Thursday, March 3, 2011

இவர்களுக்கும் தெரியும் கிரிக்கெட்...




இதற்காகத்தான் நான்கு வருடங்கள் காத்துக்கொண்டிருந்தேன். இந்த கேள்வியை யார் யார் கேட்க விருப்பமோ அவர்கள் என்னோடு சேர்ந்து கை தூக்கலாம். கேள்வியை பெறுனர் To: ஐசிசி - சர்வதேச  கிரிக்கெட் கவுன்சில் . cc : மற்றைய நாடுகளின் கிரிக்கெட் கவுன்சில்கள். 

நேற்று அயர்லாண்டின் கெவின் ஒ ப்ரைன் அடித்த அடியை பற்றி சிலாகித்து பேசிக்கொள்ளும் ஊடகங்களுக்கும் இந்த கேள்வி பொருத்தும். அதிலும் குறிப்பாக 'இவரை ஐபில் அணிகளில் சேர்க்க யார் ஆதரவு ?' என விடிகாலை தொடங்கி கேட்டுக்கொள்ளும் 24X7செய்தி தொலைக்காட்சி சேனலுக்கும்.

கேள்வி இதுதான் : ' இத்தனை நாள் இது போன்ற நாடுகளின் அணிகளை ஊக்குவிக்காமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அதுவும் இவை யாவுமே சர்வதேச ஒரு நாள் போட்டிகள் விளையாட பல வருடம் முன்பாகவே தகுதி பெற்ற அணிகள். 

போன 2007 உலகக்கோப்பை  போட்டியிலேயே தங்கள் கோபத்தை பங்களாதேஷ் இந்தியாவிடமும் , அயர்லாந்து பாகிஸ்தானிடமும் காட்டி கவுன்சில் பார்வையை ஈர்க்க முயற்சி செய்தனர். ஹுஹும்ம்ம்.. 

சில விசயங்களை வியாபார உத்தி , கமர்சியல் பலாபலன்கள் தாண்டி யோசிப்போம் .இந்த நாடுகளோடு தொடர் வைத்துக்கொண்டால் அவ்வளவாக மார்க்கெட்டிங் வேல்யூ இருக்காதுதான். ஆனால் வாய்ப்பே கொடுக்காமல் இருந்துக்கொண்டு இதையே சொல்லிக்கொண்டிருந்தால் அது தவறு . காரணம் ஒரு முறையோ இரு முறையோவாவது வாய்ப்பு கொடுத்து அதில் இந்த அணிகள் தங்கள் போர்குணத்தை வெளியிட்டால் அடுத்த முறை ரசிகர்கள் கண்டிப்பாக இந்த அணிகளோடு மோதும் போட்டியே வரவேற்க தயாராவார்கள்.

 இன்னொரு விஷயம்  - இருக்கும் முன்னணி அணிகள் ஒன்றும் எப்போதும் பார்மில் இருக்கும் என்பதில்லை. உதாரணம் - இப்போதைய ஆஸ்த்ரேலிய அணி. இது போல் முன்னணியில் இருக்கும் நாடுகள் பார்மில் இல்லாத பொழுது ,தங்கள் அணி அவர்களோடு விளையாடினால் என்ன , இவர்களோடு விளையாடினால் என்ன ? எல்லாம் ஒன்றுதான் . 

இதையே இப்படி பார்ப்போம் . அப்படி தங்கள் நாட்டு அணி சரியாக இல்லாத சமயத்தில் , சிறப்பாக இருக்கும் இன்னொரு அணியிடம் சென்று அடி வாங்குவதை விட இவர்களோடு மோதினால் இழந்த திறமையை மீண்டும் பெரும் வாய்ப்பும் கிடைக்கும் .மோசமான,மிக எளிமையான  போட்டியாக அது நிச்சயம் இருக்காது  .அதுக்கு இவர்கள் பொறுப்பு . இரண்டாம் நிலை அணிகளான இவர்களுக்கும் அடிக்கடி வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த இரண்டாம் நிலை அணிகளின் நிலையை சற்று பார்ப்போம்.
இவர்களின் பலமும் சரி பலவீனமும் சரி , மற்ற நாடுகள் இவர்களை ஒதுக்குவதுதான் .

