந்த நானும் இப்படி இலட்ச இலட்சமா சம்பாரித்து இருப்பேனே. எனக்கு கணணி கற்றுக்கொடுக்காமல் போனது அந்த பல்கலைகழகத்தின் கோளாறு என்று சொல்வது போல் இருக்கிறது.

இப்படி சொன்னதுமே கேட்பவர்கள் சொல்வார்கள், கல்லூரியில் கற்றுக்கொடுக்கவில்லை என்றால் என்ன, எத்தனை இடங்களில் பயிற்றுவிக்கிறார்கள், ஒரு 3 மாதம் கடித்தால் சாவா வரை கலக்கலாமே என்று. அதுவும் மொழிதான் இந்தியும் மொழிதான். அவ்வளவு தேவையாக இருந்தால் கற்றுக்கொள்ள வேண்டியது தானே. அதற்கு எதற்கு தேவை இல்லாமல் நாங்கள் எல்லாம் படிக்க வேண்டும் என்று எதிர்பார்கிறீர்கள் என்று தான் புரிய இல்லை, விளக்குவீர்களா..... நண்பரே....

Anonymous said...

துணிச்சலான பதிவு இது. கண்டிப்பா தமிழ், ஆங்கிலம் தவிர வேறு ஒரு பிராந்திய மொழி வேண்டும். தமிழகத்தை விட்டு வெளியே அல்ல தமிழ் நாட்டிற்குள்ளேயே ஹிந்தி தெரிந்தாகவேண்டும். அப்படி ஒரு சூழல் இருக்கிறது,

thesouthchennai said...

நண்பரே உங்கள் பதிவு மிகவும் நன்று.... பெயர் கூட வெளியிட மறுக்கும் இந்த ஹிந்தி எதிர்பாளர்கள் தங்கள் குழந்தைகள்,பேரன்கள்,மட்டும் வடமாநிலங்களில் படிக்க வைத்து முன்னேற்றிவிட்டனர்...ஏமாந்தவன் மூடன் தமிழன்...தான்...

சென்னையில் உள்ள தகவல் தொழில் நுட்பதுறையில் பெரும்பாலும் வடமாநிலத்தவரே அதிகம்...தமிழன் செய்யும் தொழிலே அவர்களுக்கு மலம் அல்லுதல்,சுத்தம் செய்தல்..போன்ற வேலைக்கு தான் பயன்படுத்துகிறார்கள்.. ஏன் இல்லை? சொல்லும் இந்த மூடர்கள் ...இருக்கிறான்... ஆங்கிலத்தையும்,ஹிந்தியும் சரளமாக பேசுபவனாக இருக்கிறான்...

தமிழனே தமிழை நாம் தான் உலக்கிற்க்கு எடுத்துச் செல்லமுடியும்..இதற்க்கு ஒரு ஜி யு போப் தேவையில்லை...

Anonymous said...

thanks to vjr,தமிழை தமிழ்நாட்டைவிட்டு பரப்பாமல் இருக்குறோமே என்று வருத்தப்படலாமா? என ஏன் யோசிக்கக்கூடாது?நீங்க தான் யோசிக்கனும்?..தமிழை மட்டும் படிச்சி நீ மட்டும் தன் வச்சிக்கனும்...பல மொழிகளை கற்று தமிழ் நூட்களை மற்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கனும்,,அப்பதான் உலகிற்க்கு தமிழ் சிறப்பு தெரியும்..

Mohanraj said...

அருமையான பதிவு நண்பரே!!

பெயர் சொல்ல விரும்பாத நபர்கள், பின்னூடம் செய்தவர்கள் நால்வருக்கும் சொல்கிறேன் கேளுங்கள்..

