Monday, March 28, 2011

வடிவேலு - அரசியலில் இன்னும் பயிற்சி வேண்டுமோ ???!!!


'அரசியல்  நாகரீகம்' அதிகம் உள்ள கட்சி என்று மதிக்கப்பட்ட திமுக மீது வைத்திருந்த கடைசி அபிமானமும் இப்போது மக்களுக்கு கரைந்து போயிருக்கும். காரணம் - தனி இருவரின் தனிப்பட்ட பகையை தங்கள் கட்சிக்கு ஆதரவாக , ஓட்டாக மாற்ற நினைத்து இப்போது அவர்கள் செய்யும் அநாகரீகமான செயல். 




கட்சியை இன்று ஆரம்பித்தாரோ , நேற்று ஆரம்பித்தாரோ அதை விடுங்கள் .. ஒரு கட்சியின் தலைவரை அடிப்படை நாகரீகம் கூட இன்றி ஏக வசனத்தில் எதிரியை பேச வைத்து , அதை அரசியலில் முன்னணி தலைவர்களாக இருக்கும் மாண்புமிகு கலைஞர், மானமிகு வீரமணி , ஸ்டாலின் போன்றோரும் அனுமதித்த மிக கேவலமான ஒரு நடத்தை திருவாரூரில் நடந்துள்ளது. 

சில கேள்விகள் :

  • நித்யானந்தா காட்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப கண்டனம் தெரிவித்து அபிமானம் பெற்ற தாத்தா கலைஞர் , இதை மட்டும் ஏற்றுக்கொண்டது என்ன வகை நியாயம் ?
  • காடுவெட்டி குரு அநாகரீகமாக தன்னைப்பற்றி பேச அதை மருத்துவர் அய்யா வேடிக்கை பார்த்தார் என்று விமர்சித்த கலைஞர் மற்றும் கழகம் , இப்போது அதே வேலையை விஜயகாந்துக்கு செய்வது என்ன வகையில் சேர்ந்தது ? 
  • 'நான் பெரியார் பள்ளியில் படித்தவன் .. அண்ணாவின் அரிச்சுவடியை பின்பற்றுபவன் ' என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் கலைஞர் , இந்த செயலை அதே பெரியாரும் அண்ணாவும் கைதட்டி அங்கீகாரப்படுத்துவார்கள் என்று எண்ணியது என்ன வகை எதிர்பார்ப்பு ?
  • 'வைகோவை ஒத்தைக்கு ஒத்தை வரியா' என்று கேட்க எனக்கும் தெரியும் .. ஆனால் அவ்வளவு தாழ்ந்து போக தலைவர் எனக்கு கற்றுகொடுக்கவில்லை' என்று சொன்ன தயாநிதி மாறன் இதை மட்டும் கைதட்டி விசில் அடிக்காத குறையாக பாராட்டுவது என்ன வகை நடவடிக்கை ?
  • கிரிக்கெட்டிலும் சரி , எந்த ஒரு விளையாட்டிலும் சரி , எதிரி ஜெயித்து விடுவான் என்று கடைசியில் பயந்தால் மட்டுமே , தன் அணியின் திறமை மீது நம்பிக்கை குன்றினால் மட்டுமே தனி மனித அவமதிப்பை உபயோகப்படுத்தி எதிராளியை கோபப்பட செய்து அதன் மூலம் வெற்றி பெற முயல்வதுண்டு. இதை இந்த பிரசாரத்தின் தொடக்கத்திலேயே ஆரம்பித்து விட்டீர்களே உடன்பிறப்புகளே ? பயந்து விட்டீர்களா ? 

