Sunday, February 20, 2011

மயக்கும் குரல் - மலேசியா வாசுதேவன்

கணக்கு வைத்துக்கொள்ளாமல் தமிழன் பார்க்கும் படங்களுள் முதன்மையானது 'முதல் மரியாதை' . சிவாஜியின் மாறிய வயதிற்கு தகுந்தபடி கதை வேண்டும் ; கிடைத்து  விட்டது ; பாட்டுக்கு பின்னணி குரல் ? புதிதாய் வேண்டுமே.. கணீர் என்ற சிவாஜியின் குரல் இந்த படத்தின் மிகபெரிய பலம் . அதை பாடும்போதும் காட்ட வேண்டுமே? டி. எம். எஸ். இப்போது அதற்கு  பொருந்த மாட்டாரே ? என்று பாரதிராஜா சற்றே சிந்தித்தபோது மனதில் வந்த ஒரே குரல் மலேசியா வாசுதேவனுடயது. இன்று வரை 'பூங்காற்று திரும்புமா ?' என்று பாடல் ஆரம்பித்தால் கண்களில் தானாக மின்னுகிறது  கண்ணீர்.

இளையராஜா, பாரதிராஜா கூட்டணியில் சேர்ந்து '16  வயதினிலே'யில் இரண்டு ஹிட் பாடலை கொடுத்தப்பிறகு இவருக்கு நிதானிக்க நேரமில்லை . தொடர்ந்து வரும் வாய்ப்புகள் ..தொய்வில்லாத குரல்.. எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் ஒரே போட்டி பாடகர். இன்று வரை தமிழில் 8000 பாடல்கள் பாடியுள்ளார்.

பாடல்களின் எந்த வகையையும் இவர் குரல் ஆட்சி செய்யும். 'ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையே' ,'கோவில் மணி ஓசை தனை '
என்று காதல் மெலடி பாடல்களும் சரி , 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு ','வெட்டி வேரு வாசம் ' என்று கிராமிய மணம் வீசும் பாடல்களும் சரி , 'தென்கிழக்கு சீமையில' என்று மனதை கரைய வைக்கும் சோக பாடலும் சரி , 'என்னமா கண்ணு ? சௌக்கியமா ? '  , ரோமியோவில் -'அன்பே நீதானே என் வாழ்வில் ' என நக்கலடிக்கும் பாடல்களும் சரி தமிழ் ரசிகர்களை கிறங்கடித்த கதை எல்லாரும் அறிந்தது.


இளைஞர்களை  இன்று வரை  ஆட வைக்கும் இவரது பாடல்கள் 'ஆசை நூறு வகை..வாழ்வில் நூறு சுவை '  , 'தண்ணி கருத்திருச்சு' , 'ஆளானாலும் ஆளு '  

 ரஜினிக்கு அப்போதைய ஓபனிங் சாங்குக்கு இவர் கட்டாயம் வேண்டும். 'பொதுவாக என் மனசு தங்கம்' என்று ரஜினிக்கு குரல் கொடுத்து அவர் ரசிகர்களை ஈர்த்து தன்னுடன் வைத்துக்கொண்டார் வாசுதேவன்.
அதை தொடர்ந்து 'எஜமான் காலடி மண் எடுத்து'ம் , 'சிங்கம் ஒன்று புறப்பட்டதே' வரை நிறைய பாடல்கள் இவருக்கு ரஜினி படங்களில் உண்டு.

பாடல் மட்டும் அல்லாமல் நடிப்பிலும் தனி இடம் இவருக்கு உண்டு . வேறு எந்த பாடகர்களும் நடிப்பை இரண்டாம்பட்சமாக சுமாராக பயன்படுத்தியபோது , இவர் அதிலும் தனது முழுத்திறமையை காட்டினார். 'ஒரு கைதியின் டைரி'யில் வில்லன் பாத்திரத்தில் அசத்தியபின் இவரை விழி உயர்த்தி வித்தியாசமாக திரும்பி பார்த்த தமிழ் உலகம் ஊமை விழிகளில் இவர் நடிப்பை கைத்தட்டி பாராட்டியது. அதன் பின்  முதல் வசந்தம் , கதாநாயகன் என நடிப்பில் ஒரு சுற்று வந்தார்.

சிவாஜி மறைவுக்கு பிறகு முதல் மரியாதை பார்க்கும் போதெல்லாம் மனதில் ஒரு கனம் தோன்றும். இனி அந்த கனம் இரண்டு பங்கு அதிகமாகும்.


வாசுதேவன் இப்படி ஒருமுறை பேட்டியில் சொன்னார்  - ' நான் யாரிடமும் வாய்ப்புக்கு நின்றதில்லை.நான் இந்தியா வரும்போது ஒன்றிரண்டு பாடல்கள் பாடினால் போதும் என்றுதான் வந்தேன்.ஆனால் இவ்வளவு பாடல்கள் பாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. பணம் , புகழ் , வெற்றி எல்லாம் பார்த்தாகி விட்டது. மற்ற பாடகர்கள் அளவுக்கு நான் அதிகமாக பாடவில்லை என்று ஒரு போதும் நினைத்ததில்லை. எவரெஸ்டை ஏறி கடக்க முடியவில்லை என அதிருப்தி கொண்டதில்லை. மாறாக பழனி மலை ஏறிய திருப்தி எனக்கு உள்ளது. எனக்கு அது போதும்''வாசுதேவன் சார்,
நீங்கள் செய்யவேண்டியதை நிறைவாக செய்து முடித்து விட்டீர்கள்.
அந்த மனநிறைவுடன் விடைபெற்றும் விட்டீர்கள்.
இப்போது ஒரு படத்தின் பாடல்களை விட பாடுபவர்கள் எண்ணிக்கை அதிகமாய் இருக்கிற காலம். அவர்களுக்கு உங்கள் குரல் கற்க வேண்டிய பாடம். எங்களுக்கு உங்கள் குரல்  கவலையை மறக்கும் கீதம்.' 
  

Saturday, February 19, 2011

நடுநிசி நாய்கள் - தப்பிச்சு ஓடிடுங்க.. 
இந்த படத்தை வேற யாராவது டைரக்ட் பண்ணியிருந்தா விமர்சனம் கேட்டுட்டோ  , இல்ல கொஞ்ச நாள் கழிச்சோ போய் பாத்திருப்பேன். பட் இது   கௌதம் மேனன் படம். வேற என்ன வேணும் ?  போகலாம்னு முடிவு பண்ணினது தப்பா போய்டுச்சு.

நீங்க இங்கிலீஷ் மிஸ்டரி படங்கள் அடிக்கடி பாக்கிறவரா Silence of the lambs , Rear window , se7en , SAW series ? அது மாதிரி தமிழ்ல ஒரு படமா இது இருக்கும்னு நெனைக்காதீங்க. வெறுத்துடுவீங்க. 'இல்லப்பா நான் அதெல்லாம் பாத்ததில்ல , எனக்கு சிகப்பு ரோஜா புடிக்கும் , அது மாதிரி இந்த படம்னு கேள்விப்பட்டேன். அதான் பாக்கலாம்.....னு' அப்படின்னு இழுத்தீங்கனா..சாரி நீங்க ஏமாந்துருவீங்க..  படம் திரிசங்கு மாதிரி எதையும் ஒழுங்கா சொல்லாம தலைகீழா நிக்குது..

மத்தவங்க கிராமத்து வன்முறைய சொன்னா நீங்க சிட்டி ரவுடியிசம் பத்தி அழகா  சொல்லுவீங்க .. உங்களுக்கு சைக்கோ  கதை எடுக்கணும்னு ஆசை இருக்குங்கிறத 'வேட்டையாடு விளையாடு '  படம் பாக்கும்போதே மெல்லிதா புரிய வச்சீங்க.. ஆனா அத இப்படி சொதப்பலா  எடுப்பீங்கன்னு யாரும் எதிர்ப்பார்க்கல  சார்..   
   
கௌதம் சார் .. முதல ஒரு விசயத்த கிளியரா புரிஞ்சிக்கோங்க. உங்க டார்கெட் ஆடியன்ஸ் ஒன்லி இளைஞர் பட்டாளம் .. தாய்குலங்கள் சப்போர்டோ , பேமிலி சப்போர்டோ  பெரியவங்களோ யாரும் இல்ல .. ஆக இளைஞர்களுக்கு கொடுக்கிறத ஒழுங்கா கொடுத்தாத்தான் நீங்க இருக்க முடியும்.

அந்த மாதிரி trend set பண்ணிடீங்க சார் .. மின்னலே , காக்க காக்க , விண்ணைத்தாண்டி வருவாயானு பசங்கள காந்தம் மாதிரி இழுக்க உங்களுக்கு தெரியும் . அது மாதிரி படம் கொடுங்க.. உங்க இடம் அப்படியே இருக்கும் .

சரிப்பா அப்ப நான் புதுசா எதுவும் ட்ரை பண்ண கூடாதான்னு நீங்க நியாயமா கேள்வி கேட்டீங்கனா  என் பதில் -  தாராளமா பண்ணுங்க சார்..  ஆனா  அந்த மாற்றத்துக்கு நீங்க ரெம்ப செதுக்கி செதுக்கி உழைக்கனும். உதாரணம் - லிங்குசாமி . குடும்ப படம் ஆனந்தம் கொடுத்திட்டு , ரன் மாதிரி ஆக்சன் genre கொடுத்து ஆச்சர்யப்படுத்தினாரு.அடிக்கடி பாரதிராஜா தன்னோட கிராமத்து கதைல இருந்து முழுசா ஒதுங்கி கொடி பறக்குது , சிகப்பு ரோஜானு unexpected ஆச்சர்யம் கொடுப்பாரு.

ஆனா நீங்க செஞ்சிருக்கிறது  உங்க முந்தய படத்துல அங்க அங்க வர சைக்கோ ப்ளாக்க பெருசா டெவெலப் பண்ணுன ஒரு படம். ஆனா பழைய படங்கள்ல அத மிக நேர்த்தியா காமிச்ச நீங்க , இங்க ரெம்ப சறுக்கிருக்கீங்க.

பொண்ணுக மட்டும் பாலியல் கொடுமையால பாதிக்கப்படறதில்ல , பசங்களும்தானு சொன்னது ஓகே. ஆனா அதை காட்சியில காட்டும்போது அந்த பையன் மேல அனுதாபம் வராம கோபம்தான் வருது ..காரணம் எந்த ஒரு வலுவான ஸாப்ட்  கார்னரும் அவன் சம்பந்தமா இல்ல ... சிகப்பு ரோஜாக்கள் வெற்றிக்கு காரணம் அந்த படத்துல கையாடப்பட்ட க்ரைம் மட்டும் அல்ல , கதைக்கு அஸ்திவாரமா இருந்த கமல் - ஸ்ரீதேவி காதல்..

 
இந்த மாதிரி  கதைக்களம் எடுத்துட்டிங்கன்னா என்பது சதவீத  காட்சிகள் நிகழ்வுகளாவும் மீதி  இருபது சதவீதம் காட்சிகள் அந்த நிகழ்வுகளுக்கு காரணமாகவும் இருக்கறது க்ரைம் கதைக்கான பார்முலா . பார்க்க சமீபத்திய படம் யுத்தம் செய் . ஹீரோ பாலியல் கொடுமைக்கு படிப்படியா ஆளாகறான்னு  இவ்வளவு நீளமா சொல்லிருக்க தேவை இல்ல.
 
 
 
எது எப்படியோ இந்த கதைக்கு பாடல் வேண்டாம்னு முடிவு பண்ணுனதுக்கு ஒரு பெரிய நன்றி. ஒளிப்பதிவு ஓரளவுக்கு படத்த காப்பாத்தியிருக்கு.ஆனா கதையும் , மையக்கருத்தை தவறுதலா  கையாண்ட விதமும் , சுத்தமா  இல்லாத த்ரில்லும் பாக்கறவங்களுக்கு பொறுமையை இழக்க வெச்சுடுச்சு.
 
நடுநிசி நாய்கள் - இருக்கிற பக்கம் இனி மேல போகாதீங்க கௌதம் சார் .. எங்களையும் கூப்பிடாதீங்க..  

Friday, February 18, 2011

ஹாஸ்டல் காம்பவுண்ட்

காலேஜ்ல பசங்கள சேர்க்கணும்னு முடிவு பண்ணுன உடனே பெத்தவங்க பையன் கிட்ட சொல்ற அடுத்த வார்த்தை  ' நீ ஹாஸ்டல்லதான் தங்கி படிக்கணும். வெளிய தங்குனா கெட்ட பசங்களோட சேர்ந்து கெட்டு போயிடுவ. '

காத கொடுங்க சார் - 'நீங்க சொல்றது நூத்துக்கு நூறு தப்பு .. ஹாஸ்டல்லதான் எல்லா அயோக்யதனமும் நம்ம பையனுக்கு அறிமுகம் ஆகும் . எப்படின்னு கேக்கறீங்களா? வெளிய ரூம் எடுத்தான்னா கூட இருக்கறவன் சரி இல்லேன்னா வேற எடத்துக்கு போயிடலாம். ஆனா ஹாஸ்டல்ல அப்படி இல்ல.. இவன் ரூம்ல பசங்க ஒழுங்கா இருந்தாலும் , சுத்தி இருக்குற நூறு ரூம்ல வெந்தது, வேகாதது, அரைவேக்காடுனு நூறு விதமா பசங்க இருப்பாங்க. நல்லா என்ஜாய் பண்ண ,கெட்டு போக  options அதிகம். ஒரு வருசத்துல்ல கேங் சேர்த்துட்டு அடுத்த வருஷம் அவனுகளே ஒரே ரூம்மேட்ஸ் ஆகிடுவாங்க.. புரிஞ்சிக்கோங்க '


(இந்த ரகசியத்த  சொல்லி எத்தன பசங்க சாபத்துக்கு ஆளாக போறேனோ? சரி பரவாயில்ல...பெத்தவங்க ஆசிர்வாதம் என்னை காப்பாத்தும் ) 

ஹாஸ்டல்ல நடக்கற வேடிக்கை உலகத்துல வேற எங்கயும் பாக்க முடியாது.ஒரு ரூம்ல ஒருத்தனுக்கு நைட்டுலதான் படிக்க மூடு வரும். இன்னொருத்தனுக்கு லைட் போட்டிருந்தா தூக்கம் வராது. ' டேய் .. லைட் ஆப் பண்ணுடா..லைட் ஆப் பண்ணுடா 'னு ரெண்டு நிமிசத்துக்கு ஒரு தடவ கத்தி , படிக்கற பையன அழுக வெச்சுடுவான். சரி காலைல ,  நேரத்துல எந்திரிச்சாவது படிப்போம்னு அலாரம் வெச்சா  , இவன் தூங்குன உடனே அடுத்தவன் அலாரத்த ஆப் பண்ணிடுவான்.