@ "இது ஒரு முட்டாள்தனமான பதிவு . கட்டாயப்படுத்தி ஒரு மொழியை கற்று தர வேண்டும் என்பது சர்வாதிகாரம். எதற்காக ஹீந்தி தெரியவில்லை என அவமானப்பட வேன்டும்/ தமிழ் தெரியவில்லை என்று இங்கு வரும் வட இந்தியர்கள் வெட்கி தலைகுனிகின்றார்களா? திமிரோடு தலைக்கனத்தோடு ஹிந்தியில் தானே பேசுகிறார்கள்? ஹிந்தியில் பாஸானால் தான் பாஸ் ஆக்க வேண்டும் என்று சொல்கின்றீரே நீங்கள் எல்லாம் உண்மையான தமிழரா?"

தமிழ் மட்டுமே கற்க வேண்டும் என்பதே சர்வாதிகாரம்.... தமிழ் மற்றும் பிற மொழிகளையும் கற்போம் என்பாதற்குப்பெயர் சர்வாதிகாரம் இல்லை...

தமிழுக்காகவும், தமிழர், நாட்டுக்காகவும் போராடி பல விடுதலை போராட்டங்களை செய்த தேசிய கவி, மகாகவி, பாரதி, பாரதியார் இப்படி பலவாறு அழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதியும் தமிழ் அல்லாது பிற மொழிகளான சம்ஸ்க்ருதம், வங்காளம், ஹிந்தி, ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

தமிழ் அல்லாது பிற மொழிகலயும் கல், தமிழன் என்று தலை நிமிர்ந்து நில்..

Anonymous said...

இது என்ன முட்டாள் தனமாக இருக்கிறது. நீங்கள் சொல்வதை பார்த்தால் ஜெர்மன் போகும் போது ஜெர்மனியும், பிரான்சு போகும் போது பிரஞ்சு என எல்லாத்தையும் கற்றுக் கொடுக்க சொல்வீங்கப் போல !!! உங்களுக்கு பெங்களூர் போய் வாழணும் என்றால் முதலில் நமது அண்டை மொழியான கன்னடத்தை அல்லவா படித்து இருக்க வேண்டும். என்னிடம் தான் தினம் தினம் ஹிந்தியில் வந்து பேசுகிறார்கள் பலர். நான் லாவகமாக சொல்லிவிடுவேன் எனக்கு இந்தி தெரியாது என்று, பிறகு அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவார்கள். உண்மையில் எனக்கு இந்தி ஓரளவு தெரியும் என்றாலும் ஆங்கிலத்திலேயே பேசுவேன். சில வெளிநாட்டவர் கேட்பார் இந்தியாவில் இருந்து வந்து இந்தி தெரியாத என நான் சொல்வேன் இந்தி மட்டுமே இந்தியாவின் தேசிய மொழி இல்லை என ..........................

Anonymous said...

ஏன்யா உன்னோட இயலாமைக்கு அரசியல்வாதிங்க மேல பழிய போடுறே. உனக்கு வேணும்னா சொந்த முயற்சியில கத்துக்கோ. அதுக்குன்னே கட்டி வைச்சிருக்கானே டி. நகர்ல “இந்தி பிரசார சபா”. எவன் உன்னை கையப் புடிச்சு தடுத்தான். போய்யா.

சிவகுமார் said...

சென்னையில் மென்பொருள் துறையில் வேலை செய்யும் ஹிந்திக்காரன் தமிழ் கத்துகிட்டா வேலை செய்கிறான்? இல்லையே . அவன் மட்டும் தமிழை கத்துக்காம சென்னையில் வேலை செய்யும் பொழுது ஏன் உன்னால் பெங்களூரில் ஆங்கிலத்தை மட்டும் தெரிந்து கொண்டு வேலை பார்க்க முடியாது.
யோசி நண்பா...

Anonymous said...

