Friday, April 29, 2011

ஜான் டேவிட்டும் பாவ மன்னிப்பும்


எங்கள்  ஊரில்  பொன்  நாவரசு  பள்ளி  உள்ளது .நாவரசு நினைவாக  அவர்  தந்தை  பொன்னுசாமி  தொடக்கிய  பள்ளி. அதன்  வழியாக  போகும்போது  ஏதோ   ஒரு  இனம்  புரியாத  உணர்ச்சி  மனதில்  எழும் . படித்தவர்களான  நமக்கே  இன்னும்  புரியாத சட்டத்தை எதிர்க்க  முடியாத  இயலாமையினால்  ஏற்பட்ட  வெட்க  உணர்ச்சியா ,அல்ல  அதன் மிக  இழுவையான   விசாரணையைக்  கண்டு  ஒதுங்கி  விட்ட  குற்ற  உணர்ச்சியா என்பது  தெரியவில்லை .



ஆனால்  இத்தனை  காலம்   கழித்து  ஜான்  டேவிட்  குற்றம்  உறுதிபடுத்தப்பட்டுள்ளது ; இரட்டை  ஆயுள்  தண்டனை  என்று  செய்தி  வரும்போது ...
எந்த  ஒரு சலனமும்  மனதில் எழவில்லை . ஒருவேளை  இதுதான்  இந்திய  சட்டத்துக்கு  கிடைத்த  வெற்றியோ ?

'பிரச்சனைகளை  உடனே  தீர்த்தால்  உணர்ச்சி மேலிட்ட  தீர்வே  கிடைக்கும்..ஆற  போடுங்கள் ;எல்லா  கூச்சல்களும்  அடங்கிய  பின் அலசி  முடிவெடுங்கள் ;எல்லாரும் அமைதியாய் ஏற்றுக் கொள்வார்கள்'  என்று யாரோ  ஒரு பேர்  தெரியாத பெரியவர்  சொன்ன  உருப்படாத முறையை  கொண்டுள்ளதா  நம்  சட்டம் ?
இந்த முறை  எல்லாவற்றிற்கும்  பொருந்துமா ?குறிப்பாக இந்த வழக்குக்கு பொருந்துமா ? 

இப்போது  நிறைய  பேரிடம்  ஒரு கேள்வி  எழுகிறது.

ஜான்  டேவிட் திருந்தி  விட்டாரே  ? பிறகு  எதற்கு  தண்டனை ? 
என்று ஒரு அனுதாபம்    குற்றவாளி  மீது  விழத் தொடங்கியுள்ளது .

திருந்தி விட்டார்  என்று உனக்கு  எப்படி தெரியும் ? 
அவர் திருந்தவில்லை  என்பது உனக்கு எப்படி தெரியும் ? 
என்று விவாதங்கள்  தொடர்கின்றன .நான்  எந்த விவாதத்திற்கும்  வரவில்லை. .
என்  கண்களுக்கு  இப்போது விவாதங்கள் தெரியவில்லை .
பழைய  ராகிங்  கொடூர  கொலை  தெரியவில்லை .
ஜான் டேவிட் தெரியவில்லை .
நாவரசு தெரியவில்லை .
நீதிமன்றம்  தெரியவில்லை .

எனக்கு  தெரிவது  ஒரு தாயும்  தந்தையும் .எங்கோ ஒரு மூலையில் மவுனமாக இருந்துகொண்டு ,இழப்பை மனதிலும்,வலியை நெஞ்சிலும் தாங்கி ,  இதைப்பற்றி துளியும் வாய் விட்டு பேசாமல் ஒதுங்கி வாழும் ஒரு சாந்தமான அப்பா அம்மா ....

இந்த சமூக  நிகழ்வை  சீர்தூக்கிப்  பார்க்க  வேண்டுமென்றால் ,ஒரு தனி  மனித  மனதின்  இயக்கம்  எப்படி  ஒரு நிகழ்வுக்கு  
ஒத்துழைக்கிறது என்று முதலில்  கவனிக்க  வேண்டும் . 

ஒரு சராசரி  சாதாரண  மனிதனுக்கு  கஷ்டங்கள்  வரும்போது வருத்தபடுகிறான் . கஷ்டங்கள் அதிகமாகும்போது  புலம்ப  தொடங்குகிறான் .
திடீரென  கஷ்டம்  துக்கமாக  மாறும்போது  வெடித்து  அழ  தொடங்குகிறான் .
 இந்த நிலையில்தான்  உணர்ச்சிகள்  மேலெழுந்து , பழிவாங்குதலோ அல்ல தற்கொலையோ  எந்த தவறான  முடிவும்  எடுக்கிறான் .அப்போது  ஒருவேளை தனக்கு  நியாயம்  கிடைத்தால்  ஆறுதல்  அடைகிறான் .அல்லது  அழுவதை  தொடர்கிறான் .

அழுகை  அடங்கியதும்  ஒரு அமைதி  கிடைக்கும். நியாயத்திற்காக    காத்துக்கிடக்கிறான்     . இப்போது நியாயம்  கிடைத்தால் ஒரு சாந்தமான  சந்தோசம்  கிடைக்கும் .வாழ  தனக்குத்தானே    ஒரு அர்த்தம்  கற்பித்துக் கொள்கிறான்   . இல்லையென்றால்  காத்திருப்பு  அந்த  அமைதியை  விரக்தியாய்  மாற்றி விடுகிறது.நடைப்பிணம்  போல  வாழ தொடங்குகிறான் .இவனின்  அடுத்த  உயிர்வாழும்  காலங்கள்  நரகம் . உப்பில்லாத  சத்தில்லாத  வாழ்க்கை .

பின் ஒரு நாள்  அவனுக்கு  நியாயம் கிடைத்ததாக  கேள்விப்படுகிறான் .ஆனால்  அதனால்  எந்த சந்தோசமோ  ,பாரம்  குறைந்த  உணர்வோ  ,அல்லது குறைந்தபட்சமாக  ஒரு சலனமோ  கூட  அவனுக்கு ஏற்படுவதில்லை . பிணமாகவே  வாழ்கையை எஞ்சிய  காலமும்  தொடர்கிறான் . அந்த தீர்ப்பு  , பாதிக்கப்பட்ட  அவனைப் பொறுத்தவரை   எந்த பலனும்  கொடுக்கவில்லை .

இப்படித்தான் இருக்கும் - பாதிக்கப்பட்டு, நியாயம் வேண்டி  தீர்ப்புக்கு காத்திருக்கும் ஒவ்வொரு சாதாரண இந்திய குடிமகனின் வாழ்க்கை.

தவறான தீர்ப்பை  விட  தாமதிக்கப்பட்ட  தீர்ப்பு மன்னிக்க முடியாத குற்றமாக கருதப்படவேண்டும். 

ஜான் டேவிட் பக்கம்  அனுதாபப்  பார்வை  பார்ப்பவர்கள்  , 
இந்த பெற்றோரை  ஒரு முறைப்  பார்த்து  புன்னகை  செய்ய  மனம்  உள்ளதா  என  யோசியுங்கள் . இந்த பதினைந்து வருடம்  யாராவது  அவர்களை  பார்த்து 'நல்லா இருக்கீங்களா ?' என்று கேட்டிருப்பார்களா   என்று சிந்தியுங்கள் .
நாவரசின்  புகைப்படம்  தேடி  எடுத்து  பார்த்து  ,
'என் வீட்டில்  இப்படி  நடந்தாலும்  நானும்  பதினைந்து வருடம் கழித்து மன்னிப்பு  கொடுப்பேன் ' என்று சொல்ல  உங்களால்  முடிகிறதா  என்று பாருங்கள் .
அப்போதும்  சரி  , இப்போதும்  சரி -நம்மைப்  பொறுத்தவரை நாவரசு  கொலை ஒரு செய்தி .ஆதலால்  இப்போது சாதுவாய்  குற்றவாளி 
காணப்படும்போது  இறக்கம்  ஊற்றெடுப்பது  இயற்கையே  . ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின்  நபராக  நாம்  இருந்தால் ?



 இனி  உங்கள்  முடிவு ..
      
பாதிக்கப்பட்டது  பிரதிவாதி  மட்டும்  அல்ல ,குற்றவாளியும்தான் . அவர் இத்தனை ஆண்டுகளில்   திருந்தினாரோ  இல்லையோ ,  அவர் வாழ்க்கைக்கு  எதையும்  முடிவெடுக்க  முடியாத நிலையில் இருந்தார் என்பது நிதர்சனம் .தண்டனை அப்போதே  அளித்திருந்தால்  அதை முழுதாக  அனுபவித்து  ,
  பிறகாவது  ஒரு வாழ்கை உருவாக்கியிருக்கலாம் .

ஆனால் எப்போது  என்ன  தீர்ப்பு வருமோ  என்றே  பயந்து  பயந்து பாதிரியார்  ஆகி துறவறத்தை  இழிவு  செய்ததுதான்  மிச்சம் . வாழ எல்லா வழியும்  இருந்து  எதுவும்  வேண்டாம்  என்பவனே  உண்மையான  துறவி .
இனி எதுவும் இல்லை என்றதும்  துறவி ஆகிறவன்   வெறும்  போலி .


    

    மீதி  கேள்விகள்  நீதித்துறைக்கு ...

பத்து  ஆண்டுகள் அலசி ஆராய  - நிறைய பேர் சம்பந்தப்பட ,இது என்ன அரசியல்  கொலையா  ?  இவன்  அவனை  கை  காட்ட  அவன்  இன்னொருவனை  கை காட்ட  என்று சிக்கலாய்  இருக்கும்  வழக்கா  இது ?

'ஆயிரம்  குற்றவாளிகள்  தப்பிக்கலாம் .ஆனால் ஒரு நிரபராதி  தண்டனைக்குள்ளாக   கூடாது ' என்ற  கோட்பாடைக்  காப்பாற்ற  
யோசித்திருந்தால்  ,குற்றவாளியே உண்மையை ஒத்துகொண்ட பின்னரும் இந்த வழக்கில்  யார்  தவறாக  தண்டனைக்குள்ளாக போகிறார்கள் ?

ஊர்  அறிந்த  ரகசியமாய்  வழக்கின்  பக்கங்கள்  இருக்க  ,தீர்ப்புக்கு  எதற்கு தாமதம் ?


மெதுவாகத்தான்  முடியும்  என்றால்  ஊழல்  வழக்குகளில்  கைதாகும்  தலைவர்கள்  மட்டும் ,  ஆட்சி  அவர்கள்  கைக்கு  மாறியதும்  , வழக்கு  விரைந்து  அவர் பக்கம் சாதகமாக  முடிவது  எப்படி ?

சட்டம் படித்தவர்கள்  குறையா  அல்ல சட்டத்தின்  குறையா ?
 நீதிபதிகள்  தவறா அல்லது நீதியின்  தவறா ?

--->
எத்தனையோ  வழக்குகள்  இன்னும் நிலுவையில்  இருக்க இந்த கேள்விகளுக்கு  மட்டும் பதில் உடனே கிடைக்குமா என்ன ?

இப்படியாக . ஒரு குற்றம் இழைக்கப்பட்டு அதற்கு தீர்ப்பு வர காலம் அதிகமாகி அது  காலாவதி ஆகும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதனால்தான் , சில சமயம் போலிஸ் நடத்தும் என்வுன்டர்களையும் முழுமனதுடன் எதிர்க்க முடிவதில்லை. மாறாக பொதுமக்கள் அதை வரவேற்கும் அபாயமும் வந்துள்ளது . உதாரணம்: சமீபத்தில் உடுமலை அருகில் நடந்த சிறுமி கடத்தல் ,கொலையின் குற்றவாளிக்கு நேர்ந்த கதி.
    
எனவே சட்டத்தை முடக்குவதை நிறுத்தி, எங்கெல்லாம்,எப்போதெல்லாம் சட்டத்தை முடுக்க வேண்டுமோ,  துரிதப்படுத்த வேண்டுமோ அதை அப்போதே செய்தால் , குற்றவாளி சாகும் முன்போ , பாதிக்கப்பட்டவர் சாகும் முன்போ நியாயம் கிடைக்கும். இந்த மாற்றத்தை எதிர்பார்க்கலாமா ?

இனி வருவது எப்படியோ , நாவரசு விஷயத்தில்  வழக்கையே தூக்கில் போட்டாகி விட்டது.   இனி இரட்டை ஆயுள்  யாருக்கு  என்ன செய்யும் ?
   
புகைந்தது போதும் ; எரிய விடுங்கள். இந்த தீர்ப்பாவது  இறுதித் தீர்ப்பாகட்டும் .

மக்களே ,இனி நீங்கள் யாருக்கு பாவ மன்னிப்பு கொடுப்பீர்கள்?  டேவிடுக்கா அல்ல தாமததிற்க்கா ? 

Tuesday, April 26, 2011

கோ : நம்பி 'கோ'ங்க...