 காலைல நம்ம புத்திசாலி ஏன் அலாரம் அடிக்கலைன்னு கிளாக்க செக் பண்ணுனா நம்ம பையன் அப்பாவியட்ட முகத்த வெச்சுட்டு ' அது அடிச்சுது மாப்ள .. நீதான் ஆப் பண்ணிட்ட'னு சொல்லுவான். இந்த லூசு அத நம்பி நாளைக்கு  எப்படியாவது எந்திரிச்சு படிச்சிடனும்னு முடிவு பண்ணுவான் . அடுத்த நாளும் இதேதான் நடக்கும் .
 -------------------------------------------------------------------

அடுத்த தொல்லை  - ஒரு ப்ளோருக்கு ஒரே போன்தான் இருக்கும் . யாராவது பையன்  அவங்க அப்பா அம்மா கூட பேசிட்டு இருந்தா , அந்த பக்கமா போறவன் சும்மா போக மாட்டான் .. ' டேய் , தம்ம கீழ போடுடா.. வார்டன் வராரு ' னு போன்ல கேக்குற மாதிரி பத்த வெச்சுட்டு எடத்த காலி பண்ணிடுவான் .
ஏற்கனவே நம்ம பெத்தவங்களுக்கு பையன் மேல ரெம்ப நம்பிக்கை .. இதுல புதுசா இது வேற .

தப்பி தவறி எவனாவது ஒருத்தனுக்கு காலேஜ்ல பிகர் செட் ஆகிருக்கும். நம்ம ஆளுக்குதான் பெருமை ஜாஸ்தியே. லவ் சக்சஸ் ஆனதுக்கு ட்ரீட் கொடுக்கறேன்னு , அதே ஹாஸ்டல் ஒரு பத்து ரூபாய்க்கு சமோசா வாங்கி கொடுத்துட்டு பசங்கள ஒரு ரெண்டு மணி நேரம் அறுத்து எடுத்துருப்பான்.அத நம்ம பசங்க ஞாபகம் வெச்சுகிட்டு , அந்த பொண்ணு போன் பண்ணுனா கீழ இருந்து கத்துவானுக ' ரூம் நம்பர் 39 , சரவணனுக்கு போ.........ன்.. வாடா உன் மூணாவது ஆளு லைன்ல இருக்கு '..

இவன் வேகமா ரூம விட்டு ஓடி போறதுக்குள்ள அங்க ஒரு சின்ன கூட்டமே சேர்ந்துருக்கும்.. போனை கைல கொடுத்துட்டு 'பேசுடா மச்சி ..ஹிஹி'னு சொல்லி பக்கத்துலயே நிப்பானுக.. இவன் என்னத்த பேச முடியும் .. ? அந்த பக்கம் இருக்குற லூசுக்கு அது எதுவும் புரியாது .எதாவது பேசிட்டே போகும்.. இவன் போன வையின்னு சொல்ல முடியாம ஒரு மணி நேரமா 'அப்புறம் ..அப்புறம்..அப்ப்புறம்..'னு சொல்லிட்டே இருப்பான்.


சரி இந்த தொல்லைக்கு செல்போனயாவது   வச்சிக்கலாம்னு பாத்தா , காலேஜ் ரூல் போட்டுருப்பாங்க -' நோ செல் போன் இன் காலேஜ் ப்ரிமிசஸ்' அப்படின்னு.

 ------------------------------------------------------------------------

அடுத்து எவனுக்காவது பர்த்டே வந்தா , அவன் அன்னைக்கு   இருந்து 'இனி பர்த்டேவே கொண்டாடகூடாது'னு முடிவு பண்ற அளவுக்கு அவன நடுராத்திரி பன்னெண்டு மணிக்கு எழுப்பி , கேக்க முகம் பூரா அப்பி , முட்டை , தக்காளின்னு மிக்ஸ் பண்ணி அபிஷேகம் பண்ணி ,அவன குளிக்க வெச்சு ' அடுத்த நாள் கிளாசுக்கு வரும்போது ஏதோ ஆக்சிடெண்ட்ல அடி பட்டவன் மாதிரி இருப்பான். இத்தனையும் பண்ண நம்ம பசங்களுக்கு செலவு அதிகபட்சம் முப்பது ரூபாய்.

இத்தனையும் பண்ணிட்டு வருத்தமே படாம அப்புறமா அன்பா கேப்பாங்க . 'மச்சான் ட்ரீட் எங்கடா போலாம்'னு ..

----------------------------------------------------------------------------

எல்லா ஹாஸ்டல் உள்ளேயும் வார்டன்னு ஒரு காமெடி பீஸ் சுத்திட்டு இருக்கும். பர்ஸ்ட் இயர் பசங்க இவர மதிச்சு நடப்பாங்க . செகண்ட் இயர் வந்துடுச்சு .. இப்ப அந்த ஆள் எதாவது பேசினா அவளவுதான். சண்டை எல்லாம் போட மாட்டாங்க. 'போ.. போ.. பெரியவங்க பேசிட்டு இருக்கோம் .. நீ போயி டீ ரெடி ஆயச்சானு கவனி 'னு சொல்லிட்டு அவங்க அலப்பரைய கன்டினியு பண்ணுவாங்க. அதுக்கும் மேல எதாவது வேற எங்கயாவது கம்ப்ளைன்ட் பண்ணிடாருனு வைங்க .. அதுக்கப்புறம் இவங்க எதிர் நடவடிக்கை பயங்கரமான சதி நிகழ்வுகளா இருக்கும் .

அவர்கள் கடைபிடிக்கும் போர்கால உத்திகள் சில :
 • வார்டன் ரூம (அவர் தூங்கும்போது) பூட்டிறது.
 • அவர் கீழ நடந்து போய்ட்டு இருக்கும்போது மேல இருந்து ஒரு முழு பக்கெட் தண்ணிய கொட்டறது.
 • டைம் பாம் மாதிரி ஊதுபத்தியில  பட்டாச கட்டி , அவர் இல்லாதப்போ ரூம்ல கொளுத்தி போடறது..  
 • பர்ஸ்ட்  இயர் பசங்ககிட்ட அவர் பேசிட்டு இருக்கும்போது , எங்கயாவது ஒளிஞ்சு நின்னுட்டு   'டேய் ..'னு அவர் பேர சொல்லி கத்தறது.
 • அவர் ரூம் ஜன்னல் வழியா உள்ள இருக்கிற பொருட்கள்  எல்லாத்தையும் கீழ தள்ளி விடறது. முடிஞ்சா வெளிய எடுத்து நாலு பேருக்கு அன்பளிப்பா கொடுக்கறது..
இந்த மாதிரி அஹிம்சை வழிலதான் அவரை பழிவாங்குவாங்க. என்ன இருந்தாலும் அவர் வயசுல பெரியவர்.. அதனால கை எல்லாம் வைக்க மாட்டாங்க.

குறிப்பு : இது வார்டன் கூட இருக்கும் ஜால்ராக்கள் , அவரை சப்போர்ட் செய்யும் ஹாஸ்டலில் தாங்கும் வாத்தியார்களுக்கும் பொருத்தும்.

ஒரு காலேஜ் ஹாஸ்டல்ல வார்டன் வேலைய ரெண்டே ரெண்டு வருஷம் பாத்தா போதும் . வெளிய எந்த கஷ்டமான வேலையையும் பாத்துடுவீங்க. வடிவேல் பாணில சொல்லனும்னா ' நீங்க அடிச்சா அடி அப்படி ஒரு அடிடா. அந்த அடிக்கு அப்புறம் எவன் அடிச்சாலும் தாங்கற பலம் வந்துருச்சுடா...'

 -------------------------------------------------------------------------------------------------

எதாவது புது படம் ரிலீஸ் ஆனாத்தான் வம்பே.. ஹாஸ்டல் பசங்கள கடுப்பேத்தரதுக்காகவே , day scholar பசங்க கேப்பாங்க ..'உங்களுக்கு என்னடா பிளான் .. ? நாங்க இன்னைக்கே நைட் ஷோ போறோம்'   .. இது பத்தாதா.. ஒருத்தன் ஆரம்பிப்பான் 


' கம்ப்யூட்டர் கிளாஸ் லேட் ஆகிடுச்சுன்னு சொல்லுவோம்டா '      
 
'அறிவுடா உனக்கு.. எந்த கம்ப்யூட்டர் கிளாஸ் ராத்திரி ஒரு மணி வரைக்கும் இருக்கு ?'
 
'சரி விடு .. இந்த ரமேஷ் பையனுக்கு உடம்பு சரியில்ல .. டாக்டருக்கு கூட்டிட்டு போயிட்டு வரோம்னு சொன்னா ?'
 
'ஹ்ம்ம் .. பாப்போம் '
----------------------------- 

 'என்னங்கடா..நைட் ரெண்டு மணிக்கு வந்திருக்கீங்க.  நீங்க சொல்ற கதைய நம்பவா என்னை இங்க வேலைக்கு வெச்சிருக்காங்க? நாளைக்கு  எல்லாம் அவங்க அப்பா அம்மாவுக்கு போன் பண்ணி வர சொல்லுங்க '
  
'சார் .. அப்பா ஊருல  இல்ல சார்.. '
 
'அம்மா?'
 
'அவங்க அப்பா இல்லாம எங்கயும் வரமாட்டாங்க சார் '
  
'போன் பண்ணுனேன் சார்.. ரிங் போய்டே இருக்கு. யாரும் எடுக்க மாட்டீங்கறாங்க ..'
 
'எங்க நம்பர் கொடு பாப்போம்..'
 
'இருங்க சார் ..மறுபடியும் ட்ரை பண்றேன்.'
  

'சார் ..இந்த ஒரு தடவ விட்டுருங்க சார் ..'
 
'ஏன்டா கெஞ்சற? எங்க அப்பா வரட்டும்டா.. நான் கூட இங்க நெறைய ப்ராப்ளம்  இருக்குனு அப்பாகிட்ட சொல்லணும்..   உனக்குத்தான் தெரியுமே .. எங்கப்பா பிரின்சிபாலுக்கு தெரிஞ்சவர்னு..'


'சரி சரி இதான் லாஸ்ட் வார்னிங் .. கிளாசுக்கு போங்க '

-------------------------------------------------------------------------


அதுல்ல இன்னொரு கொடுமையான விஷயம் ஆறு மாசத்துக்கு ஒரு தடவ நடக்கும். ஏறக்குறைய எல்லா காலேஜ் மேனேஜ்மெண்டும்  இந்த தப்பான கணக்க போடுறாங்க ; அது என்னன்னா , பொண்ணுக ஹாஸ்டலுக்கு மெஸ் பீஸ் எப்போவும் பசங்க ஹாஸ்டல  விட ஆயிரம் ரூபா கம்மியா இருக்கும்   - பசங்க  மெஸ் பீஸ்  பார்த்து டென்ஷன் ஆகிடுவாங்க.

ஏதோ பொண்ணுகளுக்கு சாப்பிடவே தெரியாத மாதிரியும் , பசங்க அதுக்குதான் காலேஜ் வந்துருக்கற மாதிரியும் அவங்க எண்ணம். உண்மை என்னனா பொண்ணுகளுக்கு காலேஜ்ல  இருக்குற ஒரே பொழுதுபோக்கு சாப்பிடறதுதான் . பசங்க அங்க இங்கன்னு சுத்திட்டு எதோ ஹாஸ்டல் பக்கம் வரும்போது சாப்பிடுவாங்க. அதுவும் காலைல நம்ம பசங்க கரெக்டா கிளாஸ் ஆரம்பிக்க பத்து நிமிஷம் முன்னாடிதான் எந்திரிப்பாங்க . so ப்ரேக்பாஸ்ட் பெரும்பாலும் கட்.

 ஆனா பொண்ணுக 'அதிகாலை விழித்தெழுந்து படிப்பதனால்' கரெக்டா சாப்பிட்டு கிளாசுக்கு வருவாங்க. எனக்கு தெரிஞ்சு ஒரு பெஞ்சுல நாலு பசங்க அசால்டா அம்சமா பிட் ஆவோம் . பொண்ணுக மூணு பேருக்கே பெஞ்ச பாகம் பிரிப்பாங்க . அப்போ யாருப்பா அதிகமா சாப்பிடறது ?

--------------------------------------------------------------------------------------

ஹாஸ்டல்டேனு வருஷம் ஒரு வெளங்காத  நாள் வரும் .. நைட்தான் கச்சேரி களைகட்டும்.. இந்த நேரத்துலதான் பசங்க பகை எல்லாம் தீர்த்துக்குவாங்க.. எங்க இருந்தாவது ஒரே ஒரு குவார்டர் வாங்கிட்டு வந்து அத பதினாறு பேரு தீர்த்தம் மாதிரி அடிச்சுட்டு , பயங்கர போதைல இருக்கற  மாதிரி எவன அடிக்கணுமோ அவன அடிக்கவோ இல்ல பஞ்ச் டயலாக் பேசவோ ஒரு நல்லா வாய்ப்பா பயன்படுத்திக்குவாங்க.. அடுத்த நாள் எல்லாரும் சொல்லி வெச்ச மாதிரி நடந்தத மறந்துருவாங்க..

----------------------------------------------------------------------------    இத்தனை அடாவடி நடந்த பின்னாடி , காலேஜ் கடைசி நாள் எல்லாரும் பிரியும்போதுதான்  ஒரு உண்மை புரியும் .. 'இந்த உருப்படாதவனுகள பாக்காம எப்படி இருக்க போறோம்'னு.. அப்போ கண்ண கட்டிட்டு வர கண்ணீர்தான் சின்ன வயசுல பொம்மை வாங்கி தரலேன்னு அழுததுக்கு அப்புறம் வர நிஜமான  கண்ணீர் .
அதுக்கப்புறம் எப்போவும் அப்படி உண்மையா அழுகவும் மாட்டோம்... 


செஞ்சது எல்லாம் தப்புன்னு நெறைய பேருகிட்ட மன்னிப்பு கேக்கத் தோணும் .. ஆனா இது வரைக்கும்  கேட்டுருக்க மாட்டோம்..


இப்படி இவ்வளவு கலாட்டா நடந்த ஹாஸ்டல எப்படிங்க மறக்க முடியும் ?  ஒரு தடவ டைம் இருந்தா போயிட்டு வாங்க.. தனியா
போகாதீங்க.. மறுபடியும் அழுவீங்க.. பசங்களோட போங்க..  

