Tuesday, September 27, 2011

உள்ளாட்சித் தேர்தல் -A Solo Stunt

'எங்கள் கூட்டணியே நேர்மையான கூட்டணி' 

' அதர்மத்தை அழிக்கவே இந்த கூட்டணி' 

 'எங்கள் கொள்கைகள் வெவ்வேறாயினும் குறிக்கோள் ஒன்றுதான் ; அதன் விளைவே இந்த கூட்டணி ' 

 'பழையதை மறந்து விட்டோம் ; இனி நடப்பது நல்லதாய் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்த கூட்டணி ' 

 'எங்கள் இரண்டு கட்சிகளும் , மக்கள் சேவை என்ற புள்ளியில்  இணைந்திருக்கிறோம் என்பதை மக்களுக்கு சொல்லத் தேவையில்லை'  

'நாங்கள் ஒரே குருகுலத்தில் அரசியல் பயின்றவர்கள்.. நாங்கள் இணைவதில் என்ன ஆச்சர்யம்? '

'இத்தனை வருடங்கள் எங்களை மதிக்காதவர்கள் கூட்டணியில் இருந்து இப்போதுதான் வெளியே வந்திருக்கிறோம். ஒரு விதத்தில் இது எங்களுக்கு ஒரு விடுதலை.இனி மக்கள் பணியே எங்களுக்கு முக்கியம்'

'பாசிச கட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு மரியாதை இல்லை. ஆனால் இங்கு வந்ததும் தலைவர் கட்டி அணைத்து வரவேற்றதில் ஏற்பட்ட கண்ணீரில் எங்கள் மனகசப்புகள் கரைந்துவிட்டன.. '

யப்பா...இப்படி எத்தனை உளறல்கள் தாண்டி வந்திருக்கிறோம்.பொறுத்து வந்திருக்கிறோம். மேலே கண்ட அறிக்கைகள் அனைத்தும் ஒரு கட்சி ,இன்னொரு கட்சியுடன் கூட்டணி வைக்கும்போது கூறிய காரணங்கள் - . கொடுமை.

திமுக தோற்றதில் யாருக்கு என்ன லாபம் கிடைத்ததோ என்னவோ , இந்த உள்ளாட்சி தேர்தல் ஒரு வரமாக ,தமிழக மக்களுக்கு கிடைத்து விட்டது.
தமிழக வரலாற்றிலேயே ,இந்த உள்ளாட்சி தேர்தல் மிக முக்கியமான ஒன்று.. நம்புங்கள்... யாரும் யாரோடும் கூட்டணி இல்லை...  

ஜெயிப்பது எந்த கட்சியாய் வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் Victory Factor எனப்படும் வெற்றிக்கான காரணத்தை, குழப்பமில்லாமல்  நிர்ணயம் செய்ய மக்களுக்கு இப்போது ஒரே கேள்விக்கான பதில் தெரிந்தால் போதும் - 'இந்த கட்சிக்கு ஒட்டு போட்டால்  ,ஏமாற்றாமல் மக்களுக்கு எதாவது செய்யுமா ? 
இதற்கு முன் செய்திருக்கிறார்களா ?' -  இது மட்டுமே..

மற்ற முறை போல - ' நல்லவர்தான்..ஆனால் இவருக்கு போட்டால் , அந்த கட்சியில் நம் கட்சி கூட்டணி வைத்திருக்கிறதே .. என்ன செய்யலாம்?' என்றோ
'போன முறை ஒன்றும் செய்யவில்லை.இந்த முறை போட வேண்டாம் என்று பார்த்தால் , ஆளும் கட்சியோடு கூட்டு வைத்திருக்கிறாரே..எதாவது தேறுமா?' என்றோ 'குழப்பமா இருக்கே.. இந்த ஆள் ரெம்ப மோசம்.ஆனா என்ன பண்ணித்தொலைக்கிறது? நம்ம ஜாதிகட்சியோட ஆதரவுல நிக்கறாரே..' என்றோ எதுவும் குழம்ப வேண்டாம்.

எல்லாரும் தனித்தனி. அதற்காக எல்லாரும் 'நாங்கள் நல்லவர்கள்.அந்த தைரியத்தில்தான் தனியாக நிற்கிறோம்' என்று சொல்லவில்லை (சொல்ல தகுதியும் இல்லை). கூட்டணி படியவில்லை. அதுதான் காரணம்.

சரி .. இப்போ ஒரு பாமரத்தனமா, வெள்ளந்தியா , சராசரி வாக்காள  ஜனமா கட்சிகள அலசுவோம். 


அதிமுக தனி மெஜாரிட்டி. ஏற்கனவே சொன்ன மாதிரி  ,தேர்தல் முடிஞ்சதும் தேமுதிகவை (இன்னபிற சில்லறை கட்சிகளை )அம்மா தலைமையிலான   அ.இ.அ.தி.மு.க. கட்சியில் நடந்த பொதுக்குழு கூட்ட நிர்வாக கூட்டம்  (இதுல்ல என்ன சுத்தி வளைக்கிறது ? அம்மா தான் கட்சி. அம்மா மட்டும்தான் கட்சி )கழட்டி விடும் என்ற உண்மை அரசியலில் அ , ஆ மட்டுமே தெரிஞ்ச சின்ன பையனுக்கு கூட தெரியும்.

அம்மா அம்மாதான். எப்பவாவது 'இந்த கட்சியை கூட்டணியிலிருந்து  அதிமுக  விலக்குகிறது'ன்னு அவங்களா சொல்லிருக்காங்களா.. ? அந்த கட்சியே வெளிய போறோம்னு அழுதுட்டு ஓடிவர  மாதிரி பண்ணுவாங்க..அதான் பெர்பெக்ட் லீடர்ஷிப்.

ஆக அதிமுக தனியாக நிக்கறதுல எந்த சந்தேகமும், ஆச்சர்யமும்  இல்லை.



திமுக.. மன்னிக்கவும்..அடுத்த நாலரை  வருசத்துக்கு  தேமுதிகவுக்கு அப்புறம்தான் திமுகவை பத்தி பேச முடியும்.
சரி.. தேமுதிக சிறந்த எதிர்கட்சியாக கடந்த நான்கு மாதமாக ,மிக சிறப்பாக ,அருமையாக ,ஒட்டு போட்ட மக்களுக்காக உடனடியாக.. அட என்னப்பா செஞ்சிருக்காங்க..யாராச்சும் சொல்லுங்க - சட்டசபையில் நூற்றுக்கு நூறு சதவீதம் Attention போடுவதை தவிர. 

