எல்லா தேர்தலுக்கும் கருத்துக்கணிப்பு ஆரம்பிக்கும்போது 'இந்த தடவை என்ன நடக்க போகுதுனே தெரியல; ஒரே confusion பா'னு சொல்லுற மாதிரிதான் நிலைமை இருக்கும் . ஏன்னா யாரு எப்போ யார்கூட கூட்டணி வைப்பாங்கன்னு கடைசி வரைக்கும் சஸ்பென்சா இருக்கும். சீட்டு ஒதுக்கீடு , பெட்டி பதுக்கீடு எல்லாம் ஒத்து வந்த பின்னாடி தான் ,'நாங்க இவங்களோட ; காரணம் இரண்டு கட்சிகளின் கொள்கை ஒரே மெயின் ரோட்லதான் போகுது..' - அப்படி இப்படின்னு அறிக்கை விடுவாங்க. அதுக்கு பின்னாடிதான் நம்ம மக்கள் நிம்மதியா தூங்குவாங்க ..
ஆனாலும் பல பேருக்கு கடைசி வரைக்கும் குழப்பம் விடாது . போன தடவ எங்க பக்கத்து வீட்டு மதிமுக தாத்தா 'இந்த தடவ கலைஞர்தான்.. வைகோ சிங்கம் மாதிரி ஜெயில்ல இருந்து வந்து சப்போர்ட் கொடுக்கறாருல'னு நம்பி நம்பி கடைசில சிங்கம் வோடபோன் ஜூஜூ மாதிரி ஆனத பாத்துட்டு , இப்போலாம் கிரிக்கெட் பாத்தா கூட சச்சின் இன்னும் இந்தியாவுக்குதான விளையாடுராரு?னு கன்பார்ம் பண்ணிக்கறாரு. ஏன் இப்படி confusion வருதுன்னா , கீழ பாருங்க :
இந்த ஐந்து வருடங்களில் சில அந்தர்பல்டிகள் :
- சரத்/ராதிகா : திமுக டு அதிமுக டு புதுக்கட்சி டு இப்போ திமுக சப்போர்ட்
- பாக்கியராஜ் : அதிமுக சப்போர்ட் டு திமுக
- ராதாரவி : அதிமுக டு திமுக டு மறுபடியும் அதிமுக
- கார்த்திக் : பார்வர்ட் பிளாக் டு அதிமுக சப்போர்ட் டு 'yet to be announced'
- தா.பாண்டியன் : கம்யூனிஸ்ட் டு திமுக சப்போர்ட் டு அதிமுக சப்போர்ட்
- எஸ் வீ சேகர் : அதிமுக டு திமுக
- ஜெகத்ரட்சகன் : திமுக டு சொந்தகட்சி டு திமுக
- சேகர்பாபு : அதிமுக டு திமுக
- டி. ஆர் : லதிமுக டு திமுக சப்போர்ட் டு அதிமுக சப்போர்ட் டு 'நல்லா கத்துவேன்..என்னையும் யாராவது ஆட்டத்துல சேத்துக்கோங்க' கட்சி
சரி இப்போ இருக்குற நிலைமைப்படி ஒவ்வொரு கட்சியும் எப்படி இருக்குனு பாப்போம் :
திமுக :
பலம்:
- கலைஞர் அரசியல் சாணக்கியம் (பனித்த கண்கள் இனித்த இதயம் - வந்தாரை ஏற்றுக்கொள்வது , போயிட்டு திரும்பி வருவோரையும் ஏற்றுக்கொள்வது உட்பட )
- அள்ளிக்கொடுத்த இலவசங்கள் ( இப்போலாம் மக்கள் ஜெயா டிவி பாக்கணும்னா கூட அது கலைஞர் தந்த டிவிலதான் பாக்கணும் )
- மத்திய அரசோடு இணக்கம் ( இருப்பதாக காட்டிக்கொள்வது - இந்த தடவ எதாவது எதிர்பாராம நடக்கலாம் )
- சன் டிவி , கலைஞர் டிவி
- கலைஞரின் முதிர்ந்த வயதால் , அநேக பேருக்கு அவர் மேல் ஏற்பட்டிருக்கும் ஒரு பாசம் அல்லது பரிதாபம்.