மோகன்ராஜ் ! நான் இந்த இடத்திற்க்கு புதியவன். எனக்கு என்று ஒரு அக்கவுன்ட் இல்லாத்தால் அனானிமஸ் ஆப்ஷனில் பதிவு செய்தேன். என்ன் சொன்னீர்கள்? தமிழை கட்டாயம் படிக்க வேன்டும் என்பது கூட சர்வாதிகாரமா .அந்தந்த மாநிலங்களில் வாழும் மக்கள் அவரவர் தாய்மொழியை கட்டாயம் கற்றுத் தான் ஆக வேன்டும்.வேற்று மொழிக்காரர்கள் அங்கு வசிக்கும் போது அந்த மண்ணின் மொழியை கட்டாயம் கற்றுத் தான் ஆக வேன்டும். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

VJR said...

நண்பர் அனானி, ஆக ஆங்கிலேயன் மத்த மொழியெல்லாம் கற்றுக்கொண்டு ஆங்கிலத்தை வளர்த்தான். நல்ல கண்டுபிடிப்பு நண்பா.

நீங்கள் இன்னும் நல்லா யோசிக்கனும்.

அபிமன்யு said...

அனானிகளுக்கு பதில் சொல்வதில்லை என்ற ஒரு சிறிய கோட்பாடு வைத்திருக்கிறேன். தயவுசெய்து பெயரை மட்டுமாவது சொன்னால் பதில் உரைக்க வசதியாக இருக்கும்..

மக்களே .. நான் இங்கு பதிவிட்டது தமிழ் கற்க கூடாது என்றல்ல.. குறைந்தபட்சம் இன்னொரு மாநில மொழியாவது தெரிந்து கொள்வது நல்லது என்று..ஆனால் ஹிந்தியை சிபாரிசு செய்தது - எந்த மாநிலம் போனாலும் அங்கு பிழைத்து கொள்ளலாம் என்பதற்காகவே..

நண்பா சிவகுமார்,
எனக்கும் ஹிந்தி கத்துக்கொள்ளவேண்டுமென்ற வேண்டுதல் எல்லாம் இல்லை.. மற்றவர்கள் தமிழ் நாட்டில் தமிழ் கற்றுக்கொள்ளாமல் சமாளிப்பதற்கு
காரணம் நம் பெருந்தன்மை.. அவரோடு ஆங்கிலத்தில் உரையாடுவோம்.. ஆனால் இங்கு என்ன சொன்னாலும் மீண்டும் ஹிந்தியில் பதில் அளிக்கிறார்கள்.. என்ன செய்வது நண்பா ?

Anonymous said...

//இங்கு என்ன சொன்னாலும் மீண்டும் ஹிந்தியில் பதில் அளிக்கிறார்கள்.. என்ன செய்வது நண்பா ?//

போய் அவுங்க ஊர்ல பாணி பூரி விக்க சொல்லுங்க :)

vishali said...

arumayaana pathivu anna... naam iruvarum inda kodumayai sernthe anubavithirukirom.. :):):P
yenna than naam hindi kathukanum nu nenaichalum, naalu per naamala sutri hindi pesumbothu, "please can you speak in english, i don understand hindi" yendru naam solli, adarku avargal "then learn hindi na" yendru nakkallaga sollumbothu, "naan yenda hindi kathukanum.. i can manage with my thamizh and english.." apdi nu than kovam varuthu..

Jayadev Das said...

