என் முந்தைய இந்த பதிவில் நம் தமிழ் மீனவர்கள் மீது
சிங்களத்தின் தாக்குதல் பற்றி நம் எதிர்ப்பை தெரிவிக்க கடிதம் அனுப்ப
கோரியிருந்தேன்.அதில் கடைசியாக இப்படி கூறியிருந்தேன் - 'இது காந்திய வழி. நம்மால் ஆன முதல் எளிய நடவடிக்கை. அடுத்த போராட்டங்களுக்கு பிறகு இணைந்து கை கொடுப்போம்.'

அடுத்த கட்டத்துக்கான நேரம் வந்து விட்டது. இதுவும் காந்திய வழிதான்.அமைதியாக , ஆர்ப்பாட்டம் இல்லாமல் மெழுகுத்திரி ஏந்தி நம் வேதனையை தெரியப்படுத்துவது . யாருக்கு தெரியப்படுத்துகிறோம் என்பதுதான் கேள்விகுறி.
ஆனால் குறைந்தது உலக மக்கள் உண்மையை அறிய ஏதுவாய் இருக்கும். கடலுக்கு நடுவில் அகப்பட்ட ஒரு இனம் படுகொலைகளாலும் , சித்திரவதைகளாலும் பரிதவிக்க , இடையே கடல் தடுத்து நிற்க , வெகு அருகில் ,அடுத்த கரையில் அந்த இனத்தின் உடன்பிறந்த கூட்டம் அமைதியாக போராட்டம் செய்வதை உலகம் அறியட்டும்.
ஜூன் 26 - எல்லாரும் மெரினாவுக்கு குடும்பத்துடன் வாருங்கள். இயலாதவர்கள் தனித்து வாருங்கள். வர முடியாதவர்கள் இதைப்பற்றி கூடிய வரையில் ஊடகங்களில் (ஆர்குட்டோ, பேஷ்புக்கோ , அல்லது உங்கள் வலைப்பக்கமோ ) பதிவிடுங்கள்.
விடியல் விரைவில் வர வேண்டிக்கொள்வோம்.அதுவரை வெளிச்சம் பெற விளக்கேற்றுவோம்.
No comments:
Post a Comment