- ஸ்பெக்ட்ரம் ஊழல் : ராசா - கனிமொழி
- உட்கட்சிப்பூசல் : அழகிரி - ஸ்டாலின் - மாறன்
- ஓவர்டோஸ் 'தனக்குத் தானே' பாராட்டு விழாக்கள் - (ஆனானப்பட்ட ரஜினி, கமல் ரெண்டு பேரையும் சங்கி மங்கி மாதிரி ஆக்கிடீங்களே தலைவரே )
- காங்கிரஸ் கூட்டணியுடன் சமீபத்திய மோதல்கள் - ( போன தடவ சரி , இந்த தடவ தனி மெஜாரிட்டில சென்ட்ரல்ல ஆட்சிய புடிச்சிருக்காங்க.. இப்பவும் நாங்க கேட்ட இலாகா கொடுக்கணும்னு எதிர்பாக்கறது டூமச் )
- இலவசங்களுக்கு எங்கப்பா இவ்வளவு பணம்?-னு வேலைக்கு போகாம வீட்டுல இருக்குறவனே அசால்டா கேக்குறான். இதுக்காக மத்திய அரசிடம் வாங்குன கடன் இவ்வளவு இவ்வளவுனு புள்ளிவிவரமா கேப்டன் கேப்பாரு..
அதிமுக :
பலம்:
- எம்.ஜி.ஆர் fame அவர் போய் 25 வருடம் ஆனாலும் கட்சியை பிழைக்க வைக்கிறது. ( இன்றும் சில கிராமங்களில் எம்.ஜி.ஆர் செத்து போய்ட்டாருன்னு சொன்னா பாட்டிகள் எல்லாம் அடிக்க வந்துடுவாங்க. 'எங்களுக்கு மத்ததெல்லாம் தெரியாதுப்பா. எங்க எம்.ஜி.ஆரு சொன்ன இலைக்குத்தான் ஓட்டு போடுவோம்-னு சொல்லுவாங்க )
- தமிழக மக்களுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை வரும் மாற்று ஆட்சி ஆசை.
- ஆட்சி அமைக்க தகுதியாக இருக்கும் ஒரே எதிர்க்கட்சித்தலைவர்(தலைவி). தலைவியின் போர்குணம். தைரியம்.
- திமுகவின் அனைத்து பலவீனங்களையும் பட்டியல் போட்டு கேள்வி கேட்கும் திறமை.
- ஜெயா டிவியை பலத்தில் சேர்ப்பதா வேண்டாமா என்று தெரியவில்லை. போன முறை விளம்பரத்துக்கு கூட பயன்படவில்லை.இம்முறை பயன்படுத்துவதை பொருத்து. ( மைனாரிட்டி திமுக அரசு ,மைனாரிட்டி திமுக அரசுனு சொல்றத நிப்பாட்டுங்கப்பா.. காது வலிக்குது..)
- கூட்டணியில் நிலைத்து நிற்காத , விட்டுகொடுக்காத தலைமை. ( அதிமுகல கூட்டணி சேரணும்னா மானம் ரோசம் எல்லாம் பாக்ககூடாது தலைவரேன்னு , தொண்டர்கள் சொல்லித்தான் தலைவர்கள அனுப்பி வைப்பாங்க )
- உலகப்புகழ் பெற்ற சென்ற அரசு காலத்தில் நடந்த ஊழல். நகை , புடவை , வளர்ப்பு மகன் திருமணம் . உடன்பிறவா சகோதரி இத்யாதி இத்யாதி ..
- எனக்கு பிறகு இரண்டாம் இடம் என்பது இல்லை. நான் மட்டுமே என்று சொல்லி பலம் வாய்ந்த அனுபவமிக்க வல்லுனர்களை இழந்தது (அனிதா ராதாகிருஷ்ணன்,சேகர்பாபு .. )
- அரசவை அமைக்க அனுபவம் வாய்ந்த அரசியல் ஆட்கள் இல்லாதது (ஒ.பன்னீர் செல்வம் தவிர இப்போ அங்க யாரு இருக்காங்கனே தெரியலயே? )
தேமுதிக:
பலம்:
- திமுக/அதிமுக இல்லாத மாற்று சக்தி என்றால் இப்போதைக்கு இருக்கும் ஒரே சாய்ஸ்
- கூட்டணி இல்லாமல் தனி ஆட்சி உறுதிமொழி. ( ஒரு வகையில் கட்சிக்கு இது பலவீனமும் கூட )
- பழகிய முகம் . ரசிகர்கள் எல்லாரும் தொண்டர்கள் ஆகும் வாய்ப்பு. இதுவரை வாங்கியிருக்கும் நல்ல பேர். சினிமாவில் முன்னணியில் இருந்தபோதும் எந்த வதந்தியிலும் சிக்காத ஒழுக்கம்.