சமீபத்தில் உத்திர பிரதேஷ் சென்றிருந்தேன். அங்கே நம்ம தினகரன் பத்திரிக்கை விற்கிறார்கள். அதில் தினகரன் என்ற பெயருக்குக் கீழே दिनाकरण என்று ஹிந்தியிலும் பத்திரிகையின் பெயரைப் போட்டிருக்கிறார்கள். [பேப்பர் விற்கும் ஹிந்தி பசங்களுக்கு இது உதவும் போல]. ஹிந்தியை, போஸ்டாபீஸ், வங்கி, ரயில்கள் என எங்கும் தார் பூச்சி அழித்தவனுங்க கட்சியின் பத்திரிக்கை, பிழைப்பு என்று வந்ததும் ஹிந்தியில் பெயர் போட தயங்கினார்களா? ஹிந்தி படிக்க மாட்டேன் என்றால் அது நம்முடைய முட்டாள் தனம். கிட்டத் தாட்ட நாகு தென்னிந்திய மாநிலங்களைத் தவிர்த்து மற்ற எல்லா மாநிலங்களிலும் ஹிந்தி அனைவருக்கும் தெரிந்திருக்கிறது, பேசப் படுகிறது. தெற்கேயும், தமிழகத்தை விட்டு வெளியே எங்கு போனாலும் தமிழிக் காரனைத் தவிர மற்றவர்கள் ஹிந்தி பேசுகிறார்கள். நீ பிழைக்க வேண்டுமா, ஹிந்தி கற்றுக் கொள், வெறும் அரசியல் பண்ண வேண்டுமா, ஹிந்தி ஒழிக கோஷம் போடு அவ்வளவுதான்.

Anonymous said...

இந்திப் படியுங்கள், கன்னடம், தெலுங்கு, மலையாளம், பிரஞ்சு, ஜெர்மன் எது வேண்டுமானாலும் படியுங்கள். அது அவரவர் விருப்பத்துக்கும் தேவைக்கும் அமைய !!! நீங்கள் ஹிந்திப் படித்துள்ளீர்கள் என்பதால் தமிழ்நாட்டில் உள்ள 7 கோடி பேரும் இந்திப் படிக்க வேண்டும் என்று சொல்வது பாசிசமே !!! எந்த மாநிலத்தில் வாழ்பவர்களும் அந்தந்த மாநில மொழியை குறைந்தப் பட்சம் எழுத்துக் கூட்டிப் படிக்கவும், ஓரளவு பேசவும் கற்க பகுதி நேர வகுப்புகள் ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் மாநில மொழிகள் கட்டாயமாக்கப்படல் வேண்டும். இது வெளி மாநிலங்களில் வாழும் தமிழருக்கும் பொருந்தும். பெங்களூருவில் வேலை செய்பவர்கள் கன்னடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். பிறகு ஆட்டோக்காரன் என்ன பஸ் கண்டக்டரிடமும் கன்னடத்தில் மாத்லாடுங்கள். இடையில் இந்தி எதற்கு !!!

//தமிழகத்தை விட்டு வெளியே எங்கு போனாலும் தமிழிக் காரனைத் தவிர மற்றவர்கள் ஹிந்தி பேசுகிறார்கள்//

இது முற்றிலும் தவறான தகவல். ஆந்திராவில் குர்னூல் போனப் போதும், கர்நாடகத்தில் பல பகுதியில் இருப்பவர்களுக்கு இந்தி சுத்தமாக தெரியாது என்பதை அறிந்தேன், வங்காளத்திலும், ஒரிசாவிலும் இதே நிலை தான். தமிழ்நாட்டை தவிர வேறு இடத்தில் இந்தி சரளமாகப் பேசப்படுவதாகக் கூறுவது ஒரு மாயப் பிரச்சாரமே ஆகும்.

Mohanraj said...

// நீ பிழைக்க வேண்டுமா, ஹிந்தி கற்றுக் கொள், வெறும் அரசியல் பண்ண வேண்டுமா, ஹிந்தி ஒழிக கோஷம் போடு அவ்வளவுதான் //

சரியாக எடுத்துரைத்தீர்கள் ஜெயதேவ் தாஸ்!

நீ பிழைக்க வேண்டுமா, ஹிந்தி கற்றுக் கொள்,
வெறும் அரசியல் பண்ண வேண்டுமா, ஹிந்தி ஒழிக கோஷம் மட்டும் போடு, ஆனால் ஹிந்தி கற்றுக்கொண்டு உனது குடும்ப நபர்களுக்கும் கற்றுக்கொடுத்து டில்லியில் ஒரு சீட்டும் வாங்கிக்கொடு....

Mohanraj said...