சரி இப்போ ஒரு வழியா  கூட்டணியில் இருந்து வெளிய வந்திருக்காங்க.. அவங்க கேட்டது மாதிரி அவங்களுக்கு மார்க் போட இன்னும் ஒரு ஆறு மாசம் கொடுப்போம். (இப்படி ஆறு ஆறு மாசம் கொடுத்து அடுத்த தேர்தலே வந்துடும் போல ) .

இப்போ அவங்க தனி. கூட மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட். இந்திய கம்யுனிஸ்டையையும் கூப்பிட போறார் கேப்டன்.  ஹ்ம்ம் அதனால ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்ல. ஏறக்குறைய தேமுதிக மட்டும்தான்.  ராஜ அதிர்ஷ்டம் சூழ்நிலை காரணமா யாருக்காவது ஒரு தடவ வரும். ஆனா அத தக்க வைக்கிறது உங்க சாமர்த்தியம் கேப்டன். இதை அப்புறமா பேசலாம். இப்போ இவங்க தனி. அதான் நமக்கு முக்கியம்.


சரி..இப்போ திமுக.  தோல்விக்கு பிறகு சட்டசபை பக்கம் வரலை. மன்னிக்க. சட்டசபைக்கு உள்ள வரல. பெரும்பாலும் எல்லாரும் உள்ள இருக்காங்க. வெளிய இருக்கறவங்க ,உள்ள இருக்குறவங்கள போய் பாத்துட்டு இருக்காங்க. அவங்க இப்போ ஏழை கட்சி ஆகிட்டாங்களாம் -திமுக தலைவர் சொல்லியிருக்கார்..  ஆனா நல்ல முடிவு எடுத்திருக்காங்க - தனியா நிக்கறதுன்னு.

'உன்னால நான் கெட்டேன்;என்னால நீ கெட்ட'-ன்னு எத்தனை நாள்தான் கோபத்தை அடக்கிட்டு கைகோர்த்து இருக்கறது. இந்த தடவ தனியாவே அடி வாங்கிக்கிறோம்ன்னு காங்கிரஸ்க்கு டாட்டா  காமிச்சிட்டார் தாத்தா . இந்த கட்சி சார்பா நிக்கறதுக்கு , ஜெயிலுக்கு போக பயப்படாம தைரியமா இருக்க ,  வேட்பாளர்கள் கிடைச்சிடாங்க போல .அதுவே பெரிய சந்தோசம். இப்போ இவங்க தனி.


அடுத்து காங்கிரஸ்.  வெளி கூட்டணி எதுவும் எடுபடல. சரி உள்ளயாவது ஒற்றுமையா இருக்கறாங்களானா அப்படி எதுவும் தெரியல. மத்தியில சிதம்பரம் நெலமையும் சரியில்ல;உள்ளூர்ல காங்கிரஸ் கரைவேட்டிக்கும்  கட்டம் சரியில்ல. நாடு முழுக்க எதிர்ப்பலை. அது எப்படிங்காணும் இவ்வளவு அடிவாங்கியும் பயமே இல்லாம தனியா ஒட்டு கேக்க வரீங்க..?..
ஹ்ம்ம் எந்த தைரியத்துல தனியா நிக்கறாங்கன்னு தெரியல. ஆனா தனியா நிக்கறாங்க.

பாமக - ரெண்டு மாசம் முன்னாடியே டாக்டர் சொல்லிட்டார் - நாங்க இனி தனி-ன்னு. இப்படி சொல்றோமே ? மக்களாவது நம்மள  சேர்த்துக்குவாங்களான்னு ஒரு தடவைக்கு நாலு தடவ யோசிச்சு  சொல்லிருக்கணும். இந்த தடவையாவது சொல்லுங்க டாக்டர் - உங்க கொள்கைதான் என்ன? சரி அத விடுங்க.. உலக மகா அதிசயம் .. இவங்களும் தனி.

மதிமுக..சாரி - வைகோ தனியா நிக்கறார்.

மீதி இருக்குற கட்சிகளும் பெருசா எந்த கூட்டணியும் இல்லாம அங்கங்க தனி கடை போட்டுருக்காங்க..
எத்தனை பேர் மறந்து போய் பழக்கதோசத்துல 'எங்க கூட்டணிக்கு ஒட்டு போடுங்க'-ன்னு சொல்ல போறாங்களோ?!!!? .
இனி பிரசாரத்துலதான் பெரிய காமெடி இருக்கு.

பிரசாரம் நடக்க நடக்கவே , சொல்லும் விஷயங்களுக்கு ஏற்ப  அதிமுகவில இருந்து பல கட்சிகள் சட்டபேரவையில் வெச்ச கூட்டணியிலிருந்து விலக்கப்படும்.

சரி மக்களே.. கட்சிக்கு தனித்தனியா மார்க் போட ரெம்ப வசதியான சந்தர்ப்பம்.  அது பூஜ்யம்னாலும் பரவாயில்ல..சந்தோசமா போடுங்க.
யாருக்கு தெரியும்? இந்த தேர்தல்ல தமிழ்நாட்டுல இருந்து பல கட்சிகள் காணாமலேயே போய்டலாம்.

முந்துங்கள் இந்த சலுகை இந்த முறை மட்டுமே. இந்த ஒரு முறையாவது மக்கள் எல்லாரும் கூட்டணி வைப்போம்.

Get Ready Folks...

Thursday, September 15, 2011

பாப்கார்ன் பாக்கெட் - 20110915

என்னிடம்  ,ஒரு நான்கு வருடம் முன்னால் சிக்னல் நிறுத்தத்தின்போது ,
விலாசம் தேடி அலைந்து கொண்டிருந்த ஒருவர் அட்ரஸ்ஸை கொடுத்து , நுனிநாக்கு ஆங்கிலத்தில் எங்கே என்று கேட்டார். விலாசம் நூறு ருபாய் நோட்டில். இது யார் கொடுத்தது என்று கேட்டதற்கு பதில்  'Well,I wrote.Why?'.

பளார் என்று அறைய தோன்றியது.பொறுமையாக இப்படி எழுதாதீர்கள் என்று சொன்னதற்கு , 'பாஸ் , அட்ரஸ் மட்டும் தெரிஞ்சா சொல்லுங்க..அட்வைஸ் வேண்டாம்.
நானே Financing செக்டார்ல தான் ஒர்க் பண்றேன். I know. Moreover that is my money' என்றார்.
பெருமூச்சோடு வழி சொன்னேன். ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாமல் சென்று விட்டார்.