யாரும் விளையாட முன்வராததால் , தங்கள் நாட்டுக்குள் அணி பிரிந்து விளையாடி விளையாடி உறமேற்றிக்கொண்டு வந்து உலக போட்டிகளில் மற்ற அணிகளுக்கு இப்படி ஷாக் கொடுகிறார்கள். இவர்களின் ஒரே இலக்கு - உலக கோப்பையில் தங்களை , தங்கள் திறமையை வெளிக்காட்ட வேண்டும் . ஜெயிக்கிறோமோ இல்லையோ , எளிதாக விட்டுகொடுக்க கூடாது. ஆக நான்கு வருடத்துக்கு ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்த , பயிற்சி பயிற்சி என போராடி தங்களை பலப்படுத்துகிறார்கள். இந்த பலத்துக்கு இவர்களே இவர்கள் மட்டுமே காரணம். 

ஆனால் இவர்கள் பலவீனத்துக்கு மற்றவர்கள்தான் காரணம். இரண்டு அணிகள் போட்டியிடும் தொடரானாலும் சரி , மூன்று அணிகள் போட்டியிடும் tri-series ஆனாலும் சரி , இவர்களை கணக்கு எடுத்துக்கொள்ள சர்வதேச / மற்ற நாடுகளின் கிரிக்கெட் கவுன்சில் வேண்டும் என்றே மறக்கிறது;மறுக்கிறது. காரணம் முன்பு சொன்ன பிசினஸ் , கமர்சியல் இத்யாதிகள். 

உதாரணமாக இந்திய கிரிக்கெட் கவுன்சிலை எடுத்துக்கொள்ளுங்கள் - சென்ற மூன்று வருடமாக மற்ற நாடுகளை விட இலங்கைக்கு அதிகமாக நம் இந்திய அணி சென்றிருக்கும் அல்லது அவர்கள் இங்கு வந்து விளையாடுவார்கள். காரணம் சரிந்திக்கும் இலங்கை கவுன்சிலை சரி செய்ய ..


ஒரு ரசிகராக  மனதை தொட்டு சொல்லுங்கள் ..உங்களுக்கு போர் அடிக்காமல் இருந்ததா.. சங்கக்கராவையும் முரளிதரனையும் மீண்டும் மீண்டும் பார்க்க .. ? இங்குதான் ஒரு மாற்றமாக இரண்டாம் நிலை அணியுடன் விளையாட வலியுறுத்தலாம்.
இதில் இன்னொரு மிக முக்கிய ஆதாயமும் முன்னணி அணிகளுக்கு இருக்கிறது. தங்கள் அணிகளின் முன்னணி வீரர்களுக்கு இடையில் ஒய்வு கொடுத்து ,பிற வீரர்களை களத்தில் இறக்கி அவர்கள் திறனை மதிப்பீடு செய்ய ஒரு நல்ல வாய்ப்பு. 

இப்படி எல்லா நாடுகளும் கரம் நீட்டினால் கூடிய விரைவில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு புது புது வீரர்களையும் அணிகளையும் பார்க்கும் அனுபவம் கிடைக்கும்.திரும்ப திரும்ப பார்ம் இழந்த பாண்டிங்கையும் , எப்போதாவது ஆடும் நியூசிலாண்டையும் பார்க்கும் தொல்லை இல்லை . இரண்டாம் நிலை அணிகளும் ஒன்றும் குறைந்து விடவில்லை என்று இப்போது நிருபித்து வருகிறார்கள் . அதுவும் இவர்களின் ரசிகர்களின் வெறி மிகுந்த ஆதரவை காணும்போது மெய் சிலிர்கிறது. இந்த உலகக்கோப்பையின் பங்களாதேஷின் முதல் போட்டியில் , அந்நாட்டு சிறுவன் காட்டிய ஆக்ரோஷமான உற்சாக கதறலை டிவியில் திரும்ப திரும்ப காட்டியது உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.    

நினைவில் கொள்ளுங்கள் - 
இந்தியாவுக்கோ  அல்ல வேறு எந்த நாட்டுக்கோ , உலகக்கோப்பை என்பது 'இதுவும் மற்றொரு தொடரே ' என்பது போலத்தான்.. என்ன ...சற்று நீளமான தொடர் . அவ்வளவுதான்.
இதில் வெற்றிபெறவில்லை என்றால் எதாவது காரணம் சொல்லிவிட்டு 'அடுத்து எங்கேப்பா ? யார் கூட ?' என்று அடுத்ததற்கு தயார் ஆகி விடுவார்கள் . ஆனால் இவர்களுக்கு அப்படி அல்ல , ஒவ்வொரு முறையும் உலகக்கோப்பையில் தங்களை நிருபித்து விட்டு ஆசையாக ஏக்கத்துடன் 'யாராவது அழைப்பார்களா ?' என்று காத்திருப்பார்கள்.