// அந்தந்த மாநிலங்களில் வாழும் மக்கள் அவரவர் தாய்மொழியை கட்டாயம் கற்றுத் தான் ஆக வேன்டும்.வேற்று மொழிக்காரர்கள் அங்கு வசிக்கும் போது அந்த மண்ணின் மொழியை கட்டாயம் கற்றுத் தான் ஆக வேன்டும். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்//

அனானி அவர்களே சபாஸ்!!!
அந்தந்த மாநிலங்களில் வாழும் மக்கள் அவரவர் தாய்மொழியை கட்டாயம் கற்றுத் தான் ஆக வேன்டும். ஆனால் வேற்று மொழிக்காரர்கள் அங்கு வசிக்கும் போது அந்த மண்ணின் மொழியைக்கற்பதை விட இந்திய தேசிய பொது மொழியான ஹிந்தியை கற்பது தவறு இல்லை என்பதை சற்று நினைவில் கொள்ளவேண்டும்.

தாங்கள் சொல்வதை பார்த்தால் தமிழ் அல்லாது பிற அண்டைமாநில மொழியையும் கறக்கலாம் ஆனால் ஹிந்தி கற்றுக்கொள்ளக்கூடாது என்று சொல்லுவதைப்போல தெரிகிறது.

Mohanraj said...

// அந்தந்த மாநிலங்களில் வாழும் மக்கள் அவரவர் தாய்மொழியை கட்டாயம் கற்றுத் தான் ஆக வேன்டும்.வேற்று மொழிக்காரர்கள் அங்கு வசிக்கும் போது அந்த மண்ணின் மொழியை கட்டாயம் கற்றுத் தான் ஆக வேன்டும். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்//

அனானி அவர்களே சபாஸ்!!!
அந்தந்த மாநிலங்களில் வாழும் மக்கள் அவரவர் தாய்மொழியை கட்டாயம் கற்றுத் தான் ஆக வேன்டும். ஆனால் வேற்று மொழிக்காரர்கள் அங்கு வசிக்கும் போது அந்த மண்ணின் மொழியைக்கற்பதை விட இந்திய தேசிய பொது மொழியான ஹிந்தியை கற்பது தவறு இல்லை என்பதை சற்று நினைவில் கொள்ளவேண்டும்.

தாங்கள் சொல்வதை பார்த்தால் தமிழ் அல்லாது பிற அண்டைமாநில மொழியையும் கறக்கலாம் ஆனால் ஹிந்தி கற்றுக்கொள்ளக்கூடாது என்று சொல்லுவதைப்போல தெரிகிறது.

Jayadev Das said...

\\இது முற்றிலும் தவறான தகவல்.\\ எல்லோருக்கும் ஹிந்தி தெரிந்திருக்காது என்று நீங்கள் சொல்வது சரிதான். அதைத்தான் நான் முன்னரே நான்கு தென் மாநிலங்களைத் தவிர்த்து என்றும் சொல்லியுள்ளேன்!! நான் சொல்ல வருவது, உதாரணத்துக்கு பெங்களூரில் ஒரு அலுவலகத்தில் பணி புரிகிறீர்கள் என்றால், அங்கே உங்களோடு பணி புரியும் தமிழகம் தவிர்த்து மற்ற மூன்று தென் மாநில சக ஊழியர்கள் எல்லோருக்கும் ஹிந்தி தெரிந்திருக்கும், தமிழ்க் காரன் மட்டும் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அத்தனை பேரும் ஹிந்தி தெரியாமல் பே..பே.. என்று விழித்துக் கொண்டிருக்கிறான். இது என் அனுபவம். ஏன் இந்த நிலை?? மற்றவர்களுக்கெல்லாம் மொழிப் பற்றே இல்லை நமக்கு மட்டும்தான் இருக்கிறதா?
இன்னொரு அறிவுப் பூர்மான கேள்வியை நமது கழகக் கண்மணிகள் கேட்கிறார்கள். ஹிந்தி தெரிந்தால் வேலை கிடைக்கும் என்றால் வடமாநிலங்களில் எல்லோரும் வேலையில் இருக்க வேண்டுமே? [இப்படிப் பேசி பேசியே எங்களை கேனைகளாக்கிட்டேங்கலேடா!!]. இது நம்மை முட்டாளாக்கும் லாஜிக். நீச்சலடித்தால் உடம்பு இளைக்கும் என்று சொன்னால், "திமிங்கலம் எந்நேரமும் நீச்சலடிச்சுகிட்டே தான் இருக்கு, அது என்ன உடம்பு இளைச்சு போச்சா" என்று கேட்பது எவ்வளவு கேனத்தனமோ அதே மாதிரி கேனத்தனமான லாஜிக் தான் இது. ஹிந்தி தெரியாத காரணத்தால் பணியில் பதவியுயர்வு மறுக்கப் பட்டு வேதனைப் படும் தமிழ் ராணுவ அதிகாரிகள் ஏராளம், இதே போல எல்லா துறைகளிலும் கூறலாம்.
ஐரோப்பாக் காரன் மொழி ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ள அடிதடியே நடக்கும் போது நாட்டில் பாதிக்கும் மேலான மக்கள் பேசும் நாம் நட்டு மொழியைக் கற்றுக் கொள்வதில் தவறென்ன?