'செல்வி - சுந்தரம் ' , 'என் உயிர் ரம்யா ',' பிரேம் BE CSC','இளையதளபதி ROCKS ' என்று உங்கள் புக்கில், வீடு சுவற்றில் , அப்பா சட்டையின் பின்னாடி ,  தாராளமாக எழுதுங்கள்  ; ரூபாய்  நோட்டில் வேண்டாமே...

படித்திருக்கிறோம்,அந்த அறிவு கொஞ்சமாவது இருந்தால் இதை மறுபடியும் செய்ய மாட்டோம். இது மாதிரி கிறுக்கல்களால் பல கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள்  செல்லாதவை ஆகின்றன.ATM ' எதுவும் இந்த நோட்டுகளை ஏற்றுகொள்ள  மறுக்கின்றன.

அரசாங்கத்தை அடிக்கடி ஒவ்வொரு விசயத்துக்கும் குற்றம் சொல்லும் நாம் , நம் பக்கம் இருக்கும் சில மிக முட்டாள்தனத்தை கவனிப்பதில்லை.
இதை சொல்லும்போது வார்த்தைகளில் கோபம் தொனிக்க காரணம் , இதை செய்வது படித்தவர்கள் மட்டுமே. எழுதபடிக்க தெரியாதவர்களுக்கு இதை செய்ய இயலாது.

பணத்தின் மதிப்பு , முதலீடு,அந்நிய செலாவணி ,பங்குவர்த்தகம் பற்றியெல்லாம் ஆதி முதல் அந்தம் வரை பேசும் நாம் , இந்த அர்த்தமற்ற செயலை தடுக்கவும் செய்ய வேண்டும். படித்தவர்க்கும் , படிக்காதவர்களுக்கும் வித்தியாசம் உண்டுதானே..அப்போ அதை செயலில் காண்பியுங்கள்.

BTW ,நான் அவருக்கு சொன்ன வழி , அவர் காட்டிய அட்ரஸ்க்கு நேர் எதிர் வழி. சொல்லிய நேரம் காலை பத்தரை. அப்போது வேளச்சேரி - தரமணி பக்கம்   டிராபிக் எப்படியிருக்கும் என்று உங்களுக்கு சொல்லத்தேவை இல்லை. எனக்கு குற்றவுணர்ச்சியே இல்லை. 
He deserves it.
-------------------------------------------

சட்டசபையில் பல புதுமுகங்கள் இருப்பதால் பார்க்கும் நமக்கு ஒரு அன்னியம் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. அதுவும் விஜயகாந்த்,பண்ருட்டி தவிர அருண்பாண்டியன் உள்ளிட்ட தேமுதிக உறுப்பினர்கள் எல்லாரும் freshers .

கடந்த ஒரு மாதமாக கேப்டன் செய்திகள் பார்த்து வந்தேன். மிக விவரமாகத்தான் இருக்கிறார்கள்.அரசுக்கு ஒத்து ஊதும் வேலையை செய்யும்போதும் , நன்றாக பேலன்ஸ் செய்து தலைவரின் இமேஜையும் காப்பாற்றி வருகிறார்கள். நடுநிலை செய்திகள் இதிலும் துளிகூட இல்லை.




சட்டசபையில் திருக்குறள் வாசித்ததும் வெளியேறும் திமுக உறுப்பினர்கள்   நிலைமை பரிதாபம்தான். காரணம் மொத்தம் இருக்கும் இருபது பேர் என்ன கூச்சல் போட முடியும்? அதுவும் ஒரே இடத்தில இடம் ஒதுக்கப்படாமல்  இருக்கும்போது எந்த தைரியத்தில் கத்த முடியும்?

இருந்தாலும் இப்படியே வெளிநடப்பு செய்துகொண்டே இருந்தால் கட்சி  காணாமல் போய்விடும் வாய்ப்பு உண்டு. சரி..எவ்வளவோ சோதனைகளை தாண்டி வந்த சரித்திரம் திமுகவுக்கு உண்டு. இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஹ்ம்ம்..எந்த மாதிரியும் இல்லாத புது மாதிரியாக ஒரு சட்டசபை இப்போது.பாப்போம்.

---------------------------------------------

நேரு பிரதமரை  இருந்தபோது கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது கூடியவரை பத்திரிக்கைகளுக்கு புகைப்பட போஸ் கொடுக்க மறக்க மாட்டார். சிலசமயம் 'நேரு ஒரு விளம்பரப்பிரியர்' என்று பேர் வந்தபோது கூட அதை அவர் நிறுத்தவில்லை.

பிறகு ஒருமுறை இதற்கான காரணம் சொன்னார் -'நாட்டில் எவ்வளவு பேருக்கு படிக்க தெரியும்? எண்ணிக்கை குறைவுதானே..அவர்களுக்கு பத்திரிக்கையில் என் படம் பார்த்தால் நமக்காக அரசு எதோ புதிதாக செய்கிறது என்று நம்பிக்கை வரும் அல்லவா..அதுதான் நோக்கம் ' .தொலைநோக்கான பார்வை.



இதைபோல,நம் தற்போதைய  பிரதமர் முதன்முதலாக  ஒரு உருப்படியான காரியம் செய்திருக்கிறார். கண்தானம் செய்திருக்கும் அவரைப் பற்றி அடித்தள மக்களுக்கு தெரியவரும்போது ,கண்டிப்பாக கண்தானம் பற்றி கேள்வி கேட்பார்கள்.விஷயங்கள் புரியும்.நிறைய பேர் அதை பின்பற்றுவார்கள் என்பது உண்மை.

காரணம் ,கிராமத்து மக்கள் ஒரு நல்லதை யாராவது செய்தார் என்று கேள்விப்பட்டால்  தாங்களும் தங்கள் பங்குக்கு செய்யவேண்டும் என்ற வெள்ளந்தி  உள்ளம் உடையவர்கள்.
வாழ்த்துக்கள் சிங். இது தனிச்சையா எடுத்த முடிவுன்னு எதிர்பார்க்கலாம்.  இல்லேன்னா வாழ்த்துக்கள் சோனியா.
---------------------------------------------

திமுகவுக்கு போன தடவ ஓப்பனிங்  நல்லா இருந்துச்சு. ஃபினிஸிங்தான் சரியில்ல.இங்க அதிமுகவுக்கு ஓப்பனிங்கே சரியில்லையே..

இப்போதான் சமச்சீர் கல்வி விசயத்துல அடிவாங்கி பணிஞ்சு போன அரசு , இப்போ அடுத்த திட்டத்திலும் மண்ணை கவ்வ வேண்டியதாயிருச்சு.  அரசு கேபிள் டிவி கொண்டு வந்து நல்லது நடக்கும்னு எதிர்பார்த்த கேபிள்  ஆப்பரேட்டர்கள் இப்போ கதிகலங்கி போயிருக்காங்க.