 

 
வெகு கிளீனான மேஜை ; நீட்டான அழகான ஆபிஸ் ; பளிங்கு கட்டிடம் ,அழகு ததும்பும் - எப்போதும் மேக்-அப்பில் இருக்கும் பெண் நிருபர்கள்  , 'ப்ருப் இருக்கா?' என்று சும்மா பேருக்கு கேட்டு விட்டு ஸ்டோரி அப்ரூவ் செய்யும் எடிட்டர்  என்று ஒரு பத்திரிக்கை அலுவலகத்தை படத்தில் காண்பித்திருக்கிறார் கே. வீ . ஆனந்த் .  டைடல்  பார்க் உள்ளுக்குள்  கூட இப்படி குளிர்ச்சியாய் மலர்ச்சியாய் இருந்ததில்லை. 
 
 இந்தியா டுடே ,கல்கியில் தான் வேலை செய்யும்போது என்னவெல்லாம் எதிர்பார்த்திருப்பாரோ அதை எல்லாம் தன் நாயகன் ஜீவாவுக்கு கொடுத்திருக்கிறார் இயக்குனர்.  இதை நம்பி  ரிப்போர்ட்டர் வேலைக்கு ஆசைப்படுவார்களுக்கு 
இதோ அடிப்படை இண்டர்வியு கேள்வி :-  வெகு சுத்தமாக துடைத்து வைத்த மேஜைகள் உள்ள பத்திரிக்கை ஆபிசில்  எதை அலசி ஆராய்ந்து எழுதுவார்கள்?

எனக்கு இருக்கும் ஒன்றிரண்டு பத்திரிக்கை நண்பர்களை லேசாக கேட்டு பார்த்தேன்.  வேண்டாம் .. நான் வாங்கிய திட்டு என்னோடு போகட்டும். பார்த்துக்கோங்க இளைஞர்களே..


சரி பெரிய தப்பில்லை .. நல்ல ஒரு பொருளை தரும்போது அதை அழகாக கவர்ச்சியான கவரில் சுற்றி தருவது போல , ஒரு நல்ல கதைக்கு இந்த டிஜிட்டல் பூச்சுற்றல் நன்றாகத்தான் இருக்கிறது.  
 எட்டாம் வகுப்பு தொடங்கி ஆர்.கே , பி.கே.பி நாவல்கள் புரட்டி வளர்ந்த எனக்கு 'ஹூ  இஸ் தி கில்ப்ரிட்'  விஷயம் ஆரம்பத்திலேயே புரிந்து தொலைத்து விட்டது.  ஆனால் அதை எப்படி வெளியே கொண்டு வருவார்கள் என்பதில் ஏற்பட்ட சுவாரசியத்தை மிக அழகாகவே இடியாப்ப சிக்கல் போல் சுற்ற வைத்து சொல்லியிருக்கிறார்கள்.
 
 

 
ஹீரோ அஜ்மல் நல்ல தேர்வு.  இந்த பாத்திரத்தை  ஏற்ற நடிகர் அதிகமாக வசனம் பேச வேண்டும். அதை இவர் நன்றாக செய்கிறார் என்பது மட்டுமல்ல ,மிக முக்கியமாக , உயிர்ப்போடு செய்கிறார். மக்களிடம் கேள்வி கேட்பதும்  , பிரச்சாரம் செய்யும்போது தன் பேச்சுக்கு மாடு மட்டும் தலை அசைப்பதைப் பார்த்து மெல்லிய வருத்ததுடன் புன்னகைப்பதும் , ஒவ்வொரு   சூழ்நிலைக்கும்  முக பாவனையை அழகாக மாற்றுவதும் ,  கிளைமாக்ஸில்  போலிஸ் கமிஸ்னரிடம் சீறுவதும் என தனி ஆவர்த்தனம் செய்து  - பார்ப்பவர்களை பலமாக  கை தட்ட வைத்து அடுத்த நிலை மார்கெட்டுக்கு அஸ்திவாரம் போட்டு மனதில் நன்றாக அமர்கிறார்.
 
இரண்டாம் ஹீரோ ஜீவா துருதுரு ரிப்போர்டர் வேடத்துக்கு மிக கச்சிதம். தனக்கு கொடுத்த கதாப்பாத்திர வலிமை தெரிந்து அதன் எல்லைக்குள் விளையாடி இருக்கிறார்.  எந்த ஒரு ஹீரோயிசம் சார்ந்த வேலையையும் இவர் கடைசி ஐந்து நிமிட கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு வரை செய்வதில்லை.  சந்து கிடைக்கும் இடம் எல்லாம் ,யாருக்கும் தெரியாமல்  கேமராவை சுத்த விடுவதும் சரி , ரிப்போர்டருக்கே உரிய  வேகமான விசாரிப்பு மற்றும் ஆட்களிடம் செய்தி கறப்பதிலும்  சரி ,  கிடைத்த குழப்பமான வீடியோ ஆதாரங்களைக் கொண்டு உண்மையை கண்டுபிடிப்பதிலும் சரி நிறைவான அலட்டல் இல்லாத நடிப்பு.
 
 
 
முதல் நாயகி பியா சரியான துள்ளல்.  இவர் வரும் காட்சி வரை ஒரு வித ரசனை கலந்த புன்னகை நமக்குள் வந்து ஒட்டிக்கொள்கிறது.   இவர் பேசும் கொஞ்சல் பேச்சும் , சிட்டி கல்ச்சர் கலாட்டா டயலாக்குகளும் இளமை ததும்பும் காட்சிகளுக்கு பலமாய் அமைகிறது.
 இரண்டாம் நாயகி கார்த்திகா ஓகே. நடிக்கிறார் என்பது தெரிகிறது.  ஆனால் முதல் படத்தில் அறிமுகம் ஆகும்போது ஏதாவது ஒன்று பார்ப்பவருக்கு -  இது இவர் நடிப்பின் ப்ளஸ் பாய்ன்ட் என்று தோன்ற வேண்டுமே.. எனக்கு ஒன்றும்  தோன்றவில்லை . ராதா  புதல்விக்கு இன்னும் இரண்டு படம் பார்த்து மார்க் போடலாம்.
 
  பிரகாஷ்ராஜ் , கோட்டா சீனிவாசராவ் இருவரும் வழக்கமே வழக்கம் போல.  இவர்களை   விட்டுவிட்டு அமைதியாக வில்லத்தனம் செய்யும் நடிகர்களை போட்டிருந்தால் சஸ்பென்ஸ் இன்னும் எகிறியிருக்கும்.  எத்தனை அரசியல்  கதைகள் எழுதியிருக்கிறீர்கள்  சுபா ?  எந்த முதலமைச்சர்  பேட்டியின் போது இப்படி முட்டாள்தனமாக நடந்துகொள்வார் என்று உங்களில் ஒருவருக்கு கூட சந்தேகம் வரவில்லையா ?  படத்திற்கு திருஷ்டி போல அபத்தமான காட்சி அது.  (தன் ஒரே மகனை  விபத்தில் பறிகொடுத்த சோகத்தில் இருந்து மீண்டு வந்து நடித்திருக்கும் கோட்டா சீனிவாசராவுக்கு ஆறுதல்களும் வணக்கங்களும் )

நானும் ஹாரிஸ் ரசிகன்தான்.  ஆனால் தாம் தூம் தொடங்கி தற்போது கோ , வரப்போகும் எங்கேயும்  காதல் படங்கள் எல்லாவற்றிலும் உள்ள பாடல்களை எடுத்து , கலந்து சீட்டுக்கட்டு போல் குலுக்கி போட்டால் , எந்த பாடலையும் எந்த படத்துக்கும் கண்டிப்பாக  பொருத்தலாம்.  
ஏன் இப்படி ஒரு தேக்கநிலை ?  பாடல்கள் நன்றாக இல்லை என்பதல்ல ..  எங்களுக்கு பிரித்து பார்க்க, எதுவும் வித்யாசமாய் தெரியவில்லை.  ஒரு மாற்றத்திற்கு கிராமிய கதைகளும், மதராசப்பட்டினம் போல பீரியட் கதைகளும் எடுத்து மெட்டு போட்டு காண்பியுங்கள் ஹாரிஸ்.  கண்டிப்பாக உங்களால் முடியும்.  எங்களுக்கு தேவை வெரைட்டி.

  பொலிடிக்கல்  த்ரில்லர் என்பது கத்தி மேல் நடப்பது போல. அதை இயக்கும்போது மிக கவனம் தேவை. ஆனந்தின் அனுபவம் இதில் நன்றாக கை கொடுக்கிறது. முதல் காட்சி - வங்கி கொள்ளையை , பின்னால் படத்தின் கதைக்கு சரியாக பொருத்துவது நல்ல உத்தி.  ஆனால் ஜீவா ,வெறும் தழும்பை வைத்து  மட்டும் ஆளைக்   கண்டுபிடிப்பதெல்லாம் மிக அதிகம்.  எது எப்படியோ படத்தில் ஜீவாவின் சமர்த்துதனமான நடிப்பைப் பார்த்ததுமே , ஆனந்தை பாராட்ட தோன்றியது..  காரணம் - இந்த அழகான கதாப்பாத்திரத்தை கண்டவன் கையில் (விரலில்?) கொடுத்திருந்தால்   கண்றாவியாய் இருக்கும்.  
 'இது என் கதை.இதில் எவனும் உள்ளே வர அனுமதிக்க மாட்டேன்' என்று நின்ற உங்கள் நிமிர்ந்த கண்ணியத்திற்கு ஒரு சல்யுட். 
 எப்படியோ நாங்கள் தப்பித்தோம்.

அது சரி ஆனந்த் சார் , யார் அது முதல் பாடலில் கல்யாண ராமன் வேடத்தில்... ஹ்ம்ம்  என்னமோ நடக்குது , ஆனந்துக்கு இருக்கு தெம்பு ..நமக்கு எதுக்கு வம்பு ?



உங்களுக்கு ஹாட் ட்ரிக் வெற்றி இது என்பதில் சந்தேகம் இல்லை ஆனந்த். அடுத்த படம் மாற்றானுக்கு வாழ்த்துக்கள்.
சொன்ன குறைகளை விடுங்கள். நிறைகளை எடுத்துக்கொண்டு அடுத்து இன்னும் நிறைய டிஜிட்டல் கிறிஸ்டல் படங்கள் கொடுங்கள்.
ஷங்கருக்கு ஒரு போட்டி இருந்தால்தான் எங்களுக்கும் நல்ல விருந்து கிடைக்கும்.

கோ - 'கோ'டைக்கு ஏற்ற 'கோ'க்'கோ' 'கோ'லாங்'கோ'... 

Monday, April 25, 2011

உயரம் தாண்டிய 'குள்ளநரிக்கூட்டம்'

காலேஜ் படிக்கும்போது ஹாஸ்டலை விட்டு ,மேன்சனில் தங்கி  இருக்கும்போது, ஞாயிற்றுக்
கிழமைகளில்  மத்தியான சாப்பாட்டுக்கு பல ஹோட்டல் முயற்சி செய்து பார்ப்போம். ஆர்ய பவன் தொடங்கி அனைத்து பவன்களிலும் சாப்பிட்டு பார்த்து விட்டு 'ஓகே' ரகம் என்று சொல்லி வந்த எங்களுக்கு ஒரு ஓரத்தில் சிறியதாக இருந்த மீனாட்சி மெஸ் கண்ணில் பட மூன்று மாதங்கள் ஆகின.

வெகு குறைவான, கட்டுபடியான விலையில், தரமான ,சலிக்க வைக்காத சுவையில் , ஒரு முழுத் திருப்தியான உணவை உண்ட  மகிழ்ச்சி எங்களுக்கு ஏற்பட்டது.அதே திருப்திதான் 'குள்ளநரி கூட்டம் ' படம் பார்த்த பின்னரும் ஏற்பட்டது.


இது போன்ற படங்களை கவனிக்க தவறுவதும் ,அல்லது பெரிய பட்ஜெட் பட விளம்பர சுழலில் சிக்கி இவை காணாமல் போவதும் வேதனைக்குரியது.
எந்திரன் தொடங்கி எல்லா பெரிய பட்ஜெட் ராட்டினங்களுக்கு   நடுவில் திருவிழாவில் சுவைக்க வேண்டிய  சின்ன பஞ்சு மிட்டாயாக இனிக்கிறது குள்ளநரி கூட்டம்.



கண்டிப்பாக இது ஒரு வெற்றிப்படம்தான். காரணம் இதன் முதலீடு மிக குறைந்தது. இது போன்ற படங்கள் முதல் மூன்று நாள் தியேட்டரில் ஓடினாலே தயாரிப்பாளர் நிதானமான  லாபமடைவார். இயக்குனர் பிழைத்து கொள்வார். நடிகர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். ஆனால் அது போதுமா?

 மொக்கை படங்களை பெரிய நிறுவன தயாரிப்பு என்றும் , பெரிய இயக்குனர் எடுத்து தொலைத்து  விட்டார் என்பதற்காகவும்  ஒரு முறையாவது தியேட்டர் போய் பார்க்கும் நாம் , இது போன்ற படங்கள் நன்றாக இருக்கிறது என்று யார் சொன்னாலும் அதற்க்கு கொடுக்கும் பதில் : 'அப்படியா ? சரி  நல்ல பிரிண்ட் வரட்டும் ; பார்த்திடுவோம்'  என்பதுதான்.

