Friday, January 21, 2011

விமர்சனம் : விமர்சகர்களுக்கு

முரண்பாடுங்கறது நல்ல விஷயம் . முரண்படுதல் என்பது அனைவருக்கும் பொதுவான அவரவர் சுதந்திரம். ஆனா அதுக்கும் ஒரு நியாயம் இருக்கனும் .  'நான் அக்பரை நேசிக்கிறேன் ஆனால் அவர் புலால் உண்பதில் எனக்கு உடன்பாடு இல்லை ' ன்னு சொன்னா அது  முரண்பாடு இல்ல  ; முட்டாள்தனம். ஏனா அது காந்திகிட்ட எதிர்பார்க்க  வேண்டியது. இந்த நாலு கேள்விக்கு பதில் சொல்லுங்க பாப்போம்.
 • முனியாண்டி விலாஸில மதியான சாப்பட்டுக்கு போய்ட்டு வெண் பொங்கல் , கிச்சடி ஏன் இல்லைன்னு சண்டை போடறது சரியா? தப்பா ?
 • திருப்பதி கோவில்ல சாமி கும்பிட்டுட்டு , பஞ்சாமிருதம் கொடுக்கல , லட்டு மட்டும் தான் கொடுத்தானுகனு  வருத்தப்படுறது  சரியா? தப்பா ?
 • சாண்டில்யன் கன்னி மாடம் புத்தகத்த தேடி வாங்கிட்டு , என்னடா கதை  இது , ஏழு பக்கத்துக்கு வர்ணனையே போகுது , கல்கி மாதிரி வருமான்னு கேக்கறது சரியா? தப்பா ?
 • கண் டாக்டர்கிட்ட போயி ' என்னையா டாக்டர் நீ ? பல் வலி ஆள கொல்லுது  ; சீக்கிரம் பாருன்னா நான் அதுக்கு படிக்கலேனு சொல்ற?'னு கத்தறது சரியா? தப்பா ?
இதுல்ல எதாவது ஒன்னு சரின்னு சொன்னா தொடர்ந்து படிக்கறத  நிறுத்திட்டு எதாவது வாழும் கலை பயிற்சியோ , இயேசு அழைக்கிறாரோ போயி உங்கள காப்பத்திகோங்க.. தப்புன்னு கைய தூக்கறவங்க , கைய கீழ இறக்கிட்டு மறுபடியும் அடுத்து மூணு கேள்விய பாருங்க :
 • ரஜினியோட பாபா பாத்துட்டு ரஜினி கதைல கோட்டை விட்டுடாரேனு புலம்பனவரா?
 • கமலோட மும்பை எக்ஸ்பிரஸ் பாத்துட்டு , கமல் இப்படி காமெடில சொதப்பிட்டாரேனு பீல் பன்னுனவரா ?
 • வாரணம் ஆயிரம் பாத்துட்டு, கௌதம் இப்படி கடுப்பேத்துவாருனு  நெனைகலையேன்னு நொந்து போனவரா ?
நீங்கள் எல்லாம் வணக்கத்துக்குரியவர்கள். எந்த எடத்துல எது கெடைக்குமோ அந்த எடத்துக்கு போயி அது கெடைக்காம ஏமாந்தவர்கள். பிடி சாபம்னு நீங்க சொன்னா பலிக்கும் . அப்படியே  இருங்க . மாறிடாதீங்க ..

அடுத்து நாம பாக்க போறது , எந்த ஒரு இலக்குமே இல்லாம எதோ ஒரு படத்துக்கு போயிட்டு , அது தனக்கு புடிக்கலேன்னு அடுத்த நாளு பக்கத்துக்கு பக்கம்  விமர்சனம் எழுதற ( வெகு சில) நண்பர்களை.