என்னடா இது கிணறு வெட்ட பூதம் கெளம்புன கதையா இருக்குனு முழிக்க ஆரம்பிச்சு ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் எல்லாம் டிஜிட்டல்மயமாக இருக்கும்   இந்த காலத்தில் , பொதிகை சேனல் மாதிரி இன்னும் அனலாக் நெட்வொர்க் பக்கம் போகும் அரசு முறையை ,தலையில் அடித்துக்கொண்டு வெறிக்கிறார்கள் ஆப்பரேட்டர்கள்.

போன ஆட்சியில கேபிள் இருந்துது , டிவி இருந்துது , கரண்ட் இல்ல..இந்த ஆட்சியில டிவி மட்டும்தான் இருக்கு - அதுவும் கலைஞர் கொடுத்தது.அப்பப்போ கரண்ட் வருது. கேபிள் வரும்;ஆனா வராதுன்னு ஆயிடுச்சு..

பாவம் நம்ம பெண்கள். சாப்பாடு இல்லாம இருப்பாங்க..சீரியல் இல்லாம இருக்க மாட்டாங்க.ஆம்பளைகளையும் அலட்சியமா நெனச்சிடாதீங்க..அமைதியா இருப்பாங்க..கிரிக்கெட் பாக்க முடியலைனா மட்டும் ,விளைவுகள்  பயங்கரமா இருக்கும்..

 'நான்கு வருஷம் கழித்து வரபோகும் வாக்காள மடையர்களுக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்கவா   போகிறது?'ன்னு குறுக்குதனமா யோசிக்காதீங்க.. இப்போவே சரி செய்துடுங்க. தாய்குலங்கள் ஓட்டு மிக முக்கியம் அமைச்சரே..
------------------------------------------------------

சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய ஹாக்கி அணிக்கு அறிவிக்கப்பட்ட பரிசுதொகை...அடேங்கப்பா - தலா இருபத்தி ஐந்து ஆயிரம் ரூபாய்.
இதுதான் தேசிய விளையாட்டுக்கு , அரசு அளிக்கும் மரியாதையா?

லட்சங்களை போன நூற்றாண்டிலேயே தாண்டி , குறைந்தது அணியில் இடம் மட்டும்  பிடித்தாலே போதும் -கிரிக்கெட் வீரருக்கு கோடிகளை சம்பளமாக  தரும் அரசு , இதர விளையாட்டுகளுக்கு மட்டும் ஏதோ போனால் போகட்டும் என்று கிள்ளித் தருவது வெட்கப்பட வேண்டிய விஷயம்.


எந்த வீரரும் அந்த பணத்தை வாங்க மறுக்க ,இப்போது அதை ஆறுமுறை உயர்த்தி ஒன்றரை லட்சம் அறிவித்திருக்கிறார்கள். 
கிரிக்கெட் மோகம் என்பது தவறல்ல..அதே சமயம்,  மற்ற விளையாட்டில்  நம் அணியினர் சாதிக்கும்போது அதை பாராட்ட தவறக்கூடாது. எந்த வீரனுக்கும் அங்கீகாரம்தான் முதல் சம்பளம்.

திறமையானவரை  பாராட்டக்கூட வேண்டாம்..ஆனால் கண்டிப்பாக அவமானப்படுத்த கூடாது.. 
மற்றவர்கள் எப்படியோ போகட்டும்.. நாம் குறைந்தது நம் பாராட்டுகளை ஃபேஸ்புக்கிலாவது  பகிரலாமே...யோசியுங்கள்..
-------------------------------------------

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்..அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும் ?

அற்புதம் கண்ணதாசா..  காலம் தாண்டி நிற்கும் கவிஞன்...


-------------------------------------------------

Wednesday, September 7, 2011

மங்காத்தா - A well deserved 50*

இது புதுகதைன்னு யாரும் கண்டிப்பா சொல்ல முடியாது. அதுவும் அடித்தட்டு தமிழ் ரசிகன் கூட குறைஞ்சபட்சம் டப் செய்யப்பட ஹாலிவுட் படத்தை பார்த்து தன்னோட பார்வைய விலாசமாகிட்ட இந்த காலகட்டத்துல , இது மாதிரி ஒரு திருப்பமான கதை வந்ததே இல்லைன்னு சொல்லமுடியாது..தமிழுக்கு இது கொஞ்சம் புதுசு.அவ்வளவுதான்.



அதுக்காக Italian Job , Inside Man மாதிரி  இப்படி ஒரு பாங்க்  ராபரி கதைல வேகத்தை அப்படியே கொண்டு வந்துடாங்கனு பெருமையும் பட முடியல..இடைல ரெண்டு பாட்டு முதல் பாதியில பொறுமையை சோதிக்க வைக்குது..

அப்புறம் என்ன படத்த காப்பாத்துது..?

அஜித் அஜித் அஜித்

இதுதான் படத்தோட வெற்றி. வேற எதுவும் இல்ல..

கிட்டத்தட்ட ஆறு, ஏழு ஆங்கில படங்களிலிருந்து Copy inspire செய்யப்பட்டு எடுத்த காட்சிகள்-ன்னு  நல்லா தெரிஞ்சாலும்   , யாரும் அதை பெருசா குறை சொல்ல முடியல. காரணம் - அஜித்   

நாலு ஹீரோயின் இந்த படத்துக்கு எதுக்கு..அதுவும் அஞ்சலி , ஆண்ட்ரியா தேவையே இல்ல.. வெறும் ஸ்டார் வேல்யுக்காக  இத்தனை பேரை கதைக்குள்ள டைரக்டர்  எறக்கியிருக்காருன்னு  படத்த கோவிச்சிக்க  முடியல. காரணம் - அஜித்.

 ஹீரோ நடுத்தர வயசு , அதுவும் கெட்டவன் , முடியெல்லாம் நரைச்சு தனக்கு வயசு நாப்பது ஆகபோகுதுன்னு அவனே சொல்றான், பஞ்ச் டயலாக் எதுவுமே இல்ல , ஹீரோயினோட கடைசியா சேரவே  இல்ல..கிளைமாக்ஸ்ல போலீஸ்கிட்ட செமத்தியா அடி வாங்குறான்  ..  ஹீரோ எப்படி இருக்கணுமோ அப்படி எந்த  இலக்கணமும் இந்த படத்துல ஹீரோவுக்கு இல்ல.. என்னடா தமிழ் படம் எடுத்துருக்கீங்கன்னு சத்தம் போட முடியல .. 
காரணம் - அஜித்.