 'கிக்'கையும் 'நடுநிசி நாய்கள்'ஐயும் தியேட்டர் போய் காசு கொடுத்து பார்த்து திட்டும் நாம் இது போன்ற படங்களுக்கு கொடுக்க  வேண்டிய  அடிப்படை மரியாதையான டிக்கெட் வாங்கி பார்ப்பதை கூட செய்வதில்லை.


இது எல்லாவற்றையும் தாண்டி இது போன்ற நல்ல கதை அம்சத்துடன் வெற்றி பெற்று நம்மை தியேட்டருக்கு வரவழைக்க ஆரம்பித்தது 'சித்திரம் பேசுதடி'   படம் தொடங்கியே. பிறகு சுப்ரமணியபுரம், களவாணி , மைனா என்று நம்பிக்கை தர ஆரம்பித்தது புது இயக்குனர்களின் சவால் விட கூடிய திறமையும் அவர்களுக்கு ஊக்கம் கொடுத்த தயாரிப்பாளர்களும். அதன் தொடர்ச்சியே இந்த குள்ளநரி கூட்டமும்.


இது போன்ற தொய்வில்லாத , ஒரு நிமிடம் கூட சலிக்காமல் பார்த்த படம் களவாணி. பிறகு இதுதான். அதற்காக படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. என்றைக்கும் நன்றாக சமைக்கும் அம்மா சமையலில் குற்றம் பார்க்கலாம். என்றைக்காவது அம்மா ஊரில் இல்லாத சமயம் தங்கை சமைத்து கொடுத்தால் அதுவும் வீட்டில் இருக்கும் சொற்ப காய்கறிகளில் இருந்து செய்து பரிமாறினால்  ,அது சுமாராக இருந்தாலும் சுவைதானே. அதற்காக இந்த படம் சுமார் ரகம் அல்ல . உண்மையிலேயே சூப்பர் ரகம்.

பொதுவாக விமர்சனம் பண்ணும்போது கதை  சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த படத்தில் அந்த கஷ்டம் கூட இல்லை. காரணம் கதை சிக்கல் இல்லாத ஒரே ஒரு லைன். காதலியை  கைப்பிடிக்க அவள் தந்தை ஆசைப்படி  காதலன் போலிஸ் ஆக செய்யும் காமெடி கலந்த  போராட்டம்.

முதல் பாராட்டு இயக்குனருக்கு. ஸ்ரீ பாலாஜி திரைக்கதை எழுதி  இயக்கியிருக்கிறார். இந்த படத்தை கதை மட்டும் எழுதி வேறு யாரிடமாவது கொடுத்திருந்தால் இதில் என்ன இருக்கிறது? ; இருபது நிமிடத்திற்கு மேல் இதில் இழுக்க கதையே  இல்லையே என்று ஒதுங்கியிருப்பார்கள். இவர் வசனத்தையும் கதையையும் செதுக்க மெனக்கெட்டு இருப்பது , ஒவ்வொரு நிமிடமும் படம் பார்க்கும் போது வரும் புன்னகையும் சிரிப்பிலுமே தெரிகிறது.

இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் கண்டிப்பாக இவரின் வசனமும்,
காட்சி அமைப்பும், பாத்திரங்களை கையாண்ட விதமுமே . பிற விஷயங்கள் அணில் போல் உதவியிருக்கின்றன .வாழ்த்துக்கள் பாலாஜி. வெள்ளித்திரை வாசலை திறக்க வைத்து விட்டீர்கள். இனி கவனமாக அடியெடுத்து வையுங்கள்.


அடுத்து விஷ்ணு. வெற்றி என்ற பாத்திரத்தில் உண்மையிலயே கலக்கியிருக்கிறார். பத்து ருபாய் அப்பாவிடம் வாங்க மூச்சிரைக்க ஓடி வருவதும் , அண்ணனிடம் அலம்பல் பண்ணுவதும் , ரம்யா நம்பீசனிடம் முதலில் கெத்தாகவும் பிறகு பம்முவதும் , பின் போலீஸ் தேர்வு சமயத்தில் மைதானத்தில் செலக்ட் ஆக முனைப்பு காட்டுவதிலும் என நடிக்க வாய்ப்பு இருக்கும் எல்லா இடத்திலும் சிக்ஸர் அடிக்கிறார்.
அதுவும் அண்ணன் வண்டி ஓட்ட பின்னால் அமர்ந்து கொண்டு , பக்கத்தில் ஆட்டோவில்  போகும் பள்ளிக் குழந்தைகளிடம் ' ஹேய் டோரா .. எங்க நாம போறோம்? ' என்று கத்தி சைகை செய்யும்போது ...
'ஹ்ம்ம்.. திறமை இருக்கும் நடிகர்களை  விட்டுவிட்டு  நாம், பஞ்ச் டைலாக் பேசுபவன்தான்  நாயகன் என்று நம்பிகொண்டிருக்கிறோம் ' .


இவரின் பெரிய பலம் தனுஷ் போல்  இவருக்கு இருக்கும் எதிர் வீட்டு பையன் முக ஜாடை. தான் சிரிக்காமல் பார்ப்பவரை   சிரிக்க செய்யும் பக்குவமான நடிப்பு. சரியான ரூட்டில் செல்கிறீர்கள் விஷ்ணு .. பாதையை மாற்றி விடாதீர்கள்.




ரம்யா நம்பீசனை தேர்வு செய்த இயக்குனருக்கு மீண்டும் ஒரு பாராட்டு.இது போன்ற சிறிய பட்ஜெட் படமா ? என்று சிந்திக்காமல் நடித்திருக்கும் ரம்யாவுக்கு இன்னொரு பாராட்டு. பொண்ணுக்கு மதுரை பாஷை , அதற்கான முக நளின அசைவுகளும் மிக கட்சிதமாக பொருந்துகிறது.போனில் விஷ்ணுவிடம் எகிறுவதும் ,பின் பரிதாபப்பட்டு பேசுவதும் மிக அழகு . இவருக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் மலரும் காதலை மிக நாகரீகமாக நகைச்சுவையாக படமாக்கியுள்ளனர்.

 பணத்தை வாங்கியதும் விடைபெற்று எந்த உணர்ச்சியும் இல்லாமல் போகும் விஷ்ணுவை ஏக்கத்துடன் பார்ப்பதும், அவர் திரும்பி வந்து ' இந்த ஐநூறு ரூபாயய நாளைக்கு வாங்கிக்கிறேன்' என்று சொல்ல , கண்களில் காதலை காட்டுவதும் கவிதை.
எல்லாவற்றையும் விட மிக பெரிய விஷயம் , அசால்ட்டாக  காமெடி வருதுப்ப்பா இந்த பொண்ணுக்கு ? பாத்துக்கோங்க  பாலா.. அடுத்த படத்துக்கு உதவும்.

 
மீதி அதே வெண்ணிலா கபடிகுழு நண்பர்கள் கூட்டம். மைதானத்தில் நடக்கும் அலப்பறை சிரிக்க வைத்து கண்களில் நீர் வர வைக்கிறது. பொதுவாக ஒரு வெற்றி படத்தில் இருந்த அனைவரும் அடுத்து ஒரு படத்தில் நடித்தால் படம் படுத்து விடும் என்பது இதுவரை  கண்ட உண்மை .இதில் நேர்மாறாக சுத்தி சுத்தி சிரிக்க வைத்து கை தட்டல் வாங்கியிருகிரார்கள். அந்த குழு அனைவருக்கும் நல்ல எதிர்காலம் ஏற்படுத்தி கொடுக்க இயக்குனர்கள் முன்வரவேண்டும்.




மற்றபடி விஷ்ணுவின் அப்பா , அம்மா ,அண்ணன் என எல்லா பாத்திரத்தையும் மிக நுண்ணியமாக மதுரை ஒரிஜினாலிட்டி தெரியும்படி கையாண்டிருக்கிறார்கள். விஷ்ணுவின் அம்மா ' இது வரைக்கும் அப்பாக்கு தெரியாம செஞ்சுட்ட; இதையும் செஞ்சுடு;நல்ல பொண்ணுடா..' என இழுத்து பேசும் இடத்தில் அட அட .. மண் மணக்கும் மதுரைடா..




சரி நண்பர்களே , நல்ல படம்..இதுவரைக்கும் இதற்கு எப்படி அங்கிகாரம் கிடைத்திருக்கிறது என்பது பிடிபடவில்லை.. ஆனால் இது போன்ற நல்ல படங்களை ஊக்குவிக்க வேண்டியது நம்மை போன்ற ரசிகர்களின் கடமை. மற்றபடி பெரிய படங்களுக்காக இவைகளுக்கு தியேட்டரில் காட்சி ஒதுக்காமல் இருக்கும் புண்ணியவான்களை நாம் ஏதும் செய்ய முடியாது.


பொதுவாக நான் எந்த படத்தையும் (எதையும்..) சிபாரிசு செய்வதில்லை. அதன் சிறப்புகளை,சாதக பாதக விஷயங்களை மட்டுமே சொல்ல விரும்புவேன். மேற்கொண்டு முடிவெடுப்பது அவரவர்  கையில்..இதற்கு மட்டும் 'ஒரு முறை பாருங்கள்' என வேண்டுகோள் விடலாமா என்று சிந்திக்கிறேன்.காரணம் இந்த படகுழுவினரின் (பட்ஜெட்டுக்குள் அடங்கிய ) உழைப்பும் தரமும்.

குள்ளநரிக்கூட்டம் - தரமான தந்திரம்

Thursday, April 21, 2011

தேவையா புதிய கல்லூரிகள் ?

/* செய்தி : பொ‌றி‌யிய‌ல், பா‌லிடெ‌‌க்‌‌னி‌‌க், மேலா‌ண்மை க‌ல்லூ‌ரிக‌ள் தொட‌ங்க 83 பே‌ர் ‌வி‌ண்ண‌ப்ப‌ம் செ‌ய்து‌ள்ளதாக அ‌ண்ணா ப‌ல்கலை‌க்கழக துணைவே‌ந்தன‌ர் ம‌ன்ன‌ர் ஜவஹ‌ர் கூ‌றினா‌ர்.83 ‌வி‌ண்ண‌‌ப்ப‌ங்க‌ள் ‌மீது ப‌ரி‌சீலனை முடி‌ந்து‌ள்ளதாக கூ‌றிய ம‌ன்ன‌ர் ஜவஹ‌ர், 16 க‌ல்லூ‌ரிக‌ள் ம‌ட்டுமே முறையாக அனும‌தியுட‌ன் க‌ட்டிட‌ங்க‌ள் க‌ட்டியுள்ளன எ‌‌ன்றா‌ர்.
எ‌‌ஞ்‌சிய க‌ல்லூ‌ரிகளு‌ம் அனும‌தி பெ‌ற அ‌றிவுறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளதாக ம‌ன்னவ‌ர் ஜவஹ‌ர் கூ‌றினா‌ர். */





பத்து வருடங்கள் முன்னால்  ஹாஸ்டலில் அஹிம்சை முறையில் ராகிங் செய்து கொண்டிருந்தோம். எங்களுக்கு அடுத்த செட் அப்போதுதான் கல்லூரி சேர்ந்திருந்தனர்.டிபார்ட்மெண்ட் வாரியாக பிரித்து  இரண்டு பொடியன்களில் ஒருவனிடம் நான் கேட்டுகொண்டிருந்தேன்.

'எந்த ஊருடா?'

'மதுரைண்ணே'

'எந்த டிபார்ட்மெண்டு?'

'ஐ டி-ண்ணே'

'எதுக்கு ஐ டி சேர்ந்த? '

'எனக்கு ஐ டி படிக்கணும்னு ரெம்ப ஆசைண்ணே' என ஆரம்பிக்க நான் விடாமல் ஏறுக்குமாறாக கேள்வி கேட்க  கடைசியில் பாதி அழாத குறையாக 'தெரியாம ஐ டி சேர்ந்துட்டேன்ணே ..என்ன விட்டுருங்க ' என ஓடி போனான்.

சிரித்து கொண்டே அருகிலுருந்த என் நண்பன் அடுத்த பொடியனிடம் ஆரம்பிக்க அவன் தடாலடியாக 
'ஐ டி படிக்கணும்னு எல்லாம் எனக்கு ஆசை இல்லேண்ணே.. எங்க ஊரு ஆர்ட்ஸ் காலேஜ்ல எடம் கெடைக்கல.. அதான் இங்க வந்து சேர்ந்தேன்.  சும்மா வளவளனு கேள்வி கேக்காதீங்க ' என்று சொல்லி மெதுவாக நடந்து போனான்.

அதிர்ச்சியில் உறைந்திருந்த எங்கள் கண் முன் போன வருடம் பொறியியல் கல்லூரியில் சீட்டு கிடைக்க நாங்கள் பட்ட கஷ்டங்கள் கண் முன் விரிந்தன.
  
இதை எங்கள் பொறாமையாக பார்க்காமல் , பொதுவாக பாருங்கள். எங்கே போகிறது நம் கல்வித்துறை?  பொறியியல் கல்லூரிகள் பெருகும் விதம் மேலோட்டமாக பார்த்தால் முன்னேற்றமாக தெரியும். ஆனால் எண்ணிக்கை மட்டுமே தரத்தை கொடுக்காது. நான்கு கூரைகளும் , எட்டு தடுப்புகளும் , ஆறு கணிப்பொறிகளையும்  வைத்து 'இது அங்கிகாரம் பெற்ற பொறியியல் கல்லூரி' என்று சொன்னால் சிரிப்பதா ? அழுவதா ?