@Mohanraj
நன்றி நண்பரே!!

Anonymous said...

@மோகன்ராஜ் :
எனக்கு தனி அக்கௌன்ட் இல்லை என்பதற்காகதான் அனானியாக பின்னூட்டம் இட்டேன்..
@ஜெயதேவ் :
உன்னை போல, இத பதிவை எழுதியவன் போல இருக்கற ஆளுகள எவன் தடுத்தான் ..ஏற்கனவே சொன்ன மாதிரி போயி டி. நகர்ல “இந்தி பிரசார சபா” சேர வேண்டியதுதான..
எதுனாலும் உடனே அரசியல்வாதியா மேல பழிய போடறது.. திருந்துயா ..
//பேரப்பிள்ளைகள் எல்லாம் நல்லா ஹிந்தி கத்துகிட்டு இப்போ மத்திய அமைச்சரவைல இருக்காங்க .. ' அப்படினு ஒரு கோஷ்டி சொல்லிட்டு இருக்கு..//
இந்த உள்குத்தெல்லாம் குத்தாத .. நேரா பேசு..

--Manohar

அபிமன்யு said...

அது சரி சார்.. கொஞ்சம் ஒரு நிமிஷம் செலவு பண்ணி ஒரு அக்கௌன்ட் தொடங்கி பின்னூட்டம் குடுங்களேன்.. நல்ல பதிலா சொல்றேன்..

சும்மா எதோ ஒரு பேருல டயலாக் விடறது பழைய ஸ்டைல் சார்..

//இந்த உள்குத்தெல்லாம் குத்தாத .. நேரா பேசு..//

நேரா பேசறேன் நண்பரே .. நான் எங்கயும் ஒளிஞ்சுகள.. நீங்க வளைய விட்டு வெளிய வாங்க..
ஆரோக்கியமான , நாகரீகமான விவாதத்திற்கு நான் எப்போதும் தயார்.

Jayadev Das said...

