Monday, March 21, 2011

காரிய வித்தகர் கலைஞர்: தேர்தல் டிட் -பிட்ஸ்


கட்சியை வழிநடத்தும் தலைவர்களைப் பற்றிய அலசல் வரிசையில் இப்போது கலைஞர். இவரின் கலையுலக சாதனைகளையும் , கதைவசன திறமையையும் , தமிழ் ஆற்றலையும் இங்கு பார்க்க வேண்டியதில்லை . ஆளுமைத்திறனையும் , அனுபவத்தையும் மட்டும் பார்ப்போம். 


பெயர்: முத்துவேல் கருணாநிதி 

பிறப்பிடம் : திருக்குவளை ,திருவாரூர் மாவட்டம்

படிப்பு : சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பள்ளிப்படிப்போ ,பட்டப்படிப்போ இல்லை. ஆனால் அபாரமான தமிழ் அறிவும் அரசியல் அறிவும் உண்டு.

ஐந்தாவது படிக்கும்போது 'பனகல் அரசர்' என்ற நூலை படித்ததிலிருந்து திராவிட தத்துவங்களில் நாட்டம் வந்தது.படிக்கும் காலத்தில் அரசியலும் சமூக ஈடுபாடும் அதிகமானதால் மூன்று முறை இறுதி தேர்வில் தோல்வி .அடைந்தவர். மிக சிறிய வயதில் ஒரு கட்டுரையை எழுதி அனுப்ப, அதை படித்த அண்ணா , இவர்  ஊருக்கு வரும்போது அழைத்து , மிக சிறுவயதுள்ள கலைஞரை பார்த்து ஆச்சரியப்பட்டு முதலில் படிப்பில் அக்கறை காட்டி பிறகு இயக்கத்தில் வந்து சேர்ந்துகொள்ள அறிவுறுத்தினார்.

அதன் பின்னரும் படிப்பில் நாட்டமில்லாமல் , போராட்டங்களிலும் இயக்க நிகழ்வுகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு தன் இடத்தை பலமாக தக்க வைத்துக்கொண்டார். 

தெரிந்த மொழி :  புருஸ்லீ சொன்ன வாக்கியம் இது -   'நூறு உத்திகளை  தெரிந்த ஒருவனைக்கண்டு நான் என்றும் பயந்ததில்லை. ஆனால் ஒரு உத்தியை நூறு முறை பழகியவனைக் கண்டு நான் அஞ்சுகிறேன்.' இது கலைஞரின் அரசியல் எதிரிகளுக்கு தெரியவேண்டிய ஒன்று. பழமொழிகள் கற்றவரில்லை கலைஞர். ஆனால் தமிழில் இவர் பெற்ற புலமை இந்த நூற்றாண்டில் வெகு சிலரே பெற்றிருந்தனர்.இப்போது இவர் மட்டுமே.  தான் வாழும் ஊரில் , தன் சமூக மொழியை திறம்பட கற்றவன் , தலைவன் ஆவதற்கு முழுத்தகுதி உடையவன் என்பதற்கு கலைஞர் மிகச்சிறந்த சான்று. 

பேச்சுத்திறன் :இவரின் முதல் மேடைபேச்சு 'நட்பு' என்ற தலைப்பில் , பள்ளிபருவத்தில்.முதல் சட்டசபை கன்னிபேச்சு மே 4  1957லில்.கலைஞர் சொல்வன்மைக்கு நிகர் இப்போது யாரும் இல்லை. இவரின் சொல்வன்மையைப் பற்றி எத்தனையோ புத்தகங்கள் வெளிவந்துள்ளன. எதிர்க்கட்சி தலைவர்களும் வியந்து பாராட்டும் வண்ணம் கேள்விகளுக்கு சுவை மிகுந்த  , ஆழம் நிறைந்த கருத்தை நகைச்சுவையாக , மற்றவர் மனம் புண்படாமல் பதில் உரைக்கும் திறன் இவர் உடன்பிறந்தது. கட்சியில் ஒரு கருத்தையோ , சட்டசபையில் ஒரு கட்டளையையோ முன்வைக்கும்போது எதிர்ப்பவர்களின் கேள்விகளுக்கு அசராமல் பதில் சொல்லி அவர்களை உடன்பட வைப்பதில் வல்லமை படைத்தவர். 