ஏற்கனவே தற்போது 383 பொறியியல் மற்றும் 323 பா‌லிடெ‌‌க்‌‌னி‌‌க் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன என்பதை நினைவில் கொள்க .எஞ்சிய நூற்றி சொச்ச மருத்துவ கல்லூரிகள் நம் பதிவுக்கு அவுட் ஆப் சிலபஸ்.

சரி இப்போது இந்த கல்லூரிகள் என்ன நிலையில் உள்ளன என்பதை சற்று ஆராய்வோம். பொறியியல் படிப்பிற்கு பட்டம் பெற இரண்டு வழி. ப்ளஸ் டூ முடித்து நேராக பொறியியல் கல்லூரியிலோ அல்லது பத்தாம் வகுப்பு முடித்து பா‌லிடெ‌‌க்‌‌னி‌‌க் சேர்ந்து , பொறியியல் படிப்புக்கு இரண்டாம் வருடத்தில் இருந்து ஒன்றாக சேரலாம். இதை ஐந்து வயது பையனை கேட்டாலும் சொல்வான்.

ஆக பொறியியல் பட்டம் என்ற ஒன்றை அடைய இந்த இரு வழிகளும் மாணவனின் திறனை பொருத்து தேவைப்படுவதால்  (கடவுள்   ஒருவர்தான் ; அதை அடைய எந்த மதங்கள் மூலமாக வந்தாலும் தவறில்லை என்பது போல் ) இதை வைத்து பல கல்லூரிகளும் கல்வித்தந்தைகள் கூட்டமும் பல்கி பெருகி கொண்டிருகின்றன.

இங்கு பஞ்சாயத்து என்னவென்று முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். புதிய கல்லூரிகள் தேவை இல்லை என்று கருத்தை முன்வைக்கவில்லை. இருக்கும் கல்லூரிகளை முதலில் நன்றாக உபயோகப்படுத்தி பிறகு அடுத்த முன்னேற்றங்களை பார்க்கலாமே  என்பதே கேள்வி.
கல்வி வருடம் 2000த்தில்  நான் பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு சென்றபோது 173 கல்லூரிகள் இருந்ததாக நினைவு.இப்போது இரண்டு மடங்குக்கு மேல். எண்ணிக்கை பெருகியதால் சந்தோசப்படலாமா என்றால் சற்று நிதானியுங்கள்.

'சரிப்பா .. நெறைய காலேஜ் புதுசா சேர்ந்தா நல்லதுதான.. என் பையன் ஜஸ்ட் பாஸ்தான் ஆவான் . அவனுக்கு பெரிய காலேஜ் கெடைக்காது. ஏதோ ஒரு காலேஜ்ல சேர்த்து விட்டோம்னா எப்படியும் வேலை கெடைச்சுடும்ல?' என்று புத்திசாலிதனமாக கேள்வி கேட்கும் பெற்றோர்களுக்கு பதில் : 'சாரி சார் .. வெரி  சாரி. உங்க பையன் படிச்சிட்டு வெளிய வரும்போது கைல பட்டம் இருக்கும்.அதை வெச்சுருக்கிற தகுதி , அதை பயன்படுத்தி நல்ல வேலைல சேருற திறமை (பெரும்பாலும்) அவன்கிட்ட இருக்காது.காரணம் - அந்த கல்லூரிகளுக்கு அவ்வளவுதான்  மதிப்பு.சொல்லித்தந்த லட்சணமும் அப்படிதான் இருக்கும்  '

ஏற்றுகொள்ள வேண்டிய மாற்றுகருத்துக்கள்

  •  'எந்த கல்லூரிதான் சொல்லிதருது? நம்ம பையனுகதான் ஜெராக்ஸ் எடுத்து படிச்சு மார்க் வாங்குறாங்க.'
  • 'என் பையன் திறமையானவங்க. காலேஜ் கை விட்டாலும் எப்படியோ வேலை வாங்கிடுவான்'
ஒரு காலத்தில் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே பொறியியல் பட்டம் என்பதை மாற்றி ,படிப்புக்கு மரியாதை கொடுக்க   ஒற்றைசாளரமுறை  பயன்பட்டது வாஸ்தவமே. இப்போதும் அந்த முறையில் எந்த ஒரு குறையும் இல்லை. ஆனால் அந்த முறை ஆரம்பிக்கும்போது லிஸ்டில் இருந்த கல்லூரிகள் தரம் மிகுந்தவைகளாக இருந்தன. அதே தரம் , இப்போது கூட சேர்ந்திருக்கும் புதிய கல்லூரிகளுக்கு இருக்கிறதா என்றால் ஹுஹும்..

எந்த எந்த கல்லூரிகள் தரமற்றவை என்று சொல்ல இங்கு தேவை இல்லை. தேவை இல்லாமல் அதற்கு வக்காலத்து வாங்கி பின்னூட்டம் இடுபவர்கள் நேரத்தை நாம் எதற்கு வீணடிக்க வேண்டும்.

சரி, மேற்கூறிய விஷயங்கள் ஒருபுறம் இருக்கட்டும். புதிய கல்லூரிகளுக்கு அங்கிகாரம் கொடுத்து அவை துவக்கப்படுவதற்கு முன் தமிழக கல்வித்துறையிடம்   சில கேள்விகள்:


வருடா வருடம் மாணவர் சேர்க்கையின்போது இறுதியில் சில கல்லூரிகளும் கணிசமான எண்ணிக்கையில் சீட்டுகளும் காலியாக இருக்கும்போது புதிதாக கல்லூரிகள் சேர்க்க என்ன அவசியம்? 


இந்த கேள்விக்கு பதில் அளிக்க கடினமாக உள்ளதென்றால் கேள்வியை பாதியாக குறைக்கலாம்.


வருடா வருடம் மாணவர் சேர்க்கையின்போது இறுதியில் சில கல்லூரிகளும் கணிசமான எண்ணிக்கையில் சீட்டுகளும் காலியாக இருக்க என்ன காரணம்?






அடுத்த கேள்வி:


இப்படி இரண்டு மூன்று வருடம் மிக சொற்பமாக மாணவர்கள் இருந்தும் சில கல்லூரிகள் அடுத்த வருட  பட்டியலில் தொடர என்ன காரணம் ?

இடப்பற்றாகுறை என்றால் அதிக இடம் சேர்க்கலாம்.இடம் நிரம்பவில்லை என்றால் எங்கு தவறு? இதை ஆராய என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

கல்லூரி நல்லபடிதான் உள்ளது. மாணவர்கள் அதை தேர்வு செய்யவில்லை. அதற்காக அதை ரத்து செய்வது எப்படி என்று நியாயமாக கேள்வி கேட்பது போல் கேட்டால் , மிக நியாயமாக பதில் ஒன்று உள்ளது - மாணவர்கள் அதை தேர்வு செய்யாமல்  இருக்க காரணம்  அதன் தரமற்ற நிலைதான். வகுப்பில் இருந்து , பரிசோதனை கூடம், ஆசிரியர்கள் தரம் - தகுதி, போக்குவரத்துக்கு வசதி என எதுவும் சரியில்லாமல் இருப்பதே.

//கூடுதல் விவரம்:
எல்லா வருடமும் தேர்வெழுதிய மாணவர்கள் எண்ணிக்கை -குருப் ஒன்று மற்றும் இரண்டு எல்லாம் சேர்த்தாலும் ,எல்லாருக்கும் சீட் உள்ளபடி கல்லூரி எண்ணிக்கை உள்ளது.ஆனால் மதிப்பெண் அடிப்படையில் அதில் உத்தேசமாக  முப்பது சதவீதம் விலக்கப்படுகிறார்கள்.ஆக எது எப்படியோ இது வரை இருக்கும் கல்லூரிகள் போதும் என்றாலும் கூட , தமிழக மற்றும் அண்டை மாநில மாணவர்கள் பாதிக்கபடபோவதில்லை. //

 புதிய கல்லூரி தரம்மிக்கவையாக உள்ளது ? சேர்ப்பதில் என்ன தவறு ?
என்று ரோசப்பட்டு கேட்டால்  - 'தாராளமாக சேருங்கள் - ஆனால் அதே நேரத்தில் மோசமாக தரமற்று இருக்கும் பழைய கல்லூரிகளை களையெடுங்கள்'.

மாநில பெருமையை கல்லூரிகளின் எண்ணிக்கை பொருத்து அல்ல.. அவைகளில் படித்து வெளி வரும் மாணவர்கள் தகுதியும் திறமையும் பொருத்து.  அண்டை மாநிலமான (மெத்தப்படித்த  ) கேரளா நம்மை நாடி வருவதற்கு காரணம் , இத்தனை வருடங்களாக நாம் காட்டிய கல்வி மேம்பாட்டுத்திறன். அதை கெடுக்க வேண்டாமே...

முதலில் ஒரு நேர்மையான  - மாநிலம் தழுவிய ஆய்வை கல்லூரிகளுக்கு நடத்தி , தரமற்றவைகளை ஒழுங்குபடுத்தி ,குறைந்தது அடிப்படை வசதிகள் கிடைக்குமாறு செய்தால்  அதில் படிக்க மாணவர்களுக்கு  நம்பிக்கை தானாக வரும். சீட்டுகள் காலியாக வாய்ப்பு இல்லை.


பொறியியல் படிப்பு மிடில் கிளாஸ் பெற்றோர்கள்,மாணவர்களின் ஒரே சாத்தியமான கனவு.அதை  ஊக்கபடுத்த கவர்ச்சி திட்டங்கள்   வேண்டாம். கவனிப்பு மட்டுமே போதும்.

புதிய காரை அப்புறமாக டெஸ்ட் டிரைவ் பண்ணலாம். பழைய சைக்கிளை முதலில் பஞ்சர் ஒட்டுங்கள்.

 
//மற்றவர்கள் தங்கள் அபிப்ராயத்தை பின்னூட்டலாம். . //

Tuesday, April 19, 2011

பாப்கார்ன் பாக்கெட்- 20110419





//இந்த ப்ளாக்க நான் போன வெள்ளிகிழமை  செட்யூல் பண்ணி , சரியா பதிவு பண்ணிடும்னு  நம்பி ஊருக்கு போனேன். பிளாக்கர் ஏமாத்திருச்சு.. இப்போ வந்து பார்த்தா லிஸ்டுல இருக்கு .. என்ன பிளாக்கர் இது ? ஐ  திங் . இது என்ன இருந்தாலும் ஒரு முட்டாள் எந்திரம்தான.. மனுசங்க மாதிரி வர முடியுமா ? //


இப்போதெல்லாம் வார இறுதியில் டிவி சேனல்களில்  நிறைய ஹாலிவுட் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு காண்பிக்கப்படுகின்றன. இது ஒரு சந்தோசமான அனுபவம். இப்போதுள்ள குழந்தைப் பட்டாளத்துக்கு இது மிக பெரிய வரப்பிரசாதம்.


 எனக்கு தெரிஞ்சு நான் பார்த்த முதல் டப்  செய்யப்பட்ட படம் 'ஜுராசிக்  பார்க்' . படு  மொக்கையாக டப் செய்திருப்பார்கள்.. ஒரு டைனோசர் ஒரு கூட்டத்தை கொல்ல ஓடி  வரும்போது ஒருவன் திரும்பி பார்த்து மற்றவரிடம் எச்சரிப்பான். 'ரன் அவே.. ஹரி  அப்' என்று கிட்டத்தட்ட கத்துவான் . அதை தமிழில் ' அதோட அம்மா கோவமா இருக்கு..' என்று சத்தே இல்லாத சத்தமே வராதபடி டப் செய்து சிரிப்பு வரவழைத்து  கொன்றிருப்பார்கள்.


அதை போலவே 'டுமாரோ  நெவெர் டை'யிலும்  மோட்டார் பைக் சேசிங் சீனில் ,ஜேம்ஸ் பாண்ட் இப்படி சொல்லுவார்  - 'க்ளட்சை பிடி; கியரை  போடு' என்று..


நல்ல வேலை இப்போதெல்லாம் ரெம்ப மெனக்கெட்டு டப் செய்து படத்தின் சுவையை அதிகப்படுத்துகிறார்கள். எல்லா படங்களும் வார்த்தையும் வாய் அசைவும்   தெளிவாக மேட்ச் ஆகும்படி சமாளிக்கிறார்கள். தற்போதைய உதா : இன்செப்சன்.   அதுவும் சில ஆக்சன் காமெடி படங்களில் நம்ம சென்னை பாஷை கலந்து கலகலப்பை அதிகம் ஆக்குகிறார்கள்.



நல்ல உதாரணம் : ஷங்காய் நைட்ஸ்.

 'நீ இன்ன வேணாலும் பண்ணிக்கோ. உனக்கு ஜாக்கி வந்து  ரிவிட் அடிக்க போறான்..  வர்ட்டா. அடி தூள் கிளப்பு மாமு'

So nice..

