Friday, July 15, 2011

வேங்கை - வேகம் இல்லை..

ஹரிக்கு இது பதினோராவது படம்.. சரியாதான் இருக்கு.. இது அவருக்கு பத்தோட பதினொன்னு.. அத்தோட இது ஒன்னு ..
 
 

சிங்கம் படம் முடிந்ததும் ஹரியின் அடுத்த படத்திற்கான ஆரம்ப வேலை நாள் இப்படிதான் இருந்திருக்கும்..

'பிரகாஷ்ராஜ் சார்..மேக்கப்ப களைச்சுடாதீங்க.. அப்படியே
இருங்க.. இங்க வாப்பா.. மீசையை ரெண்டு பக்கமும் இன்னும்  பெருசா ஒட்டு..'

'ராதாரவிய அனுப்பிடு.. அப்பா கேரக்டருக்கு நீ போயி  கோவில் பட கெட்டப்ல  ராஜ்கிரண் சார கூட்டிட்டு வா..'

'தமன்னா மேடம்.. சாமி பட சிடி போட்டு பாருங்க.. த்ரிஷா கேரக்டர்தான் நீங்க பண்ண போறீங்க '

' இந்த படத்துக்கு ஹீரோ யார போட்டுருக்கோம். தனுஷா.. ஹ்ம்ம் சரி சண்டைக்கு நம்ம பழைய பட அரிவாள் சண்டை கிளிப்பிங் எல்லாம் போட்டு காமி..என்ன கேரக்டர்னு கேட்டார்னா ஐயா பட சரத் இல்லேன்னா 'வேல்' பட சூர்யா கேரக்டர்னு சொல்லு.. 

பைட் மாஸ்டர்ட்ட சொல்லி ஒல்லியான அடியாளுகள மட்டும் போட சொல்லிடு..மரத்துல மளமளன்னு தாவி ஏறுற சீன மட்டும் வெச்சுரு..அந்த ஒரே அடில பெரிய ஆளுகள அடிக்கிற  சீன அடுத்த சூர்யா படத்துல வெச்சுக்குவோம்.'

---------------------------------------------------

'தனுஷ் அப்பா ராஜ்கிரண்ணா ? என்னண்ணே  பொருத்தமே இல்ல?'

'அட போடா.. லாஜிக் எல்லாம் பாத்தா தனுஷுக்கு அப்பா வேசத்துக்கு மனோபாலாவும் , பட்டிமன்ற ராஜாவும்தான் போடணும்..எல்லாம் சரியா வரும்.. போ'
-------------------------------------------------

காமெடி யாரு?

'யார வேணும்னாலும் போடு.. படத்துக்கு வேகத்துக்கு நடுவுல கொஞ்சம் ஜனங்க தம் அடிக்க போறதுக்கு வசதியா இருக்கணும்..அது போதும்.'
கதாபாத்திரங்கள் என்னண்ணே...?

'அத பத்தி கவலை இல்ல.. நம்ம படத்துல நாலு பேர்தான் முக்கியம்.. ஹீரோ,ஊர் பெரியவரா ஹீரோ அப்பா,வில்லன்,ஹீரோயின்.. இவ்வளவுதான்.. ரெண்டு பக்கமும் அடியாளுகளா அந்த அருவாள் கோஷ்டிகள அப்படியே வெச்சுக்கலாம்..'
----------------------------------------------

அப்ப கதை.?

'அதுவும் பெரிய விஷயம் இல்லைடா..எல்லாரும் எதாவது ஒரு வட்டார பாஷை பேசணும். ஹீரோவுக்கு வில்லனுக்கும் நடக்கற சண்டை.. ஆனா நம்ம வித்தியாசம் எங்கேன்னா ரெண்டு பேருக்கும் நடுவுல இண்டர்வல் அப்ப ஒரு சவால் வரும்..நமக்கு ஒரே குறிக்கோள் , படம் வேகமா போற மாதிரி இருக்கணும்..அதுக்கு டைம் பாம்  கவுண்ட்டவுன் மாதிரி  ஒரு கிளைமாக்ஸ் நாள் வெச்சுக்கணும்.. சாமி படத்துல எழு நாள் சொன்னோம்மா ? அருள் படத்துல எலெக்சன் வரைக்கும்னு சொன்னோமா ? அப்போ இந்த படத்துல முப்பது நாள் வெச்சுக்கலாம்.

ஹீரோவ இடைல அப்பப்போ ஓட விட்டு அத
பாஸ்ட் பார்வர்ட் பண்ணி  காமிக்கணும்.. வில்லனோ ஹீரோவோ எதாவது பிளான் பண்ணும்போது அத எடிட்டிங்ல அந்த சீன டக்கு டக்குனு காமிக்கிற மாதிரி இருக்கணும்..ராஜேஷ்குமார் நாவல்ல வர மாதிரி, சின்ன சின்ன க்ளுவ வெச்சு  ஹீரோ ,வில்லன் பிளான்ன கண்டுபிடிச்சு முறியடிக்கனும். '

இவ்வளோதான்டா.. போய் சீன டெவெலப்  பண்ணு..
------------------------------------------

இது தனுஷ்க்கு கூடுதலா ஒரு படம்.. மத்தபடி எதுவும் இல்ல..சராசரியான மசாலா படம்.. ஆனா ஹிட் ஆகாது..
2  மணி நேரம் வெட்டியா இருந்தா பாக்கறதுல தப்பில்லை...


வேங்கை - இயக்கம்  ஹரி.. அதோட சரி..

7 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

உண்மை படம் வேஸ்ட்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று எனது வலையில் ...

மூன்று… மூனு… திரி(Three)… தீன்..

தங்கம்பழனி said...

வேங்கையை பூனையாக்கிட்டீங்களே அப்பூ..!!

தங்கம்பழனி said...

அப்படியே நம்ம வூட்டடாண்ட வந்துட்டு பூயிடு நைனா..!

இணைப்பு;

http://thangampalani.blogspot.com/2011/07/life-style-articlestory-of-peng-shuilin.html

தலைப்பு: கால்கள் இல்லா மனிதர் ஏறிய வெற்றிப் படிகள்...!!

பிடிச்சிருந்தா ஓட்டுப் போடுங்க.. பிடிக்காட்டியும் ஓட்டுப் போடுங்க.. என்ன இப்போ?

karurkirukkan said...

really super ,fatastice writting

Jayadev Das said...

நல்ல விமர்சனம்!!

இராஜராஜேஸ்வரி said...

உங்க விமர்சனமே போதும். படம் பார்த்த சலிப்பு வந்துவிட்டது. நன்றி. படத்துப்பக்கம் போகாமல் காப்பாற்றியதற்கு.

Post a Comment