அட..அதான் கதைக்கு சப்டைட்டில் கூட-'Strictly No Rules' .

எம்ஜீஆர் கெட்டவரா நடிச்சா மக்கள் ஏத்துக்கமாட்டாங்க .. சிவாஜி டான்ஸ் ஆடி , சண்டை போட்டா கண்டிப்பா எடுபடாது. அடுத்து வந்த ரஜினி இது ரெண்டையும் செஞ்சு சூப்பர் ஸ்டார் ஆனாரு. ( கமல் பாதை வேற.அவர இங்க சேர்க்க வேண்டாம்). ரஜினிக்கு அப்புறம் அந்த வித்தை ஒருத்தருக்கு கைவந்து ,அத மக்களும் ரசிக்கறாங்கன்னா அது அஜித் தான்.

இல்லைனா வாலியும்,அமர்க்களமும் , அட்டகாசம் வெள்ளைசட்டையும்
ஃப்ளாப் ஆகி  படுத்துருக்கும். பில்லா ரீமேக் பண்ண யாரும் இருக்க  மாட்டாங்க..
முகவரியும் கொடுப்பாரு; தீனாவும் கொடுப்பாரு; ரெண்டுக்கும்  கனகட்சிதமா  பொருந்துற முகம்.



'Good Cop Bad Cop'
விஷயத்தை அழகா நடிப்புல கொண்டுவர  ஒரு ஹீரோவ சரியா  பயன்படுத்துனா, லாஜிக் முன்னபின்ன இருந்தாலும் படம்
கண்டிப்பா  கல்லா கட்டும்னு முதல நிருபிச்சவர் ஷங்கர் - படம் சிவாஜி.அடுத்து அதை அழகா கையாண்டிருக்கார் வெங்கட்பிரபு.

வெள்ளை கட்டம்போட்ட நீல சட்டை. மேக்கப் இல்லாத , கருப்பு வெள்ளை கலந்த முடி. நரைத்த தாடி. ஒரு சராசரி , அதிக பில்டப் இல்லாத ஆனா ஆண்மைத்தனமான கேரக்டர் . அதிகபடியா அப்பப்போ கூலிங் கிளாஸ்.வெகு அலட்சியமா தம் அடிச்சிட்டே பேசுற வசனம்-ன்னு தனி ஆவர்த்தனம் பண்ணிருக்கார் அஜித்.

அர்ஜுன் இருந்தாலும் உண்மையான ஆக்சன் கிங் அஜித் தான். தண்ணியடிச்சிட்டு அடுத்த நாள் தலைய பிடிச்சிட்டு 'இனி மேல  சத்தியமா தண்ணி அடிக்க கூடாது'ன்னு புலம்புவதிலிருந்து , வெகு கத்தலா  'இது என் கேம். நான்தான் ஓவர்னு சொல்லுவேன்'ன்னு   போனில் வெளுத்துகட்டுவதிலிருந்து ,காரிலிருந்து வெகு ஸ்டைலாக ஜெயப்ரகாஷை தள்ளிவிடும்வரை  பாவனைகளின் அத்தனை பௌண்டரியையும்  தொட்டிருக்கிறார் அஜித்.



இந்த படம் வேறு யாரை வைத்து எடுத்திருந்தாலும் முதல் நாளே தியேட்டரை விட்டு ஓடியிருக்கும்.இப்போதோ படம் இமாலய வெற்றி - உபயம் அஜித் .
விஜய் ரசிகர்களும் மனசார பாராட்டும் படம்.

வெங்கட்பிரபு நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார்.ஆனால் அவர் சிரிப்பு மூட்ட  வழக்கமாக செய்யும் ஃபார்முலா  போர் அடிக்க ஆரம்பிச்சிருச்சு. இந்த படத்திற்கு பெரிய திருஷ்டிபொட்டு பிரேம்ஜி அமரன். தம்பியை கொஞ்சம் அடக்கி வாசிக்க வைச்சு  , அவருக்கு வீணா கொடுக்கும் பில்டப்பை ஒதுக்கி வைச்சு  அடுத்த படம் கொடுக்கலைனா வெங்கட்பிரபு மறுபடியும் நடிக்க வரும் ஆபத்து  ரசிகர்களுக்கு இருக்கு. பார்த்துகோங்க.
தம்பிக்காக காமெடிக்கு
மெனக்கெடரத விட்டுதொலைங்க..எங்களுக்கு இப்போ அவர பாத்தா சத்தியமா சிரிப்பு வரல..

மத்தபடி நீங்க எங்க இருந்தோ கதைய கொண்டு வந்து ரசிகர்களை ரசிக்க வைச்சாலும் 'Spicing it UP' வித்தை உங்களுக்கு நல்லா வருது.வாழ்த்துக்கள்.


தன் கூட்டாளிகளை எதிரிகள் தியேட்டர் வாசலில் சுத்தி  வளைச்சு  நிற்கும்போது,  ஜெயப்ரகாஷ் பின்னால் மெதுவா துப்பாக்கியோடு நடந்து வந்து கை தூக்கி அஜித் சிரிக்கும்போது , விசில் சத்தமும் 'தல' கூச்சலும் காதை பிளக்குது..

மங்காத்தா பேருக்கான அர்தத்த கடைசியா தெரிய வரும்போது கைதட்டல் தெறிக்குது..

ஆக , அத்தனை பேர் இருந்தாலும் , படம் முழுக்க தெரிவது அஜித் தான்.எல்லா பாவத்தையும்  கங்கை கொண்டுபோவது மாதிரி , படத்தோட எல்லா குறையையும் அஜித்தோட அசத்தல் நடிப்பு & இமேஜ்  தட்டிட்டு போய்டுச்சு.

மங்காத்தா - அஜித்தின் 'சிவாஜி'..  

