Wednesday, July 13, 2011

பாப்கார்ன் பாக்கெட் - 20110713
ஒரு திருடன் மாட்டிகிட்டானா  'நான் திருடல ..திருடல...'ன்னுதான்  முதல கத்துவான். ஆனா  பெரிய திருடன் மாட்டிகிட்டானா கொஞ்சம் நாகரீகமா கத்துவான்.
சரி இந்த டயலாக்   யாரு சொன்னதுன்னு சொல்லுங்க..

'ஆளும் கட்சி தேவை இல்லாமல் , எங்கள் கட்சி மீது அடுக்கடுக்காக புகார்களை சுமத்தி வருகிறது. எங்கள் கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இப்படி வழக்குகளை எங்கள் மீது திணிக்கிறார்கள். நாங்கள் குற்றமற்றவர்கள். இதை கண்டிப்பாக நிரூபிப்போம். எந்த வழக்கையும் சட்டரீதியாக சந்திக்க தயார்.'

யாரு சொன்னது ?

விவரம் தெரியாதவங்க டக்குனு தளபதின்னு சொல்லிடுவாங்க.

புத்திசாலிங்க குழம்பிடுவாங்க.
காரணம் ஒவ்வொரு தடவையும் ஆட்சி மாறும்போது மாஜி  ஆளும்கட்சி பிரமுகர்கள் 
இப்படிதான் சொல்லுவாங்க.

அப்போ அம்மா சொல்லிட்டு இருந்தாங்க.. இப்போ தளபதி.. நாளைக்கே காட்சி மாறும்..கூட்டணி கவுந்தா கேப்டன் கூட இததான் சொல்லுவாரு.


'வாழ்கையின் தத்துவம் ஒன்றுதான் - அதை சொல்லும் சமயங்கள் வேறு வேறு' என்பது போல்.. இதுதான் டெம்ப்ளேட் டயலாக்; சொல்லும் பிரமுகர்களும் நேரங்களும் வேறு வேறுங்கறதுதான்   உண்மை.
ஆனாலும் தளபதி இப்படி ஒவ்வொரு எடத்துலயும்
ஜீப்ப விட்டு இறங்குனதும் இதேயே ஒப்பிகிறது உள்ள இருக்குற உச்சகட்ட பயத்தோட உச்சகட்ட அடையாளம்.
 
இப்படி நடுங்காம , இதுக்கெல்லாம் அசராம எதுவுமே பண்ணாத மாதிரி தைரியமா சொல்லுறதுக்கு அம்மாதான் கரெக்ட். கலைஞருக்கும் எனக்கும் இந்த காரணத்துக்காக அம்மாவை ரொம்ப  பிடிக்கும்..ஹிஹிஹி..
--------------------------------------------------------------------------

நில ஆக்கிரமிப்பு வழக்குகளை விசாரிக்க அம்மா கொடுத்த  அறிக்கை ரெம்ப விவரமா  இருந்துது..2006-க்கு பிறகு நடந்த  ஆக்கிரமிப்பு பத்தி மட்டும் பாருங்கப்பா-ன்னு மிக சாதுர்யமாக அறிக்கை விட்டு தூள் கிளப்பியிருக்காங்க..

இது காமெடினா , இத விட பெரிய காமெடி  கலைஞரோட எதிர் அறிக்கைதான். ' நாங்க எதுவும் செய்யலை.. முடிஞ்சத பண்ணுங்க'-ன்னு சொல்லுவாருனு  பாத்தா '2006-க்கு முன்னாடி நடந்த ஆக்கிரமிப்பு பத்தியும் அலசுங்க'ன்னு சொல்லியிருக்காரு... 

இந்த போட்டி எப்போ முடியுமோ தெரியல..உண்மையா விசாரணை நடந்தா , ஆளும் கட்சி , ஆண்ட கட்சி எல்லாரும் மாட்டுவாங்க.. 'சரி போனா எல்லாரும் ஒண்ணா   போவோம்'-ன்னு தாத்தா நினைச்சுட்டார் போல.. அது நடந்தா  நல்லதுதான்..