-----------------------------------------------------------------------------
காந்தியம் செத்துவிடவில்லை என்று இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது அன்னா ஹசாரே விசயத்தில். தனி ஒரு மனிதர் தன்னிடம் இழக்க ஏதுமில்லை என்னும்படி , எதற்கும் அஞ்சாமல் ஒரு கொள்கைக்காக போராடி வெற்றியை சுவைத்திருக்கிறார் .  சத்தியாகிரகம் மிக சிறந்த ஆயுதம் என்பதை பிரிட்டிஷ் ஆட்சியே அனுபவப்பட்டு உணர்ந்து பணிந்த போது , சுண்டைக்காய் தற்போதைய அரசு என்ன செய்யும்.?




அதுவும் அவருக்கு கிடைத்த ஆதரவு  அலைகளும் , பின்னால் வந்து நின்ற இளைஞர்கள் கூட்டமும்  ஒன்றை மட்டும் தெளிவாக சுட்டிக்காட்டியது. நல்லதற்கு ஒருவர் குரல் கொடுத்தால் கூட வர ,எழுந்து நிற்க அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பது ஆறுதல். என்ன யாராவது ஒருவர் இப்படி முதலில் குரல் எழுப்ப வேண்டும் என்று எதிர்பார்த்து கொண்டிருப்பது நம் பலவீனம்.

  வாழ்த்துக்கள் ஹசாரே...


இதை சந்தோசமாக ஏற்றுகொள்ளும் அதே வேளையில் , மனதில் ஓரமாக ஒரு பயமும் இருக்கிறது. இதே முறையை சிலர் தங்கள்  அரசியல் வளர்ச்சிக்கும் உபயோகப்படுத்தும் அபாயமும் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் தெலுங்கானா விஷயத்தை பெரிதாக்க , பிரிவினை பிரச்சினையை  கொம்பு சீவ  கே.சீ.ஆர்  இதே முறையை பயன்படுத்தியது இன்னமும் உறுத்துகிறது.  ஆக இதை ஆதரிப்பதும் , எதிர்ப்பதும் மக்களின் அராய்ந்து அறியும் திறனை பொருத்தது.

------------------------------------------------------------------------

என் திரைப்பாடல்கள் விருப்பப்பட்டியலில் இப்போதும் முதல் இடம் இருப்பது 'கேள்வியின் நாயகனே'  - அபூர்வ ராகங்கள் படத்தில் கிளைமாக்ஸ் காட்சி பாடல். மெல்லிசை மன்னரின் அசாத்தியமான இசையில் , மனதை மயக்கும் வாணி ஜெயராம் மேஜிக் மெலோடியில் கமல் , ஸ்ரீவித்யா , ஜெயசுதா & மேஜர் நடிப்பில் உருவான இந்த வசீகரப்பாடலில் கண்ணை மூடி ஐந்து நிமிடம் இருந்து , மெல்ல  கண் விழித்தால் ஒரு தூய்மையான தியானத்தில் ஆழ்ந்திருந்த மன அமைதி கிடைக்கும்.



 ரஜினியின் அறிமுகப்படலம்  இந்த படமே . என் அப்பா இந்த படம் வந்த போது  , இந்த பாடலை மட்டும் பார்க்கவே எங்களுக்கு நெருங்கிய நண்பர் தியேட்டரில்  தினமும் ஒரு காட்சி கடைசி இருபது நிமிடம் போய் பார்ப்பாராம்.




கதையையே பாடலாய் சொல்லும் விதம் இப்போது ஒழிந்து வருவது வேதனை. அதை சுவைப்பட சொல்லும் விதத்தில் இந்த பாடல் இன்று வரை முதலிடம் வகிக்கிறது. ஹாட்ஸ் ஆப் எம்.எஸ்.வீ சார்.


'இல்லாத மேடை ஒன்றில் எழுதாத  நாடகத்தில் எல்லாரும் நடிக்கின்றோம் ' :  'All the world is stage .........'

----------------------------------------------------------------------
சிலவற்றின் பெருமை அதன் மாற்று ஒன்றை கொண்டு வந்து , அது மட்டமாக இருந்தால் மட்டுமே நமக்கு தெரிய வரும் . அதுபோலத்தான் மாப்பிள்ளை வந்திருக்கிறார். ஏற்கனவே ஹிட் ஆன படத்தை மீண்டும்  எடுக்க வேண்டுமானால் அதில் மக்கள் எதை ரசித்து பார்த்தார்களோ அந்த காட்சிகளை   சுவை கூட்டி, காலத்திற்கேற்ப மாற்றி தர வேண்டும். புது மாப்பிள்ளை பில்ட்-அப் மட்டும்தான் தருகிறாரே தவிர 'என்ன செய்தாலும் ரஜினியை தாண்ட முடியாது ' என்ற அடிமன எண்ணத்தில் முழு நடிப்பை தருவதில் சறுக்கியிருக்கிறார். அனால்


உண்மை முற்றும் வேறு தனுஷ் ... அந்த படத்தில் ரஜினி மிக எதார்த்தமாக அண்டர்-ப்ளே செய்திருப்பார்.ஸ்ரீவித்யாவுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கும். ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதை என்பதால் மிக மிக அடக்கி வாசித்திருப்பார் ரஜினி .


அமலா-ரஜினி செமிஸ்ட்ரி இதில் இல்லை.நல்ல தமிழில் ஸ்ரீவித்யா-ரஜினி மோதலும் இதில் இல்லை. மாறாக  புது மாப்பிள்ளை ஒரு கத்தலாக , காமெடி எங்கு இருக்கிறது என்று தேடும் விதமாக இருக்கிறது.


அப்புறம்  விவேக் சார் ? - சரி விடுங்க .. எத்தனை தடவ திட்டறது ???


புது மாப்பிள்ளை பார்த்தவுடன் அன்று இரவே பழைய மாப்பிள்ளையை   தேடி தரவிறக்கம் செய்து பார்த்து   சாபவிமோசனம் அடைவீர்களாக !!!

------------------------------------------------------------------------------
கடைசி கார்ன்:

எப்பவும்  ஒரே மாதிரி இருக்காதீங்க. வாழ்க்கை சலிச்சு போய்டும்.

தினம் ஆபிஸ்க்கு கார் ,பைக்ல போனீங்கனா   ஒரு சேஞ்சுக்கு பஸ்ல போங்க. ஒரே சேனல் மட்டும் பாக்கறவரா  இருந்தா கார்ட்டூன் , டிஸ்கவரி , மொழி புரியாத எதாவது ஒரு படம்னு பாருங்க.

ஹிஹி..ஒரே பிகர பாக்கறவரா இருந்தா ( அது கஷ்டம்தான்  ) ,  அத   விட்டுட்டு புதுசா எதாவது பாருங்க ... யாருக்கு தெரியும் , பழைய பிகரே வந்து 'ஏன் என்னை இன்னைக்கு  கவனிக்கலை'ன்னு கேட்டாலும் கேக்கும் . கண்ணுல பாக்கறவங்க எல்லாத்தையும் எதாவது மொக்கை காரணத்துக்காக கூட  பாராட்டுங்க.


வீட்டுல ஒய்ப் சமையல வேண்டாம்னு சொலிட்டு நீங்களே களம் இறங்குங்க. புதுசா ட்ரை பண்ணுங்க.. நல்ல வந்தா என்ஜாய். இல்லேன்னா கடைசி நிமிசத்துல 'வா.. நாம ஹோட்டல் போலாம்'னு சொல்லி கூட்டிட்டு போய் நல்ல சாப்பாடு சாப்பிடுங்க..

ரெம்ப நாளா போன் பேசாத நண்பர்களுக்கு எல்லாம் ஒரு ரவுண்டு கால் பண்ணுங்க .. அன்னைக்கு நைட் ஒரு முழு திருப்தியா தூங்குவீங்க.


 அறிவாய் மானிடா.. - இததான் 'வாழும் கலை'-னு சொல்லித்தராங்க.
(டேய் ... நான் எப்போவுமே இப்படிதாண்டா   இருப்பேன்னு  சொன்னீங்கன்னா ... நோ ப்ராப்ளம். நீங்க சாக 100  வருஷம் ஆகும்..அது வரை அப்படியே இருங்க .. )

-------------------------------------------------------------------------------

//பிளாக்கர்: சொல்லிட்டாருப்பா பில் கேட்ஸ் ... வெளங்காத அரை லூசு ஊருக்கு போற அவசரதுள்ள தேதிய மாத்தி கொடுத்திட்டு இப்போ  என்னை குத்தம் சொல்லுது.  இதெல்லாம் ஒரு பதிவர்னு பதிவெழுதி அத நாலு பேரு படிச்சு ... ஹ்ம்ம் என்னமோ...நாசமா போங்க.. இப்படி அடுத்தவன குத்தம் சொல்றதுதான் மனுசங்க குணம்னா நான் முட்டாள் எந்திரமாவே இருந்திட்டு போறேன்... உதவாக்கரை வந்துட்டான் பதிவெழுத.. //

Tuesday, April 12, 2011

வாக்களிக்க வழிகாட்டி : தேர்தல் 2011

தமிழக மக்களே ,
நாளைக்கு  ஒரு  நாள் நீங்கதான் கிங்மேக்கர்.. இந்த மாதிரி வாய்ப்பு  ஐந்து வருடங்களுக்கு ஒருமுறைதான் வரும். போன தடவை நமக்கு இந்த மரியாதை  கெடைச்சது  மே 8  2006 -இல் . இந்த தடவை ஏப்ரல் 13 - நாளைக்கு.




இந்த கட்சிக்குதான் ஓட்டு போடுவேன்னு தெளிவா கட்சி அபிமானிகளா இருக்குற நண்பரகளுக்கு எந்த ஐடியாவும் கொடுக்க தேவை இல்ல .   ஆனா எந்த கட்சிக்கு வாக்கு அளிக்கறது-னு குழப்பமா இருக்குறவங்களுக்கு சில டிப்ஸ் :

(அய்யயோ இப்படி குழப்பமா இருக்கேன்னு நீங்க ஃபீல் பண்ண தேவை இல்லை. திமுக ஊழல் செஞ்சுடுச்சு ;அதிமுகவுக்கு போடலாம்னு தெளிவா இருந்திருப்பீங்க .இப்போ அந்த அம்மாவும் எல்லா இலவசத்தையும் அறிவிச்சு , கூட்டணியில குண்டு வெச்சு உங்கள யோசிக்க வெச்சுட்டாங்க.. கேப்டனை   நாப்பதுக்கு நாப்பது ஜெயிக்க வைக்கனும்னு நினைச்சவங்க நம்பிக்கைல , கடந்த ஒரு மாச காலமா அட்டுழியம் பண்ணி அவரே மண்ணை போட்டுடாரு.
ஆக இந்த தடவை என்ன பண்ணலாம்னு புரியாம இருக்குறவங்க , முடிவெடுக்க மேல படிங்க )


1.கட்சிய சிந்திக்கிறத  விட்டுருங்க ; வேட்பாளரோட தனி குணநலன்கள பாருங்க ; அவர் படிப்பு,திறமை , நம்பகத்தன்மை ;அனுபவம் ; இது வரைக்கும் என்ன பண்ணியிருக்கார் ; அவரே போன தடவை எதாவது தொகுதி எம்எல்ஏவா இருந்திருந்த அங்க என்ன செஞ்சாரு-னு அலசுங்க .அவர் பதவிக்கு வரதுக்கு முன்னாடி அந்த தொகுதி எப்படி இருந்தது ; அவர் வந்தப்புறம் என்ன மாற்றம் வந்ததுன்னு தெரிஞ்சிக்கோங்க.

இதுல உங்களுக்கு ரெண்டு ரிசல்ட் கெடைக்க வாய்ப்பு இருக்கு . 

ஒன்னு - நல்லது செஞ்சிருப்பாரு.வளர்ச்சிகள் அதிகம் கொடுத்திருப்பாரு   ;  ஆளும்கட்சியோ , எதிர்கட்சியோ , கூடியவரை நல்ல விதமா தன் பதவியை பயன்படுத்தி ஒரு முன்னேற்றத்தை கொடுத்திருப்பாரு . - இதுதான் ரிசல்ட்னா இவருக்கு அடுத்த சான்ஸ் தாராளமா இவருக்கு கொடுங்க.

ரெண்டு : மேல சொன்ன எல்லாத்தையும் செஞ்சிருப்பாரு - ஆனா தொகுதிக்கு இல்லேங்க ;  அவர் குடும்பத்துக்கு. இந்த ரிசல்ட் வந்தா உங்களுக்கு இன்னும் வேலை அதிகம். அடுத்த ஸ்டெப் போகணும்.அது என்னனா ...
  உடனே முக்கிய எதிர் வேட்பாளர பாருங்க. அவர்கிட்ட இதே அலசல் பண்ணுங்க. ரிசல்ட் ஒன்னு-னா ஓகே . இல்லேன்னா அதுக்கு அடுத்த ஸ்டெப்.