Monday, September 5, 2011

மூன்றாம் கடவுள் தினம்

ஆசிரியர்கள் தினமாக செப்டம்பர் ஐந்தை அப்போதுதான் அறிவித்து சில ஆண்டுகள் ஆகியிருந்தன. ஒரு கல்லூரியில் அந்த நாளை கொண்டாட ,விழா ஏற்பாடு செய்து ,அங்கே  பணி புரிந்த  விரிவுரையாளர்களை பேச அழைத்தனர். எல்லாரும் ஆசிரியர் தின பெருமையைப் பற்றி விலாவரியாக பேச,
 சந்திர  மோகன்  ஜெயின்  என்னும் ஒருவர் மட்டும் தன் முறை வந்ததும் இப்படி சொன்னார்:

'ஒரு ஆசிரியராக இருந்து   , அதை விட்டு விலகி ஜனாதிபதியாக பொறுப்பேற்றுகொண்ட ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை  ஆசிரியர்கள் தினமாக கொண்டாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.ஒரு வேளை அவர் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டு , மீண்டும் ஆசிரியர் பணிக்கு திரும்பினால், அவர் திரும்பிய அந்த நாளை  ஆசிரியர்கள் தினமாக  வெகு சிறப்பாக கொண்டாடலாம்' என்று பொட்டில் அடித்ததுபோல் சொல்லிவிட்டு சென்றார்.

பின்னாளில் அந்த சந்திர  மோகன்  ஜெயின்  , மக்களால் ஓஷோ என்று கொண்டாடபட்டார்.
-----------------------------------

திலகர் காலத்தில் சுதந்திரம் கிடைப்பதற்கான சாத்தியகூறுகள் அதிகம் இருந்தன.அப்போது அவரை அணுகிய நண்பர்கள் , சுதந்திர இந்தியாவில் அவர் வகிக்க விரும்பும் பதவியைப் பற்றி நிறைய ஆலோசனைகள் கூறியபடி இருந்தனர். சிலர் , அவரை ஜனாதிபதியாக வேண்டும் என்றும் , சிலர் பிரதமமந்திரி ஆக வேண்டும் என்றும் சொல்ல , திலகர் கொஞ்சங்கூட  தயங்காமல் சொன்ன பதில்:

'நான் ஏன் பிரதமமந்திரி ஆக வேண்டும்? நான் மீண்டும் என் ஆசிரியர் பணிக்கு செல்வேன்.. நூறு பிரதமர்களை உருவாக்குவேன்..'
-------------------------------------

நீங்கள் ஓஷோவை ஆதரிக்கிறீர்களோ ,அல்ல திலகர் வழியை  பின்பற்றுகிறீர்களோ எதுவும் தவறில்லை. ஆனால் எந்த துறை
வல்லுனரையும் உருவாக்கும் ஆசிரியர் இனத்தை வாழ்த்த ,
அவர்களுக்கு நன்றி செலுத்த வருடத்தில் ஒரு நாள்,அது எந்த நாளாக இருந்தாலும் சரி, ஒதுக்குவது மிக முக்கியம்.

உலகறிந்த பெரியவர்களைத் தவிர, என் வாழ்க்கையில் நான் சந்தித்த  யாரையும் முன்மாதிரியாய் நினைத்து முன்னேற இயலவில்லை.ஆனால் ஒரு சிலர் நாம் நினைவுப்படுத்தாமலேயே , நம் மனதில் அவ்வப்போது வந்து நமக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துவார்கள். அதில் கண்டிப்பாக நமக்கு ஆசிரியராய் இருந்த  ஒருவராவது இருப்பார்.அப்படி இல்லையென்றால் நீங்கள் 
அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று அர்த்தம். நானும் கிட்டத்தட்ட அப்படிதான் , அவரை சந்திக்கும் வரை.




பதினோராவது வகுப்பு தொடங்கியபோது , புதிதாக எங்கள் பள்ளிக்கு வந்து சேர்ந்தார் முத்துகுமாரசாமி - பௌதீக ஆசிரியர் .MKS என்று சுருக்கி கூப்பிட சொன்னார்.

எல்லாரும் ஆசிரியர் பணி என்ன  என்பதில்  மிக சரியான ஒரு தவறான அபிப்ராயம் வைத்திருக்கிறோம்.பாடம் சொல்லிக் கொடுப்பவன்தான்  வாத்தியார் என்று.  அல்ல. வாழக் கற்றுக்கொடுப்பவன்தான் உண்மையான குரு. MKS  இரண்டாம் வகை.

எதற்கும் வளைந்துகொடுக்காத தைரியம். நேராக கண்ணை ஊடுருவி மனதைப்  படிக்கும் பார்வை.  
யாரையும் அடிக்க தேவையில்லை - வெறும் எச்சரிக்கையில் மட்டுமே மாணவனின் தவறை ஒத்துக்கொள்ள வைத்து விடும் கண்ணியம். இதுதான் MKS.

வகுப்பில் யாரையும் கண்டிக்க மாட்டார்.அத்தனை பேர் முன்னிலும் அவமானபடுத்தமாட்டார்.அதிகமாக போனால் அவரின் கோபத்தின்  உச்சக்கட்டம் 'Quit the hall'லில் முடியும். தனியாக அழைத்து தவறை சொல்லி  திருத்துவார்.திருந்த வேண்டும்.இல்லையென்றால் கண்டிப்பாக திருத்துவார்.  

பாடம் நடத்தும்போது புத்தகம் அவர் கையில் என்றுமே இருந்ததில்லை. வெறுங்கையை வீசி வகுப்புக்கு வரும் ஒரே வாத்தியார் அவர்தான். அவர் நடத்துவதை ஒரு முறை கவனித்தால் , கண்டிப்பாக புத்தகத்தை மறுபடியும் மேயத்தேவை இல்லை.

'Be Black or White' என்பதற்கு மிக சிறந்த உதாரணம். எந்த சூழ்நிலையில் எப்படி இருக்க  வேண்டும் என்பது அவருக்கு தெரியும்.மார்க் எடுக்கவில்லை என்றால் வார்த்தையாலேயே  புரட்டி எடுப்பவர் ,  மாணவர்கள் எல்லாரையும் அழைத்துக் கொண்டு 
 சுற்றுலா கூட்டிச்சென்று  கூடப்படிக்கும்   மாணவன் போல் விளையாடுவார்.

புத்தகத்திற்கு அட்டை போடாமல் கந்தலாக வைத்திருக்கும் மாணவனைப் பளார் என்று அறையும் ஆசிரியர் மத்தியில் , அவர் புன்னகையுடனே இப்படி சொன்னார் - 'எவ்வளோ அழகான பையன் நீ. புத்தகத்தையும் அதே மாதிரி வெச்சா நல்லா இருக்கும் இல்ல..?' . அடுத்த நாள் புத்தகம் பளீர்.

மொழிபாடங்களிலும், கணிதத்திலும் நல்ல மதிப்பெண் எடுக்கும் நான் இயற்பியலிலும் , பௌதீகத்திலும் ஒரு சுமார் ரகம்தான்.காரணம் எனக்கு பிடிக்காத பாடத்தில்,  ஆர்வம் இல்லாமல் எதோ படிக்கவேண்டுமே என்று காட்டிய மெத்தனம்.

