உலகத்திலயே வேகமா பரவும் ஜந்து என்ன தெரியுமா ? பாக்டீரியா ? வைரஸ் ? எய்ட்ஸ் ? ஹுஹும்ம் இது எதுவும் இல்ல சார்.. ஆனா ஒரு வகைல இது எல்லாமே நல்லதுதான் . ஏனா நம்மலா போயி வம்பா மாட்டுனாத்தான் இதுக எல்லாம் புடிச்சுக்கும். இதை எல்லாம் தாண்டி ஒன்னு இருக்குனா அதுக்கு பேருதான் வதந்தி ..
என்னது ? வதந்தி..வதந்தி....
தீ மாதிரி பரவறதுனால வதந்தீ அப்படினும் சொல்லுவாங்க. இந்த வதந்தியோட கேரக்டர இப்போ ஒரு அனலிசிஸ் பண்ணலாமா ?
வதந்தி எனப்படுவது யாது ?அதன் வகைகள் எவை ? விளக்குக . 2X1 = 2
வதந்தி எனப்படுவது யாதெனில் யாதொன்றும்
உண்மை இலாத சொலல்.
வதந்தி இருவகைப்படும். ஒன்று பொய்யான ஒன்றை , இல்லாத ஒன்றை பரப்புவது. உதாரணம் - பதிவின் தலைப்ப பாருங்கப்பா
மற்றது உண்மையை அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் ஊதி பெரியதாகி ஆக்கி பரப்புவது. உதாரணம் - தினந்தோறும் சன் , ஜெயா செய்திகள் பாருங்கப்பா ..
-------------------------------------------------------------------------
வதந்தியின் குணங்கள் பற்றி விளக்குக . 6X1 = 6
வதந்திக்கு எப்போதுமே நிகழ் காலம்தான். இறந்த காலம் கெடையாது.
'ஆட்சியில இருந்தப்ப அந்த ஆளு எவ்வளவு சம்பாதிச்சான் தெரியுமா ?'
'அட போடா..இப்பவும் கூட அவனுக்கு ஒரு பங்கு போய்ட்டு இருக்காம். நம்ம எழாவது வட்டம் சொன்னாரு.. '
ஏழாவது வட்டத்துக்கு யார் சொன்னாங்கனு எவனுக்கும் தெரியாது. அவன கேட்டா மூணாவது பிளாக் கவுன்சிலர்னு சொல்லுவான் ..
வதந்தியோட பெரிய ப்ளஸ் பாய்ண்டே அத ஆரம்பிச்ச ஆள கண்டுபிடிக்க முடியாது . நூறு பெர்சென்ட் சேஃப்டி.
---------------------------------------------------------------
சரி இறந்த காலந்தான் கிடையாதுனா அது இறக்கற காலமும் கெடையாது. அஞ்சு வருசமா தூங்கிட்டு இருக்குற வதந்திய அரை நிமிசத்துல்ல ரீ-ஓபன் பண்ணிடலாம்.
'அவரு பொண்ணு கல்யாணத்துக்கு அப்புறம் குடிக்கறதயே விட்டுட்டாருப்பா '
'இல்லேங்க .. போன வாரம் கூட டாஸ்மாக்ல கலாட்டா பண்ணி பெரிய பிரச்சனை ஆயிடுச்சுங்க..'
'அப்படியா ..அப்போ ஏன் நான் கூப்பிட்டா கூட வர மாட்டேங்கறாரு.. '
அது உண்மையோ பொய்யோ (வதந்தி என்பதே பொய்தான் என்று ஒரு சாரார் கொடி பிடிக்கிறார்கள் , ஆனால் 'நெருப்பிலாமல் புகையாது' என்ற பழமொழி சற்றே யோசிக்க வைக்கிறது ..) அன்னைக்கு நைட்டே ஒழுங்கா இருக்குற மனுஷன் வீட்டுக்கு வந்ததுமே , என்னைக்குமே மதிக்காத ரெண்டாவது பொண்ணு பக்கத்துல வந்து 'அப்பா ..ஏன்பா லேட்டு ? வயசாகுதுல.. உடம்ப பாத்துக்கோங்க.. என்னப்பா உங்ககிட்ட வாசம் .. ஊதுங்க'னு அவர் அமைதிக்கு சங்கு ஊத ஆரம்பிச்சிடும்.
