உலக தமிழர்களே..சினிமா ஞானம் அதிகம் இருக்குற உங்களுக்கு சவால் விடுற கேள்விகள் கீழ இருக்கு.
எங்கே பதில் சொல்லுங்க பாப்போம்..
பாலா படம்.ரெண்டு ஹீரோ சப்ஜெக்ட். ஒருத்தன் வாயாடி.
இன்னொருத்தன் பலசாலி. என்ன படம் ?
பாலா படம்.ஹீரோ அந்த ஊர் பெரியவருக்கு விசுவாசமா இருப்பான். அவர கொன்ன வில்லன கடைசி சீன்ல ஹீரோ கொடூரமா கொல்லுவான். என்ன படம்?
பாலா படம். அய்யர் ஹீரோயின் பொண்ண பொறுக்கி ஹீரோ கிண்டல் பண்ணி கலாய்ப்பான். அப்புறம் அந்த பொண்ணு அவனையே காதலிப்பா. என்ன படம்?
பாலா படம்.ஊர்க்கு வந்த சினிமா நடிகனோ,நடிகையோ ஹீரோவ புகழ்ந்துட்டு போவாங்க.என்ன படம்?
பாலா படம்.லூசு மாதிரி ஒரு ஹீரோயின் , லொட லொடன்னு பேசிகிட்டு இருப்பா. என்ன படம்?
பாலா படம்.ஹீரோ கூட இருக்குற பொம்பள கஞ்சா இல்லனா பீடி அடிச்சிட்டோ , வித்துட்டோ, கர்ணகொடூரமா பேசிட்டு இருப்பா.என்ன படம்?
மேல கேட்ட கேள்விக்கு எல்லாம் நந்தா இல்லேன்னா பிதாமகன்-னு பதில் சொல்லியிருந்திங்கனா நீங்க இன்னும் 'அவன் இவன்' பாக்கலைன்னு அர்த்தம்.
படம் இன்னும் பாக்கலையேன்னு வருத்தப்பட வேணாம்.இதிலையும் அதே பழைய விஷயத்தைதான் காசு கொடுத்து மறுபடியும் பாக்க போறீங்க.
அவன் இவன்னு படத்துக்கு பேர் வெச்சுட்டு அவன பத்தியும் இவன பத்தியும்..அட எவன பத்தியும் சரியா சொல்லல பாலா.. பேசாம படத்துக்கு ' நான் எடுத்த படங்கள் - திரும்பி பார்க்கிறேன்'னு பேர் வெச்சிருக்கலாம்.
ஆனா நடிக்கிறவங்க எல்லாரும் புதுசுங்க. இந்த படத்துல சத்தியமா லைலா கெடயாது - ஜனனி அய்யர். ராஜ்கிரண் கெடயாது - ஜி.எம்.குமார். சங்கீதா கிடையாது - அம்பிகா.முக்கியமா விக்ரம் கெடையாது - விஷால். இது போதாதான்னு பாலா நெனச்சுடாரு போல.
மக்களை , அவங்க ஏமாற்றத்த சொல்லியும் குத்தமில்லை.
இது பிதாமகன் மாதிரி இருக்கும்னு நெனச்சு வந்தா மறுபடியும் பிதாமகனையே போட்டு காட்டுனா கடுப்பாகுமா இல்லையா?
'அவன் இவன்' காமெடி படம்னு முன்னாடியே சொல்லியிருந்தா இவ்வளவு எதிர்பாத்து ஏமாந்திருக்க மாட்டோம். சொல்லாம இருந்ததும் சரிதான். இது காமெடி படமும் இல்ல.
அப்போ ஆக்சன் படமா பாலா சார் ? அப்படியும் தெரியலயே. சரி முடிவா சொல்லுங்க - என்ன மாதிரி படம் இது ? ..ஐயோ பாவம் அவரே கன்ப்யூஸ் ஆயிட்டாரு.
பிதாமகன்ல விக்ரம் எண்ணெய் வைக்காத செந்தலையோட, காரைப்பல்லோட சுத்தறதுல ஒரு அர்த்தம் இருக்கு. அவர் கேரக்டர் அப்படி. அதுதான் கதையோட அஸ்திவாரமேனு சத்தமா பதில் சொல்ல உரிமை இருக்குற
உங்களுக்கு... இதுல விஷால் ஏன் சார் ஒண்ணரைக் கண்ணோட வராரு , அதுவும் பெண் தன்மை கலந்திருக்கிற மாதிரின்னு கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க ?
உங்க நாலு படமும் நாலு விதமான மக்களைப் பத்தி உருப்படியா காமிச்சுது. படிக்கிற காலத்துல அடாவடியும் காதலும் பண்றவன் கதை , தப்பான அப்பாவால கொலைகாரனா வளர்ந்தவன் கதை , இலங்கை அகதிகளோட வாழ்க்கை, வெட்டியான் மனநிலை , சில்லறைத் திருடன் பொழப்பு, சாமியாரா போனவன் சமூகத்துக்கு திரும்பி வந்தா நடக்குற கதைன்னு ராஜ நடை போட்ட நீங்க எவன் கதைய , யார் மனநிலைய , எந்த சமூக விஷயத்தை சொல்லும்னு எதிர்பார்த்து ஒரு வருஷமா இந்த படம் எடுத்தீங்க?