Wednesday, February 16, 2011

காமெடி நடிகர்கள் - ஒரு சீரியஸ் அலசல்

தமிழ் சினிமாவிற்கு இருக்கும் எண்ணற்ற சிறப்புகளில்
சொல்லும்படியான ஒன்று: நீடித்து நிற்கும், தரமும் தனி பாணியும் கொண்ட நகைச்சுவை நடிகர்களை கொண்டிருப்பது. மிக பழங்காலத்துக்கு போக வேண்டாம் ; என்எஸ்கே தொடங்கி  தங்கவேலு , சந்திரபாபு வரை எல்லா நகைச்சுவை நடிகர்களும் தங்களுக்கென ஒரு பாணியையும் , தனக்கென ஒரு ஆளுமைக்காலத்தையும்  ஏற்படுத்தி அந்த காலத்தில் தங்கள் பேரை நிலைத்து நிற்க செய்து மறைந்தனர்.
அதன் பின்னால் வந்த நாகேஷ் ஒரு தனி சகாப்தத்தையும் , நல்ல மாற்றத்தையும் கொண்டு வந்தார். அதற்கு பெரிய உறுதுணை - இயக்குனர் கே. பாலச்சந்தர்.
நகைச்சுவைக்கு மட்டுமல்ல, நல்ல நடிப்பையும் ,அதோடு கூடிய கதை ஒன்றிய பாத்திரப்படைப்பாகவும் மாறி ஜொலித்தவர் நாகேஷ். எதிர் நீச்சலையும் , சர்வர் சுந்தரத்தையும் , தருமியையும் , காதலிக்க நேரமில்லையையும் மறக்க முடியுமா ? கடைசி வரை இவரக்கும் எந்த விருதும் மறுக்கப்பட்டது திரையுலகம் வெட்கப்படவேண்டிய விஷயம். தனி ஒரு பதிவுக்குரிய விசயமும் சிறப்பும் கொண்டவர் நாகேஷ். விரைவில் எழுதுகிறேன்.  


அடுத்த 25 வருஷம் கவுண்டமணி காலங்கள். செந்தில் இல்லாமல் கவுண்டமணி ஜெயிப்பார். கவுண்டமணி இல்லாமல் செந்திலுக்கு சொல்லும்படியாக எதுவும் இல்லை. ஆனால் இவர்கள் கூட்டணி அடித்த ஹிட்டுகள் , இதுவரை முறியடிக்க்கப்படவில்லை. முறியடிப்பதும் சிரமம்.

கரகாட்டக்காரன் ஒரு வருஷம் ஓடியதும் ,'உள்ளத்தை அள்ளித்தா ' , மேட்டுக்குடி  மூலம்  கார்த்திக்குக்கு  திரும்ப  வாழ்வளித்ததும் , கமல் தவிர எல்லா நடிகர்களின் அனேக படங்களையும் ஓட வைத்து வசூலை நிரப்பியதும் , காலம் தாண்டியும் கவுண்டரின் முத்திரைகள் என பேசப்படும். கூட ஒட்டிக்கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொண்டது செந்திலின் புத்திசாலித்தனம். இன்று வரை கவுண்டர் இருந்தால் , அவர் மட்டுமே ஆண்டு கொண்டிருப்பார். உடல்நிலை கருதி , மார்கெட் நன்றாக இருக்கும்போதே விலகி சென்று பின் திரும்பி வந்து ஒதுங்கி கொண்டார் .

 • எம்.ஜி.ஆருக்கு கூட நாகேஷோ ,  சோவோ தேவைப்பட்டார்கள். 
 • சிவாஜிக்கு (அந்த காலகட்டத்தில்) கதை மட்டும்  போதும்.
 •  ரஜினிக்கு இவர்கள் யாரும்  தேவைப்படவில்லை. ஒன் மேன் ஆர்மி.
 • கமலுக்கு நாகேஷ்  தவிர வேறொருவர் தேவையில்லை. தேவைப்பட்டால் கிரேசி மோகனை சேர்த்துக்கொண்டு ஜெயித்து விடுவார்.


இப்போது இந்த தலைமுறைக்கு வரலாம். நகைச்சுவை நடிகர்கள் இல்லாமல் ஒரே ஒரு வெற்றிப்படமாவது விஜயோ அஜித்தோ கொடுக்க முடியுமா ? என்றால் 99 %  முடியாது என்பதுதான் பதில் . காரணம் கதையை நம்பி படம் எடுக்கும் தைரியம் தயாரிப்பாளர்களுக்கு இல்லை. கதை மட்டும் இருந்தால் நாங்கள் எதுக்கு ,விக்ரமோ  பிரசன்னாவோ செய்யட்டுமே என்று இருவரும்  ஒதுக்குவதும் ஒரு காரணம். சூரியாவும் இதில் இப்போது சேர்த்தியே.
ஆனால் மாஸ் ஹீரோ சப்ஜெக்ட் என்றால் டபுள் ஓகே. ஒரு வில்லன் ; நான்கு  சண்டைக்காட்சிகள் ; ஆறு  பாட்டு , இதை இரண்டரை மணி நேரம் ஓட்ட தேவை ,வில்லனுக்கும் நாயகனுக்கும் ஒரு மோதல். அது போதும். இரு இரு .. இருந்தாலும் இந்த படம் ஓடுமா ?இதே மாதிரிதான் எல்லா படங்களின் கதையுமே இருக்கே ? என்ன செய்யலாம் ?  எதுக்கு கவலை ? இங்குதான் காமெடி நடிகர்கள் தேவைப்படுகிறார்கள்.
கூப்பிடு நகைச்சுவை நடிகர்களை. அவர்களுக்கு ஒரு ஆறு சீன் விட்டுக்கொடுத்தால் வெற்றி உறுதி. ஆனால் ஹீரோவை மீறி புகழ் அடைய கூடாது .. நண்பன் பாத்திரத்தை ஒதுக்கு.. கூடிய மட்டும் ஹீரோவுடனே சுற்றி ,முடிந்தால் அதில் திறமையை நிருபிக்கட்டும். எல்லாம் சரியாக போனால் அது ஹீரோ படம் ; படம் பப்படமானால் கை காமிக்க உதவும்.

ஆக இதற்கு முந்திய தலைமுறைகளை விட இந்த தலைமுறைக்கு காமெடி நடிகர்களின் சப்போர்ட் அதிகம் தேவை . அதை கொடுக்கும் திறன் அவர்களுக்கு இருக்கிறதா ? அலசுவோம்..

வடிவேலு:தேவர் மகன் வந்து கிட்டத்தட்ட 20  வருடம்  ஆகிவிட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஏறுமுகம்தான். இவரின் பெரிய பலமே , எந்த ஒரு வட்டத்துக்குள் சிக்காமல் இருப்பதுதான்.

சிட்டி சப்ஜெக்டா ? பாடி லேங்குவேஜ்  மாற்றி முடிந்த வரை ஆங்கிலம் பேசினால் அந்த வருடம்  அந்த படம் படு ஹிட் உத்திரவாதம்.'மனதை திருடி விட்டாய் ' , ' மருதமலை' என இவரின் சிட்டி அதிவேட்டுகள் எண்ணில் அடங்காது..
கிராமத்து கதையா ? நமக்குதான் அது கூடவே பிறந்ததே .. எதையுமே மாற்றாமல் ஒழுங்காக செய்தால் கலக்கல் ஹிட் . 'வின்னர்' கைப்புள்ளயும் , 'கண்ணாத்தா' சூனாபானாவும் , 'மாயி' மொக்கச்சாமியும் தமிழர்கள் தின வாழ்வில் இணைந்து காலகாலம் மனதில்  இருக்கும்.

குணசித்திர வேடம் அழகாக வரும் - பொற்காலம், எம்டன் மகன் ...

இன்றைய தேதிக்கு குழந்தைகள் விளையாட்டானாலும்  ஆனாலும் சரி , பெரியவர்கள் அன்றைய  வாழ்க்கையானாலும் சரி , சந்தோசமானாலும் சரி, துக்கமானாலும் சரி - இவரின் டியலாக்குகள்தான் அதிகம் உபயோகிக்கப்படுகின்றன..  

சிறிய பட்ஜெட் ,பெரிய பட்ஜெட் என எதுவும் பார்க்காமல் , தன பகுதியை ஒழுங்காக செய்து வருவது இவரின் வெற்றிக்கு பெரிய காரணம்.

எந்த நடிகர் படம் ஆனாலும் , அது எவ்வளவு மோசமாக விமர்சிக்கப்பட்டாலும் , அல்ல தோல்வியுற்றாலும் இவர் அதில் இருந்தால் கூடிய வரை அந்த படம் காப்பாற்றப்படும். விதிவிலக்குகளும் சில உண்டு - குசேலன் , சுறா ,வில்லு , எல்லா அஜித் படங்களும்..இவர் பாணியில் சொன்னால்  ' முடியல....'  

ஆதவன் , மருதமலை ,வின்னர் படங்களின் ஹீரோ சத்தியமாக இவர்தான்.
இந்திரலோகத்தில் ந.அழகப்பனுக்குப் பிறகு  தனி ஆவர்த்தனம் வேண்டாம் என்று முடிவு பண்ணி திரும்ப தன் வழிக்கு வந்தது குட் மூவ். தேவை இல்லாத அரசியல் சர்ச்சையிலும் , தனி மனித எதிர்ப்பும் இவர் ஒதுக்க வேண்டும் . மற்றபடி  இவர் மாற்ற வேண்டியது இப்போதைக்கு எதுவும் இல்லை.. வாழ்த்துக்கள்..

------------------------------------------


சந்தானம் :
கவுண்டமணிக்கு பிறகு டீசிங் காமெடி , இவரைப்போல் யாருக்கும் வராது . ஹீரோவை கிண்டல் பண்ணும் உரிமையை கவுண்டருக்கு பிறகு இவருக்கு அருளியிருக்கிறது திரையுலகம். லொள்ளு சபா முகவரி கொடுக்க ,எந்த கஷ்டமும் படாமல் வெள்ளித்திரைக்கு வந்தவர். வந்தது பெரிதல்ல .. வந்து நின்றது பெரிது..

 பொல்லாதவன் , சிவா மனசுல சக்தி , வாமனன், கண்டேன் காதலை , சில்லுனு ஒரு காதல் ,பாஸ் என்கிற பாஸ்கரன் , என்று சொல்லிகொள்ளும் அளவுக்கு தரமான படங்கள்.வந்து குறுகிய  காலம் மட்டுமே ஆனதால் இப்போதைக்கு வேறு எதுவும் சொல்ல இல்லை . படம் தேர்ந்தெடுக்கும்போது சற்று யோசித்தால் சிறந்த எதிர்காலம் உறுதி. (ரோபோ உங்களுக்கு எதற்கு சார் ?)

----------------------------------------
கருணாஸ்:


அதிரடியான அறிமுகம். முதல் படத்திலேயே இவ்வளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர்கள் அதிகம் பேர் இல்லை . பாலாவின் கண்டுபிடிப்பு. பாதி வரை நன்றாகத்தான் போனார். ஏப்ரல் மாதத்தில் , வில்லன் ,  பொல்லாதவன் , தேவதையை கண்டேன் , யாரடி நீ மோகினி என ஒழுங்காக போய் கொண்டிருந்த இவரை திண்டுக்கல் சாரதியின் வெற்றி சற்றே தடம் மாற செய்து விட்டது. தொடர்ந்து அம்பாசமுத்திரம் அம்பானி எடுத்து அவுட் ஆப் ஆர்டரில் மாட்டிக்கொண்டிருக்கிறார். பானா காத்தாடி சுமாராக போனாலும் , இவரின் சமீபத்திய சர்ச்சைகள் , ஒரு சிறந்த நடிகனை திசை மாற செய்திடுமோ என பயப்பட வைக்கிறது.

 'உங்களுக்கு அரசியலும் , படதயாரிப்பும்  வேண்டாமே சார்? ரெட்டைகுதிரை சவாரி எத்தனையோ பேர்களை வீழ்த்தியிருக்கிறது. நீங்களுமா ?' . சிந்தித்து திருந்தி திரும்பி வருவார் என எதிர்பார்ப்போம் .   

----------------------------------------------

கஞ்சா கருப்பு :

யாருமே எதிர்பாக்காத இடத்தில இருந்து புதிதாக ஒரு பொக்கிஷம் கிடைத்தால் எப்படி இருக்கும் என்பது இவரை ' ராம்' படத்தில் பார்த்தபின்பு தமிழ் திரையுலகத்துக்கு தெரிந்தது .

 பாலாவின் இன்னொரு கண்டுபிடிப்பு . அமீரின் அரவணைப்பு. இவரின் எகத்தாளமான , ஊர்பேச்சு கையாடல் , டயலாக் டெலிவரி , அசாத்தியமான , எதார்த்தமான நடிப்பு இவரை உச்சியில் வைத்திருகிறது. சண்ட கோழி , பருத்தி வீரன் , வம்சம் , களவாணி என காமெடியில் கலக்கியவர் சுப்ரமணியபுரத்தில் யாரும் எதிர்பாக்காத பாத்திரத்தை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.  இவரும் வந்து  குறுகிய காலம் மட்டுமே  ஆனதால் இனி என்ன சாதிப்பார்  என்பதை பொறுத்தே இவர் கேரியர் கிராப் அமையும். தனக்கான படம் மட்டுமே தேர்ந்தெடுப்பது மிக முக்கியம் - நல்லதை எதிர்நோக்குவோம்.

 --------------------------------------------------

விவேக் :தனி பதிவாக இதை இட்டிருக்கலாம். இருந்தாலும் இங்கேயே சொல்லிவிடுகிறேன். இவரை பட்டியலில் கடைசியாக  சேர்த்தது வேதனையாகத்தான் உள்ளது .  வேறு வழியில்லை - காரணம் இவரின் இப்போதைய செயல்பாடுகளும் இன்னபிறவும்.


 பத்மஸ்ரீ , கலைமாமணி , ஜனங்களின்  கலைஞன் , சின்ன கலைவாணர் என்ற எல்லா புகழுக்கும் இவர் well deserved .
எந்த ஒரு இரண்டாம் சிந்தனையும் இல்லாமல் பட்டென்று சொல்லலாம் - 'இவர் ஒரு ஜீனியஸ்' .பாலச்சந்தரின் எந்த அறிமுகமும் தோற்காது என்பதற்கு இவர் ஒரு முக்கிய உதாரணம்.

 மனதில் உறுதி வேண்டும் தொடங்கி பல படங்கள் நடித்தாலும் தனக்கென ஒரு பாணியை இவர் பிடித்து ஜெயிக்க ஆரம்பித்தது திருநெல்வேலி படத்திலிருந்து. அதன் பின் 2004 வரை நோ யு  டர்ன் .. காதல் மன்னன் , வாலி ,பெண்ணின் மனதை தொட்டு ,  ரன் , மின்னலே , சாமி என்று இவர் நடித்த படங்கள் ஓஹோவென ஓடியவை. 

எனக்கு நினைவிருக்கிறது - கல்லூரியில் நண்பர்களுள் யாராவது படத்துக்கு அழைத்தால் ,ஒரு நொடி படம் எப்படி இருக்கும் என யோசிப்போம் ..அடுத்த நொடி விவேக் இருக்கிறாரா ? வா போகலாம் என்று நம்பி போய் இவரை ரசித்து விட்டு வந்ததெல்லாம் ஒரு காலம். இப்போது எங்கே எங்கள் விவேக்?


எந்த ஒரு விசயமும் ஒரு தடவை ரசிக்கப்படும். இரண்டாம் தடவை ஏற்கப்படும். மூன்றாம் தடவை சகிக்கப்படும். அதற்கு பிறகு?