யாராவது   புதுசா வருவாங்க - புதுசா கொள்ளையடிக்க ..

---------------------------------------------------

ரபி பெர்னார்ட் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகிறார். அதிமுக சார்பில் அவைக்கு செல்லும் பெர்னார்ட் மிகுந்த திறமைசாலி.

 சன் டிவியில் தன் பயணத்தை ஆரம்பித்த அவர் ,இப்போது முன்னணியில் இருக்கும் பல  பேச்சாளர்களுக்கு, அரசியல் விமர்சகர்களுக்கு குரு. ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக ஜெயா டிவியில் அடக்கி வாசித்துக் கொண்டிருந்தார்.

 பல காலம் முன்னால் சன் டிவியில் , அரசியல் பிரமுகர்களை   தன் கேள்விகளால் விளாசிக் கொண்டிருந்த ரபிக்கு ஜெயலலிதாவை பேட்டி எடுக்கும் ஒரு வாய்ப்பு  கிடைத்தது.     
 'ஜெயிலுக்குள் போனதும் என்ன செய்தீர்கள் ? அழுதீர்களா ? ' என்றெல்லாம் கேள்வி கேட்ட ரபி பின்னால் அமைதியாக்கப்பட்டார். சன் டிவியிலிருந்து விலகினார்.

ஜெயா டிவியில் இத்தனைக் காலம் பணியாற்றிய பிறகு , கடந்த தேர்தலில் அம்மா எங்கெல்லாம் சென்றாரோ எங்கு நேர்  வர்ணனை செய்து அதிமுகவினரை ஈர்த்தார். 

இப்போது அரசியலில் நேரடியான  முதலடி எடுத்து வைக்கிறார்.

இவர் திறமை மீது யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் இப்படி எல்லா புத்திசாலிகளும் எதாவது கட்சியின்  நிழலில் தங்கள் சுய அடையாளத்தை தொலைத்து  விடுகிறார்களே என்பதே வருத்தமாக உள்ளது. 
அதனால்தான் நடுநிலையான அரசியல் விமர்சகர்கள் குறைந்து வருகிறார்கள்.

அதிமுகவுக்கு நல்ல ஒரு  எம்.பி கிடைத்து விட்டார். தமிழகத்துக்கு இன்னொரு சோ கிடைக்கும் வாய்ப்பு போய் விட்டது.

வாழ்த்துக்கள் ரபி.
------------------------------------------------------------------------------------

ஆர்குட்டை இப்போதுதான் ஒதுக்கி வைத்து ,  பேஸ்புக்கில் எல்லா நண்பர்களையும் தேடி கண்டுபிடித்து இன்வைட் பண்ணி 
'அப்பாடா' என்று அசந்திருக்கும் வேளையில் , கூகிள் ப்ளஸ்  என்று புதிதாக ஒன்றைக் கொண்டு   வந்து உயிரை வாங்குகிறார்கள்.

மூன்று நாளில் எக்கச்சக்க இன்வைட்.என்னைப் பொறுத்த வரை  உருப்படியாக எதாவது ஒரு சோசியல் நெட்வொர்க்கில் இருந்தாலே போதுமானது. இங்கே   கொஞ்சம் அங்கே கொஞ்சமென்று இருந்தால் சரியாக இருக்காது.. ஆனால் ஆர்குட் அவுட்டேட் ஆகி காலமானதால் , பேஸ்புக்கில் நிரந்தரமாக இருக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன்..


இப்போதே ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை பேஸ்புக்கை Refresh செய்து பார்க்கும் ஒரு வித 'மேனியா'விற்கு தள்ளப்பட்டு விட்டோம் என்பது நிதர்சனம்.
இப்படியே போனால் இது போன்ற  ஏழு எட்டு  இணையதளங்கள் மட்டுமே  மாறி   மாறி திரையில் ஓடும்.