-----------------------------------------------------------
வதந்தி ஒரு முற்போக்குவாதி. எந்த விஷயம் நடந்தாலும் கண் மூக்கு காது வைச்சு முற்போக்கா சொல்லும் .
வதந்தி ஒரு முற்போக்குவாதி. எந்த விஷயம் நடந்தாலும் கண் மூக்கு காது வைச்சு முற்போக்கா சொல்லும் .
'அவங்க கல்யாணத்துக்கு யாரையுமே கூப்பிடல .. ஏன்னு தெரியல ? ' - இது ஆரம்ப செய்தி வடிவம் .
'அவங்க பொண்ணு லவ் மேரேஜாமா ? உங்களுக்கு தெரியுமா ? - இது இடை நிலை செய்தி வடிவம் .
அடுத்து.. சாரி ..இந்த இடத்துலதான் உங்க எதிர்பார்ப்பு உடையும் . வதந்திக்கு கடை நிலை வடிவமோ சாவோ கிடையாது. அனுமாருக்கு அப்புறம் சாகா வரம் பெற்று சிரஞ்சீவியாக இருப்பது வதந்தி மட்டும்தான்.
-------------------------------------------------------------
வதந்தியின் மிகபெரிய பலமே அதன் எளிதாக மாறும் தன்மைதான். Its flexible sir...
'இந்த அம்மா ஏதோ நல்ல பையன பெத்த மாதிரி பேசிட்டு போறாங்க. நேத்து அவன் தம் அடிக்கிறத நான் பாத்தேங்க.. '
'உளறாத.. அவன் நேத்து என பையனோட க்ரூப் ஸ்டடி பண்ணிட்டு இருந்தானாம். ரெண்டு பெரும் அவன் பிரெண்ட் வீட்டுக்கு போயிருந்தாங்க.. '
'ஒ .. ஆமா ஆமா .. உங்க பையன் கூடத்தான் பக்கதுல இருந்தான் .. நான் மறந்துட்டேன்..'
'என் பையனுமா தம் அடிச்சான் ?'
'அப்படிதான் நெனைக்கிறேன். எதுக்கும் கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க . '
----------------------------------------------------------------
வதந்தி உருவாக்கத்தின் காரணம் என்ன ? சுருக்கமாக விளக்குக 6X1=6
வதந்தி உருவாக்கத்தின் காரணம் என்ன ? சுருக்கமாக விளக்குக 6X1=6
ஒ .. ரெம்ப சுருக்கமா விளக்கலாமே ..
- வெட்டியா இருக்குற வீணா போனவங்க தங்கள் பொன்னான காலத்தை நல்ல முறையில் போக்க வதந்தி உதவுகிறது.
- தங்கள் நண்பர்களோ தெரிந்தவர்களோ சந்தோசமாக இருந்தால் பொறுக்க முடியாத மன உளைச்சலுக்கு வடிகால் - வதந்தி.
- வதந்தியின் காரணமாக வருத்தப்படும் மக்களை காண்பதில் கிடைக்கும் பேரின்பம்.
மேல்கூறிய மூன்றுக்கும் ஒரே உதாரணம் :
காலேஜ் ஹாஸ்டல இருந்தப்போ ராக்கிங் , சைட் அடிப்பது எல்லாம் போர் அடிச்சு வீட்டு நெனப்பு வரும். எங்கள டென்சன் பண்ற மாதிரி , பக்கத்துக்கு ரூம் பசங்க படுதீவிரமா படிச்சுட்டு இருப்பாங்க. இவனுகளுக்கு வீட்டு நெனப்பே வராதான்னு கேட்டா ' படிக்கதாண்டா ஐநூறு கிலோமீட்டர் தாண்டி வந்துருக்கோம். அத விட்டுட்டு .. போடா போயி முன்னேற வழிய பாருடா 'னு நம்மளயே கலாய்ப்பாங்க. அவங்க சந்தோசமா இருப்பாங்க. நமக்கு பொறுக்குமா ?