முக்கியமாக மூன்று மாற்றங்கள் விவேக்கிடம் தற்போது அவசரமாக தேவை.

 • 'அப்துல் கலாமும் , பாரதியாரும் மரியாதைக்கு உரியவர்களே. அவர்களின் கருத்துக்கள் மக்களுக்கு மிகவும் தேவை. ஆனால் அதை போதிய மட்டும் நிறைய படங்களில் சொல்லியாகி விட்டது சார். இன்னமும் அவர்களையே துணைக்கு அழைப்பது ஓவர்டோஸ் ஆகி பல வருடம் ஆகிவிட்டது.அதற்காக நீங்கள் உங்கள் பாணியை முழுதாக மாற்ற தேவை இல்லை. ஆனால் நீங்கள் சொல்லும் சமுக சிந்தனையை செரிக்க  நகைச்சுவையின் தரத்தை  அதற்கேற்ப அதிகப்படுத்துங்கள். நீங்கள் கிண்டல் செய்யும் பொதிகை டிவி-யை போல்தான் இப்போது நீங்களும் . மாறுங்கள்.'                                                          
 • 'மிமிக்ரி' வகை காமெடிகள் நீங்கள் வந்த புதிதில் வரவேற்கப்பட்டன. அப்போது தொலைக்காட்சி ஊடகங்களில் அதை போன்ற நிகழ்ச்சிகள் வரட்சியாய்  இருந்தது. இப்போது 'அசத்த போவது யாரு' , 'கலக்க போவது யாரு ' என்று எல்லா சேனல்களிலும் எப்போதும் அதைதான் ஓட்டுகிறார்கள். புதிதாக வருபவர்களுக்கு மட்டுமே மிமிக்ரி உதவும். உங்களுக்கு அல்ல .. உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது ,நீங்கள் கஷ்டப்பட்டு செய்யும் சுருளி ராஜனோ , சிவாஜியோ ,பெண் வேடமோ அல்ல .. உங்களுக்கே உரித்தான விவேக் மேஜிக்.  ப்ளீஸ் ஸீ ரன் , டும் டும் டும் , தூள் ..  '
 • '2004க்கு பிறகு சற்று திரும்பி பாருங்கள் . எங்கே நீங்கள் இருக்கிற அடையாளமாவது எந்த படித்திலாவது தெரிகிறதா ? இடையில் வந்த  அந்நியன் ,பசுபதி மே/பா ராசாக்கப்பாளையம் , படிக்காதவன்   தவிர்த்து சொல்லும்படி அல்ல சகிக்கும்படி ஒரு நகைச்சுவை உங்களிடம் இருந்து வரவில்லை என்பது நிதர்சனம். அதற்கு நாங்கள் யூகிக்கும் காரணம்  - உங்கள் crew உங்களுக்கு முன்போல தரமாக  ஒரு தனி ட்ராக் எழுத நேரமில்லாமல், வந்த படங்களை எல்லாம் நீங்கள் புக் செய்து படபிடிப்புக்கு  ஓடுவதினால் இருக்கலாம். சற்றே Quantity -யை மறந்து Quality -யை பற்றி யோசியுங்கள் சார்..ஒரு சின்ன பிரேக் எடுத்து உங்களை refresh செய்து வந்தால் மீண்டும் கோலோச்சலாம். '
இந்த மாற்றங்களை சிந்தித்து திரும்பி வாருங்கள் . ஒரு விமர்சகனாக இதை சொல்லவில்லை .. உங்கள் ரசிகனாக சொல்கிறேன்.
விரைவில் பழைய 'புதிய'  விவேக்கை எதிர்பார்க்கிறோம்
 --------------------------------------------------------

எது எப்படியோ நம் தமிழ் திரை உலகத்துக்கு காமெடி பஞ்சம் இல்லாமல் இருக்க நிறைய பேர் உண்டு.
அதை விட காமெடியை ஊக்கப்படுத்தி , உற்சாகபடுத்தி , அதை அனுபவிக்கும் ரசனை தமிழனுக்கு அதிகம் உண்டு என்பது சத்தியம் - நம் பெருமை.

Monday, February 14, 2011

கிரிக்கெட் காலம்

வேர்ல்ட் கப் வந்துடுச்சு. இதுல இந்தியன் டீம் எப்படி இருக்கு ? என்ன லெவல்ல இருக்குன்னு அலசி ஆராய்ச்சி பண்ண ஆயிரம் பேரு இருக்காங்க. அட டோனி ராசிக்காரப்பையங்க; எப்படியாவது கோப்பையைத் தூக்கிட்டு வந்துடுவான்.
 நமக்கு அந்த அளவுக்கு கிரிக்கெட் ஞானம் கிடையாது.ஆனா இந்த கிரிக்கெட் சீசன் வந்தாத்தான் சில பேரோட இன்னொரு முகத்த பாக்க முடியும் .அதுல்ல நெறைய அனுபவம் இருக்கு.
--------------------------------------------
உலகத்துலயே நம்ம பசங்க ராசி பாக்கறதுன்னா அது கிரிக்கெட்ல தான் . எக்ஸாம்க்கு கூட எரும மாடு எதிர்ல வந்தாலும் கண்டுக்காம போய் பெயில் ஆவான். ஆனா கிரிக்கெட்ல விட்டு கொடுக்க மாட்டான்.

 ' டேய் .. கால் மேல கால் போடாதடா. சச்சின் அவுட் ஆயிடுவான். '

'மச்சான் .. சொன்னேன்ல.. நான் இந்த சட்டை போட்டா அன்னைக்கு இந்தியா ஜெய்ச்சுடும்டா..'

'டேய் எனக்கு ஒவ்வொரு மெசேஜ் வரும்போது நம்மாளு ஒரு பவுண்டரி அடிக்கராண்டா.. நீ ஒரு மெசேஜ் அனுப்புடா..'

 --------------------------------------------
கிரிக்கெட் பாக்கும்போது சில பேரு காரணம் இல்லாம யார் மேலயாவது கோவப்படுவாங்க.அதுல்ல லாஜிக் எல்லாம் இருக்காது..

' இந்த ரவி சாஸ்திரி கமெண்ட் பண்ணுனாவே இப்படித்தான்.. 'Today he is in good form '-னான்.. அடுத்த பால்ல மிடில் ஸ்டெம்ப் பறந்துடுச்சு. அன்னைக்கு அப்படித்தான் 'yuvraj is waiting  in pavilion for his turn '-னு சொல்லி மைக்க வெச்சிருக்க மாட்டான் ;நல்லா போய்ட்டு  இருந்த பார்ட்னர்ஷிப் ரன் அவுட்ல கவுந்துடுச்சு..'

'எவண்டா அம்பயர செலக்ட் பண்றான்? அதான் ஏற்கனவே ரெண்டு எல்பி கொடுத்தாச்சுல்ல.. மூணாவது இப்போ கொடுத்தே ஆகணுமா ?'

 --------------------------------------------
அப்பப்போ சில பேர் , திடீர்னு கிரிக்கெட் சுப்புடு ஆகிடுவான்.

'தடிமாடு மாதிரி நிக்கிறான் பாரு. அவன் அடிச்சதுமே ஓட வேண்டியதுதான? இவனுக்கு பிட்னஸ் கொஞ்சம் கூட இல்லடா'

'ஒரு ஸ்கொயர் கட் அடிக்க தெரியல. இவன போய் பர்ஸ்ட் டௌன்ல ஏறக்கிருக்காணுக..'

'அட பாவி..  ட்ரை பிட்ச்..  பேட்டிங்  எடுத்திருக்கணும்டா. சே, டாஸ் வேஸ்ட் பண்ணிட்டானுக.. '
 --------------------------------------------
சில பேரு கிரிக்கெட்ட விட்டுட்டு மத்ததைத்தான் பாப்பாங்க. உண்மைலயே கிரிக்கெட்ல பெருசா நாட்டம் இருக்காது.

'ஏன் தம்பி , யாரு இந்த சிங்கு? போன வேர்ல்ட் கப்ல ஒரு பொண்ணு பேசுமே  அது பேரு கூட என்னமோ போடின்னு?'

'அதுவா , அது மந்த்ரா பேடிங்க'

'அதான் அதான் .. அதுக்கு எனன ஆச்சு ?'

'இந்த தடவ இவருதாங்க'

'என்னமோ போங்கப்பா..அது எவ்ளோ அழகா பேசிட்டு இருந்துச்சு ?  இவன் ஏன் இப்படி இங்கிலிஷ கடிச்சு துப்பறான்..இவனுக்கு எனன தெரியும் கிரிக்கெட்ட பத்தி..?'

'இவர்தான் சித்து. பழைய பிளேயர். '

'சரி வரேன்பா.. அப்போ இந்த தடவ அந்த பொண்ணு  கண்டிப்பா வராதா ?'

(எரிச்சலாக ) 'தெரியாது '

'படிப்ப பாருங்கப்பா. கிரிக்கெட்டா மார்க் வாங்கிதரபோகுது. உங்க அப்பா எங்க ?'
--------------------------------------------
இல்லத்தரசிகளை பழிவாங்க நம்ம ஆளுகளுக்கு கெடைச்ச ஒரே ஆயுதம் கிரிக்கெட்தான்.
'இந்த மனுஷனுக்கு நான் சீரியல் பாக்கறது பொறுக்காது. ஆனந்தம்ல முக்கியமான கட்டம் .. பாக்கலாம்னு பாத்தா ,சீக்கிரமே வந்து உயிரை வாங்குது ?'

உண்மை என்னவோ மனுசனுக்கும் கிரிக்கெட் பத்தி எதுவும் தெரியாது ..ஆனா மனைவிய பழிவாங்க வேற வழி.. ?

'ஆ.. சூப்பர் ஷாட்.. என்னமா அடிக்கிறான் பாரு.. நம்ம ஆளுக சாதாரணம் இல்ல..தெரிஞ்சுக்கோ ..'

'என்னங்க  சொல்றீங்க .. அந்த நாட்டுக்காரங்க சந்தோசமா கட்டிபுடிச்சுட்டு இருக்காங்க .. ?'

'அது அது ..நம்ம ஆளு நல்லாத்தான் அடிச்சான் .. ஆனா எதோ தப்பா நடந்துருக்கு.. இதுக்குதான் கவனமா பாக்கணும்.. பேச கூடாது.. நீ போய் சமையல் வேலைய பாரு'

--------------------------------------------

இந்த சின்ன பசங்கள வெச்சுகிட்டு கிரிக்கெட் பாக்கறதுக்கும்  ஒரு பொறுமை வேணும்.

'அப்பா .. இந்தியா ஜெயிச்சுடுமாப்பா?'

'ஹ்ம்ம்'

'ஹ்ம்ம்னா .. சொல்லுங்க ?'

'பேசாம இருடா'

'அம்மாஆஆஆ அப்பா எனன கார்ட்டூன் பாக்க விடமாட்டீங்கறாரு..'

'டேய் டேய் .. கத்தாத.. இந்தியா ஜெயிக்கும்'

'சச்சின் நூறு அடிப்பாரா ?'

'இப்போதாண்டா 13 ரன் எடுத்துருக்கான்.. தெரியல '

'அம்மாஆஆ '

'ஆமா ஆமா கண்டிப்பா  நூறு அடிப்பான்..'

'எனக்கு பேட் வாங்கி தரனும் ..இல்லேன்னா அம்மாவை கூப்புடுவேன்..'

'சரி'

'எப்போ வாங்கி தருவீங்க?'

'ஆண்டவா......'
--------------------------------------------
சில பேரு கிரிக்கெட்ல கொலை வெறியா இருப்பாங்க.. எங்க அப்பாவும் அதுல ஒரு உறுப்பினர்.ஜெயிக்கிற மாட்ச பாத்தா பரவாயில்ல .. தோக்கற மாட்சையும், அதுவும் படு கேவலமா தோக்கற மாட்சையும் Presentation வரைக்கும் பாக்கறது அவங்க பழக்கம்..

'அப்பா.. போதுமப்பா.. பாக்கறதுக்கே கஷ்டமா இருக்கு..சேனல்ல மாத்துங்க..'

'போடா .. எப்போவுமே ஜெயிச்சுகிட்டே இருக்கணுமா எனன ? இது வெளையாட்டுடா. வெற்றியும் தோல்வியும் மாறி மாறித்தான் வரும் '

அதோட நிறுத்திக்கணும் ... 'ஹ்ம்ம்..அப்புறம் ஏன் அழுகறீங்க ?'-னு கேட்டோம்னா  , படிக்காதவன் விவேக் மாதிரி 'அது வலி.. வேற டிபார்ட்மென்ட்'னு சொல்லிட்டு டிவி வால்யுமை அதிகப்படுத்துவாரு..

-------------------------------------------

எது எப்படியோ .. இதுல்ல ஒரு சந்தோசமும் திருப்தியும் இருக்கு..ஆனா வர்த்தக ரீதியா யாருக்கு லாபம்னு பாத்தா நம்ம  கவர்மெண்டுக்குதான்.. சரக்குல கொள்ளை லாபம் பாப்பாங்க .. காரணம் நம்ம பசங்க ,இந்தியா தோத்தாலும் கவலைல குடிப்பாங்க .. ஜெயிச்சாலும் சந்தோசத்துல்ல அடிப்பாங்க..

நம்மளும் ஜோதில ஐக்கியம் ஆவோம் ..வாங்க..  
Get ready for the fun I say ..   

Friday, February 11, 2011

காதலர் தினம்

கல்லூரி முடித்தப்பின் ,கடந்த ஆறு வருடங்களாக அதிர்ஷ்டவசமாகவோ துரதிஷ்டவசமாகவோ காதலர் தினம் அன்று , முழுநாளும் பயணத்திலோ அல்ல என்னை  யாருக்குமே தெரியாத  புது ஊரிலோ , குடும்பத்துடன் கோவில் குளம் என்று சுற்றிக்கொண்டோ இருந்திருக்கிறேன். To put in simple ,I was not accessable .

இந்த முறை எப்படியென்று தெரியவில்லை (இன்னுமாடா உன்ன நம்பிட்டு இருக்க?!!? ). அதுவும் கடந்த மூன்று வருடம்  இப்படி ஒரு நாள் கடந்து போகிறது என்றே தெரியாமல் சில பிரச்சனைகளால்  மன உளைச்சலில் மறந்திருக்கிறேன். ஆனாலும் அசைபோட சில நினைவுகள் இன்னும் பசுமையாக நினைவில்.

1995 :
 'டேய் .. நீ காந்தி நகர்லதான இருக்க ? '

'ஆமானா. ஏன்? '

'அந்த 8 -ஆம் நம்பர் வீட்டு அக்காகிட்டதான ட்யுஷன் படிக்கற ?   இந்த லெட்டர நாளைக்கு சாயந்தரம்  அவங்ககிட்ட கொடுத்திரு. '

'இன்னைக்கே போவேன்னா . கொடுத்தரேன் '

'இல்ல இல்ல நாளைக்குத்தான் கொடுக்கணும். ப்ளீஸ்டா'

'இல்லனா , நாளைக்கு மிட் டெர்ம் பேப்பர் எல்லாம் கொடுப்பாங்க. மார்க் எதாவது கம்மியா இருந்தா  , ட்யுஷன் போகமாட்டேன்.'