2.இப்போதான் மிக முக்கியமா சிந்திக்கணும். ஒரு மாயை எல்லாத்துகிட்டயும்  இருக்கு. சுயேட்சையா ஒருத்தர் நின்னா அவர் நல்லவராவே இருந்தாலும் , 'இவர் எப்படியும் தோக்க போறாரு. இவருக்கு போட்டு  என் வோட்டு எதுக்கு வீணாகனும் '-னு. ரெம்ப தப்புங்க. அவர் வெற்றி பெறுவாரோ  இல்லையோ , நல்லவரா இருந்தா   உண்மையிலேயே  மக்கள் மேல அக்கறை உள்ளவரா இருந்தா அவருக்கு நாம போடுற ஒவ்வொரு ஓட்டும் அவரை உற்சாகப்படுத்தும். இன்னும் மக்களுக்கு நல்லது செய்யணும்னு ஒரு உத்வேகம் பிறக்கும்.

அது இல்லாம அவர் டெபொசிட் காலியானா என்ன ஆகும் ? 'இவ்வளவு செஞ்சோமே; மக்கள் நம்மள ரெம்ப அவமானப்படுத்திட்டாங்களே'-னு  மொத்தமா பொது சேவைல இருந்து விலகிடுவாங்க. யாருக்கு நஷ்டம் ? நமக்குதான... எதோ ஒரு கட்சியில இருக்குற மோசமானவங்களுக்கு போட்டு அவர ஜெயிக்க வைக்கறதுக்கு பதிலா , இந்த மாதிரி எந்த கட்சி பலமும் இல்லாம, நல்லது செய்ய வாய்ப்பு கேட்கும் சுயேட்சிகளுக்கு சப்போர்ட் பண்ணினோம்னா , அவங்களுக்கு விழுகற ஒவ்வொரு வோட்டும் , அவரை  தட்டி கொடுத்து இன்னும் நமக்கு உதவி செய்ய வைக்கும். யோசிங்க.
    
 ஆனா சுயேச்சையும் சும்மா விளம்பரத்துக்கு நிக்கறாரு. தன் பெருமையை காட்ட போட்டி போடராருன்னா , நீங்க ரெம்ப பாவம். உங்களுக்கு வேற சாய்ஸ் இல்ல - 49  ஒ தவிர.

3. 49  - ஒ : இது பிரமாஸ்திரம்.'இந்திய குடிமகன் ஆகிய நான் , இந்த தேர்தலில் எனக்கு கிடைத்திருக்கும் ஓட்டு போடும் உரிமையை இந்த முறை யாரையும் ஆதரிக்க பயன்படுத்துவதில்லை என்று அரசினால் அங்கிகாரிக்கப்பட்ட  49 - ஒ வில் என் ஓட்டை பதிவு செய்வதன்  மூலம்  தெரியபடுத்துகிறேன்'.

பொதுவா இத நான் யாருக்கும் சிபாரிசு செய்யறதில்ல.   காரணம் - உன் தொகுதியில் நிக்கிற வேட்பாளரை ஒன்று நீ கட்சி அபிமானியாய் இருந்து ஏத்துக்கணும் ; அல்ல மேல் சொன்ன வழிகள் மூலம் ஏறக்குறைய  ஒழுங்கானவர அடையாளம் கண்டு ஏத்துக்கணும். இது எதுவுமே இல்லாம 'எனக்கு யாரையுமே பிடிக்கல;எல்லாரும் மோசம்'-னு யோசிக்காம 49 -ஐ உபயோகிப்பது முட்டாள்தனம்.


 இன்னொரு காரணம் , இதை கூட உன்னால அலசி ஆராய முடியலேன்னா நீ படித்திருந்து என்ன பிரயோஜனம்?  
அதுவும் சிலபேரு  , 49 -ஒ பயன்படுத்துவதை பெருமையான செயலா சொல்றாங்க. நான் பாராட்டறேன் .

 ஆனா ஒரு மிக சக்தி வாய்ந்த ஓட்டை பயன்படுத்தாமல் இப்படி செய்ய அவங்ககிட்ட ஆழமான காரணம் இருக்கணும். 

கர்ணன் கிட்ட இருக்குற நாகஸ்திரம் மாதிரி நம்ம வோட்டு. ஒரு தடவைதான் பயன்படுத்த முடியும். அதையும் தகுந்த காரணம் இல்லாம 49 -ஒவில் தூக்கில் போடாதீங்க.


காரணங்கள் எது வேணுமானாலும் இருக்கலாம் - ஆனால் நான் கேட்டுகிறது இதுதான். ' நான் 49 -ஒ இந்த தேர்தலில் பயன்படுத்தினேன். அதற்கு காரணங்கள் இவை ' -னு வரிசையா பட்டியல் போட்டு உங்க நண்பர்கள்,உறவினர்கள் ,பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட  சொன்னாதான்  அதோட பயன்பாடு பூர்த்தியாகுது. அதை  தைரியமா வரிசைபடுத்தி நியாயமான காரணங்களை சொல்ல உங்களுக்கு முடியுமா..? ஏகப்பட்ட விவாதம் நடக்க வாய்ப்பிருக்கு.. எதிர்கொள்ள தயாரா இருக்கீங்களா?   அப்போ proceed...

மொத்தத்தில் எந்த கட்சி வேட்பாளரும் , சுயேட்சிகளும் சரியாக இல்லாமல் இருந்தா தாராளமாக 49 - ஒ பயன்படுத்தலாம். ஒரு சின்ன சந்தேகம் - நம்பிக்கை  யாரோ ஒரு வேட்பாளர் மீது ,அவர் நல்லது செய்வாருன்னு உங்களுக்கு தோணுச்சுனா அவருக்கே உங்க வோட்ட பதிவு செய்யுங்க நண்பர்களே.

அப்புறம் முக்கியமான விஷயம் /விண்ணப்பம் : கண்டிப்பா வோட்டு போட போயிருங்க. அது 49 -ஒனாலும் சரி .வேற எதுனாலும் சரி. இல்லேன்னா உங்க வோட்டு உங்களோடது இல்ல.

 எவ்வளவு சீக்கிரம் போயி உங்க கடமையை நிறைவேத்துறீங்களோ   அவ்வளவு  நேரம் உங்க பேரு உங்களுக்கு சொந்தம் . இல்லேன்னா ' நீங்களா பத்மநாபன் ? உண்மைய சொல்லுங்க .. ஏற்கனவே உங்க வோட்டு பதிவாயிடுச்சு ..  ஏன்பா இவர போலீஸ் கிட்டயும் ஏஜென்ட்   கிட்டயும் கூப்பிட்டு போயி உண்மையானு விசாரி ' தான் பதிலா கிடைக்கும். 




வாழ்த்துக்கள் வாக்காள பெருமக்களே..  எத்தன தடவ தப்பா நீங்க தேர்ந்தெடுத்தாலும் அதை திருத்திக்க இன்னொரு தடவை வாய்ப்பு கொடுக்குது நம்ம இந்திய ஜனநாயம்.. யூஸ் பண்ணிக்கோங்க.

//பதிவை படிக்கும் அனைவருக்கும் இனிய சன் டிவி பத்தொன்பதாம் வருட துவக்க  நாள் வாழ்த்துக்கள்.   (அதான் தமிழ் புத்தாண்டு இல்லைன்னு அரசாங்கமே சொல்லிடுச்சே ! )//

Monday, April 11, 2011

பாப்கார்ன் பாக்கெட்- 20110411



ஒரு வழியா ஐபில் வந்துடுச்சு ..  வேகாத வெயில்ல அலைஞ்சுட்டு ஈவனிங் வீட்டுக்கு வந்து டிவியை போட்டா தாத்தா , அம்மா , அண்ணன் , கேப்டன் , ஐயா எல்லாரோட பிரசாரத்த  போட்டு இன்னும் தெருவுல , இரைச்சல்ல  இருக்குற மாதிரியே ஒரு பீலிங்..  இந்திய டீம் ஒன்னா இருந்து கடந்த ஒன்றரை   மாசமா   நம்மள பெரும்பாலும் காப்பத்துனாங்க.. இனி பத்து டீமா பிரிஞ்சிருந்து  அதே வேலைய செய்ய போறாங்க..


எந்த கட்சிக்கு ஒட்டு போட்டாலும் நாம சந்தோஷப்படுற மாதிரி எதுவும் நடக்க போறதில்ல .. மக்கள் உடனடியா எதாவது ஒரு டீமுக்கு சப்போர்ட் பண்ணி அவங்கள ஜெய்க்க வைச்சு அதுலயாவது  சந்தோசப்பட்டுக்கோங்க ..


நான் எப்போவும் போல ஆரம்பத்துல  சென்னை சூப்பர் கிங்க்ஸ் தான். அதுக்கு எதாவது ஆச்சுனா மும்பை இந்தியன்.. அதுக்கும் எதாவது ஆச்சுனா எந்த டீம் ஜெயிக்கிதோ அதுக்கு .. அட எல்லா பயகளும்  நம்ம அங்காளி பங்காளிகதான..
ஹிஹிஹி.. எவன் திட்டுனாலும் ஒரு பஞ்ச் டயலாக் வெச்சுருக்கேன்.. 'Rather supporting a team to win , itz better to support the Winning team'

------------------------------------------------------------------------

கலைஞர் டிவி ஆரம்பிச்சு வெச்ச 'நாளைய இயக்குனர்'  நிகழ்ச்சி மூலமா ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கு. போட்டிக்காக மட்டும் இல்லாம , பசங்க தாங்களாவே குறும்படம் எடுத்து பேஸ்புக் , யுடியூப் உட்பட எல்லா இணையதளங்களையும்    வெளியிட்டு கருத்தும் ஆலோசனையும் கேக்கறாங்க .. எதோ ஒரு ரெண்டு மூணு ஹிட் கொடுத்த ஒரு தனி இயக்குனர் , தான் என்ன கத்துகிட்டாரோ  அத   ஒட்டி விமர்சனம் பண்றத விட மக்களோட கருத்தை நேரடியா கேக்கற இந்த முறை வரவேற்கத்தக்கது..


கலைஞர் டிவி-இல் நான் பலமாதங்கள்  முன்னால் ரசித்த சிரித்த  நிகழ்வு : ஒரு இயக்குனர் தன படத்தை போட்டு காண்பிக்க , அன்று வந்திருந்த கெஸ்ட் வெங்கட் பிரபு 'இந்த கதை  எதோ மெயில்ல படிச்சா மாதிரி  இருக்கே'னு கேட்டதுதான்.. உத்தமரு கண்டுபிடிச்சிட்டாராம்.
அத விட வரவேற்கத்தக்கது , நூத்துக்கு தொண்ணூறு சதவீத இயக்குனர்கள் சினிமாத்தனம் ஏதும்  இல்லாம ,மெசேஜ் சொல்ற கண்றாவி எல்லாம் இல்லாம மிக எதார்த்தமா படம் எடுக்கறாங்க.  திறமை மிக்க எங்கள் இள இயக்குனர்களே , இது உங்க காலம்.. வோட்டு போட நாங்க இருக்கோம் .. கலக்குங்க..
---------------------------------------------------------------------------

போன தேர்தல்ல நல்ல விதமா நடந்துகிட்ட விஜயகாந்த் , ஏன் இந்த தடவ இப்படி வெளிபடையா தன்னை தானே அவமானபடுத்துற மாதிரி நடந்துகிறாரு?

இதுக்கு என் அதிமுக  நண்பன் சொன்ன குதர்க்கமான ஆதாரமற்ற ஆனால் சுவாரசியமான காரணம் -  ' கலைஞர் கிட்ட மொத்தமா பணம் வாங்கிட்டாருடா  கேப்டன் .. இந்த மாதிரி இந்த மாதிரி நான் அங்க போறேன் .. இந்த மாதிரி இந்த மாதிரி அங்க நடந்துக்குறேன் .. இந்த மாதிரி இந்த மாதிரி குடிச்சிட்டு பேசற மாதிரி அம்மாவுக்கு எதிராவும் அதிமுகவுக்கு எதிராவும் காமெடி பண்றேன்..  இந்த மாதிரி இந்த மாதிரி நாப்பது தொகுதிய உங்களுக்கு தரை வாத்து கொடுக்கறேன்..  அப்புறம் அம்மா தனி மெஜாரிட்டி வர்றது  கஷ்டம்.. இதுனால உங்களுக்கு ரெண்டு லாபம் .. ஜெயிச்சாலும் இந்த மாதிரி இந்த மாதிரி அஞ்சு வருஷம் நெறைய  சம்பாதிக்கலாம்.. தோத்தாலும் இந்த மாதிரி இந்த மாதிரி மைனாரிட்டி அதிமுக அரசுன்னு செய்தி வாசிக்கலாம் '  அப்டின்னு ஒரு மாஸ்டர் பிளான்டா...  ஏமாந்துராதடானு ரெம்ப வேண்டி கேட்டுகிட்டான்..

மத்தபடி எனக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையப்பா ... ஐயோ பாவம் ...நீங்களே கன்பீஸ் ஆகிடீங்க
---------------------------------------------------------------------------------------------

பொன்னர்  சங்கர் என்னாகுமோன்னு கவலையா இருக்கு.. யாரோ
பிரசாந்த்னு ஒரு நடிகராம் .. மணிரத்னம் , பாலு மகேந்திரா , ஷங்கர் படத்துல கூட நடிச்சிருக்கராம்.. எப்படி கதை நாயகர்கள் பாத்திரத்துக்கு பொருந்துவாருனு  தெரியல.. ட்ரைலர் நல்லாத்தான் வந்திருக்கு ..