மூன்று மெயில் அனுப்பியும் பதில் அனுப்பாத என் நண்பனின் நண்பனை (சத்தியமா நான் இல்லீங்க ...) , அவன் மானேஜர்  வேறு வழியில்லாமல் பேஸ்புக் வந்து 'Friend Request' அனுப்பி பின் கெஞ்சி கூத்தாடி வேலை செய்ய அழைத்த கூத்து  எல்லாம் நடந்திருக்கிறது.. 

இனியும் ஒரு முறை நண்பர்களை தேடி கண்டுபிடிப்பது என்றால்   ' திரும்பவும் முதலிருந்தா......? ' ரக சலிப்புதான் வரும்..
-----------------------------------------------------------------

நூறாவது சதத்திற்காக தயாராகி விட்டார் சச்சின். இன்னும் இரண்டே  இரண்டு  சதங்கள் அடித்து விட்டால் , என் அன்றாட வேண்டுதலில் ஒரு வேண்டுதல் நிறைவேறும்.

மொட்டை போடுவதில் தொடங்கி கிடா வெட்டி விருந்து வைப்பது வரை நிறைய நண்பர்கள் நிறைய விதங்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கடந்த இரண்டு வருடமாக இந்திய அணிக்கு நல்லது மட்டுமே நடந்துக் கொண்டிருக்கிறது என்பது  மகிழ்ச்சியான விஷயம்.
இது மட்டும்தான் பாக்கி.கவலைப்பட எத்தனையோ விஷயங்கள் ஒவ்வொரு இந்தியன்  மனதிலும் இருந்தாலும்
எல்லாரும் எல்லாவற்றையும் மறந்து பார்ப்பது சச்சின் ஆட்டம்  மட்டுமே. ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர் பீட்டர் ரீபோக்  சொன்னது போல் 'This Genius can stop time in India!'
  
எல்லார் வேண்டுதலும் நிறைவேற எல்லாம் வல்ல சச்சினாண்டவரை கும்பிடுவோம்.

தோனிக்கு லிம்கா சாதனை புத்தகத்தில் பேர் இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள். 20 -20  மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை என இரண்டுமே வென்ற ஒரே கேப்டன் தோனி என்பதால் இந்த பெருமை.
---------------------------------------------------------------------

நடிகைகள் பற்றிய அசட்டு ஜோக்குகள் சிலசமயம் அதிக கற்பனையோ என்று எண்ணியிருக்கிறேன். ஆனால் தற்செயலாக இந்த வீடியோ கிளிப்பைப் பார்த்ததுமே அவை உண்மைதான் என்று தோன்றுகிறது.. 'நடிக்கவே வர மாட்டேன் ' என்று இங்கு ஒருத்தர் சொல்லியிருக்காங்கப்பா..'Itzzz not my cup of tea'.... ஐயோ ராமா..
-------------------------------------------------------------------

7 comments:

பாலா said...

மொரு மொரு சுவையான பாப்கார்ன். அரசியல் வாசனை கொஞ்சம் தூக்கல்.

அபிமன்யு said...

நன்றி பாலா..தற்போதைய அரசியல் நிலைமை அப்படி..

கறுவல் said...

சுவையான சோளப்பொரி தான்!!

அந்த பொண்ணு யாரு???

அபிமன்யு said...

நண்பர் கறுவலே ... இவ்வளவு பொதிகையாக உள்ளீரே அய்யா .. அது த்ரிஷா.. முன்னணி தமிழ் நடிகை.. :)

கறுவல் said...

அப்பிடியா??? ஹா.....ஹா........ நமக்கு திரிழ்ஹா...சாரி வாய் கொழறுது... என்னா பெயர் அது... ஆ!! திரிஷா ன்னாலே அலர்ஜி சகா அதான்!! )))))))))))))

இராஜராஜேஸ்வரி said...

வாழ்கையின் தத்துவம் ஒன்றுதான் - அதை சொல்லும் சமயங்கள் வேறு வேறு'//

அருமையான சுவையான பாப்கார்ன் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Kutty said...

அழகான பதிவு!! ரசித்தோம்!! பேஸ்புக் பற்றிய அலசல் அருமை!!

Post a Comment