'ஹ்ம்ம், உன் கவலை உனக்கு.சரி கார்த்திய நான் சொன்னேன்னு கூட்டிட்டு வா '

'அவன் கிளாஸ்ல இன்னைக்கே பேப்பர் கொடுத்துட்டாங்கன்னா'

'நாசமா போங்கடா .. நீங்களும் ஒரு நாள் அவஸ்தைப்படுவீங்க.. அப்போ தெரியும்டா..'

1997 :
'டேய்..யாருகிட்டயாவது சும்மாவது சொல்லுடா'

'ஏன்டா , நீ சொல்லு , இல்ல சதீஷ் சொல்லட்டும்.. என்னை ஏண்டா மாட்டிவிடுறீங்க.. '

'நீ சரியான பயந்தாங்கொள்ளிடா. சதிஷு..நீ  '

'உனக்கு வேணும்னா நீ சொல்லுடா.'

'அந்த மூணு பேருக்கு எப்போவுமே எதோ ஒன்னு பேசறதுக்கு இருக்கு . என்னனு எல்லாத்துக்கும் சொல்லுங்களே.. எந்திரிங்க'

'பரதேசி , மாட்டி விட்டுட்டீயேடா. இன்னைக்கு என்ன நாளா இருந்தா எனக்கு என்ன ..'

1998 :
'என்னடா..இன்னைக்கு சொல்ல போறேன்னு ஆறு மாசமா சொல்லிட்டு இருந்த. போய் சொல்லுடா'

'டேய் சும்மா இருடா . அவனே  கடுப்பா இருக்கான்'

'டேய் ஏன்டா மச்சான்?'

'என்ன என்னடா மச்சான். அவள நல்லா பாருடா. ஆறு மாசத்துள்ள ஒன்றரை  அடி வளந்துட்டா. ப்ரேயர்ல பொண்ணுக சைடுல  இப்போ அவ கடைசியா நிக்குறா.நம்ம பையன் இன்னும் ரெண்டாவதா நிக்கறான்.'

2000 :

'எப்போடா சொல்ல போற? இன்னைக்கு என்ன நாளுன்னு தெரியும்ல  ?'

'மொதல எக்ஸாம் நல்லா பண்ணிட்டு அப்புறம் சொல்லலாம்னு இருக்கேன்டா'
 ------------------------
'entrance எக்ஸாம் முன்னாடி சொல்லிடுறா'

'மார்க் வரட்டும்டா.. யாருக்கு தெரியும் , நாங்க ரெண்டு பெரும் ஒரே காலேஜ் சேர்ந்தா நெறைய பேசிட்டு அப்புறமா சொல்லலாம்ல'

----------------------
'என்னடா மச்சான் இப்படி ஆயிடுச்சு ? நம்ம மார்க்குக்கு பேமென்ட் சீட் கிடைக்கறதே கஷ்டம்டா . அதுவும் எதாவது வெளியூர் காலேஜ்தான். உன் ஆளு மெடிக்கல் எடுக்கப்போகுதாம்ல'

'இப்போ உன்கிட்ட நான் எதாவது கேட்டேன்னா? பேசாம வாடா'

'சரி விடுறா. நம்ம விஷ்ணுவும் அதே காலேஜ்தான் சேர போறான் . அவன்கிட்ட அப்பப்போ எதாவது கேட்டுக்கலாம்'

'அவனும் அதே காலேஜாடா..எனக்கென்னவோ அது டேஞ்சர்னு தோணுது . மச்சான் நீ சீக்கிரமே அவகிட்ட சொல்லிடுடா. '

'ஐயோ .. ரெண்டு பெரும் பேசாம இருங்கடா'

-------------------------
'ஹாய்.. தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் சேரப்போறியா? congrats .'

'ஹ்ம்ம் , ஆமா உடனே போகணும் . இப்போதான் எங்க அம்மா உங்க அம்மாகிட்ட பேசிட்டு வந்தாங்கலாம். நீ என்னடா பண்ண போற ? இம்ப்ருவ்மெண்டா ?'

'அது.. அது எல்லாம் தேவையிருக்காது..கொஞ்சம்தான் கம்மியாயிடுச்சு.. இன்ஜினியரிங் சேர்ந்துடுவேன் எப்படியாவது'
-------------------------
'டேய் அவள பாரேன்..என்ன பாக்குதா உன்ன பாக்குதானே தெரியல . இது எல்லாம் டாக்டருக்கு படிச்சு என்னடா பண்ணபோகுது?'

'என்னடா உன் ஆள நீயே இப்படி பேசுற ?'

'என்னடா சொல்ற ? நான் எப்போ என் ஆளுன்னு சொன்னேன். நீ வேற , எப்போ பாத்தாலும் எதாவது சொல்லிட்டு இருப்ப. என் காலேஜ் சீனியர்கிட்ட பேசுனேன்டா.. காலேஜ்  ஸ்ட்ரிக்ட் எல்லாம் இல்லையாம். ஜாலியா சுத்தலாம் போல. பிகர்  எல்லாம் நெறய இருக்குமாம் மச்சான்.  '

----------------------------
2001 - 2004 :
'இன்னைக்கு ப்ரெண்ட்ஷிப் டே .. கைய காமி..'

'இது..இது ராக்கி இல்லையே ?!!'

'சேச்சே..'

'அப்போ சரி..'
------------------------

'ஃப்ரைடே ஊருக்கு போகும்போது எனக்கு வெயிட்  பண்றியா ? நாம அடுத்த பஸ்ல போலாம்.  '

'இல்ல.. பசங்க எல்லாம் ஒன்னா போவோம் .. '
'சரி.. அப்போ போ..'
'பரவாயில்ல .. நான் வெயிட் பண்றேன் .. நீ வா'
----------------------------
'போன வாரம் ஊருக்கு போகும்போது யார் கூட போன ?'

'ஏன் ? பசங்களோடதான் '

'உங்க ஊர் பொண்ணுகூட போனதா சொன்னாங்க ?'

'யாரு சொன்னா?'

'அது தேவை இல்ல.உண்மையா  இல்லையா? '
 --------------------------------
'எல்லாம் நல்லாதானடா போயிட்டு இருந்துது? எவன் போட்டுகொடுத்தானே தெரியலடா ? எவனையும் நம்ப முடியல மாப்ள'

'விடுறா.. சும்மா அதவே நெனச்சுட்டு.. ஆமா நாளைக்காவது  ஸ்ரீபதில வரியா ? இல்ல அடுத்த பஸ்தானா ?'
--------------------------------
'டேய்.. நம்ம  ரன் படத்துக்கு கூட ரெண்டு  தடவதாண்ட  போனோம்.. ஏன்டா ஆட்டோக்ராப்க்கு மட்டும் வாரம் ஒருதடவ கூப்புடுற..'

'டேய் வாடா.. எனக்கு நீ பண்ணுனதுக்கு இப்படியாவது பிராயச்சித்தம் பண்ணு ..'

'ஏன்டா மாப்ள கோபப்படுற ? ..வானு சொன்னா வரப்போறேன்.. இதுக்கு போயி பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு '
------------------------------------
'நான் ஜூனியர் ..அன்னைக்கு சிம்போசியம்ல கூட பேசுனோமே..'

'ஒ .. கரெக்ட்.. என்ன?'

' இன்னைக்கு ப்ரெண்ட்ஷிப் டே .. கைய காமிங்க '

'தேங்க்ஸ் சிஸ்டர்..'

'அய்யயோ .. இது ராக்கி இல்ல'

'அதனால என்ன ? உன்ன பாத்தா என் சித்தி பொண்ணு மாதிரியே இருக்கு .. பரவாயில்ல'

-------------------------------------

'ஏன்டா இப்படி பண்ணுன? அந்த கதைதான் முடிஞ்சுடுச்சே .. அவ இப்போ உன் பக்கத்துல்ல கூட வரதில்லயேடா '

'அவ இல்லேன்னா என்னடா? அதான் நீ இன்னும் என் பக்கத்துலயே இருக்கியே..உன்ன வெச்சுட்டு மறுபடியும் நான் ரிஸ்க் எடுக்கனுமா ?'

'பாத்துக்கோடா .. சில விஷயங்கள் நமக்கு திரும்பவும் கெடைக்கவே கெடைக்காது '

'ஹ்ம்ம்..அதுவும் கரெக்ட்தான்.. இன்னைக்கு கடைசி நாளாம்.. வா ஆட்டோக்ராப்க்கு போவோம்'

----------------------------------------------


ஆக என்னைப்பொறுத்தவரைக்கும் இதுவரைக்கும் காதலர் தினம் 'இன்றும் மற்றொரு நாளே'ங்கற அளவுலதான் இருக்கு.

மத்தப்படி .. பூ வாங்கிட்டு ப்ரொபோஸ் பண்ண போறவங்களுக்கும் ,ப்ரொபோஸ் பண்ணி அடி வாங்க போறவங்களுக்கும் ,  அடி வாங்கிட்டு 'த்ரிஷா இல்லேன்னா திவ்யா'-னு அடுத்த ரவுண்டுக்கு ஆயத்தம் ஆகறவங்களுக்கும்  என் ஆசியும் ஆல் தி பெஸ்டும்...


 என்ன நடந்தாலும் தைரியத்தையும் நம்பிக்கையையும் கைவிட்டுடாதீங்க.. அடுத்த வருசத்துக்கு உதவும்.. 

Wednesday, February 9, 2011

அர்ச்சுனர்களை ஆதரிப்போம்!

மார்கழி மாதம். காலை நேரம். 'வாக்கிங் போலாமா ?' என்று தொலைபேசியில் கேட்கும்  நண்பனிடம் 'இந்த குளிர்ல எங்கடா? நாளைக்கு பாப்போம்..'. மீண்டும் கண்மூடி இனிமையான உறக்கம்.

பனி உறையும் மலைப்பிரதேசம். பதுங்கு குழியில் பாதி பேர். மெல்லிய நடை போட்டு துளியும் கவனம் குறையாமல் தொலைவு வரை பார்க்கும் மீதி பேர். தன் எடையில் பாதிக்கு மேல் இருக்கும் நவீன கனரக துப்பாக்கிகள்;இன்ன பிற ஆயுதங்கள். என்னதான் துல்லியமாக கவனித்தாலும் முதலில் வரும் ஏவுகணை கண்ணில் தெரிய 90 சதவீதம் வாய்ப்பில்லை - கண்ணை மறைக்கும் பனிக்காற்று.

உணவு நேரம். பொட்டலங்கள் கொடுக்க வரும் சக வீரனிடம் -'எனக்கு எதாவது வீட்டிலிருந்து கடிதம் ? அழைப்பு ?'.
மறுமுறை வரும்போது தெரிவிப்பதாக கையில் உணவைத் திணித்து செல்கிறான்.

விரும்பிய நேரத்தில் சாப்பிட முடியாது. உணவு நேரம் 7  நிமிடங்கள் என்றால்  ஏழே நிமிடங்கள்தான்.
 உண்ட பிறகு நீர் அருந்துகிறான். என்னதான் பனி உருகும் மலையில் இருந்தாலும் நீரை விரும்பியபடி அருந்த முடியாது. காய்ச்சி பதபடுத்தப் பட்ட நீர்தான். மாறினால் குடல் வலியும் சுவாச கோளாறும் இரண்டே நாளில் ஏற்படும். 

மூன்று நாட்கள் பிறகு அவனுக்கு செய்தி தெரிவிக்கப்படுகிறது - 'அடுத்த AMMO KIT  தேவையென்றால் தெரிவிக்கவும். RADOR clearance ரிப்போர்ட்  நாளை அறிவிக்கப்படும்.LONG 34 ; LAT 45 -க்கு இரண்டு பேர் அனுப்பவும் . RESOURCE PERS :  உனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது'

மகிழ்ச்சியை கொண்டாட எத்தனிக்கிறான்- கத்தவும் முடியாது ; இருக்கும் ஆனந்தத்தில் துப்பாக்கியை ஒரு முறை அழுத்தி ஆர்ப்பரிக்க ஆசை - நடக்காது. குறைந்தபட்சம் யாரிடமாவது இதை தெரிவிக்கலாம் என்றால் அடுத்த ஜவான் அரை காத தூரத்தில். Unnecessary position  change is violation.சரி குழந்தைக்கு இரண்டு வயது ஆகும் முன்பு எப்படியாவது சென்று பார்க்க வேண்டும் என நினைத்துக்கொண்டு  மீண்டும் தூரத்தை அலசுகிறான்.

- இது போர் காலம் அல்ல. தினமும் எல்லையில் நடக்கும் ஒரு சராசரி நிகழ்வு.

நமக்கு வீரர்களைப்பற்றிய நினைவு வர வேண்டும் என்றால் எதாவது போரோ அல்ல ஒரு ஊடுருவலோ நடக்க வேண்டும். பல உயிரிழப்புக்கு பிறகு அமைதியடைந்த பின்னர் நாம் மார்தட்டி இரண்டு நாள் திரிந்து விட்டு நம் வேலையை கவனிக்க ஆரம்பிப்போம்.

யார் மீதும் குறை எதுவும் சொல்லவில்லை. இது இயற்கைதான். ஆனால் நாம் அனுபவிக்கும் சாதாரண சந்தோசங்களையும் விட்டுக்கொடுத்து கால்கடுக்க அங்கு நிற்பவனுக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?.  அதுதான் வருடத்தில் ஒரு நாள் கொடி நாள் வருகிறதே ? அப்போது நிதி அளவில் நம்மால் முடிந்ததை கொடுத்து ஆதரிக்கிறோமே என்று பதிலுரைத்தால்  இதோ அடுத்த கேள்வி ? பணம் மட்டும் அவனுக்கு பெரியதென்றால் , ராணுவத்தை விட சுலபமான வேலையை அவன் இங்கிருந்தே செய்திருக்க முடியும். அவனுக்கு தேவை பணம் (மட்டும்) அல்ல.

கிரிக்கெட்டில் ஜெயிக்க  போராடும் விளையாட்டு வீரனுக்கு பவுண்டரி விளாசுவதால் முழுத்திருப்தி வருவதில்லை . அதை தொடர்ந்த கைத்தட்டலும் விசில் சத்தமுமே அடுத்த பவுண்டரிக்கு அவனை தயார்படுத்தும். அணியில் முன்னணியில் இருக்கும் வீரனுக்கும் substitute வீரனுக்கும் பெரிய அளவில் சம்பளத்தில் வித்தியாசம் இல்லை. ஆனால் அவன் முழுத்திறமை வெளிப்படுத்த காரணம் , moral  support  எனப்படும் நாம்   கொடுக்கும் உற்சாகமே. அதை கொடுப்பதில் நாம் எள்ளளவும் அவனுக்கு குறை வைப்பதில்லை. ஆனால் இது நாட்டைக் காப்பவனுக்கு தருகிறோமா ? உங்கள் சிந்தனைக்கு..