ஆனா சரித்திர கதைகளோ அல்ல புகழ் பெற்ற நாவலை படம்
ஆக்கும்போதோ  ஒரு பிரச்சனை இருக்கு . புத்தகம் படிச்ச எல்லாரும் அவங்க மனசுல பொன்னர் சங்கருக்கு ஒரு உருவம் கொடுத்திருப்பாங்க.. அதை ஒட்டி திரையில இருந்தா படம் ஹிட். இல்லேன்னா என்னதான் நடிகர்கள் உசுர கொடுத்து நடிச்சாலும் செயற்கையா  தெரியும்  .. நடிகர் தியாராஜன் இதுல எப்படி தன திறமையை காட்டராருன்னு  பார்ப்போம்.

இதே பிரச்சனைதான் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஆகும்போதும்  இருக்கும். கால சூழ்நிலைக்கு ஏற்ப கதைய மாத்தி  கொண்டு போனா விக்ரமோ , விஜயோ யார் நடிச்சாலும் பார்க்கலாம். அதே கதைனா அது முடியாது.. வந்தியத்தேவன் பாத்திரத்துக்கு என் மனசுல பதிஞ்ச நடிகர் முத்துராமன் ; பெரிய பழுவேட்டரையருக்கு விஜயகுமார் ; ஆழ்வார்க்கடியானுக்கு   பாலையா .. பொன்னியின் செல்வனுக்கு எம்ஜீஆர் ,..ஆதித்த கரிகாலனுக்கு சிவாஜி ..

உங்க அபிப்ராயம் என்ன?
-------------------------------------------------------------------------------------

 நம்மவர் படத்த ரெம்ப நாள் கழிச்சு (நாகேஷ் மறைவுக்குபிறகு )  நேத்து பாத்தேன். நாகேஷ் பொண்ணு தற்கொலை பண்ணுன பிறகு இருக்கும் காட்சிகள் எல்லாரையும் அழ வைக்கும். என்ன ஒரு அசாதாரணமான நடிப்பு ? அலட்டிக்காமல் , ஓவராக்ட் செய்யாமல் நம்மோடு சேர்த்து கமலையும் அழ வைத்திருப்பார். அதுவும் ' தலையணை இல்லை  .. நான் இப்போ என்ன பண்றது?'-னு அழுகையை வார்த்தையில் வெளிபடுத்திய விதம் நம் இருதயதுடிப்பை எகிற வைக்கும் காட்சி.




 உங்களுக்கு எதுக்கு சார் அவார்ட் ? அத உங்களுக்கு தர தகுதி சிவாஜிக்கு அப்புறமா இப்போ எவனுக்கும் இல்லை...

-----------------------------------------------------------------------------------------------


கடைசி கார்ன் :


சும்மா மொபைல்ல  பாட்டு மட்டுமே கேட்டுகிட்டு இருக்காதீங்க.. நெட்ல எஸ். வீ. சேகர் , க்ரேசி  மோகன் நாடகம் எல்லாம் இருக்கு .. தரவிறக்கம் பண்ணி கேளுங்க.. புது அனுபவமா இருக்கும் .. என்ன நடந்து போகும்போது தனியா சிரிச்சோம்னா   எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்கதான்  .. அட அதெல்லாம்  ஃப்ரீயா விடுங்க..


கொஞ்சம் நல்ல பசங்கனா ,  சுகிசிவம் , புலவர் கீரன்  சொற்பொழிவும் இருக்கு .. அதையும் கேளுங்க.. வேண்டாட்டி விட்டுருங்க ' உங்க வயசு என்ன அங்கிள் ?'னு கிண்டல் பண்ணகூடாது சொல்லிட்டேன்..


//உங்க வேலைக்கு நடுவில இந்த பாப்கார்ன் சுவையா , கொரிக்க இதமா , ரிலாக்ஸா இருக்குற மாதிரி பீல் பண்ணுனிங்கனா ஒரு பின்னூட்டம் போடுங்க  ..  அப்பப்போ தொடர்ந்து தரேன். இல்லேன்னா சொல்லிடுங்க .. மெசின ஆஃப் பண்ணிடுறேன். //

----------------------------------------------------------------------------------------------

Friday, April 8, 2011

தளபதி ஸ்டாலின் : தேர்தல் டிட் -பிட்ஸ்



பெயர்: மு.க. ஸ்டாலின்
பிறப்பிடம் : சென்னை

படிப்பு : நந்தனம் கல்லூரி ,சென்னை -  இளங்கலை பட்டதாரி

சிறு வயதில் இருந்தே அரசியல் மேல் நாட்டம். காரணம் - தந்தை. மற்றவர்கள் விசயத்தில் அரசியல் அனுபவம் எப்படி என்று கேட்பதை இவரிடம் கேட்க முடியாது .காரணம் - தந்தை ; கழகம். இவர் சிறுவயதில் விளையாட போவது கூட  கழககூட்டமோ , வேறு நிகழ்ச்சியோ இல்லாதபோதுதான்.

தெரிந்த மொழிகள்: தமிழ் மற்றும் ஆங்கிலம்





பேச்சுத்திறன் :
1969 -இல் முதல் திமுக கட்சி பொதுகூட்டத்தில் தன் உரையை ஆரம்பித்தார். கலைஞர் வாரிசு என்று சாணக்யதனத்தில் நிரூபிக்க இன்றுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் மேடைபேச்சிலும் , தமிழ் நடையிலும் செம்மையாக நிருபித்து விட்டார்.  இவரின்  முதல் பிரச்சாரம் சென்னை 99 -ஆம் வார்டு திமுக கபாலிக்கு (சிரிக்காதீங்க பாஸ்)   ஆதரவாக...  1989 -இல் தமிழக சட்டபேரவையில்  பட்ஜெட் தாக்கலில் தன் முதல் பேச்சை பதிவு செய்தார்.

அரசியல் பிரவசேம் :

தன் பதினைந்தாம் வயதில் கோபாலபுரம்  பள்ளியில் தன் வயதொத்த மாணவர்களை ஒன்று திரட்டி  இளைஞர் அணி அமைத்ததில் இருந்து தன் அரசியலுக்கு அடித்தளம் அமைத்தார்.   இவரின் தனி  முன்னேற்றத்திற்காகவே 1973 -இல் கலைஞர் ஆரம்பித்து வைத்த திமுக இளைஞர் அணி , கண்டிப்பாக தன் கட்சிக்கு மிகப் பெரிய பலமாக அமையும் என்று கலைஞரே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அந்த  அளவுக்கு அதை பேணிக்காத்து, செம்மைபடுத்தி  59 வயதிலும் அதன் செயலாளர் பொறுப்பை தானே வைத்து நிர்வகிப்பது ஸ்டாலினின்  தனிச்சிறப்பு.





1975 -இல் மிசா காலத்தின் போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ,ஆற்காடு வீராசாமியும் ,முரசொலி மாறனும் கூட சிறைபட , முதல் குறியாய் போலீசுக்கு கிடைத்தவர் ஸ்டாலின் . போலீஸ் தடியடியும் பூட்ஸ் உதையும் இருட்டறையும் வேப்பெண்ணையும்  உப்பும் கலந்த உணவும் இவரின் சமூக வாழ்வுக்கு ,புகழுக்கு ஆணிவேராய்  கிடைத்த முதல் முகவரி. கலைஞர் மகன் என்பதைத் தாண்டி பல இளைஞர்கள் அன்று இவர் பின் வர மிசா உதவியது.

பின்னர் 1984 -இல் தமிழக சட்டபேரவைத் தேர்தலில்  மிக குறுகிய ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி.  பின் 1989 தொடங்கி  நான்கு முறை தொடர்ந்து சட்டபேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இப்போது தமிழக துணை முதல்வராக இருப்பவர். சென்னை மேயராக ஐந்து வருடம் பொறுப்பு வகித்தவர்.

சாதனை :

சென்னை மேயராக இருந்தபோது பாலங்கள் கட்டி சிங்கார சென்னை ஆக்கியதும் , கடந்த ஐந்து வருடங்கள் கலைஞரின் சில நல்ல திட்டங்களை செம்மையாக நடத்தி வருவது மட்டுமே இவரின் சாதனைகள். மக்களுக்கு இவரின் தனிப்பட்ட சாதனைகள் குறைவு. காரணம் : பேர் தட்டி போகும் கலைஞர்.

ஆனால் கட்சிக்கு இவரின் சாதனைகள் பட்டியலில் அடங்காது. இளைஞர் அணி என்றால் திமுக அலறும். எப்போது எங்கு தளபதி வந்து ஆய்வு செய்வார் என்று எல்லா மாவட்ட செயலாளர்களும் நடுங்கி ஒழுங்காக கட்சி வேலையை செய்ய இவரின் துறுதுறு நடவடிக்கைகள் பேர் போனவை. எடுத்துக்கொண்ட எந்த பொறுப்பாய் இருந்தாலும் சரி , இதை இவர் முடிக்கும் வேகமும் திறனும் கட்சி அறிந்த ஒன்று.  90 -களில் ஆரம்பித்து இன்று வரை கலைஞர்   வார்த்தையும் இவரின் வார்த்தையும் தொண்டர்களுக்கு ஒன்றுதான் - மதுரை தவிர .

இவர் மட்டும் அழகிரி  போல் அட்டுழியம் செய்திருந்தாலோ  அல்ல மு.க.முத்து போல் காணாமல் போயிருந்தாலோ -
  • இரண்டு முறை திமுக பிரசாரம் எடுபடாமல் போயிருக்கும் 
  • கடந்த முறை இன்னும் சில வாக்குகளை விஜயகாந்த் வாங்கியிருப்பார் 
  •   வைகோ முதல்வர் ஆனாலும் ஆகியிருப்பார் அல்லது மதிமுக உருவாகியிருக்காது 
  • கனிமொழி கட்டாய முழுநேர மாநில அரசியலுக்கு வந்திருப்பார் 
  • மாறன் சகோதரர்கள் கழகத்தை இன்னும் பலமாக கைக்குள் அடக்கியிருப்பார்கள்
  • கட்சிக்குள் கோஷ்டி அதிகமாகி கலைஞர் கை மீறி போயிருக்கும் 
  •  ஜெயலலிதா எளிதாக  ஜெயித்திருப்பார். 

 மொத்தத்தில் திமுக கழகம் காணாமல் போயிருக்கும்.
ஸ்டாலின் என்றால் ரஷிய   மொழியில் 'இரும்பு மனிதன் ' என்று பொருள். கட்சிக்கு எத்தனை சோதனை வந்தாலும் ,அத்தனையையும் சமாளித்து  இதுவரை அந்த பெயரைத் தக்க வைத்துள்ளார். அமைதியான ஆரவாரமில்லாத குணம் மூலம் மக்களிடமும் , பொறுமையாக இருப்பதன் மூலம் தந்தையிடமும் , அனுசரித்து போவதன் மூலம் அண்ணனிடமும் இன்று  வரை நல்ல பிள்ளையாகவே இருக்கிறார் ஸ்டாலின்.

இவரின் பதுங்கும்  குணம் நேரம் வரும்போது எப்படி பாயும் என்று இதுவரை யாரும் கணிக்க முடியவில்லை .

பரதன் ஒன்றும் ராமனுக்கு குறைந்தவனில்லை. ஆனால் ராமன் நிழலிலேயே இருந்தனால்தான் அவன் புகழ் மக்களுக்கு அறியப்படவில்லை. அதுபோலத்தான் ஸ்டாலினும். (கவனிக்க  -இது குண பொருத்தம் அல்ல.. சூழ்நிலை பொருத்தம் மட்டுமே. இலக்கியம் கையாளப்பட்டது தற்செயல்.. ).கலைஞர் புகழ் வளையம் மிக பெரியது. அதைத்தாண்டி தனியாக விலகி பார்த்தால் மட்டுமே இவர் திறனும் தெரிய வரும். ஆனால் தந்தை மட்டுமே இப்போது பெரிய பலமாக இருப்பதனால் அந்த பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி இவர் வரமாட்டார். அதுதான் அவருக்கும் நல்லது.




இவர் பொறுமைக்கு பரிசாக அன்பழகனும் ஒதுங்கி விட்டார். அழகிரி அமைதியாய் இருந்தால்  , கலைஞருக்கு அடுத்து இவர்தான்.
இந்த முறை இவரை 234 -இல் ஒன்று என கணக்கு வைப்போம்.

கலைஞரின் நல்ல விசயங்களை மட்டும் எடுத்து ,அவரின் கடந்தகால அரசியல் அனுபவத்தின் தவறுகளை இனம்பிரித்து அறிந்து ,முக்கியமாக கூட இருப்போர் தவறு செய்தால் தயை பார்க்காமல் தூக்கி எறிந்து ,மக்களுக்கு நல்லதை செய்யும்   விஷயத்தை மறக்காமல் , ஜெயலலிதா  'நீ மட்டும் ஒழுங்கா? என்று கேட்காத  அளவுக்கு ஊழல் அற்ற ஆட்சியை தருவார் என்ற நம்பிக்கையை இவர் தந்தால்......
அடுத்த முறை இவர் தலைமைக்கு தலை அசைக்கலாம்.

இந்த முறை ?  முடிவு உங்கள் கையில் ...