\\@ஜெயதேவ் :
உன்னை போல, இத பதிவை எழுதியவன் போல இருக்கற ஆளுகள எவன் தடுத்தான் ..ஏற்கனவே சொன்ன மாதிரி போயி டி. நகர்ல “இந்தி பிரசார சபா” சேர வேண்டியதுதான.. எதுனாலும் உடனே அரசியல்வாதியா மேல பழிய போடறது.. திருந்துயா .. \\ நாங்க எந்த பிரசார சபாவுல சேரணும்னு நீங்கள் சொல்லித் தரவேண்டியதில்லை அனானி அன்பரே. அரசியல் வாதியைப் பார்த்து "நீ ரொம்ப நல்லவன்" ன்னு சொன்ன முதல் ஆளு இந்தியாவிலேயே நீராகத்தான் இருப்பீர். இங்கே எல்லோரும் ஹிந்தி கட்டாயாமாகத்தான் கற்றுக் கொள்ளவேண்டுமென்று யாரும் வற்ப்புறுத்தவில்லை, நீ பிழைக்க வேண்டுமானால் ஹிந்தி கற்றுக் கொள், அரசியல் வியாதி பிழைக்க வேண்டுமானால், ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பண்ணி நீ நாசமாப் போ, அவ்வளவுதான். ஆனாலும், உன்னை மாதிரி சோம்பு தூக்கிகளுக்கு கட்சிகளில் இருந்து எழும்புத் துண்டுகள் தாராளமாக வீசப் படும், அதைப் பொறுக்கித் தின்று விட்டு அவனுங்களுக்கு வக்காலத்து வாங்கும் வேலையை நன்றி விசுவாசத்தோடு வாலை ஆட்டிக் கொண்டு நீர் செய்கிறீர். மக்கள் எக்கேடு கேட்டல் உனக்கென்ன, அல்லது உன் தலைவனுக்குத்தான் என்ன? நீரும், உமது குடும்பமும் சவுகரியமாக இருந்தால் போதும். ஹிந்தியை தேவைக்கேற்றார் போல படித்த மற்ற மூன்று தென் மாநிலங்களும் என்ன கெட்டுப் போய்விட்டார்கள், எதிர்த்த தமிழகம் என்ன வாழ்ந்து விட்டீர்கள்? எல்லாமே இலவசமா கிடைக்காதா என்று ஏங்கி நிற்கும் பிச்சைக் காரர்களானது தான் மிச்சம்.

Unknown said...

//பதிவ படிச்சுட்டு திட்டுற தமிழ்குடிதாங்கிகள் தயைகூர்ந்து தங்கள் கிணறு தாண்டி வெளியே வந்து மாநில கடலில் மிதந்து ,அனுபவபட்டு பிறகு நன்றாக ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வேண்டுமானாலும் திட்ட வேண்டுகிறேன்.//

ఎథవ సన్నినోదా! బుథ్థి లేథా? కదుప్పుక్కు అన్నం థిన్దున్నావా గద్ది థిన్తున్నావా?

நீங்க சொன்ன மதிரியே வேற மொழியில திட்டியாச்சு. தெலுங்கு தெரிஞ்சவங்க யாரையாவது வச்சு படிச்சுத் தெரிஞ்சுக்குங்க. அர்த்தம் தெரிஞ்சிக்கிட்ட பிறகு “தமிழ்த் தாயே... தெலுங்கு மாதாவை அறிமுகம் செய்”னு அடுத்த பதிவு போடுங்க. அங்க வந்து குஜராத்தில திட்டிட்டுப் போறேன்.

ரொம்ப மட்டமான சிந்தனையா இருக்கறதால என்னோட மைனஸ் ஓட்டை முதல் ஓட்டாகக் குத்திட்டு கிளம்புகிறேன்.

jothi said...

ஒரு மொழியை சேர்த்து க‌ற்றுக்கொள்வ‌தால் என்ன‌ குறை வ‌ந்துவிட‌ப்போகிற‌து. ப‌த்தாம் வ‌குப்பில் நாம் ப‌டித்த‌ அல்ஜீப்ராவும்,ரூத‌ர்போர்டு அணுக்கொள்கையும், ஆப்ரிக்கா க‌ண்ட‌த்தின் புவியிய‌ல் வ‌ரைப‌ட‌மும் ந‌ம‌க்கு எத்த‌னை பேரில் ப‌ய‌ன‌ளிக்கிற‌து.? அதைப்போல‌த்தான் ஹிந்தியும். த‌மிழ் நாட்டிலியே இருப்ப‌வ‌ர்க்கு அது ப‌ய‌ன்ப‌ட‌ப்போவ‌தில்லை. ஆனால் வ‌ட‌மாநில‌த்திற்கு செல்லும் போது அத‌ன் பாதிப்புக‌ள் ந‌ன்றாக‌த்தெரியும்.