அரசியல் பிரவேசம்:  தன் பதினாலாவது வயதில் அரசியலில் சாதாரண தொண்டனாக காலடி எடுத்து வைத்தவர். எல்லா தலைவர்களுடனும் நெருங்கிய இனிய நட்பு கொண்டவர். பெரியாருடன் மனக்கசப்பு வந்து அண்ணா விலகிய போது அவரின் பின் நிழலாக ஓடி வந்தவர். 1957லில் தொடங்கி பதினோரு முறை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

இவரின் உண்மையான , ( கட்சிசார்பற்ற ) பொதுமக்களுக்கு உதவிய சாதனைகள் :
முன்னர்:
  • மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச்சீட்டு 
  • இலவச கண்சிகிச்சை , கண்ணாடி வழங்குதல்
  • கைரிக்ஷா முறையை ஒழித்தது
  • ஏழை பெண்கள் திருமண உதவி - பத்தாயிரம் ருபாய்
  • ஏழை பெண்களுக்கு இலவச கல்வி - பனிரெண்டாம் வகுப்பு வரை 
  • குடிசை வாரியம் அமைத்தது 
  • பெண்களுக்கு சொத்தில் சம உரிமை  சட்டம்
  • பிற்படுத்தப்பட்டவ்ர்களுக்கு தனி நலம் பேணும் இலாகா 
  • விதவைகள் மறுமணம்/ கலப்பு மணம் செய்வோருக்கு ஊக்கத்தொகை
  • மிக பிற்படுத்தப்பட்டவ்ர்களுக்கு தனி இருபது சதவீத ஒதுக்கீடு 
  • ஆதி திராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குதல் 

தற்போதையவை :

  • ஒரு ரூபாய்க்கு அரிசி (இந்த மகத்தான சாதனையை குறைகூறுவோர் சில நாட்கள் வேறு மாநிலங்கள் சென்று அங்குள்ள வறுமைக்கோடுக்கு  அருகிலிருக்கும் மக்களின் நிலைமையை பார்த்து பிறகு பேச வேண்டுகிறேன்)
  • மருத்துவ காப்பீடு திட்டம் (இது ஒரு பாராட்டத்தக்க  பெரிய சாதனை -  மேலதிக விபரங்களுக்கு இதனால் பயன்பட்ட யாரை வேண்டுமானாலும் கேட்க.. ) 
  • இலவச தொலைக்காட்சி ( எத்தனையோ எதிர் விமர்சனங்கள் இருந்தாலும் , எல்லா கட்சிக்காரர்களும் இதனால் பயன்படுகிறார்கள் என்பது சத்தியம் )

(சமத்துவபுரமும் , செம்மொழி மாநாடும் மக்களுக்கு பயன்படவில்லை என்பது என் கருத்து. மாற்றுக்கருத்துள்ளவர்கள் இதை நிராகரிக்கலாம் )

இன்னும் சில காலத்தில் யாரும் ஒருவரை அரசியல் சாணக்கியன் என்று புகழமாட்டார்கள் ; மாறாக அரசியலில் கலைஞர் போல் என்றுதான் பேச்சு இருக்கும். அப்படி ஒரு மைல்கல்லாக கலைஞர் தன்னை நிலைப்படுத்தியுள்ளார். இப்போதைக்கு எதிர்கட்சியிலும் சரி , எந்தக்கட்சியிலும் சரி , இவருக்கு நிகரான அனுபவமும் ஆற்றலும் யாருக்கும் இல்லை என்பது திண்ணம்.

 இவர் முதலமைச்சராய் இருந்த போது ,ஜெயலலிதா சினிமாவில் டூயட் பாடிகொண்டிருந்தார் ; விஜயகாந்த் விஜயராஜுவாக பதினேழு வயது விடலை பையனாக ஊர் சுற்றிக்கொண்டிருந்தார்; வைகோ கட்சியில் அப்போதுதான் ஒரு அடையாளம் கிடைக்க பாடுபட்டுகொண்டிருந்தார்.சோனியா அப்போதுதான் ராஜீவ்வை திருமணம் செய்திருந்தார். 