Tuesday, April 5, 2011

ஒ தமிழ்த்தாயே - இந்திமாதாவை அறிமுகப்படுத்து ...

சில வருடங்களுக்கு முன்னால் பெங்களூரில் பேருந்தை விட்டு கீழே இறங்கியவுடன் எதிரப்பட்ட ஆட்டோகாரரிடம்   என் முதல் சம்பாஷனை:
'தமிழ் தெரியுமா'

'கொத்தில்லா சார் '

'ஹிந்தி ?'

'போலோ  சாப்'

'இதர் கே.ஆர் புரம் மே, காவேரி வாட்டர் டேன்க் பெஹ்லே ,ஸ்ட்ரைட் சலோ , லெப்ஃட் மே தோடா ஏக் கர் ...'

'உட்காருங்க சார்'

'கித்னே ரூபே ?'

'நூத்தி அம்பது ஆகும் சார்..'

'ஒ..என்னங்க நல்லா தமிழ் பேசறீங்க .. தெரியாதுன்னு சொன்னீங்க ?'

'உள்ள தள்ளி உட்காருங்க சார்.. லக்கேஜ் கீழ விழுந்துட போவுது ..'

'ஏங்க.. சொலுங்க .. ஏன் தமிழ் தெரியாதுன்னு சொன்னீங்க ?'

'வேண்டாம் சார் . விட்டுருங்க'

'எதுனாலும் சொல்லுங்க சார்.. கோவிச்சிக்க மாட்டேன் '

'ஹ்ம்ம் .. இவ்வளவு  கேவலமா ஹிந்தி தெரிஞ்சு வெச்சுகிட்டு அத நான் புரிஞ்சுக்குவேன்னு நீ நம்புறப்போ , என் தமிழ்  எப்படியும் உன்னோட ஹிந்திய விட மட்டமா இருக்க போறதில்லன்னு எனக்கு இப்போதான் நம்பிக்கை வந்துச்சு சார் ' 

'  ஒ.. சரி முன்னாடி பாத்து ஓட்டுங்க..'


இப்படி கேவலப்பட  ஆரம்பிச்சு இன்னும் அது தொடருது ..  இதற்கு ஆதி காரணம் யார் ?  ஏறக்குறைய சராசரி முப்பது வயசுல இருக்குற எந்த தமிழனுக்கும் தமிழ் தவிர வேற மொழியறிவு இல்லாம இருக்குறதுக்கு காரணம் யார்?

'நம்ம அப்பா காலத்துல 'இந்தி எதிர்ப்பு போராட்டம்'னு ஒன்னு பண்ணுனாங்க .. அதுல பத்த வெச்ச வேட்டு இதுன்னு சொல்லறாங்க .. அத சும்மா வேடிக்கை பாத்துட்டு இருந்தவன்தான் இன்னைக்கு வரைக்கும்  பசங்க மேல திணிச்சு அதை சப்போர்ட் பண்றான்.. அத பண்ணுனவங்க பேரப்பிள்ளைகள் எல்லாம் நல்லா ஹிந்தி கத்துகிட்டு   இப்போ மத்திய அமைச்சரவைல இருக்காங்க .. ' அப்படினு ஒரு கோஷ்டி சொல்லிட்டு இருக்கு.. ஆனா அது அந்த தலைமுறைக்கு மட்டும்தான் பொருந்துமே தவிர அதுக்கு அடுத்த தறுதலைமுறைகளான  நமக்கு இல்லை.

அப்போ எங்க இருக்கு இதோட ஆணிவேர்?-னு பாக்கும்போது , எப்போ ஹிந்திய ஆறாவதுல  இருந்து செகண்ட் லாங்குவேஜா தமிழுக்கு ஒரு ஆப்சனா வெச்சாங்களோ அங்கதான் இது தொடங்குது. அப்போ பள்ளிகூடத்துல தமிழும் ஹிந்தியும் நமக்கு ஒரு இம்சைதான் .. ஆனா தமிழ்ல எதோ பார்டர் பாஸ் வாங்கிடுவோம்-னு இருந்த நம்பிக்கை ஹிந்தில இல்லாம போய்டுச்சு..

தப்பு பண்ணிடாங்க தமிழக பாடப்பிரிவு  குழுவினர்.. ஆறாவதுக்கு அப்புறமும் ஹிந்தில பாஸ் ஆனாதான் முழு பாஸ்னு சொல்லியிருந்தா எப்படியோ படிச்சு கொஞ்சமாவது சமாளிக்கிற   அளவுக்கு ஹிந்தி கத்துட்டு இருந்திருப்போம்.  ஹிந்தி எனக்கு புரியலைன்னு நம்ம பசங்க யாராவது புலம்புனா அத ஏத்துக்க முடியாது .. ஏன்னா தமிழ்ல மட்டும் நீ என்ன சுலபமாவா படிச்ச ?

'உரைமுடிவு காண்பா னிளையவ னென்ற
நரைமுடி மக்க லுவப்ப 
நரைமுடித்து சொல்லால் முறைச் செய்தான்
 சோழன் குலவிச்சை கல்லாமல் பாகம் படும் 'னு பல் வலிக்கிற மாதிரி  மனப்பாடம் பண்ணி பாஸ் பண்ணுன நமக்கு ஹிந்தியும் ஒன்னும் பெரிய விசயமா இருந்திருக்க முடியாது.  இருந்திருந்தாலும் படிச்சு தொலைச்சிருந்தா பிரச்சனை இருந்திருக்காது .

ஆக அவனுகளுக்காவது ஹிந்திய அவசியப்பாடமா வைக்கனும்னு புத்தி இருந்திருக்கணும் .. இல்ல நமக்காவது அத படிக்கணும்னு சுயபுத்தி இருந்திருக்கணும்.. ரெண்டுப்பக்கமும் தப்பு பண்ணி ,இப்போ ஹிந்தி பேசறவங்கள கண்டா ஏதோ அவதார் - பேண்டோரா கிரகத்துல இருந்த வந்தமாதிரி ஒதுங்க வேண்டியிருக்கு..

சரி பட்டபடிப்புதான் தமிழர்களை கை விட்டுடுச்சு .. பிடித்தமான படபடிப்பு கை கொடுக்கும்னு பாத்தா அதுவும் கெடயாது.. சத்தியமா 'சோலே'க்கு
அப்புறமா லகான் மட்டும்தான் நம்ம ஊருல தியேட்டர்ல போட்டாங்க.. 
பெங்களூர்ல ஒரு இல்லத்தரசி அசால்ட்டா தமிழ்,தெலுகு,கன்னடம்,ஹிந்தி ,இங்கிலீஷ் பேசுறாங்க.. ஏன்னா அவங்க உபேந்திராவோட 'ஏ' , 'உப்பி தாதா' மட்டும் நோடரதில்ல .. சுப்ரமணியபுரம் , மதராசப்பட்டினமும்   பாக்கறாங்க.. பொம்மரிலுவும் சிம்மாத்ரியும்  'சூடு'றாங்க  ,சீனி கம் , லவ் ஆஜ்கல் -னு 'தேகோ'றாங்க , இன்செப்சன் , சால்ட் எல்லாம் 'See'றாங்க..

ஆனா நம்ம புண்ணியவதிகளும் சரி , ஆபீஸ் முடிஞ்சா நாமளும் சரி , நாதஸ்வரமும்  சூப்பர் சிங்கர் 344 ,ஜாக் ஜாக் ஜாக்பாட் -னு ஒரு குறுகிய வட்டத்துல சுத்த ஆரம்பிப்போம்.த்ரீ இடியட்ஸ்-ஐ கூட நண்பர்கள்னு ரீமேக் பன்னுனாதான் பாப்போம்.   இப்படி இருந்தா ஹிந்தி வந்து என்ன கத்துக்கோ கத்துக்கோனு கெஞ்சுமா..? தமிழ்நாட்ட விட்டு வெளிய வாடான்னு பொறுமையா இருந்து அப்புறம் அது வேலையை ஆரம்பிக்கும்..  

ஆந்தரா பசங்கள மட்டும் பல்ராம் நாயுடுன்னு   கிண்டல் பண்றோமே , அவங்க யாராவது ஹிந்தி தெரியாம இருக்காங்களா ? அதுக்கும் காரணம் இருக்கு ... ஆபீஸ்லயும் சரி வேற எடத்துலயும் சரி - நம்ம சரவணன் , சிவா , காயத்ரி , சுப்ரமணி,பூர்ணிமா  எல்லாம் ஒன்னா சேர்ந்து  சுத்துவோமே தவிர , அட நம்ம கூட சுனில் சிங்கும் ,ஸ்ரீராம்  பெனர்ஜீயும்,  ரேகா த்ரிவேதியும் இருக்காங்களே , அவங்களோட பேசி நாமளும் ஹிந்தி கத்துக்குவோம்னு துளி நெனப்பு கூட வராது..
உனக்கு இருக்குடா ஒரு நாளுன்னு  ஹிந்தி மொறைச்சு பாத்துட்டே இருக்கும்.

இப்போ அடுத்த மாநிலத்துக்கு வந்து அடிபட்டப்பின்னாடி ,யார் ஹிந்தில பேசுனாலும் அது நம்மள பத்தி இருக்குமோனு பயந்து பயந்து  வேற வழியில்லாம ஊருக்கு போகும்போது பழைய புத்தகக்கடைல  'முப்பது நாளில் ஹிந்தி கத்துக்கொள்வது எப்படி?'னு ஏழு கழுத வயசுல வெக்கமே இல்லாம வாங்கி படிக்க ஆரம்பிப்போம்.  அதுக்கு அப்புறம் எந்த அளவுக்கு ஹிந்தி வரும்னு தெரிஞ்சுக்க விருப்பப்பட்டா பதிவோட தொடக்கத்துல இருந்து படிங்க.

இனி புத்தகத்தை நம்புனா ஆகாதுன்னு ஒரு ஹிந்தி பையனை/பொண்ணை புடிச்சு ஹிந்தி கத்துகுடு-ன்னு கேப்போம். அதுவும் நம்ம இங்கிலிஷ்ல பீட்டர் விடுறத பாத்துட்டு ஒரு ஆர்வக்கோளாறுல சொல்லிகொடுக்க ஆரம்பிக்கும்..  அப்புறம் நம்ம வேகத்தை பாத்துட்டு சந்தேகமா ,கொஞ்சம் அட்வான்ஸ்டா போகும்போதுதான் இந்த மந்திக்கு  எதுக்கு இப்போ ஹிந்தி-னு யோசிக்கும்.  இதெல்லாம் ஒரு ஜென்மமானு ஒதுங்கி ஒதுங்கி பாத்துட்டு கடைசில எல்லார் முன்னாடியும் 'உங்களுக்கு சொல்லிகொடுத்து கொடுத்து மேரா ஹிந்தி மர்கயா'னு அவமானப்படுத்தும்.அப்புறம் நாம பாத்தா ஒ நஹி தேகோ தான்..

(பதிவுக்கு சம்பந்தமான ஒரு பிரேக்  - நானாவது தமிழ் அதிகம் தெரிஞ்ச ஒரு மாநிலத்துல இருந்து சமாளிக்கிறேன்.. என் நண்பர் ஒருத்தர்.. பேர் சொல்ல விருப்பமில்லை..'மேரா நாம் கோபிநாத் ஹேய்'னு தன்னை அறிமுக படுத்தகூட தெரியாது..அவர் ஏதோ நம்பிக்கைல புனே போய் மூணு மாசம் ஆகுது.. அவர் படுற பாட நெனைச்சா சிரிப்பும் , கூடிய சீக்கிரம் ஹிந்தி கத்து தொலைச்சுடுவானே-னு நெனச்சா பொறாமையாவும் இருக்கு ) 

இப்படி எல்லாம் கேவலப்படனுமா தமிழர்களே .. உடனே ஹிந்தி கத்துக்கோங்க ..
சமீபத்துல அக்கா பையனோட சேர்ந்து மேட்ச் பாக்கும்போது ' இருபது ரன் எடுத்தா இந்தியா ஜெயிக்கும்'னு சொன்னப்போ 'இருபதுனா  எவ்ளோ மாமா?-னு கேக்கும்போது வருத்தமாத்தான் இருக்கு .. ஆனா வருங்காலத்துல  வெளிய போய் அவமானப்படுறத காட்டிலும்   உள்ளூர்ல தமிழ் தெரியலைன்னு உள்ளுக்குள்ள வேதனைபடுறது பரவாயில்லன்னு தோணுது..

 உள்ளூர்ல தமிழ் தெரியலேன்னா நமக்குதான் அவமானம்.. வெளியூர் போய் ஹிந்தி தெரியலைன்னு முழிச்சா தமிழர்களுக்கே அவமானம்.

பதிவ  படிச்சுட்டு திட்டுற தமிழ்குடிதாங்கிகள் தயைகூர்ந்து தங்கள் கிணறு  தாண்டி வெளியே வந்து மாநில கடலில் மிதந்து ,அனுபவபட்டு பிறகு நன்றாக ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வேண்டுமானாலும் திட்ட வேண்டுகிறேன்..

'தமிழ் வாழ , தமிழர்கள் வாழ ..........ஹிந்தி கத்துகோங்க '