இங்கே யாரும் த‌மிழைப்ப‌டிக்காதீர்க‌ள் என‌ சொல்ல‌வில்லை. ஆனால் ஹிந்தியும் ப‌டிப்ப‌தால் குறையில்லை என்றே சொல்லுகிறார்க‌ள். என்னைப் பொறுத்த‌வ‌ரை அதில் ஒன்றும் த‌ப்பில்லை.

ப‌ள்ளிக்கூட‌ நேர‌த்தில் ஹிந்தியும் சேர்த்து ப‌டித்திருந்தால் நிறைய‌ பேருக்கு க‌ண்டிப்பாக‌ ப‌ய‌ன்ப‌ட்டிருக்கும். நாம் ப‌டித்த‌ புற‌னாறும், அற‌ நானூறும் அந்த‌ புத்த‌க‌த்திலேயே முடிந்துவிட்ட‌து. அதை நாம் எங்கே ப‌ய‌ன்ப‌டுத்தினோம்? அது யாருக்கு ப‌ய‌ன்ப‌ட்ட‌து. த‌மிழ் முதுனிலை ப‌டிப்புக‌ளை த‌விர‌,..?

த‌மிழ் மொழியை ப‌டிக்க‌த்தான் வேண்டும். அதில் ச‌ந்தேக‌மில்லை. ஆனால் ஹிந்தி மொழியை சேர்த்து ப‌டிப்ப‌தால் த‌வறேதும் இல்லை. எங்கோ பிற‌ந்த‌ ஆங்கில‌த்தை ப‌டிக்கிற‌ ந‌ம‌க்கு இங்கே ப‌க்க‌த்தில் இருக்கிற‌ ஹிந்தியை க‌ற்றுக் கொள்வ‌தில் என்ன‌ க‌ஷ்ட‌ம்? அதில் என்ன‌தான் இழ‌ப்பு இல்லை த‌வ‌று?

Anand said...

I spent four years in Pune, with very little Hindhi. But i was able to manage using English, since more 99% all study in English medium schools.

siva said...

"பரிதாபத்துக்குரியப் புரிதல்கள். வேறென்ன சொல்ல?"

siva said...

"பரிதாபத்துக்குரியப் புரிதல்கள். வேறென்ன சொல்ல?"

Indian said...

// நான் சொல்ல வருவது, உதாரணத்துக்கு பெங்களூரில் ஒரு அலுவலகத்தில் பணி புரிகிறீர்கள் என்றால், அங்கே உங்களோடு பணி புரியும் தமிழகம் தவிர்த்து மற்ற மூன்று தென் மாநில சக ஊழியர்கள் எல்லோருக்கும் ஹிந்தி தெரிந்திருக்கும், தமிழ்க் காரன் மட்டும் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அத்தனை பேரும் ஹிந்தி தெரியாமல் பே..பே.. என்று விழித்துக் கொண்டிருக்கிறான். இது என் அனுபவம். ஏன் இந்த நிலை?? //

ஏன் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாதா? ஆங்கிலம் தெரியாமல்தான் பெங்களூர் வந்து குப்பை கொட்டுகிறார்களா? இவர்கற் ஆன்சைட் கஸ்டமர் மீட்டிங்களிலும் ஹிந்தியில்தான் பேசுவார்களோ?

உங்களுக்கும், அவர்களுக்கும் ஆங்கிலம் தெரியும்போது பொதுமொழியான ஆங்கிலத்தில் உரையாடாமல் அவர்களைத் தடுத்தது எது? அவர்களின் கொழுப்பு மற்றும் உங்களை மட்டம் தட்ட நினைக்கும் ஆணவம்தானே?

Post a Comment