Tuesday, November 8, 2011

பாப்கார்ன் பாக்கெட் - 20111108



ஐம்பத்தி எழு வயதை தொட்டிருக்கிறார் கலைஞானி. சச்சினின் கிரிக்கெட் சாதனைகளை போல , சினிமாவில் கமல் சரியாக செய்திருக்கிறார்.வயது ஏற ஏற புது முயற்சிகளை இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கும் சாதனையாளர். மக்கள் சலிக்கும் வரை மரத்தை சுற்றி சுற்றி பாடாமல் , மாற்றத்தை கொண்டு வந்து மக்களை மகிழ்விக்கும்  கலைஞன்.


சிவாஜிக்கு வயதானதும் தமிழுலகம் அவரை சரியாக பயன்படுத்தவில்லை. தாவணி கனவுகளும் ,முதல் மரியாதையும் ,தேவர் மகனையும் தவிர  சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் இல்லை. காரணம் திரையுலகம் அவர் மேல் வைத்திருந்த  மரியாதையும் அதனால் ஏற்பட்ட தூரமும்தான்.

கமல் அந்த விஷயத்தில் மிக கவனம் கொள்ள வேண்டும். இளைய இயக்குனர்களோடு படம் செய்தால் அமிதாப்பின் செகண்ட்  இன்னிங்க்ஸ் போல நல்ல வெற்றி கிடைக்கும்.  நல்ல வேளை இன்னும் கமலுக்கு முதல் இன்னிங்ஸே முடியவில்லை. அதையே இன்னும் பத்து வருடமாவது  தொடர்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடவுள் இயற்கை அதற்கு ஆதரவு  கொடுக்கட்டும்.

கமலின் மாஸ்டர்பீஸ்:


பிறந்த நாள் வாழ்த்துக்கள் உலகநாயகனே..
--------------------------------------

ரசித்தது:



தங்கச்சி !!! டில்லில இருக்குற எல்லா கடையிலையும் கேட்டுட்டு வந்துட்டோம்.... வஞ்சரமீன் இருக்குன்றான், வாலமீன் இருக்குன்றான், நெய் மீன் இருக்குன்றான், நெத்திலி மீன் இருக்குன்றான், கென்டமீன் இருக்குன்றான், கெலுத்தி மீன் இருக்குன்றான் இவ்வளவு ஏன்ணே சுறா மீன் முதற்கொண்டு இருக்குன்றான்.... ஆனா நீ கேட்ட ஜாமீன் மட்டும் இல்லையாம்...
கடல்லயே இல்லையாம்... :-)
------------------------------------

கண்டிப்பாக தெரிந்திருக்க  வேண்டிய செய்தி

ஆதார் அடையாள அட்டை:

இந்திய குடிமக்களுக்காக இலவசமாக வழங்கப்படும் 12 டிஜிட் எண் கொண்ட ஆதார் அடையாள அட்டையை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். பாஸ்போர்ட் இருக்கிறதோ இல்லையோ இந்த கார்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்.

தபால் நிலையத்தில் உங்கள் அப்ளிகேஷனைப் பூர்த்தி செய்து, உங்கள் பத்து விரல் கை ரேகை பதிந்து, புகைப்படம் எடுத்த பிறகு உங்களுக்கு தற்காலிக ஐடி கொடுப்பார்கள். 30 - 60 நாட்களுக்குள் வீட்டுக்கு உங்களுக்கு ஒரிஜினல் கார்டு கிடைக்கும். உங்களுடைய கார்டு ஸ்டெட்டஸை ஆன்லைன் மூலம் உங்களிடம் இருக்கும் தற்காலிக ஐடி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு கட்டணம் ஒன்றும் கிடையாது. இந்த கார்டு மூலம் உங்கள் வங்கி கணக்கும் இணைக்கப்படும். இது தான் நமது நாட்டின் பாஸ்போர்ட்டுக்கு அடுத்த பெரிய ஐடி. இதை வைத்து நேபாலுக்கு கூட பாஸ்போர்ட் இல்லாமல் செல்லலாம்.

நவம்பர் 1-ம் தேதி முதல் மயிலாப்பூர், தியாகராய நகர் மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமைத் தபால் நிலையங்கள் மூலம் அடையாள அட்டை பதிவுப் பணி தொடங்கி உள்ளது. நவம்பர் 21-ம் தேதி முதல் 31 மாவட்டங்களில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் அடையாள அட்டை பதிவுப் பணி தொடங்கவுள்ளது. கார்டு பெற அப்ளிகேஷனை இங்கு டவுன்லோடு செய்யலாம்.
அங்கே சென்று , மாநிலம் - தமிழ்நாடு-ஐ கிளிக்கவும்.
-------------------------------

'மாற்றம் என்பது மானுட தத்துவம்' என்ற கண்ணதாசன் வார்த்தை இந்த விஷயத்தில் பொய்த்து போகிறது. சில வழக்கங்கள் எப்போதும்  மாறுவதில்லை.

'திராவிட' கழகங்கள் மேடையில் கூவும்  'சுயமரியாதைதான் எங்கள் முதல் குறிக்கோள் '  என்பது சும்மா 'மைக் ஒன் டெஸ்டிங் ஓவர் ஓவர்  ' போலத்தானா ?