எம்.ஜி.ஆரை அண்ணாவுக்கும் அரசியலுக்கும் அறிமுகப்படுத்தியவர் கலைஞர். (சொந்த செலவில் சூனியம் என்ற சொற்றொடர் அப்போது புழக்கத்தில் இல்லை ) 

இவர் ஆட்சியில் இருந்தால் அரசியல் நாகரிகம் (கூடிய வரையில் ) காப்பாற்றப்படும் . எதிரிகளை அரவணைத்து ஆட்கொள்ளும் ஆற்றல் பெற்றவர். 

ஊழலை தமிழ்நாட்டுக்கும் ,  விஞ்ஞான ரீதியான ஊழலை இந்தியாவுக்கும் அறிமுகப்படுத்திய கசப்பான பெருமையும் இவருக்கு உண்டு. அதை காப்பியடித்து பெரிதாக பேராசையுடன் செய்து மாட்டிக்கொண்ட பெருமை ஜெயலலிதாவுக்கு உண்டு. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இவர் பங்கு மிகப்பெரியது. 

  • தனக்கு அடுத்த நிலையில் அன்பழகன் போன்ற  சான்றோரை  வைத்திருப்பது இவர் திறமைக்கு உதாரணம் . 
  • தனக்கு அடுத்த நிலையிலேயே காலங்காலமாக அன்பழகன் போன்ற சான்றோரை வைத்திருப்பது இவர்  திறமைக்கு சிறந்த  உதாரணம்.
  • தனக்கு அடுத்த நிலையிலேயே காலங்காலமாக இருந்த அன்பழகனையும் தாண்டி ஸ்டாலினை கொண்டுவந்தது இவர் திறமைக்கு மிகச்சிறந்த உதாரணம்.

இவர் கூட்டணியில் ஒரு ஆட்சி அமைந்தால் குறைந்தது அடுத்த இரண்டு வருடங்களுக்காவது கூட்டணி நிலவும். அதிமுக ஆட்சியில் உடனே ஈகோ பிரச்சனையால் கூட்டணி பிளவுபடும்.மூத்த  பத்திரிக்கையாளராக இவர் இருப்பதால் ஓரளவுக்கு பத்திரிக்கை தர்மம் காப்பாற்றப்படும். சர்வாதிகாரம் இவருக்கு ஒத்து வராத ஒன்று. எல்லாரோடும் பதவிகளையும் புகழ்களையும் பகிர்ந்து கொண்டு வெற்றி பெறுபவர். எம்.ஜி.ஆருக்கு பிறகு இரு கட்சிகளில் இவர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்கள் ஓரளவுக்கு பயம் இன்றி வாழ்வார்கள். 
 எந்த கட்சியானாலும் சரி , எவ்வளவு விமர்சனம் செய்தாலும் சரி , கூட்டணி வேண்டும் என்று வந்தால் மன்னித்து ஏற்றுக்கொள்வார் . ஒதுங்கி போனால் கோபப்படவும் மாட்டார் . திரும்பி வந்தால் திருப்பி அனுப்பவும் மாட்டார். இந்த கொள்கையால் எவ்வளவோ அரசியல் பிரச்சனைகள் அமைதியாக முடிந்தன. சான்று : அவ்வப்போது    ராமதாஸ் , எப்போதும் இடது கம்யூனிஸ்ட்... யாருக்கு தெரியும் ..வைகோ இனி ஒரு தடவை வந்து இவர் ஒருவேளை ஏற்று கொண்டால் அரசியலை விட்டு ஆயிரம் பேர் பைத்தியம் பிடித்து விலகி ஓடுவார்கள் .

அதுவும் சட்டசபையில் இவர் வீற்றிருந்தால் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மனதுக்குள் நிம்மதியாக அமர்ந்திருப்பார்கள். ஹி வோன்ட் கீப் ஹிஸ் வென்ஜென்ஸ். என்ன கேள்வி கேட்டாலும் நகைச்சுவை கலந்த மரியாதையான பதில் எல்லாரையும் நிதானப்படுத்தி விடும். 

எதிர்பக்கம் கண்டிப்பான தலைமையில் ஒரு கட்சி இருக்கிறது என்றால் இவர் தன  கட்சிக்கு கொடுப்பது அன்பு நிறைந்த , நட்பு கலந்த தலைமை . அதுதான் இவர் வெற்றிக்கான மந்திரம் .(இத்தனை இலவசங்களுக்கு பிறகும்)அரசு இயந்திரம் துருப்பிடிக்காமல் இருக்க இவரின் ஆலோசனைமிக்க அணுகுமுறை மிக நன்றாக உதவுகிறது என்பது வல்லுனர்களின் கருத்து . 