சரி இந்த கேள்விகள் எதற்கும் பதில் சொல்ல உங்களுக்கு ஏப்ரல் 13 வரை நேரமிருக்காது.இனி வடிவேலை சந்தித்து சில வினாக்கள் :




  • உங்கள் தீவிர ரசிகன் நான் . எப்போது நீங்கள் பேசினாலும் சிரிப்பு எங்களை மீறி சீறிக்கொண்டு வரும்.  உங்களைப் பார்த்தாலேயே புன்னகைக்க ஆரம்பிப்போம்.அதுதான் உங்கள் வெற்றி. ஆனால் இப்போது உங்களை பார்த்தால் பரிதாபமும் கோபமும் வருகிறது. நீங்கள் பேசினால் எரிச்சல் அடைகிறோம். இது உங்களுக்கு தேவையா ?
ஒரு படம் தோல்வியடையும் சாத்தியகூறு இருந்தால் நீங்கள் எப்பாடுப்பட்டாவது உங்கள் நகைச்சுவையை பயன்படுத்தி அந்த தோல்வியை சரிக்கட்ட முயல்வீர்கள் என்று எங்களுக்கு தெரியும். இப்போது அதைதான் திமுக கூட்டணிக்கும் செய்ய முயற்சி செய்கிறீர்களோ என்று நினைக்க தோன்றுகிறது. 

  • கொஞ்ச காலம் முன் ராமேஸ்வரத்தில் ஈழ மக்களுக்கு குரல் கொடுக்க இயக்குனர்கள் சென்று அவர்கள் நலன் பற்றி பேசினால் , அங்கும் சென்று நீங்கள் மக்களுக்கு குரல் கொடுக்காமல் , அதிக நேரம் உங்களின் இந்த தனிப்பட்ட பிரச்சனையை பேசி எல்லோரையும் நெளிய செய்தீர்கள் . தவறில்லையா அது ? 

  • ஏறத்தாழ எல்லா நேர்காணலிலும் சொல்வீர்கள்- என்னை ஆதரித்து வாழ்வு கொடுத்த மக்களுக்கு நான் எதாவது செய்ய வேண்டும் என்று . அது சத்தியமாக இது அல்ல வேலு .சரி ஏதோ அரசியலோ ,அல்லது தனியாகவோ சமூகத்தொண்டில் ஈடுபட்டு மக்களுக்கு உதுவுவீர்கள் என்று நினைத்தால் அப்படி ஏதும் செய்யாமல் என்ன இது அச்சுபிச்சுதனம் ? 

உங்களுக்கு தனிப்பட்ட எதிரிகள் எவ்வளவோ இருக்கலாம் .அது உங்கள் பிரச்சனை. அதை எங்கள் தலையில் கொண்டு வந்து சுமத்தி பழிதீர்க்க நினைப்பது சிறுபிள்ளைத்தனம் அல்லவா ? . உங்களக்கு புரியும்படி சொல்கிறேன். உங்கள் மிக நெருங்கிய நண்பர் வந்து ' நேற்று விஜய் படம் பார்க்க தியேட்டர் போயிருந்தேன். அங்கே டிக்கெட் தராமல் என்னை அவமானப்படுத்தி விட்டார்கள். விஜய் ரசிகர்களும் என்னை கண்டுகொள்ளவில்லை. ஆகையால் நீ இனி விஜய் படத்தில் நடிக்காதே..' என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள் ' என்னையா சின்னபுளத்தனமா இருக்கு. உனக்கும் அவனுக்கும் பிரச்சனைனா என்னை எதுக்குயா இடையில இழுக்குற ' என்று உங்கள் ட்ரேட்மார்க் டயலாக்கில் கேட்பீர்கள்தானே? அதைதான் நாங்களும் உங்களிடம் கேட்கிறோம்.    

நீங்கள் மக்களுக்கு நல்லதை எடுத்துகூற வந்துள்ளேன் என்று சொல்வது உண்மையென்றால் திமுக சாதனைகளை மட்டும் பேசியிருக்க வேண்டும். இதை அல்ல. 


  • சரி , ஒரு வேலை திமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் வேலு ? அம்மாவுடன் மேடையில் இதே கேள்விகளை அங்கே இருந்து கேட்பீர்களா? 