------------------------------

'வாகை சுட வா' இரண்டாவது தடவையாக பார்த்தேன். காட்டுக்குள் ஒரு செங்கல் சூளையும், அதை சுற்றி ஒரு முப்பது குடிசையும் மட்டும் செட் போட்டு , அதில் மட்டுமே இரண்டு மணி நேரத்தை ஓட்டியிருந்தாலும் , இயக்குனர் வெற்றி பெற்று விட்டார் என்ற அறிவிப்பது  , பார்ப்பவர் சலிப்படையாமல் ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை சிரிப்பதிலும் , கை தட்டுவதிலும் தெரிந்து விடுகிறது.


களவாணி கிளாசிக்கல் காமெடியாக கொடுத்து கல்லா கட்டியிருந்தாலும், போன ரூட்டிலேயே போகாமல் , நல்ல கருத்தை அறிவிக்கும் படமாக  இரண்டாவது படத்தை கொடுத்திருக்கிறார் சற்குணம். 

விமல் நடிப்பு படத்துக்கு படம் மெருகேறுகிறது.இனியா இனிய நடிப்பு.பாடல்கள் ஏற்கனவே சொன்னது போல் எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரி - அட்டகாசம் கிப்ரான். 

சூழலின் வெப்பத்தை ,மக்களின் கடின வாழ்க்கையை காண்பிக்க படம்  முழுக்க பயன்படுத்திய  கேமரா டோன் மிக அருமை.பொருத்தம்.
இது போன்ற முயற்சிகள் கண்டிப்பாக வரவேற்கப்பட வேண்டும்.


ஹ்ம்ம். புது இயக்குனர்கள் பட்டையை  கிளப்புகிறார்கள்.
அனுபவ இயக்குனர்கள்தான் குட்டையை குழப்புகிறார்கள்.

----------------------------------------------------

உன்னிமேனனின் முதல் பாடல்.  பல வருடம் , இதை  யேசுதாஸ்தான் பாடியிருக்கிறார் என்று நம்பியிருக்கிறேன்.
உன்னிமேனன் குரலும் , கமலின் போலீஸ் கெட்டப்பில் மிதமான புன்னகை கலந்த காதலின் உணர்ச்சியும்  , ரேவதியின் அழகும்...
அற்புதம்.என் ஹிட் லிஸ்டில் எப்போதும் இருக்கும் பாடல். 



---------------------------------------

8 comments:

rajamelaiyur said...

//தங்கச்சி !!! டில்லில இருக்குற எல்லா கடையிலையும் கேட்டுட்டு வந்துட்டோம்.... வஞ்சரமீன் இருக்குன்றான், வாலமீன் இருக்குன்றான், நெய் மீன் இருக்குன்றான், நெத்திலி மீன் இருக்குன்றான், கென்டமீன் இருக்குன்றான், கெலுத்தி மீன் இருக்குன்றான் இவ்வளவு ஏன்ணே சுறா மீன் முதற்கொண்டு இருக்குன்றான்.... ஆனா நீ கேட்ட ஜாமீன் மட்டும் இல்லையாம்...
கடல்லயே இல்லையாம்... :-)
//

ஆவ்வ்வ்வவ்

rajamelaiyur said...
This comment has been removed by the author.
rajamelaiyur said...

இன்று என் வலையில்

Hamster Video Converter – ஒரு பயனுள்ள மென்பொருள் உங்களுக்காக

rajamelaiyur said...

அருமையான பாடல்

N.H. Narasimma Prasad said...

ரொம்ப அருமையாக எழுதுகிறீர்கள் அசோக். 'நம்மால் இது போல எழுத முடியுமா?' என்று பலமுறை யோசித்து பார்க்க வைக்கிறது உங்கள் எழுத்து நடை. வாழ்த்துக்கள் பல நண்பா.

சுபத்ரா said...

நல்ல பதிவு.. ரசித்தேன். பொன்மானே கோபம் ஏனோ எனக்கும் மிகவும் பிடித்த பாடல். எனது ஹிட்லிஸ்டிலும் எப்போதும் உண்டு. இங்கு கண்டதில் மகிழ்ச்சி! உன்னிமேனனின் முதல் பாடல் என்பது நான் அறிந்திராத் தகவல்.. நன்றி!

அபிமன்யு said...

பாராட்டிய அனைவருக்கும் நன்றி..

ஊர்காவலன் prasad சார் ,
நீங்க கொடுக்குற அரிய தகவல்கள், புகைப்படங்கள் விடவா இங்க இருக்கு? எனினும் நன்றி நண்பா..

N.H. Narasimma Prasad said...

அசோக் சார், அரிய தகவல்களோ அரிய புகைப்படங்களோ யார் வேண்டுமானாலும் எழுதிவிடலாம். ஆனால் எழுத்து நடை என்பது சிலருக்கு மட்டுமே சாத்தியப்படும் விஷயம். அது உங்களுக்கு அருமையாக சாத்தியப்பட்டிருக்கிறது.

Post a Comment