 நமக்கு உலககோப்பை நான்கு வருடத்துக்கு ஒருமுறை வரும் ஒரு தொடர். இவர்களுக்கு அது  நான்கு வருடத்துக்கு ஒருமுறை வரும் ஒரே தொடர்.
இனியும் காக்க வைக்கலாமா ? 



இப்படி ஓரவஞ்சனை செய்து விட்டு , இந்த முறை கோப்பை இந்த நாடுக்குத்தான்  என்று ஆருடம் சொல்வது கேலியாகத்தான் இருக்கும். வாய்ப்பை கொடுக்காமல் இருந்தால் இறுதி வரை அப்ரிடியும் , யுவ்ராஜும் , காலிங்வுட்டும் , டுமினியும் மட்டுமே நமக்கு 
 பரிச்சயம் ஆக இருப்பார்கள் .எத்தனையோ கெவின் ஒ ப்ரைன் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியாமலேயே போய்விடும். சற்றே சிந்தியுங்கள். 

அடுத்த உலகக்கோப்பை தொடர் ஆரோக்கியமான போட்டியாக இருக்கட்டும் . இடைப்பட்ட நான்கு வருடங்கள் இவர்களை , எல்லா நாடுகளும் வரவேற்கட்டும். 

10 comments:

சக்தி கல்வி மையம் said...

சரியான அலசல்..
ஓட்டு போட்டுட்டேன்.. காலோவர் ஆகிவிட்டேன்..பகிர்வுக்கு நன்றி..

வேடந்தாங்கல் உங்களை அழைக்கிறது..
http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_03.html

அபிமன்யு said...

மிக்க நன்றி கருன்..
உங்கள் பதிவு பக்கம் கொடுத்ததற்கும் நன்றி..கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் அதில் உள்ளன.

solomon.J said...

Hai... Abimanyu.... sariyana tharamaana, niyaayamana alasal...

ஆதவா said...

மிக அருமையான அலசல்.. சின்னச் சின்ன அணிகளை ஊக்குவிக்கவெண்டும்.. குறிப்பாக இந்தியா போன்ற பெரிய அணிகள்!!
ஆனால் ஐசிசி அடுத்த வேல்ட்கப்புக்கு சின்ன அணிகள் இல்லையென்று சொல்லிவிட்டது!!!

இன்னும் 10 நாடுகளே டெஸ்ட் அந்தஸ்த் பெற்றிருப்பது கிரிக்கெட் மற்ற நாடுகளில் வளராமல் இருப்பதற்குச் சான்று

பாலா said...

உங்கள் பெரும்பாலான கருத்துக்களோடு ஒத்து போகிறேன். ஆனால் இந்த மாதிரி அணிகள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி விடுகின்றனவே?

Anonymous said...

after long time i saw a good post. it's true other teams should play with this teams.

Jayadev Das said...

இந்த மாதிரி அணிகளை ஆட விட்டால், ஒவ்வொருத்தனும் இருநூறு செஞ்சுரி அடிப்பான், அப்புறம் டெண்டுல்கர் மாதிரி ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கெதிராக விளையாடி கஷ்டப் பட்டு செஞ்சுரி போட்டவர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விடும்.

அபிமன்யு said...

@பாலா
ஒத்து கொள்கிறேன் பாலா . நேற்று கூட மிக எளிய ஸ்கோரை சேஸ் செய்ய முடியாமல் கனடா தோற்றது. ஆனால் நாம் தொடர்ந்து ஆதரவளித்தால் , இவர்களும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளியிட வாய்ப்பு உண்டு .வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டை ஆட்சி செய்யும்போது எந்த பெரிய அணிகளும் ஒரு காலத்தில் எலிகள் போலத்தான் இருந்தன.

@ஜெய் : உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது . நானும் சச்சின் ரசிகன் தான் . ஆனால் அதற்கு என்ன செய்வது நண்பரே. முன்னமே இவர்களை ஆட விட்டிருந்தால் இந்நேரம் சச்சினும் முன்னூற்றி சொச்சம் சென்ட்சுரி அடித்திருப்பார். எல்லாம் காலம் .

Ashwin-WIN said...

அருமையான பதிவு..

டக்கால்டி said...

O'Brien ku O Podu

Post a Comment