  • மிக முக்கியமான கேள்வி ..திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் .. விஜயகாந்தை தோற்கடியுங்கள் என்று மட்டும் மிக கவனமாக பேசுகிறீர்களே .. எங்காவது ஒரு இடத்தில் கூட அம்மாவை பற்றியோ , அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் என்றும் பேசுவது இல்லையே ? ஏன்? ஒரு வேளை அதிமுக ஜெயித்தால் 'அம்மா ..எனக்கு எதிரி கேப்டன்தான்.. உங்களை நான் அப்படி ஒருபோதும் எண்ணியதில்லை தாயே..' என்று அந்தர்பல்டி அடிக்க ஏதுவாக இருக்கும் என்றுதானே ?( ரஜினி பாமகவுக்கு செய்து பிறகு கலைஞரிடம் சொன்னது போல .. )

  • வார்த்தைக்கு வார்த்தை நேற்று கட்சி தொடங்கி மக்களுக்கு ஏதும் செய்யாமல் நாளை முதல்வர் ஆக ஆசைபடும் ஆள் என்று விஜயகாந்தை கேலி பேசுகிறீர்களே ? அவர் காலங்காலமாக மக்களுக்கு நிறைய உதவி செய்து அதன் பிறகு அரசியலில் குதித்துள்ளார் என்பது ஊரறிந்த உண்மை . நீங்கள் என்ன செய்து விட்டு  இப்போது எங்களிடம் எந்த உரிமையில் பேசுகிறீர்கள்..?

  • சரி விஜயகாந்த் பகையை முடிக்க எங்களை பயன்படுத்தும் நீங்கள் நாளை சிங்கமுத்து அரசியலுக்கு வந்தால் அதற்கும் எங்களை இழுப்பீர்களா? எங்களுக்கு வேறு வேலை இல்லையா ? 

உண்மையிலேயே நீங்கள் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் வந்திருந்தால் வரவேற்றிருப்போம்.இனியும் வரவேற்போம். ஆனால் இது சகுனித்தனம். தனிப்பகை. துரியோதனன் வஞ்சம். விஜயகாந்த் உண்மையிலயே உங்களுக்கு அநீதி செய்திருந்தால் அதை தனியாக போராடி பதிலடி கொடுங்கள். இது பொது இடம். இங்கு வேண்டாம். 


உங்களுக்கு அதீத திறமை இருக்கிறது வடிவேல் சார் .. அது திரையில் நடிக்கும்போது எடுபடும். அரசியலிலும் பொதுமக்கள் வாழ்க்கையிலும் அல்ல ..
ஒரு முறை தவறி விட்டீர்கள். இனி திருத்தி கொள்ளுங்கள். ஆட்சி மாறி காட்சி மாறினால் நிலைமை என்னவாகும் என்று யோசித்து கொள்ளுங்கள்.  மேடையில் கை தட்டியவர்கள் , உதவிக்கு வரமாட்டார்கள். ஸ்பெக்ட்ரம் உட்பட பல வழக்குகளில் அலைய போகும் அவர்களுக்கு உங்கள் குரல் கேட்காது.  

20 comments:

Prakash said...

Before commenting on Vadiavelu, Pls check how Vijaykath speaks in meetings. For Vijaykath, this type of counter speech is required.

ஒருவகையில வடிவேலு பேசறதும் சரிதான், விஜயகாந்த் மட்டும் மத்தவங்கள தாறுமாறா பேசலையா என்ன? அவரு மத்தவங்கள பேசும்போது மட்டும் குளுகுளுன்னு இருக்குமா?

Jegan said...

wonderful.. :)

Guna said...

vadivelu - naaaya kulipaatina palamoli than crct

Anonymous said...

YEN ITHE KELVIYAI NEENGA VIJAYKANTH A PAARTTHU KEKKA KUDATHU?

Hope said...

ஸ்பெக்ட்ரம் உட்பட பல வழக்குகளில் அலைய போகும் அவர்களுக்கு உங்கள் குரல் கேட்காது. - 100% True.

Anonymous said...

நீங்க அ.தி.மு.க. ஜால்ராதான !?!?!?

Jayadev Das said...

\\'அரசியல் நாகரீகம்' அதிகம் உள்ள கட்சி என்று மதிக்கப்பட்ட திமுக..\\ வடிவேலுவை விட உங்களுக்கு காமடி நன்றாக வருகிறது, வாழ்த்துக்கள்!!!

Jayadev Das said...