போராடி திரும்பி வருபவனாகட்டும் ; அல்ல விடுமுறையில் வீடு வருபவனாகட்டும் , சற்று தன் வேலையை பற்றி பேசினால் அதை கேட்க நமக்கு பொறுமை இல்லை. அவன் கஷ்டத்தை பெரும்பாலும் அவன் மனைவியிடமோ பெற்றவரிடமோ சொல்ல முடியாது.'என் குடும்ப சந்தோஷத்தில் நான் எதற்கு இதை சொல்லி அவர்களை புண்படுத்த ?' என்னும் ஒரு எண்ணம் அவனை ஊமையாகி விடுகிறது . ஆக அவனுக்கு தேவை , அதை கொட்டிவிட ஒரு வடிகால்; அணைத்து உரமேற்ற ஒரு தோள்; உங்கள் சிந்தனைக்கு..இவருக்கு கீழே வேலை செய்கிறோம் என்ற ஒரே காரணத்தினால் , சின்ன ஒரு செயலுக்கும் நம் பாராட்டை மேலதிகாரிக்கு  தெரிவிக்கிறோம். உயிர்ப்பணயம் வைத்து போராடி வருபவன் சொல்லும் கதை நமக்கு பொறுமையை சோதிக்கிறது. நினைவில் கொள்ளுங்கள் - இந்த முறைக்கு உங்கள் அங்கீகாரம் கிடைக்காமல் போனால் அடுத்த முறை அவன் போராடும் வீரியம் பலமாக பாதிக்கப்படும். 'என்னை மதிக்காத இவர்களுக்காக நான் என் போராட வேண்டும் ?'என்ற ஒரு சலனம் அவன் மனதில் விழுந்தால் நம் சுதந்திரமும்  சுலபத்தில் விழுந்திடும்.  கிடைக்குமா அங்கீகாரம்? உங்கள் சிந்தனைக்கு..

ஒரு பத்து அடி முன்னால் சென்று முயன்றால்  எதிராளியை வீழ்த்தலாம். 'ஆனால் எனக்கு எதாவது ஏற்பட்டால் என் குடும்பத்தின் கதி??' என்ற எண்ணம் அவன் மனதில் வந்தால் நம் நாடு வரைப்படம் சுருங்கிக்கொண்டே போகும் . 'நாங்கள் இருக்கிறோம் ' என்ற நம்பிக்கை அவனுக்கு கொடுக்க நாம் தயாரா ? உங்கள் சிந்தனைக்கு..

கால் இழந்து வீடு திரும்பிய மேஜரைப் பார்க்க வரும் ஜவானிடம் ' நான் ஊருக்கு வரும்போது என்னை பார்க்ககூட யாரும் வரவில்லை. எல்லாரும் தேசிய விருது பெற்ற நடிகனின் பாராட்டு விழாவுக்கு சென்றதாக கேள்விப்பட்டேன்' என்று சொன்னால் வந்தவன் மனதில் என்ன கேள்வி எழும்பும் ? பணிக்கு திரும்ப அவன் மனம் முழுதாக ஒத்துழைக்குமா ? தேவை ஒரு ஆறுதல்; கிடைக்குமா? உங்கள் சிந்தனைக்கு..

உயிரோடு இருக்கும்போது ஒதுக்கிவிட்டு , பல காலம் தாண்டி 'பரம்வீர் சக்ரா'  கொடுப்பதில் புண்ணியமில்லை.நாம் யாரும் நம் வீரர்களை அவமானப்படுத்துவதில்லை. ஆனால் அலட்சியப்படுத்துகிறோம்.மாறாக அவர்களின் கௌரவத்தையும் குடும்பத்தையும் பேணிக் காத்தால் தன் இறுதி கணத்திலும் தன் மக்களுக்காக  மரிப்பதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வான்.

ஓரே ஒரு சிந்தனை : 'சில நன்றிகளை நாம் எப்போதோ ஒரு முறை நினைப்பதை விட  எப்போதும் நினைத்திருப்பதே புனிதம்'

Tuesday, February 8, 2011

இக்கரைக்கு அக்கரை...

நேற்று என் ஆருயிர் நண்பர் , ஒட்டன்சத்திரம் பண்ணையார் கோபிநாத் வேலை நிமித்தம் புனே சென்றிருந்தாலும் கூட  மிகவும் தேச அக்கறைப்பட்டு மின்மடலில் என்னைத்தாளித்து விட்டார். ' என்ன இப்படி கண்டுக்காம இருக்கீங்க ? எவ்வளவு பெரிய ஊழல் நடந்துருக்கு. இதே அதிமுக செஞ்சிருந்தா இந்நேரம் இப்படி இருப்பீங்களா ? ' என்று தொடங்கி ஏதோ என் சித்தி பையன் தப்பு பண்ணி நான் கண்டிக்காத மாதிரி மிகவும் வருத்தப்பட்டார். அவருக்கு என் முதல் பதிவை வாசிக்க சொல்லி அதில்  நான் குறிப்பிட்ட 'செய்ய போகும் சில குற்றங்களுக்கான முன்ஜாமின்கள்' பத்தியில் மூன்றாவது பாயிண்டை மீண்டும் பார்க்க வலியுறுத்துகிறேன்.

சரி அதற்காக ஒரு கேள்வி என்னை நோக்கி வீசும்போது அதைப்பற்றி கவலைப்படாமல் வேறு ஒருவரை அறிக்கை விட செய்து கொடநாடு சென்று ரெஸ்ட் எடுக்க என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை..

ஓவர் டு மெயின் கோர்ஸ் :

நீதிபதி: 'பெத்தவங்க ரெண்டு பேரையும்  ஈவு இறக்கம் இல்லாம கொலை பண்ணியிருக்க. இதுக்கு என்ன தண்டனை தெரியுமா ?'
குற்றவாளி :'எந்த தண்டனையா இருந்தாலும் யோசிச்சு கொடுங்கய்யா. நான் அப்பா அம்மா இல்லாத அநாதைங்க!'

இப்படிதான் போயிட்டு இருக்கு ஸ்பெக்ட்ரம்  வழக்கு. தப்பு பண்ணிடாங்க . மாட்டிகிட்டாங்க.. அதுவும் திமுக தப்பு பண்ணி மாட்டறது  இதுதான் முதல் தடவ. ஏன்னா எந்த ஒரு விசயத்தையும் பிளான் பண்ணி பண்றதுல கலைஞர்தான் ப்ளாக் பெல்ட் சங்கி மங்கி.

என்னடா   இவனும் ஸ்பெக்ட்ரம்  பத்தி பேச வந்துட்டானான்னு பயப்படாதீங்க.. அதோட ஹிஸ்டரி ஆப்
தி இன்சிடென்ட் ;ஜியாக்ரபி ஆப் தி ஆக்சிடென்ட் எல்லாம் நான் பேச போறதில்ல..ஆனா  இனி என்ன பண்ணலாம்-னு ஒரு முடிவு பண்ணணும்ல.. தேர்தல் வேற வேகமா வந்துட்டு இருக்கு.. நீங்க பாட்டுக்கு அவசரமா எப்போவும் இல்லாம கோபப்பட்டு ஓட்ட மாத்தி போட்டுற போறீங்க..?!!

அதுல்ல பாருங்க ..எல்லாருக்கும் அடிப்படையா ஒரு விஷயம் தெரியும். இவன் கெட்டவன் , அவன் நல்லவன் ,அதனால அவனுக்குதான்  ஓட்டு போடணும்னு நம்ம யாரும் நினைக்கறதில்ல. இவன் பெரிய திருடன் , அவன் சின்ன திருடன் , அதனால அவனுக்கு சப்போர்ட் பண்ணலாம்னுதான் ஒவ்வொரு தடவையும் நாம நெனைப்போம். வேற வழி இல்ல. அப்படியும் இல்லாம என்ன பண்றதுனே தெரியலேன்னா நம்மளே பெருந்தன்மையா 'அட அஞ்சு வருஷம் இவன் அடிச்சுட்டான். அடுத்த சான்ஸ் இவனுக்கு கொடுப்போம். அவனும் எத்தனை நாளைக்குதான் நமக்கு குரல் கொடுக்கற மாதிரியே நடிப்பான்'-னு ஆட்சிய மாத்தி விட்டுடுவோம்.

இதுதானயா காலங்காலமா நடந்துட்டு இருக்கு ? இப்போ மட்டும் என்ன உங்களுக்கு புதுசா ரோசம் ? அட மஞ்ச கலரு  தாத்தாவ பாத்துப்பாத்து போர் அடிச்சுடுச்சு; பச்சை கலரு அம்மாவ நெக்ஸ்டு பாப்போம்னு சொன்னீங்கனா அது நியாயம் .. நான் உங்க கட்சி .. அத விட்டுட்டு  எதோ இந்த பக்கம் ரெம்ப நல்லவங்க இருக்குற மாதிரி , 'ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கு சாட்டையடி கொடுப்போம் ; ஆதரிப்போம் தென்னகத்து தெரசாவை..'-னு சொன்னா ரணகளம் ஆகிடும் ; ஆகிடுவீங்க..

அட நாம எதுக்கு இந்தியா பூரா பாக்கணும் ? உனக்கு  இப்போ தமிழ்நாட்டுல என்ன குறை ? டிவி இருக்கு ; ஒரே ஒரு ரூபாய்க்கு அரிசி இருக்கு ; ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு.. இந்தா கொஞ்ச நாளுல ப்ரீ சிம்கார்டு , மொபைலுனு அறிவிப்பாங்க. உனக்கு கொடுக்கத்தான அங்க இருந்து எடுத்திருக்காங்க..அது ஏன் உன் புத்திக்கு எட்டமாட்டிங்குது? அதுவும் இல்லாம அவங்களுக்கே மறுபடியும்  ஓட்டு போட தனியா பணம் கொடுப்பாங்களே .. நீ வேணாம்னு சொல்லிடுவியா ?

அப்புறம் அதிமுக ஆட்சிக்கு வந்தா திமுக தலைக சும்மா இருக்குமா ? பழைய கேஸ் எல்லாம் கிளருவாங்க. அப்புறம் அம்மாவைக் காப்பாத்த மத்தியஅரசு ஒன்னும் பண்ணாது . ஏனா டெல்லி அம்மாவுக்கும் நம்ம அம்மாவுக்கும்தான் பலகாலமா வாய்க்கால் தகராறு இருக்கே.. 

அட நம்ம அம்மா எப்போதான் யாருகூட சண்டை போடாம இருந்திருக்காங்க. அது பி.ஜே.பினாலும் சரி காங்கிரஸ்னாலும் சரி , கொஞ்சமே கொஞ்ச காலம் ஓட்டிட்டு இருந்த மூன்றாம் அணினாலும் சரி , எல்லாரோடவும்   ' நேனே உயரதிகாரி'னு பல்ராம் நாய்டு மாதிரி வெறைப்பா இருப்பாங்க .. அம்மா மேல நடந்த/நடக்கற  ஊழல் வழக்குகள் எல்லாம் இன்னும் நிலுவைல இருக்கேப்பா? அதோட மொத்த மதிப்பு தெரிய வரும்போது அப்புறம் அதுக்கு ஒரு தடவ கோபப்படுவியா?  புரிஞ்சிக்க மாட்டிங்கறியே?


ஆக நம்ம மாநிலத்த பொறுத்தவரைல நல்லவங்க அரசாண்டதெல்லாம் காமராஜர் காலத்துக்கு அப்புறமா காணாம போய்டுச்சு. அதுக்கப்புறம் வந்தவங்களும் சரியில்ல.. நாமளும் சரியில்ல. நம்ம தப்ப எல்லாம் பட்டியல் போட்டா நாள் எல்லாம் அதையே பண்ணிட்டு இருக்க வேண்டியதுதான். அதனால நல்லபுள்ளைக்கு அழகு அமைதியா ஆர்ப்பாட்டம் பண்ணாம எப்பவும்  போல  யாருக்காவது ஓட்ட போட்டுட்டு வேலைய  பாரு.. அது திமுகவுக்கு எதிராக்கூட இருக்கட்டும். ஆனா அவங்க ஊழல் செஞ்சாங்க அதனால்தான்  நான் எதிரா போட்டேன்னு சொன்னா அத ஏத்துக்கமுடியாது. ஏனா எதிர்தரப்பு அதவிட ஏடாகூடமாத்தான் இருக்கு.


முக்கியக்குறிப்பு:மேற்குறிப்பிட்ட யாவும் சராசரி குடிமகனுக்கு எதிராக எழுப்பியவை. இந்த கேள்விகள் எதுவும் உண்மையான, நேர்மையான , வருடம் தவறாமல் வரி கட்டுகிற , மனசாட்சிக்கு தகுந்தபடி வாக்களிக்கிற வெகு சில நல்லவர்களுக்கு அல்ல.
நீங்க எதாவது என்மேல  கோபப்பட்டு  டூ விடாதீங்க..

அதிமுக்கியக்குறிப்பு : நான் திமுக கெடியாதுங்கோவ்...

Sunday, February 6, 2011

யுத்தம் செய் : சேரனுக்கு மறுவாழ்வு - மிஸ்கினின் கமர்சியல் உடன்படிக்கை

 
 
 
'பச்சைக்கிளி முத்துச்சரம் ' தோல்விக்கு கௌதம் மேனன் சொன்ன காரணங்களில் முதன்மையானது - ' இந்த கதைக்கு நான் தேர்ந்தெடுத்த நடிகர் சேரன்.சூழ்நிலை காரணமாக அவர் நடிக்கவில்லை '.  அவர் விட்ட வாய்ப்பை கனகச்சிதமாக பற்றிக்கொண்டார் மிஸ்கின்.
 
தவமாய் தவமிருந்துக்கு பிறகு எங்கள் சேரனைக் காணவில்லை. இப்போதும் ஒரு இயக்குனராக அவருடன்  எனக்கு  நிறைய முரண்பாடுகள் உள்ளன. ஹீரோயினை 'டா' போட்டு கூப்பிடுவது; முகத்தை மூடிக்கொண்டு அழுவது; ஓவர்டோஸ் செண்டிமெண்ட் - இப்படி பல சறுக்கல்கள் அவர் படத்தில் இருக்கும்.  இடையில் அவர் நடித்த 'ராமன் தேடிய சீதை' அவருக்கு பொருத்தமான கதாப்பாத்திரமாக அமைந்தது. ஆனால் எத்தனை நாள்தான் ஒரே மாதிரி பாத்திரத்தில் ஒரே நடிகரைப் பார்ப்பது ?. சரி அவரே ஒரு படம் எடுத்து தன் இந்த static  இமேஜை உடைப்பார் என்றால் அதுவும் இல்லை.
 