ஒருத்தன அவங்க ரூமுக்கு அனுப்புவோம் .
'என்னங்கடா.. நீங்க எப்போ கிளம்பறீங்க ?'
'எங்கடா ?'
'ஊருக்குதான். வெள்ளிகிழமை லீவு தெரியும்ல '
'லீவா ? எதுக்குடா ? '
' டேய் .. போன வாரம் கிரிக்கெட்ல ஸ்டேட் லெவல் வரைக்கும் போனோமே . அதுக்கு லீவ் விட்டுருக்காங்க.. சரிடா. நான் இப்போவே போயி ட்ரெயின் புக் பண்றேன் '
ஒரு மணி நேரம் கழிச்சு எங்க ரூம்லயே வந்து ஒருத்தன் கேப்பான். - 'என்னங்கடா.. நீங்க எப்போ கிளம்பறீங்க ?'
அப்புறம் அந்த பசங்க அங்க இங்க போன் பண்ணி வீட்டுல சொல்லிட்டு , திரும்ப வந்து துணியெல்லாம் எடுத்து பேக் பண்ணிட்டு வியாழகிழமை மத்தியானம் வரைக்கும் இன்னும் எதுவும் நியூஸ் வரலயேன்னு பீல் பண்ணிட்டு நம்மகிட்ட கேப்பாங்க . நாங்க இப்போ சொல்லுவோம் - ' படிக்கதாண்டா ஐநூறு கிலோமீட்டர் தாண்டி வந்துருக்கோம். அத விட்டுட்டு .. போடா போயி முன்னேற வழிய பாருடா '.
அவங்க மூஞ்சிய பாக்கும்போது ஒரு சந்தோசம் கிடைக்கும் பாருங்க . அதுக்கு பேர்தான் பேரின்பம்னு எங்க பசங்க சொல்லுவாங்க .. மத்தபடி நான் இப்படி யாருக்கும் பண்ண மாட்டேன் . உங்களுக்குதான் தெரியுமே நான் நல்லவன்னு..ஆனா இந்த ஐடியாவுக்கு ஆக்கம் ஊக்கம் இயக்கம் எல்லாம் நான்தான்... ஹிஹிஹி..
எனவே BEWARE OF வதந்தி.
இதையே சிறுவர்மலர் ஸ்டைல சொல்லனும்னா ,
ஆகவே குழந்தைகளே ,
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் ... அட போங்கப்பா சலிச்சு போய்டுச்சு..
8 comments:
ஏங்க இத ரூம் போட்டு யோசித்திங்க்ளா இல்லை?
நாசமா போச்சு! இருக்குற தேர்தல் சூட்டில இது வேறயா :))
தலைப்பை பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்துதான் படிக்க வந்தேன். அது வதந்தியாக இருந்தாலும், அது குறித்த கருத்துக்கள் சுவையாகத்தான் இருக்கின்றன.
தலைப்பைப் பார்த்ததும் இதென்ன புது புரளின்னு நினைச்சேன். அதேதான்.
// மத்தபடி நான் இப்படி யாருக்கும் பண்ண மாட்டேன் . உங்களுக்குதான் தெரியுமே//
அதுதான் தலைப்பை பார்த்த உடனே தெரியுதே.
நினைச்சேன்:)
கருணாநிதி நேற்று இரவு ஜெயலலிதாவின் காலில் விழுந்து வணங்கியதாக நேரில் பார்த்த சசி வாக்குமூலம்.!
:)))))))))))))))))))))
Post a Comment