சரி எதையும் தெளிவா சொல்ல வேணாம் .. லைட்டாவாவது புரிய வெச்சிருக்க முயற்சி பண்ணியிருக்கலாம். என்னமோ போங்கடான்னு விட்டுட்ட மாதிரி இருக்கே பாலா?
தாராளமா அடித்தட்டு மக்கள் கதைய எடுங்க , ஆனா அத மட்டுமே எடுத்துட்டு இருந்தீங்கனா ஓவர்டோஸ் ஆகி , லாலாலா விக்ரமனுக்கும், செண்டிமெண்ட் சேரனுக்கும் நடந்ததுதான் உங்களுக்கும் நடக்கும். அப்புறம் நீங்களா மாறணும்னு நெனைச்சு உண்மையா வேற மாதிரி படம் கொடுத்தாலும் , ஏதோ செயற்கையா பண்ற மாதிரி இருக்கும். ஏற்கனவே மத்தவங்களுக்கு நடந்த கதைதான்.
உங்க குருநாதர் மட்டும் என்ன மூன்றாம் பிறை ,வீடு, மறுபடியும்-னு அழுகை படங்களாவேவா கொடுத்தாரு? ரெட்டைவால் குருவியும் , சதிலீலவதியும் இடையில கொடுத்து வெரைட்டி காமிச்சாரு. உங்களுக்கு தெரியாதா என்ன?
விஷாலுக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்க பாலா. உசுர கொடுத்து நடிச்சிருக்காரு. ஆனா பாவம்
ஏன் ? எதுக்குன்னு கேள்வி கேட்காம நடிச்சிருக்காரு. அவருக்காவது அவர் கேரக்டர் பத்தி
தெளிவா சொன்னிங்களா பாலா? அவருக்காவது புரிஞ்சுதா?
சரி அவர விடுங்க..இந்த படம் யாருக்கு பிரயோஜனமோ இல்லையோ அவருக்கு இருக்கு.இத வெச்சு இன்னும் ஒரு வருஷம் ஓட்டிடுவாரு.
பாலா..உங்க நாலு படங்களும் அருமையான படங்கள்தான்.ஆனா அதுவே நாலு பக்கமும் நின்னுகிட்டு உங்க கற்பனையை தடுக்குது. அதைத்தாண்டி வாங்க.
ஷங்கர்கிட்ட கூட கதை கேட்டபின்னாடிதான் நடிக்க வர சில நடிகர்கள் ,உங்க குரலுக்கு மட்டும்தான் போட்டத போட்டபடி வந்து நிப்பாங்க. அதை காப்பாத்துங்க.
யாரும் உங்க மேல கோபப்படல பாலா.. அப்படியே கோபபட்டாலும் அதுல தப்பு இல்ல... காரணம் நல்ல படங்கள கொடுங்க சார்-னு நாங்க பேரரசுகிட்ட கேட்க முடியாது.கேட்கவும் கூடாது. உங்ககிட்டதான் அப்படி உரிமையா கேட்க முடியும். நீங்களும் கை விட்டுடீங்கனா ,அப்புறம் எங்க கதைய யார் படமா எடுப்பாங்க ?
இது வீழ்ச்சி இல்ல பாலா. வெறும் திருஷ்டிதான். திரும்பி பாக்காம வேகமா அடுத்த நல்ல கதைக்கு வந்துடுங்க..
அவன் இவன் - பாக்க வேண்டிய படம்னும் இல்ல. பாக்க கூடாத படம்னும் இல்ல..ஆனா உங்ககிட்ட இருந்து வரக்கூடாத படம்.இது மாதிரி படம் கொடுக்க/கெடுக்க ஆயிரம் பேர் இருக்காங்க.
ஆனா எங்கள இழுக்கற பாலா-ங்கற அந்த காந்தம் நீங்க ஒருத்தருதான பாலா!!!!
6 comments:
ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க .பாலா கேட்டுக்குவாரா ?
அடுத்த படத்தில் தெரிந்து விடும் நண்பரே..
:)
கை கொடுங்கள் நண்பரே...
அவன் இவன் இயக்கியது எவன்?
என்ற தலைப்பில் நானும் ஒரு பதிவிட்டுள்ளேன்.
நான் காரமாக எரிந்து கொதித்து எழுதியதை விட அற்ப்புதமாக எழுதியுள்ளீர்கள்.
ஆனால் இருவருமே ஒரு புள்ளியில் இணைகிறோம்.
வாருங்கள் என் வலைப்பக்கத்துக்கு..ப்ளீஸ்..
நண்பர் உலக சினிமா ரசிகன் அவர்களே,
உங்கள் வலைப்பக்கம் மிக அருமை. தேர்ந்த நடை. நல்ல ஒரு எழுத்து.நல்ல தோழன் கிடைத்த மகிழ்ச்சி எனக்கு. இனி உங்கள் பக்கங்களின் தின வாசகன் நான். :)
நான் இன்னும் இந்த படத்தை பார்க்கல அசோக். படத்தை பார்த்துட்டு என் கருத்தை சொல்லட்டுமா?
ஒரு ரசிகனின் நேர்மையான விமர்சனம்.
Post a Comment