- போன தேர்தலில் கிடைத்த அமோக வரவேற்பு. ( கிடைத்த சதவிகித ஓட்டுக்கள் ஒரு புதுக்கட்சிக்கு சொல்லத்தகுந்த எண்ணிக்கை)
- பண்ருட்டி இராமச்சந்திரன் பக்கபலம்.
- மூன்றாம் சக்தி என்பதை தவிர தனி கொள்கை எதுவும் உருப்படியாக இல்லாதது . ( எந்த கட்சிக்குதான் இருக்கு ?)
- கலைஞரை எதிர்த்துதான் அரசியல் செய்கிறேன் , அம்மையார்தான் எனக்கு மது ஊற்றித்தந்தாரா ? , வடிவேலு எல்லாம் நான் மோத சரியான ஆள் இல்லை என்று சிக்கிய சர்ச்சைகள்.
- முன்னுக்குப்பின் முரணான அறிக்கைகள். (அட இவரு அரசியலில் fresherபா)
- அதிமுகவின் கடைசி பலவீனம் தேமுதிகவுக்கும் பொருந்தும்.
காங்கிரஸ்:
பலம் :
- மத்தியில் ஆளும் கட்சி
- திமுகவுடன் நல்ல இணக்கம்.
- தமிழ்நாட்டில் கறைப்படாத 'கை' (காமராஜருக்கு பிறகு யாரும் ஆட்சி அமைக்கவில்லை ;அதனால் ஊழலில் சிக்கவில்லை.)
- உச்சக்கட்ட உட்கட்சி பூசல் . ( ஜி.கே வாசன் , தங்கபாலு , ஈ வீ கே எஸ் என ஒரு கட்சிக்குள் இத்தனை குழுக்கள் இருக்க முடியும் என்பதற்கு தமிழ் நாடு காங்கிரேசே சான்று )
- மத்தியில் கெட்டு வரும் பேர்.
- திமுகவுடன் இட ஒதுக்கீடு பிரச்சனை வந்தால் அதிமுக பக்கம் சாயலாம் . சாய்ந்தால் கேட்ட இடம் கிடைக்காது . தனித்து நின்றால் இப்போதைய நிலைமைக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.
பாமக :
பலம் :
- வன்னியர்கள் வாக்குவங்கி.
- மது , புகை , எதிர்ப்பில் , தமிழ் பயன்பாடு அறிவுறுத்தலில் வந்த நல்ல பேர்.
- மற்றது கூட்டணி பொறுத்து.
- அடிக்கடி மாறும் கூட்டணி.
- எதை எதிர்த்தாலும் அதில் சற்றே தூக்கி நிற்கும் வன்முறை.
மதிமுக ( வைகோ )
பலம்:
- அதிமுக புகழ் துதி
- ஜெயலலிதா புகழ் துதி
- வைகோ ( அட அவரேதாங்க)
- மதிமுக (மற்றவை) எதிர்ப்பு.
- சிரிப்பாய் சிரிக்க வைத்த போன தேர்தல் பல்டி ( இப்போதைக்கு டி.ஆருக்கு அடுத்த காமெடி பீஸ் சத்தியமா இந்த கொள்கை போர்வாள்தான்)
பா ஜ க :
ஹிஹி போங்க சார் .. ராகிங் பண்ணாதீங்க .. தமிழ் நாட்டுல இப்படியெல்லாம் ஒரு கட்சி இல்லவே இல்ல..
கடைசியா -
பொதுமக்கள் என்கிற வாக்காள பெருமக்கள்:
பலம்:
நிறைய இருக்கு. அது அவங்களுக்கே தெரியல..
பலவீனம்:
ரொம்ப நெறைய இருக்கு . அது அரசியில்வாதிகளுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு..
ஆக , இதுல்ல யாரு யார் கூட சேர போறாங்க , சேர்ந்து
யார கவுக்க போறாங்க இல்ல கவுரப்போறாங்கனு மே மாசம் தெரிஞ்சிடும்.
அதுவரை மாறும் காட்சிகளையும் , பறக்கும் அறிக்கைகளையும் , சீறும் பிரச்சாரங்களையும் பார்த்து பொழுத ஓட்டுங்க.. அட Dont worry be happpyyyyyy...!!!
2 comments:
Superb da.Very good summary to know the adv & disadv of about all parties.
"ஹிஹி போங்க சார் .. ராகிங் பண்ணாதீங்க .. தமிழ் நாட்டுல இப்படியெல்லாம் ஒரு கட்சி இல்லவே இல்ல.."- LOL
பொதுமக்கள் என்கிற வாக்காள பெருமக்கள்:- Great reference .
You have a great sense of humor.:)
Post a Comment