என் விஷயத்தில் அவர் முடிவெடுக்க சிரமபட்டார். மோசமான மாணவன்  என்று  முடிவெடுக்கவும் முடியவில்லை அதே சமயம் அவர் பாடத்தில் மட்டும் அக்கறை காட்டாமல் இருப்பவனை விடவும்  முடியவில்லை. ஒருநாள் மிக வருந்தி என்னை அழைத்து சொன்னார் - ' நல்லா படிக்கிறவன் நீ. ஆனா பிடிக்காதத,  வலுக்கட்டாயமா படிக்க சோம்பேறித்தனம்.உன் விருப்புவெறுப்பை பாடத்துல காட்டக்கூடாது. பின்னால வருத்தபடுவ.போ' .

அவர் சொன்ன பின்னால , ரிசல்ட் வரும்போது வந்தது. பௌதீகத்தில் மட்டும் ஒரு முப்பது குறைந்து என் இஞ்சினீரிங் கட்-ஆப் மார்க்கில்  ஓரளவு நல்ல அடி. மெரிட் சீட் கிடைக்க விடாமல் தடுத்தது ,அவர் சுட்டிக்காட்டிய என் மெத்தனம்.வருத்தப்பட்டேன்.

வெறும் மனப்பாடம் செய்வது அவருக்கு பிடிக்காது. அந்த விஷயத்தில் மதிப்பெண் என்ன எடுத்தாலும் பாராட்ட மாட்டார். புரிதல்தான் அவர் இலக்கு. டியுசன் எடுக்கும்போது செருப்பு அணிந்து பாடம் நடத்த மாட்டார். அவர் வீடு திருவிழா போல் வண்டிகளால் சூழப்பட்டிருக்கும்.அவர் சோர்வாக இருந்து நான் பார்த்ததில்லை.

 ஒரு கல் , ஆணி, பை, சாக்பீஸ் என எது கையில் கிடைத்தாலும் அதை வைத்து அழகாக ,சொல்லவேண்டிய விஷயத்தை விளக்குவார்.ஒருமுறை , ப்யூஸ் போன ட்யுப்லைட்டை கரண்ட் கம்பத்தில் போகும் வயர்கள் அருகில் பிடித்தால் அது எரியும் என்று அவர் சொல்ல , கிட்டத்தட்ட இருபது பேர் ஏழு , எட்டு ட்யுப்லைட்களை இரவில் அப்படி செய்து பார்த்து ஏதோ நாங்களே அந்த உண்மையை கண்டுபிடித்த மாதிரி சத்தம் போட்டு அக்கம்பக்கம் இருப்பவர்கள் துரத்தும் வரை  சந்தோசத்தை கொண்டாடினோம். 

வசதி குறைந்த மாணவர்களிடம் அவர் எந்த கட்டணமும் வாங்கியதில்லை. அதையும் அவரால் உதவிபெற்ற  மாணவன் ஒருவன் சொல்லித்தான் எனக்கு தெரியும். 

அவரை பொறுத்தவரை நான் அவரிடம் பயின்ற மாணவரில் ஒருவன். என்னை சரியாக நினைவு வைத்திருப்பாரா என்பது சந்தேகமே.இல்லையென்றாலும்  தவறில்லை.நினைவில் வைக்கும் அளவுக்கு நான் அவருக்கு எந்த பெருமையையும் தந்ததில்லை.



பதினோரு வருடம் கடந்தாயிற்று.இன்று வரை எதை செய்தாலும் ஒரு ஒழுங்கும்,அக்கறையும்,சரியாக செய்தால் எவருக்கும் பயப்படத் தேவையில்லை என்ற தைரியமும் கொண்டிருப்பது அவரிடம் கற்ற பாடம்தான்.எதிலும் Practical அணுகுமுறை என்பது அவர் சொல்லிகொடுத்த மிகபெரிய மந்திரம்.

நான் கடைபிடிக்கும் வாழ்க்கைமுறை யாராவது பாரட்டும்படியிருந்தால் அந்த பாராட்டு அவருக்கே சேரும். அவர் வாழும்முறையை பார்த்தே அதை மிகத்தெளிவாக  கற்றுக்கொண்டேன். அவரிடம் இதுவரை நான் சரியாக கற்றுகொள்ளாதது..வேறென்ன? பௌதீகம்தான்.

இப்படி எத்தனையோ ஆசிரியர்கள் , நம்மை வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள்.படிக்கும் காலத்தில் அவர்களை , அவர்களின்  கட்டுபாடுகள் நமக்கு பிடிக்காமல் போனாலும் காலம் தாண்டியும் நாம் அவர்களுக்கு கட்டுப்பட்டுள்ளோம்.

இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்.

Saturday, September 3, 2011

பாப்கார்ன் பாக்கெட் - 201100903

தூக்குதண்டனையை ரத்து செய்ய கோரி உண்மையான போராட்டம் நடந்து வருகிறது.அதில் கிட்டத்தட்ட வெற்றியும் அடைந்து விட்டோம்.

சீட்டுபெற பேரம் பேசி இரண்டு திராவிட கட்சிகளாலும் ஒதுக்கப்பட்டாலும், எத்தனையோ சறுக்கல்களை சந்தித்தாலும், விமர்சனங்களால் காயப்பட்டிருந்தாலும்,கட்சியை ,அதன் தரத்தை தொண்ணூறு சதவீதம் இழந்திருந்தாலும், இன்னும் எத்தனையோ 'உம்'களுக்கு நடுவிலும் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் மட்டும் கலப்படமில்லாத அக்கறை காட்டி வருகிறார் வைகோ.மனமார்ந்த வாழ்த்துக்கள் போர்வாளே..



இந்த போராட்டத்தில் பழைய வைகோவின் தீரத்தையும் , வேகத்தையும்,நேர்மையையும்
பார்த்தது உண்மை... பொடா சிறைவாசம் எதுவும் இவர் துணிச்சலை துளி கூட குறைக்கவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. 