\\இப்போது அவர்கள் செய்யும் அநாகரீகமான செயல்\\ இவங்க என்னைக்கு நாகரீகமா நடந்துகிட்டாங்க, இன்னைக்கு நடந்துக்க....????

Jayadev Das said...

\\நித்யானந்தா காட்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப கண்டனம் தெரிவித்து அபிமானம் பெற்ற தாத்தா கலைஞர்.\\ எப்போ கண்டனம் வருவது?? ஒரு நாளைக்கு நாற்பத்தியெட்டு தடவை வீதம் ஒரு வாரம் ஓடோ ஓடு என்று ஓடிய பிறகா??

Jayadev Das said...

\\'நான் பெரியார் பள்ளியில் படித்தவன் .. அண்ணாவின் அரிச்சுவடியை பின்பற்றுபவன் ' என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் கலைஞர் \\ சாராயக்கடையை மட்டும் பெரியார் மெச்சிக் கொள்வாரா? சாராயம் விர்ப்பதுதான் பெரியார் கொள்கையா? இவருக்கு கொள்கை கோட்பாடு எல்லாம் பதவி, பணம், குடும்ப உறுப்பினர்களின் சுகம் அவ்வளவுதான். இவருகிட்ட இல்லாத ஒன்றை நீங்க ரொம்ப அதிகமா எதிர்பார்க்கிறீங்க. அது அநியாயம்.

Jayadev Das said...

\\தயாநிதி மாறன் இதை மட்டும் கைதட்டி விசில் அடிக்காத குறையாக பாராட்டுவது என்ன வகை நடவடிக்கை\\ இவனும் ஒரு மனுஷன். தூ...

Jayadev Das said...

\\தன் அணியின் திறமை மீது நம்பிக்கை குன்றினால் மட்டுமே தனி மனித அவமதிப்பை உபயோகப்படுத்தி எதிராளியை கோபப்பட செய்து அதன் மூலம் வெற்றி பெற முயல்வதுண்டு. இதை இந்த பிரசாரத்தின் தொடக்கத்திலேயே ஆரம்பித்து விட்டீர்களே உடன்பிறப்புகளே ?\\ இதென்ன ஜுஜுபி. வெற்றி பெற இன்னும் எவ்வளவு கீழ்த்தரமான வேலையையும் செய்ய தாத்தாவும் அவரது உடன் பிறப்புகளும் ரெடி.

Jayadev Das said...

\\உங்கள் தீவிர ரசிகன் நான் . எப்போது நீங்கள் பேசினாலும் சிரிப்பு எங்களை மீறி சீறிக்கொண்டு வரும். உங்களைப் பார்த்தாலேயே புன்னகைக்க ஆரம்பிப்போம்.அதுதான் உங்கள் வெற்றி. ஆனால் இப்போது உங்களை பார்த்தால் பரிதாபமும் கோபமும் வருகிறது. நீங்கள் பேசினால் எரிச்சல் அடைகிறோம். இது உங்களுக்கு தேவையா ? \\ அன்னைக்கு உங்களை சந்தோஷப் படுத்தினார், சிரிப்பு வந்துச்சு, இன்னைக்கு உங்களுக்கு பிடிச்ச கட்சியை தாக்குகிறார், கோபம் வருது, வேறென்ன.

Jayadev Das said...

\\ஒரு வேளை அதிமுக ஜெயித்தால் 'அம்மா ..எனக்கு எதிரி கேப்டன்தான்.. உங்களை நான் அப்படி ஒருபோதும் எண்ணியதில்லை தாயே..' என்று அந்தர்பல்டி அடிக்க ஏதுவாக இருக்கும் என்றுதானே ?\\ ஊர்ல எவன்தான் யோக்கியன்?? எல்லோருமே பிழைப்புக்காகத்தானே எதைஎதையோ செய்கிறார்கள், இவரும் செய்கிறார், தப்பென்ன? ஜெ.வை பதவியிறக்க பாடுபட்ட ஆனானப் பட்ட ரஜினி, பின்னர் அவரோடு ஒரே மேடையில் தோன்றிப் புகழ வில்லையா, அதற்க்கப்புறம் திரும்ப மஞ்சள் துண்டுகிட்ட பொய் ஒட்டிக் கொண்டு அவரைப் புகழ்ந்தும் பேசிக் கொண்டிருக்கிறாரே? அப்படியிருக்கு, சாதாரண காமெடியன் கிட்ட இருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்??