சாமி.. நான் விமர்சனத்துக்கு எதிரி இல்ல ; நல்லா எழுதுங்க .. ஆனா அதுக்கு முன்னாடி விமர்சனதுக்குனு ஒரு நியாயம் இருக்கு .. அத புரிஞ்சிட்டு எழுதுங்க ..
 • பேரரசு படத்துக்கு போயிட்டு வந்து கிளிமேக்ஸ்ல லாஜிக் இல்லன்னு நக்கீரன் மாதிரி  சொல்லகூடாது .. அது வேணும்னா நீ பாலசந்தர் படத்துக்கோ மகேந்திரன் படத்துக்கோ போயிருக்கனும்.
 • நந்தலாலா படம் பாத்தேன் ; ஒரே அழுகை ; நம்மளே வீடு கஷ்டத்த  மறக்கறதுக்கு படத்துக்கு போனா இவனுக  அவனுக கஷ்டத்த சொல்லி கொடுமை படுத்தராணுக;   'நந்தலாலா - வெந்தலாலா'னு எதுகை மோனையா எழுத கூடாது .. சந்தோசமா படம் பாக்கணும்னா கே.எஸ்.ரவிகுமாரோ சுந்தர்.சியோ எடுத்த படத்துக்கு போயிருக்கனும் ..
 • மச்சான் .. ஷங்கருக்கு கதை ரெடி  பண்ண தெரியல  அதுனால எல்லாம் செட்டிங்கா போட்டு படத்த ஒட்டிடாரு..எதார்த்தமே படத்துல  இல்லடான்னு டயலாக் பேச கூடாது .. உனக்கு எதார்த்தம் வேணும்னா ஷங்கர் டைரக்ட் பண்ற படத்துக்கு ஏன் போற? அவர் தயாரிக்கிற காதல் , வெயில் படங்களுக்கு போ ..
 • இந்த படம் எடுத்தவருக்கு சமூக அக்கறையே கெடயாது .. படம் முழுக்க அருவா , கத்திகுத்துனு வன்முறை ; நம் வீட்டு குழந்தைகள் இத பாத்தா கெட்டுப்போக  மாடங்கலானு பெற்றோர்கள் சார்பில் கொடி தூக்குபவர்கள் நேரா அவங்க செல்லங்கள கூட்டிட்டு இம்சை அரசன் 23ஆம் புலிகேசி போயிருக்கனும் ..
 • அட நமக்குதான் அந்த அளவுக்கு ஞானம் இல்லையே .. எதுக்கு 'ஹே ராம் ' போகணும் , என்னடா இது ஒரு மண்ணும் புரியல ? கதைய கமல் சொதபிட்டாருனு சொல்லணும் ..கொஞ்சம் பொறுத்திருந்து அடுத்த படம் 'தெனாலி' போக வேண்டியதுதான?
ஆக கூடி அட்வைஸ் என்னன்னா , ஒன்னு உன் ரசனைக்கு ஏத்த மாதிரி எனன படம் வருதோ அதுக்கு போ ,இல்லேன்னா எந்த படத்துக்கு போறியோ அத பாக்கும்போது உன் ரசனை கண்ணாடிய கழட்டி வெச்சுட்டு பாத்துட்டு வா .. வந்து விமர்சனம் எழுதறதோ இல்ல ப்ரீ smsல 'movie not good ' னு 'send  to  all  ' தட்டி விடுறதோ  stop it i  say ..

விமர்சகர்களே ,
தாராளமா விமர்சனம் பண்ணுங்க ..அதுக்கு முன்னாடி நாம பண்ற விமர்சனம் சரியான ஆள்கிட்ட சரியான விஷயம் கிடைக்கலங்கற காரணதுக்குதான்னு உறுதி படுத்திட்டு  proceed  your  honour ..

அத விட்டுட்டு வேண்டாவெறுப்பா புள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பேரு வைக்கற வேலைய நிப்பாடுங்க ..

5 comments:

பாலா said...

சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றி

அபிமன்யு said...

நன்றி பாலா.. :)

Anonymous said...

well said.

Anonymous said...

மச்சான் .. ஷங்கருக்கு கதை ரெடி பண்ண தெரியல அதுனால எல்லாம் செட்டிங்கா போட்டு படத்த ஒட்டிடாரு..எதார்த்தமே படத்துல இல்லடான்னு டயலாக் பேச கூடாது .. உனக்கு எதார்த்தம் வேணும்னா ஷங்கர் டைரக்ட் பண்ற படத்துக்கு ஏன் போற?

நன்றி

Anonymous said...

அத விட்டுட்டு வேண்டாவெறுப்பா புள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பேரு வைக்கற வேலைய நிப்பாடுங்க ..

Post a Comment