வந்தார் மிஸ்கின். 'ஒரு டைரக்டரா இல்லாம நடிகனா நான் சொல்ற மாதிரி நடிங்க; நல்ல மாற்றத்துக்கு நான் கேரண்டி' என்று சொல்லியிருப்பார் போல. பொக்கிஷம் எடுத்து புலம்பிக்கொண்டிருந்த சேரனும் , சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதுவும் இல்லாததால் ஒத்துக்கொண்டிருப்பார் போல .சொன்னதை காப்பாற்றிய மிஸ்கினுக்கும் , தன் ஈகோ எல்லாவற்றையும் விட்டுத்தள்ளி சொன்னபடி ஒத்துழைத்த சேரனுக்கும் வாழ்த்துக்கள்.
'சேரன், இதற்கு பிறகும் ஆட்டோக்ராப் 3 , பொக்கிஷம் 2 - உனக்கு நான் திருப்பிகொடுத்த காய்ந்த ரோஜாக்கள் - சாக்லெட் வ்ரேப்பர்கள் என்று மீண்டும் தடம் மாற மாட்டீர்கள் என நம்புவோமாக' ..
 
உண்மையான யுத்தத்தை செய்திருக்கிறார்கள். சேரனின் நடையுடை பாணிக்கு எங்கும் அலையாமல் முந்திய தன் பட நாயகன் நரேனிடம் கடன் வாங்கிக் கொடுத்திருகிறார் இயக்குனர். ஆனால் அதை சேரன் செய்யும்போது புதிதாக தெரிவது பிளஸ் பாயிண்ட். த்ரில்லர் பாணி கதைக்கு ஹீரோயின் வேண்டாம் என்று உதறியது இன்னொரு பிளஸ். எல்லாவற்றையும் விட மிகபெரிய பிளஸ் சேரனை காக்கிச்சட்டை போடாமல் காட்டியிருப்பதுதான்.
 
  விறுவிறுப்பாக போகும் படத்துக்கு பாடல்கள் வேகத்தடையாகும்  என்பதை புரிந்து பாதி பின்னிசையிலும் மீதி மௌனத்திலும் எடுத்தாண்ட விதம் அருமை. இசை சுந்தர் சி.பாபு அல்ல ; யாரோ கே . யார் என்று தெரியவில்லை;  இந்த கதைக்கு பொருத்தமாக இசை கொடுத்திருக்கிறார். குட்.
 
முந்தய படங்கள் போல நகைச்சுவைக்கு எங்கும் இடம் வைக்கவில்லை. ஆனால் தனக்கே  உரிய பாணியான - சிறு சிறு பாத்திரத்தையும் மனதில் பதிய வைப்பதை இதிலும் விட்டுகொடுக்கவில்லை. சரி கதைக்கு வருவோம்;
 
கதை ஒன்றும் புதியது அல்ல ; ஆனால் எடுத்த விதம் கிட்டத்தட்ட புதியது; நிறைய படங்களில் சொன்ன அதே தொடர் கொலைகளும் கற்பழிப்புகளும் , அதை தொடர்ந்து நடக்கும் போலீஸ் விசாரணைதான் ஒன் லைன்.Who is the culprit? சஸ்பென்ஸ் பாதி படம் வரை கடைபிடிக்கப்பட்டிருக்கிறது.நடுத்தர வர்க்கத்திற்கு அநியாயம் நேர்ந்தால் , வெற்றி பெறுகிறோமோ இல்லையோ , எதிரிக்கு கூடிய வரையில் வலியை உணர்த்திக்காட்டுவோம் என்பதை வலியுறுத்தியிருக்கிறார்கள்.புது கோணம்.
 
  படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்தது மிக பொருத்தம் - ரத்தமும் வன்முறையும் ,அதையும் தாண்டிய உயிரோட்டமான போஸ்ட் மார்டம் காட்சிகள் என படம் முழுக்க அடிவயிறை பதம் பார்க்கும் நிகழ்வுகள்.  வீட்டில் குழந்தைகள் அடம் பிடித்தால் , காவலனுக்கோ   குட்டிச்சாத்தானுக்கோ அழைத்துச் செல்லுங்கள் - இந்த பக்கம் தனியாக வாருங்கள்.
 
சண்டைக்காட்சிகள் மிக நேர்த்தி. ஒரு பாலத்தில் நடக்கும் சண்டையும் , பிறகு ஒரு கத்தியை வைத்துக்கொண்டு எதிராளியின் நெஞ்சில் , எந்த உணர்ச்சியும் காட்டாமல் குத்திவிட்டு செல்வது என சேரன் சிறப்பாக செய்திருக்கிறார். மிஸ்கினின் படங்களில் வரும் சண்டைகள் எப்போதும் நம்பத்தகுந்த அளவில் மிதமான ஹீரோயசத்துடன் இருக்கும் ; இதிலும் அப்படியே.
 
படத்தில் ஒரு இடத்தில ,சில நொடித்துளிகள் மட்டும் எழுத்தாளர் சாரு வருகிறார். நோ கமெண்ட்ஸ்.
 
இயக்குனரிடம் கேட்க வேண்டிய ஒரே கேள்வி - 'எல்லாம் சரி மிஸ்கின்.. உங்க திறமையில் யாருக்கும் இப்போது சந்தேகம் இல்லை. சித்திரம் பேசுதடிக்கு பிறகு உங்களை திரையுலகம் கண்டுகொள்ளவில்லை என்பதற்கு 'அஞ்சாதே','நந்தலாலா' கொடுத்து உங்களை நிருபித்து விட்டீர்கள். மற்றவர்களுக்கு (சர்ச்சைக்குரிய ) ஆலோசனையும் சொல்லுகிறீர்கள். ஆனால் எதற்காக குத்து பாட்டு ஒன்று எப்போதும் இடைச்செருகலாக.. ? நீங்களும் செண்டிமெண்ட் பார்க்கறீர்களா?  இந்த குத்து பாட்டு எல்லாம் கதையிலும் தன்னிலும் நம்பிக்கையில்லாத இயக்குனர்கள் செய்வது. உங்களுக்கு வேண்டாமே ?.இதை தொடர்வது என்றால் அடுத்தவருக்கு ஆலோசனைகள் சொல்வது வேண்டாமே ? Let it  be a mutual understanding '
 
கல்பாத்தி குடும்பத்திற்கு ஒரு High  5 . இப்போதெல்லாம் நீங்கள் கொடுக்கும் படங்கள் தரமானதாக இருப்பதற்கு உங்கள் தேர்ந்தெடுக்கும் திறமையும்
, ஸ்டார் வேல்யூவை மட்டும் நம்பாததும் ஒரு காரணம்.மகிழ்ச்சி.
 
ஆக மொத்தத்தில் இது  மிஸ்கினுக்கு தொடரும் வெற்றி ; சேரனுக்கு புது வசந்ததிற்க்கான தொடக்கம்.
 
யுத்தம் செய் - வெற்றி முழக்கம்..
 
 
 

Friday, February 4, 2011

தேர்தல் களம் - 2011

எல்லா தேர்தலுக்கும் கருத்துக்கணிப்பு ஆரம்பிக்கும்போது 'இந்த தடவை என்ன நடக்க போகுதுனே தெரியல; ஒரே confusion பா'னு  சொல்லுற மாதிரிதான் நிலைமை  இருக்கும் . ஏன்னா  யாரு எப்போ யார்கூட கூட்டணி வைப்பாங்கன்னு கடைசி வரைக்கும் சஸ்பென்சா இருக்கும். சீட்டு ஒதுக்கீடு , பெட்டி பதுக்கீடு எல்லாம் ஒத்து வந்த பின்னாடி தான் ,'நாங்க இவங்களோட ; காரணம் இரண்டு கட்சிகளின் கொள்கை ஒரே மெயின் ரோட்லதான் போகுது..' - அப்படி இப்படின்னு அறிக்கை விடுவாங்க. அதுக்கு பின்னாடிதான் நம்ம மக்கள் நிம்மதியா தூங்குவாங்க ..
 ஆனாலும் பல பேருக்கு கடைசி வரைக்கும் குழப்பம் விடாது . போன தடவ எங்க பக்கத்து வீட்டு மதிமுக தாத்தா 'இந்த தடவ கலைஞர்தான்.. வைகோ சிங்கம் மாதிரி ஜெயில்ல இருந்து வந்து சப்போர்ட் கொடுக்கறாருல'னு நம்பி நம்பி கடைசில சிங்கம் வோடபோன் ஜூஜூ  மாதிரி ஆனத பாத்துட்டு  , இப்போலாம் கிரிக்கெட் பாத்தா கூட சச்சின் இன்னும் இந்தியாவுக்குதான விளையாடுராரு?னு கன்பார்ம் பண்ணிக்கறாரு.  ஏன் இப்படி confusion வருதுன்னா , கீழ பாருங்க :
இந்த ஐந்து வருடங்களில் சில அந்தர்பல்டிகள் :
 • சரத்/ராதிகா        : திமுக டு  அதிமுக டு  புதுக்கட்சி டு இப்போ திமுக சப்போர்ட்
 • பாக்கியராஜ்       : அதிமுக சப்போர்ட் டு  திமுக
 • ராதாரவி              : அதிமுக டு திமுக டு  மறுபடியும் அதிமுக
 • கார்த்திக்              : பார்வர்ட்  பிளாக் டு  அதிமுக சப்போர்ட் டு 'yet to be announced'
 • தா.பாண்டியன் : கம்யூனிஸ்ட் டு  திமுக சப்போர்ட் டு அதிமுக சப்போர்ட்
 • எஸ் வீ சேகர் : அதிமுக டு திமுக
 • ஜெகத்ரட்சகன் : திமுக டு சொந்தகட்சி டு திமுக
 • சேகர்பாபு             : அதிமுக டு திமுக
 • டி. ஆர்                    : லதிமுக டு  திமுக சப்போர்ட் டு அதிமுக சப்போர்ட் டு 'நல்லா கத்துவேன்..என்னையும் யாராவது ஆட்டத்துல  சேத்துக்கோங்க' கட்சி
இப்படி புதுசா ஏலம் விட்டு குழப்பிவிட்ட IPL டீம்கள் மாதிரி இருந்தா எவனுக்குத்தான் என்ன நடக்குதுன்னு புரியும் ?
சரி இப்போ இருக்குற நிலைமைப்படி ஒவ்வொரு  கட்சியும் எப்படி இருக்குனு பாப்போம் :

திமுக :பலம்:

 • கலைஞர் அரசியல்  சாணக்கியம் (பனித்த கண்கள் இனித்த இதயம் -  வந்தாரை  ஏற்றுக்கொள்வது , போயிட்டு திரும்பி வருவோரையும் ஏற்றுக்கொள்வது உட்பட )
 • அள்ளிக்கொடுத்த இலவசங்கள் ( இப்போலாம் மக்கள் ஜெயா டிவி பாக்கணும்னா கூட அது கலைஞர் தந்த டிவிலதான் பாக்கணும் )
 • மத்திய அரசோடு இணக்கம் ( இருப்பதாக காட்டிக்கொள்வது - இந்த தடவ எதாவது எதிர்பாராம நடக்கலாம்  )
 • சன் டிவி , கலைஞர் டிவி
 • கலைஞரின் முதிர்ந்த வயதால் , அநேக பேருக்கு அவர் மேல் ஏற்பட்டிருக்கும் ஒரு பாசம் அல்லது பரிதாபம்.
பலவீனம்:
 • ஸ்பெக்ட்ரம் ஊழல் : ராசா - கனிமொழி
 • உட்கட்சிப்பூசல் : அழகிரி - ஸ்டாலின் - மாறன்
 • ஓவர்டோஸ் 'தனக்குத்  தானே' பாராட்டு விழாக்கள் - (ஆனானப்பட்ட  ரஜினி, கமல் ரெண்டு பேரையும் சங்கி மங்கி மாதிரி ஆக்கிடீங்களே தலைவரே )
 • காங்கிரஸ் கூட்டணியுடன் சமீபத்திய மோதல்கள் -  ( போன தடவ சரி , இந்த தடவ தனி மெஜாரிட்டில சென்ட்ரல்ல ஆட்சிய புடிச்சிருக்காங்க.. இப்பவும் நாங்க கேட்ட இலாகா கொடுக்கணும்னு எதிர்பாக்கறது டூமச் )
 • இலவசங்களுக்கு எங்கப்பா இவ்வளவு பணம்?-னு வேலைக்கு போகாம வீட்டுல இருக்குறவனே அசால்டா கேக்குறான். இதுக்காக மத்திய அரசிடம்  வாங்குன கடன் இவ்வளவு இவ்வளவுனு புள்ளிவிவரமா கேப்டன் கேப்பாரு..

அதிமுக :


பலம்:
 • எம்.ஜி.ஆர் fame அவர் போய் 25 வருடம் ஆனாலும் கட்சியை பிழைக்க வைக்கிறது. ( இன்றும் சில கிராமங்களில் எம்.ஜி.ஆர் செத்து போய்ட்டாருன்னு சொன்னா பாட்டிகள் எல்லாம் அடிக்க வந்துடுவாங்க. 'எங்களுக்கு மத்ததெல்லாம் தெரியாதுப்பா. எங்க எம்.ஜி.ஆரு சொன்ன இலைக்குத்தான் ஓட்டு போடுவோம்-னு சொல்லுவாங்க )
 • தமிழக மக்களுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை வரும் மாற்று ஆட்சி  ஆசை.
 • ஆட்சி அமைக்க தகுதியாக இருக்கும் ஒரே எதிர்க்கட்சித்தலைவர்(தலைவி). தலைவியின்  போர்குணம். தைரியம்.
 • திமுகவின் அனைத்து பலவீனங்களையும் பட்டியல் போட்டு கேள்வி கேட்கும் திறமை.
 • ஜெயா டிவியை  பலத்தில் சேர்ப்பதா  வேண்டாமா என்று தெரியவில்லை. போன முறை விளம்பரத்துக்கு கூட பயன்படவில்லை.இம்முறை பயன்படுத்துவதை பொருத்து. ( மைனாரிட்டி திமுக அரசு ,மைனாரிட்டி திமுக அரசுனு சொல்றத நிப்பாட்டுங்கப்பா.. காது வலிக்குது..)
 பலவீனம் :
 • கூட்டணியில் நிலைத்து நிற்காத , விட்டுகொடுக்காத  தலைமை. ( அதிமுகல கூட்டணி சேரணும்னா மானம் ரோசம் எல்லாம் பாக்ககூடாது தலைவரேன்னு , தொண்டர்கள் சொல்லித்தான் தலைவர்கள அனுப்பி வைப்பாங்க )
 • உலகப்புகழ் பெற்ற சென்ற அரசு காலத்தில் நடந்த  ஊழல். நகை , புடவை , வளர்ப்பு மகன் திருமணம் . உடன்பிறவா சகோதரி இத்யாதி இத்யாதி .. 
 • எனக்கு பிறகு இரண்டாம் இடம் என்பது இல்லை. நான் மட்டுமே என்று சொல்லி பலம் வாய்ந்த அனுபவமிக்க வல்லுனர்களை இழந்தது (அனிதா ராதாகிருஷ்ணன்,சேகர்பாபு .. )
 •  அரசவை அமைக்க அனுபவம் வாய்ந்த அரசியல் ஆட்கள் இல்லாதது  (ஒ.பன்னீர் செல்வம் தவிர இப்போ அங்க யாரு இருக்காங்கனே  தெரியலயே? )

தேமுதிக:பலம்:
 • திமுக/அதிமுக இல்லாத மாற்று சக்தி என்றால் இப்போதைக்கு இருக்கும் ஒரே சாய்ஸ்
 • கூட்டணி இல்லாமல் தனி ஆட்சி உறுதிமொழி. ( ஒரு வகையில் கட்சிக்கு இது பலவீனமும் கூட )
 • பழகிய முகம் . ரசிகர்கள் எல்லாரும் தொண்டர்கள் ஆகும் வாய்ப்பு. இதுவரை வாங்கியிருக்கும் நல்ல பேர். சினிமாவில் முன்னணியில் இருந்தபோதும் எந்த வதந்தியிலும் சிக்காத ஒழுக்கம். 
 • போன தேர்தலில் கிடைத்த அமோக வரவேற்பு.   ( கிடைத்த சதவிகித ஓட்டுக்கள் ஒரு புதுக்கட்சிக்கு சொல்லத்தகுந்த எண்ணிக்கை)
 • பண்ருட்டி இராமச்சந்திரன்  பக்கபலம்.
பலவீனம்:
 • மூன்றாம் சக்தி என்பதை தவிர தனி கொள்கை எதுவும் உருப்படியாக இல்லாதது . ( எந்த கட்சிக்குதான் இருக்கு ?)
 • கலைஞரை எதிர்த்துதான் அரசியல் செய்கிறேன் , அம்மையார்தான்  எனக்கு மது ஊற்றித்தந்தாரா ? , வடிவேலு எல்லாம் நான் மோத சரியான  ஆள் இல்லை என்று சிக்கிய சர்ச்சைகள்.
 • முன்னுக்குப்பின் முரணான அறிக்கைகள். (அட இவரு அரசியலில் fresherபா)
 • அதிமுகவின் கடைசி பலவீனம் தேமுதிகவுக்கும் பொருந்தும்.