Jayadev Das said...

\\நீங்கள் என்ன செய்து விட்டு இப்போது எங்களிடம் எந்த உரிமையில் பேசுகிறீர்கள்..? \\ எதையாச்சும் செய்து விட்டுத்தான் பேச வேண்டுமென்று சட்டமில்லை. காசு கொடுத்துத்தான் கருத்தை தெரிவிக்க வேண்டுமென்பதில்லை. விஜயகாந்த் செய்தவை மக்கள் சேவை அல்ல முதலீடு. ஒன்னு போட்டு நூறு எடுக்கும் வியாபாரம். அவ்வளவுதான்.

Jayadev Das said...

\\உண்மையிலேயே நீங்கள் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் வந்திருந்தால் வரவேற்றிருப்போம்.\\ மக்களுக்கு தொண்டா, ஹா..ஹா..ஹா... தமிழ நாட்டுல அப்படி யாராச்சும் இருக்காங்களா சொல்லுங்களேன் பார்ப்போம்!!

Jayadev Das said...

\\விஜயகாந்த் உண்மையிலயே உங்களுக்கு அநீதி செய்திருந்தால் அதை தனியாக போராடி பதிலடி கொடுங்கள். இது பொது இடம். இங்கு வேண்டாம். \\ அவனவனும் அரசியலில் யாராச்சும் தெரிந்தால் காரியம் சாதித்துக் கொள்ளலாம் என்று தெரியும் பொது, இவர் ஒருத்தர் மட்டும் நீதி, நேர்மை, நியாயம் என்று இந்தியன் தாத்தா மாதிரி வாழ வேண்டுமா?? ம்ஹும்... அது சினிமா, நிஜ வாழ்க்கையில் அந்தப் படத்தைஎடுத்த ஷங்கரே அப்படியில்லை. ஏதோ கஷ்டம், தி.மு.க. காரன்கிட்ட போனாரு, காப்பாத்தினாங்க, அதுக்கு பரிகாரமா ஏதோ இப்ப மேடை போட்டு பொய் புளுகை அள்ளி விடுறாரு. அடுத்து ஜெ. வந்தா அங்கேயும் பொய் ஜால்ரா அடிப்பாரு. என்ன அப்படி வாழ்ந்தாத்தான் இங்கே பிழைக்க முடியும், நீங்க இதுவும் ஒரு பிழைப்பா என்று கேட்பீர்கள், ஆமாம், உங்களைப் போல எல்லோராலும் காந்தி, அரிச்சந்திரனாக வாழ்ந்துவிட முடியாது. அதிகார வர்ர்க்கத்திர்க்கு என்ன செய்தால் பிழைக்க முடியுமோ அதை வடிவேலு செய்கிறார். அவ்வளவுதான்.

Anonymous said...

Kanda naikalai patri eluthi ungalin pathivai keduthukkollatherkal......

Anonymous said...

யாருப்பா இது ஜெயதேவ் ? ரெம்ப பேசறான் ? உன் கூட்டாளியா ? இதையும் பப்ளிஸ் பன்னு அபிமநயு தம்பி ...

Vishal said...

Vadivelu ippo enga ponnanu theriyala???? pracharathula avalavu dhairiyama pesa mudincha avanala ippa yen veliya vara mudiyala???? Oru manushanoda personal pathi pesa andha manushana thavara vera yarukum urimai illa. But vadivelu mathavanga veetu bed room kulla varaikum pogura anagariga pazhakam ullavan. Eppo avan RANA vum venam PANA vum venam nu sonnano annaike avan avanuke suniyam vachukitan. thannoda pocket la irundhu 10 Rupees eduthu kuduka manasu varada ivan Vijayaganth pathi pesa endha thagudhiyum illa...!! Vadivel innum nee neraya kashta paduvada

Post a Comment