மக்கள் என்ன உங்களை வேண்டுமென்றா ஒதுக்கினார்கள்?  தடம் மாறி சென்ற  விளைவு அது.. உண்மையில் இப்போது நீங்கள் வனவாசம் முடிந்து வந்தது போலிருக்கிறது   போனதெல்லாம் போகட்டும். மற்றவைக்கு எப்படியோ, எங்கள் ஈழ சகோதரர்களை காப்பாற்ற , அவர்களுக்கு குரல் கொடுக்க நீங்கள் கண்டிப்பாக எங்களுக்கு வேண்டும் வைகோ. திரும்பி வந்த உங்களை வரவேற்கிறோம்.
------------------------------------------

தமிழ் புத்தாண்டு இனி மறுபடியும் ஏப்ரல் இல். இதை அறிவித்து , அடுத்த தேர்தலில் அதிமுக ,தனது சாதனை பட்டியலில் 'மாணவர்களுக்கு மீண்டும் ஒரு நாள் விடுமுறை  வாங்கி தந்த அதிமுக அரசு' என்று சொல்லி மாணவர்களின் ஓட்டை தாராளமாக வேட்டையாடலாம். உங்களுக்கு அதுக்கு உரிமை  இருக்கு அம்மா.

ஹ்ம்ம்..திமுக அறிவிச்சதுல , வேற என்ன மிச்சம் இருக்கு மாத்தறதுக்கு?
--------------------------------------------

பயங்கரம் :



அதிபயங்கரம் :



தீவிரவாதம்:


விஜய் ரசிகர்களே,உங்க தலைவர் வாழ்க்கை இப்போ உங்க கைலதான் இருக்கு.. யார் ஆட்சி, காலநேரம் எல்லாம் பாத்துட்டு கட்அவுட் வைங்க..
--------------------------------------------------------------

அமெரிக்காவோட அணு  ஒப்பந்தம் போடலாமா வேண்டாமான்னு ஓட்டெடுப்பு எடுக்கும்போது , அலம்பலா பேசி கைத்தட்டு வாங்கிய லாலு , இப்போ அதே மக்களவையில் தூங்கி , காமெடி பீஸ் ஆகியிருக்கார்.. 

சபாநாயகர் மீராகுமார் அதைப்பார்த்து , லாலு கட்சி  எம்பியை அழைத்து ,அவரை எழுப்ப சொல்லியிருக்கிறார். தூங்கி வழிந்து,பின் அசடு வழிந்து அமர்ந்திருக்கிறார் லாலு.

பதினைந்து வருடத்திற்கு முன் ஏதோ ஒரு டப் செய்யப்பட்ட விஜயசாந்தி படத்தில் இதைப்போல ஒரு காட்சியை  பார்த்த ஞாபகம்.மேலாக பார்த்தால்
சிரிப்பா இருக்குற இந்த விஷயத்தில ,  என்னால சிரிக்க முடியல.. அவமானப்பட்டது லாலு அல்ல..அவரை தகுதியானவர்ன்னு தேர்ந்தெடுத்து அனுப்பி வெச்ச தொகுதி மக்கள்.


தனிப்பட்டு அவரோட இடத்துல  இருந்து  பாத்தா இது கூட தப்பு இல்ல..ஆளும்கட்சியோட கூட்டணி வெச்சிருந்தாலாவது எதிர்க்கட்சிய பார்த்து சிரிக்கலாம்,பேச நெறைய நேரம் தருவாங்க..தைரியமா எதிர்த்து பேசலாம்,என்ன பேசினாலும்   கைதட்ட ஆள் இருக்கும்..பண்ணைல இருந்தாலாவது ஆடு மாடு கணக்கு பார்த்திருக்கலாம்..

இப்போ என்னத்த பேசி,என்ன பண்ண..பேசாம அமைதியா கவனிக்கலாம்னா பாதி புரியவே மாட்டீங்குது..அவரும் என்ன செய்வார் பாவம்..
-------------------------------------------------

பெரிய சூதாட்டம்..

சன் பிக்சர்ஸ் -> ஸ்டுடியோ கிரீன் -> க்ளவுட் நைன் -> ராடான் பிக்சர்ஸ் -> மறுபடியும் சன் பிக்சர்ஸ்.

நிஜமாவே 'மங்காத்தா'தான்.


வசூல் வெளுத்துக்கட்டுது. நாலு ப்ளாப்க்கு நடுவே ஒரு ஹிட்  படம் கொடுத்தாலும் நச்சுனு அடுத்த ரெண்டு வருஷம் பேசப்படற மாதிரி அத கொடுக்கறதுதான் அஜித் ஸ்பெசாலிட்டி.

விஜய்க்கு வேலாயுதம் கை கொடுத்து , போட்டியை சமப்படுத்துவாரா ,இல்ல இந்தியா கிரிக்கெட் டீம்  மாதிரி சரணடைவாரானு படம் வரவரைக்கும் காத்திருக்கலாம்.  

Ajith Fans , Ya Damn sure U can open the bottle...
---------------------------------------
என் அம்மாவோட  எதாவது புது கோவிலுக்கு போனா கடவுளைப் பார்த்து கும்பிட்டு,  என்கிட்ட  சொல்லுவாங்க  - ' ரெம்ப சக்தியான சாமிடா.. நல்லா கும்பிட்டுக்கோ'
எனக்கு சிரிப்பு  தாங்காது  -  'ஏம்மா? சாமினாலே சக்தியோட இருக்குற ஒன்னுதான ? அது என்ன ரொம்ப   சக்தியான சாமி..? அப்போ மத்த சாமிக்கெல்லாம் சக்தி கம்மியா இருக்கா?'

'அதிகப்ரசங்கி..எதிர்பேச்சு பேசாம  சாமிய கும்பிடுடா..'

பேச்சுவாக்கில   சில சமயம் நாம சொல்லற  வசனங்கள் அர்த்தம்  இல்லாததா  இருக்கும்.சிரிப்பாகவும் இருக்கும்.. 

'அன்னா ஒரு நேர்மையான காந்தியவாதி..'  - காந்தியவாதினாவே அவர் நேர்மையாதானப்பா இருந்தாகணும்.

இந்த மாதிரி ஒரே அர்த்தத்த தொனிக்கிற இரு வார்த்தைகளை தொடர்ந்து சொல்லுறதுக்கு  ஆங்கிலத்துல ஏதோ பேர் .. மறந்து போய்டுச்சு..
 இதெல்லாம்  நம்ம அன்றாட வாழ்க்கைய அழகாக்குற சிறு தவறுகள்..
அனுமதிக்கலாம்..
-------------------------------------

இசையில் சாதனையின் உச்சம்..

ஏற்றஇறக்கம்தான் இசையின் தரத்தையும் அதன் மயக்கத்தையும்  அதிகரிக்கும் ஒரே விஷயம்.அதை தியாகம் செய்துவிட்டு ஏற்ற இறக்கம்  இல்லாமல் ஒரு பாடலை காலம் தாண்டி மக்களை ரசிக்க வைத்திருப்பது இசைஞானியைத் தவிர யாரால் முடியும்?


------------------------------------------