காங்கிரஸ்:


பலம் :
 • மத்தியில் ஆளும் கட்சி
 • திமுகவுடன் நல்ல இணக்கம்.
 • தமிழ்நாட்டில் கறைப்படாத 'கை' (காமராஜருக்கு பிறகு யாரும் ஆட்சி அமைக்கவில்லை ;அதனால் ஊழலில் சிக்கவில்லை.)
பலவீனம் :
 • உச்சக்கட்ட உட்கட்சி பூசல் . ( ஜி.கே வாசன்   , தங்கபாலு , ஈ வீ கே எஸ் என  ஒரு கட்சிக்குள் இத்தனை குழுக்கள் இருக்க முடியும் என்பதற்கு தமிழ் நாடு காங்கிரேசே சான்று ) 
 • மத்தியில் கெட்டு வரும் பேர்.
 • திமுகவுடன் இட ஒதுக்கீடு பிரச்சனை வந்தால் அதிமுக பக்கம் சாயலாம் . சாய்ந்தால் கேட்ட இடம் கிடைக்காது . தனித்து நின்றால் இப்போதைய நிலைமைக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

பாமக :பலம் :
 • வன்னியர்கள் வாக்குவங்கி.
 • மது , புகை ,  எதிர்ப்பில் , தமிழ் பயன்பாடு அறிவுறுத்தலில்  வந்த நல்ல பேர்.
 • மற்றது கூட்டணி பொறுத்து.
பலவீனம் :
 • அடிக்கடி மாறும் கூட்டணி.
 • எதை எதிர்த்தாலும் அதில் சற்றே தூக்கி நிற்கும் வன்முறை.

மதிமுக ( வைகோ )பலம்:
 • அதிமுக புகழ் துதி  
 • ஜெயலலிதா புகழ் துதி
பலவீனம் :
 • வைகோ ( அட அவரேதாங்க)
 • மதிமுக (மற்றவை) எதிர்ப்பு.
 • சிரிப்பாய் சிரிக்க வைத்த போன தேர்தல் பல்டி ( இப்போதைக்கு டி.ஆருக்கு அடுத்த காமெடி பீஸ் சத்தியமா இந்த கொள்கை போர்வாள்தான்)

பா ஜ க :

ஹிஹி போங்க சார் .. ராகிங் பண்ணாதீங்க .. தமிழ் நாட்டுல இப்படியெல்லாம் ஒரு கட்சி இல்லவே இல்ல..கடைசியா -
 பொதுமக்கள் என்கிற வாக்காள பெருமக்கள்:பலம்:
நிறைய இருக்கு. அது அவங்களுக்கே தெரியல..

பலவீனம்:
ரொம்ப  நெறைய இருக்கு . அது அரசியில்வாதிகளுக்கு  நல்லா தெரிஞ்சிருக்கு..

ஆக , இதுல்ல யாரு யார் கூட சேர போறாங்க , சேர்ந்து
யார கவுக்க போறாங்க இல்ல கவுரப்போறாங்கனு மே மாசம் தெரிஞ்சிடும்.
அதுவரை மாறும் காட்சிகளையும் , பறக்கும் அறிக்கைகளையும் , சீறும் பிரச்சாரங்களையும் பார்த்து பொழுத ஓட்டுங்க.. அட Dont worry be happpyyyyyy...!!!

Thursday, February 3, 2011

யுவர் ஆர்டர் ப்ளீஸ்..


ஒரு சில நாட்களா எல்லாருக்கும் வர  forward mail போட்டோ இது . கூடவே - எங்கு செல்லும் நம் கலச்சாரம்? என்று கேள்வியுடன்

படத்த பாத்ததுமே நானும் கிண்டல் பண்ண போறேன்னு நெனைக்காதீங்க..  சத்தியமா அந்த தப்ப நான்  செய்ய மாட்டேன் .ஆனா கொஞ்சம் தீவிரமா சிந்திக்க வேண்டிய விஷயம் இது!
இத பத்தி 'நீயா நானா'ல பேசுனா , கீழ இருக்குற 2 தரப்புல  எதாவது ஒரு பக்கம்தான் சாயணும்.
1 . எங்க போகுது நம்ம கலாச்சாரம் ? பொண்ணுகளுக்கு எப்படி இவ்ளோ தைரியம் ? இதுகள  வளர்த்திருக்காங்க  பாரு , அவங்கள சொல்லணும் ..
2 . இதுல்ல தப்பு ஒன்னும் இல்ல .. அவங்க மட்டும் என்ன பாவம் பண்ணுனாங்க ?  இதுவும் ஒரு நாகரீக வளர்ச்சிதான் ..

நீங்க எந்த பக்கம்னு முடிவு பண்ணிட்டீங்களா ? சரி அப்போ ஓவர் டு சப்போர்ட் பாய்ண்ட்ஸ்.

எதிர்ப்பு :

காந்தி மதுவிலக்கு ஆரம்பிச்சப்போ தமிழ்நாட்டுலதான் அமோக வரவேற்பு இருந்துச்சு . கள்ளுக்கடை மறியலுக்கு தாய்க்குலங்கள் பங்கு அதிகமா இருந்துச்சு. ஆனா இப்போ நெலமை தலைகீழ் . பசங்களுக்கு  எப்போவோ 'தண்ணி'க்கு பர்மிசன் கொடுத்து தண்ணி தெளிச்சு விட்டாச்சு ( வேற வழியும் இல்ல) . ஆனா இப்போ பொண்ணுக அடுத்த இன்னிங்க்ஸ் ஆரம்பிச்சிருக்காங்க . அதுக்கு முழு காரணம் , இதோ குற்றவாளி கூண்டில் இருக்கும் இந்த நாகரீக சீர்கேடுதான்.
வீட்டுக்குள்ள அடங்கி இருந்தப்போ ஒழுக்கம்னா என்ன , வரைமுரைனா  என்னனு தெரிஞ்சுது . இப்போ வெளி உலகத்துள்ள போய் எல்லாத்துக்கும் சரிசமமா பழக விட்டதுமே , சேர்க்கை சரியில்லாம பார் வரைக்கும் போக ஆரம்பிச்சுட்டாங்க..
 இப்படியே போனா கூடிய சீக்கிரம்
 •  'இது ஒரிஜினல் இல்ல , போலி சரக்க கொடுத்து கவர்மென்ட் அதிகமா சம்பாதிக்குது. 
 •  எனக்கு டான்ஸ் கிளாசுக்கு  நேரமாச்சுடீ   , ஒரே ஒரு லார்ஜ் மட்டும் போதும் .  
 •  hangover அதிகமா இருக்குடீ .however  காலேஜுக்கு வர பாக்கறேன் 'னு  
டயலாக் பேச ஆரம்பிச்சுருவாங்க..அட அத விடுங்க , வீட்டுக்கு தண்ணியடிச்சுட்டு வந்த புருசன ,பொண்டாட்டி அடிக்கிற காலம் போய் இனி பொண்டாட்டி தண்ணி அடிச்சுட்டு வந்து புருசன அடிப்பாங்க .. ஒன்னு மட்டும் பாத்தீங்களா , அப்பவும் அடி வாங்கறது அப்பாவி புருசன்தான் .. ஆகவே  இதை  எல்லாம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.


ஆதரவு :

என்னங்க புரியாம பேசறீங்க ? நாடு எங்க போயிட்டு இருக்கு ? நீங்க இன்னும் பொதிகை டிவி வயலும் வாழ்வும் கணக்கா பேசிட்டு இருக்கீங்க.
இதுல்ல மட்டும் சின்ன சமாதான உடன்படிக்கை பண்ணிட்டோம்னா அரசுக்கு ரெண்டு மடங்கு வருமானம் பெருகும்.
இதே மாதிரி வேற எந்த நாடுலயாவது , ஒரு பொண்ணு சரக்கு வாங்க போறத இவ்ளோ முன்னிலைப்படுத்தி யோசிப்பானா? பசங்களுக்கு ஒரு சுதந்திரம் , பொண்ணுகளுக்கு ஒண்ணா?
 தண்ணிய விடுங்க , ஒரு தம் வாங்கணும்னா கூட பொண்ணுகளுக்கு கஷ்டம்தான். ஏன்டா தம் அடிக்கறேன்னு பையன கேட்டா , ஒரே டென்ஷன் , அதான் அடிக்கரேங்கறான் .. பொண்ணுகளுக்கு டென்ஷன் வராதா ? வந்தா தம் அடிக்க கூடாதா ? இத்தனைக்கும்  ரெண்டு பெரும் ஒரே கம்பெனில ஒரே வேலைலதான் இருக்காங்க.. 

சில விசயங்கள் பெண்களுக்கு இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறதே .. அது 33 சதவிகித இட ஒதுக்கீடு  ஆகட்டும்,இல்ல தெருவோரத்துல  இருக்குற குட்டி சுவராகட்டும் ..
சரக்கு  மட்டும் டொமினோஸ் பீட்சா மாதிரி ஹோம் டெலிவரீயா இருந்தா  இந்த பிரச்சனையே இல்ல  - ' 100 pipers ஸ்காட்ச் ஒரு full . சைடு டிஷ் combo A , மறக்காம ஒரு மிராண்டா பாட்டில்'னு எங்க பொண்ணுகளும் அமைதியா ஆர்டர் பண்ணிட்டு , கார்டு பேமென்ட் பண்ணுவாங்க.
ஆகவே எவ்ளோ செலவானாலும் பரவால்ல.. இத பைசல் பண்ணுங்க ..

விவாதம் சூடு பறக்கிறது .. தொடர்ந்து விவாதிப்போம் ஒரு சிறிய விளம்பரத்துக்கு பிறகு-ன்னு சொன்னா நீங்க சரக்கு அடிச்சிட்டு என்ன அடிப்பீங்க.. so இப்போ நடுவுல நின்னு பாப்போம் :
இந்த தலைப்ப வெவரமா பாத்தாலும் சரி , விளையாட்டா பாத்தாலும் சரி , ஒரே balanced பீலிங்தான் இருக்கு .. எந்த தரப்பையும் பாத்து கோபம்  எதுவும் வரல .

 •  குடிப்பழக்கம் தவறானது - அது ஆணானாலும் சரி , பெண்ணானாலும் சரி.  ஆனால் அது பெண்கள் செய்யும்போது , அதிகமாக அல்ல மிகுதியாக விமர்சனத்துக்குள்ளாகிறது . அது தவறு . ஆனால் , புதிதாக ஒரு கண் உறுத்தும்படியான மாற்றம் சமுகத்தில் நடக்கும்போது அது அதிகமாக விவரிக்கபடுவது இயற்கையே.
 • 'social awareness பற்றி என் பெண்ணுக்கு தெரியும் சார் . அதனாலதான் அவளுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறேன்!' என்று பெருமையாக பேசும் பெற்றோர் , அதன் இன்னொரு பரிணாமத்தையும் சரியாக புரிந்து கொண்டு சற்றே விழிப்புடன் கவனித்திருந்தால் இந்த பிரச்சனையே எழுந்திருக்காது.ஆனால் ஒரு வரம்புக்கு மீறி எதையும் கட்டுக்குள் வைக்க  முடியாது என்பதே நிதர்சனம்.
 • பெண்களுக்கு தனியாக சில வசதிகளை செய்து கொடுத்தால் ஓரளவுக்கு இந்த நிகழ்வு சரிகட்டப்படும். ஆனால் அது நடைமுறைக்கு ஒத்து வராது . ஏன் என்பதற்கு காரணம் எல்லாரும் அறிந்ததே -  Culture . இருந்தாலும் நாடும் காலமும் மாற மாற எதுவும் சாத்தியப்படலாம் . அதுவரை அமைதி காப்போம் .
இதுவரை ஒத்துழைத்ததற்கு  நன்றி வணக்கம்..


ஹலோ ப்ரதர் ..எங்க போறீங்க..? கடைசி வரைக்கும் உங்க கருத்து என்னனு சொல்லவே இல்லையேன்னு கேக்கறீங்களா ?

 ஹிஹி ..கடவுள் உண்டா இல்லையா?
ரஜினி அரசியலுக்கு வருவாரா இல்லையா ?
நேதாஜி உயிரோட இருக்காரா(இருந்தாரா)  இல்லையா?
விஜய்க்கு ஒரு படமாவது ஹிட் ஆகுமா இல்லையா? -ன்னு நெறைய கேள்வி விடை கிடைக்காமலே இருக்கு .. கூட இதையும் ஒண்ணா சேர்த்துக்கோங்களே  .. இப்போ என்ன குறைஞ்சு போக போகுது ?
ஆனா இதுல்ல என் கருத்து என்னனு சிம்பிள்ளா சொல்லனும்னா
- ' but அந்த பொண்ணோட தைரியம் எனக்கு ரொம்ப  புடிச்சிருக்கு! :-) '