மொத்தமாக சொன்னால் , தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே சிறந்த நாகரீகமான அரசியல் என்றால் அது கலைஞர்தான்.
இவரிடமும் ஊழல் இல்லாமல் இல்லை , ஆனால் இருக்கும் கட்சிதலைமைகளில் இவர் சிறந்தவர். அராஜகங்களிலும் சரி அட்டூழியங்களிலும் சரி , இவர் ஆட்சி எதிர்கட்சியின் ஆட்சிகால செயல்கள் அளவுக்கு போகவில்லை . இவர் ஆட்சியில் எதிர்கட்சிக்காரர்கள் பாதிக்கப்படலாம்; பொதுமக்கள் அவ்வளவாக பாதிக்கப்பட்டதில்லை




கட்சியில் குடும்ப அரசியலை அதிகம் கலக்காமல் , தவறு செய்தவர்களை உடனே துரத்தி தன் பழுத்த அரசியல் ஞானத்தை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்வதை தொடர்வதாக இருந்தால் இவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுப்பதில் தவறில்லை.

முடிவு உங்கள் கையில். பிற தலைவர்களை பற்றி பின்னர் .. 

8 comments:

Anonymous said...

AFTER READING THIS, IAM HAVING TEARS IN MY EYES. FROM MY CHILDHOOD AND TILL NOW MY ONLY FAVOURITE, RESPECFUL AND GREAT LEADER IS KALAIGNAR.

Anonymous said...

"கட்சியில் குடும்ப அரசியலை அதிகம் கலக்காமல் , தவறு செய்தவர்களை உடனே துரத்தி தன் பழுத்த அரசியல் ஞானத்தை பயன்படுத்தி ..."
Mr Ashok ethu ungulukae konjan overa theriellya .. DMK is famous for its family politics.DMK is run by Karunanithi's family not the party.The whole nation knows this

Anonymous said...

என்னமா கூவரான்யா...

தமிழ் குமார் said...

Romba seriousaana "comedy" pathivu.

Jainadhiya said...

வாங்கின காசுக்கு அதிகமாக எழுதி இருகிறீர் தோழரே!

Anonymous said...

thambi asoku...unoda joku nalla irukku....2g scam pathi nee solavae illa.....

Anonymous said...

Thambi Askok'u nee enna Dmk party'a. Rembo overa jalara adikara

Anonymous said...

அற்புதமாக எழுதி உள்ளீர்கள். மனசாட்சி உள்ளவர்கள், நல்ல வாழ்கை நெறி உள்ளவர்கள் இதை ஏற்று கொள்வார்கள்.
மற்ற சூன்யங்களை கொண்டாட வேண்டிய தேவை உள்ளவர்கள் எதிர்பார்கள்.
அரசியல் செய்து கொண்டே அருள் அமுதம் தரும் மகான் ஆக இருக்க முடியாது.
அரசியல் செய்து கொண்டே எத்தனையோ நல்ல திட்டங்களை தந்து மக்களுக்கு ஏற்றம் புரிந்து உள்ளார்.
உலக அரசியலில் இவர் பெயர் முதலில் இருக்கும்.
இந்தியாவில் அரசியல் செய்வது உலகிலேயே மிக சிரமம். அதிலும் தமிழ்நாட்டில் செய்வது அதனிலும் சிரமம்.
அதில் கொட்டை போட்டு பழம் தின்ன வேண்டுமானால் நிச்சயம் மகா வித்தகனாக இருக்க வேண்டும்.
இவரை ஏற்காத அறிவு ஜீவிகள் மிக குறைவு. (எதிர்பவர்களும் வீம்புக்காக செய்வார்கள்)
அத்தனைக்கும் பின் இருப்பது ஓய்வறிய உழைப்பு.
வெயில் படாமல், உடல் நோகாமல் இருக்கும் மக்களே இவரை எதிர்ப்பவர்கள்.
இவர் தமிழ்நாட்டில் பிறந்தது அரிது. ஒரு கூட்டத்துக்கோ துக்கம். என்ன செய்வது இயற்கையின் விளையாட்டு.

Post a Comment