Friday, August 12, 2011

ஆதங்கம்

'கோழைத்தனம் என்பது என்ன தெரியுமா?

எதிரியிடம் காட்ட வேண்டிய வீரத்தை , கையில் சிக்கும் அவர்கள் இன அப்பாவிகளிடம் காட்டி வீரம் பேசுவதுதான். '

இந்த கருத்தை , போர் சமயம் விடுதலைபுலிகள் சிக்காத கோபத்தில் , இலங்கையில் இருந்த தமிழர்களிடம் கொடூரம் காட்டியபோது சிங்களத்திற்கு உலக  பெரியவர்கள் சொன்னது. 

இப்போது இதை நாமும் நினைத்து பார்க்க வேண்டிய கட்டாயம் நேர்ந்து விட்டது.

இலங்கையில் இருந்து தமிழகம் வந்த சிங்களவர்களை (சிங்கள - புத்த மத பக்தர்களை  )ஆடைகளை களைய சொல்லி ,'நாம் தமிழர்' இயக்க தொண்டர்கள் (?!!?)  செய்த செயல் ஒட்டுமொத தமிழகத்தையும்  தலைகுனிய வைத்திருக்கிறது.
காரணம் - மிக அல்பம் - அவர்கள் அணிந்திருந்த சட்டையில் சிங்கள எழுத்து பொறிக்கப்பட்டிருந்ததாம்.

புத்தகயாவுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பை அதிகபடுத்துமாறு மனுக்கள் மதிய அரசுக்கு குவிகின்றன..

எந்த கொள்கையிலும் தெளிவில்லாமல் , வெறும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுக்கு ஆட்பட்ட கூட்டம் இப்படிதான் செய்யும்..

என்ன முட்டாள்தனம் இது? எத்தனையோ புகழ்களையும்  சிறப்புகளையும்  காலப்போக்கில்  இழந்திருக்கும் தமிழகம் , பாதுகாப்பான மாநிலம் என்பதை மட்டும் எக்காலத்திலும்  விட்டு கொடுத்ததில்லை. இப்போது அந்த பெயருக்கும் களங்கம் ஏற்பட்டிருக்கிறது.இத்தனை இனபிரச்சனை இருந்தாலும் , சின்ன பயமும் இன்றி தமிழகத்துக்கு வந்த பக்தர்கள் இதுவரை நினைத்தது - 'தமிழர்கள் எந்நாளும் தவறாக நடக்க மாட்டார்கள்  ' என்ற நம்பிக்கை சிந்தனையே.அந்த நம்பிக்கையில்தான் நாம் உயர்ந்து நிற்கிறோம்.சிங்களவர்களிடமிருந்து வேறுபடுகிறோம் .மாற்றாரும் போற்றும் அந்த நடத்தை நம்மிடம் இருந்ததை உலகமும் கண்டுகொண்டிருந்தது.  இப்போது அதிலும் மண்.

இனி ராஜபக்ஷேவை பார்த்து நாம் எதாவது கேள்வி கேட்டால் , 'நீங்கள்  மட்டும் யோக்கியமா ? ' என்று எதிர் கேள்வி கட்டாயம் வரும்.
இது நாள் வரை நாம் இலங்கை விஷயத்தில் உரக்க குரல் கொடுக்கும்போது ,நம்மிடம் பக்கபலமாக  இருந்த ஒன்றே ஒன்று , வன்முறையை கையாளாமல் நாகரீகமாக நாம் காட்டிய எதிர்ப்பு.

இப்போது அவர்களுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம்  இல்லை என்பதை காட்டி விட்டோம்.

இங்கே நாம் ஏற்படுத்தும் ஒவ்வொரு முட்டாள்தனமான வன்முறையும் , அங்கே நம் சகோதரர்களுக்கு அடி உதையாக திருப்பி கிடைக்கும்.இலங்கையில் ஏதோ ஒரு சிங்களவர் , அருகில் இருக்கும் தமிழரிடம் இது வரை நட்பு பாராட்டி வந்திருந்தாலும்  ,அதற்கும் இப்போது விரிசல் ஏற்படுத்தி விட்டது இந்த நிகழ்வு.

தமிழக மீனவர்கள் விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்க தொடங்கியிருக்கும் சிங்கள படை இனி இதே போல் பழி வாங்க ஆரம்பித்தால்..?அவர்கள் வன்முறை செய்கிறார்கள் என்று நாமும் செய்ய கூடாது என்பதற்கு ஒரே காரணம் உண்டு. அங்கு காந்தி என்ற மகான் பிறக்கவில்லை.

தவறான கொள்கையை கொண்டாடி சீரழிந்து போன நிலைக்கு எடுத்துகாட்டு ஏராளம் உலகில் உண்டு.
இங்கு வேண்டாமே..

 நாம் எப்போதும் போல காந்தி வாரிசாகவே இருப்போம். 

---------------------------------------------------------------------

சென்ற வாரம் நடந்தது இது.

'அம்மாவின் செல்லப்பிள்ளை ஓ.பன்னீர் செல்வம். அவர் கேட்டால் எல்லாம் நடக்கிறது' என்று சட்டசபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் லாசர் கூறியதற்கு பன்னீர் செல்வம் 'நான் மட்டுமல்ல, தமிழகத்தில் அதிமுகவில் உள்ள ஒரு கோடி பேரும் முதல்வருக்கு செல்லப்பிள்ளைகள் தான்' என்று பதில் சொல்லியிருக்கிறார்.

இடையில் அம்மா குறிக்கிட்டு 'ஒரு கோடி அதிமுகவினர் அல்ல, ஒன்றரை கோடி அதிமுகவினர்' என்று திருத்திய சம்பவம் சட்டசபையில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தோசம் அம்மா.

ஒரே கேள்வி - ' நூறு நாளா எதை படிக்கிறதுன்னு தெரியாம தவிச்ச லட்சக்கணக்கான      
 மாணவர்கள் உங்கள் செல்ல பிள்ளைகள் கிடையாதா?'உச்ச நீதிமன்றம் தீர்பளித்து வேறு வழியில்லாமல் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தும் தமிழக அரசிடம் , இது வரை ஏன் அதை நிறுத்தி வைத்தோம் ? என்ற கேள்விக்கு தக்க பதில் இல்லை..

இனி இந்த வருடம் மீதி ஆறு மாதம் மாணவர்களுக்கு புது சவால். மிக குறுகிய காலக்கெடுவில் , பாடங்களை படித்து தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

பெரும்பாலும் சனி ஞாயிறு பள்ளி இருக்கும். சொல்லித்தரும் ஆசிரியர்களுக்கும் 'பாடங்களை முடிக்க வேண்டுமே' என்ற பரபரப்பில் முழுதாக பாடத்தை ,அதன் கருத்தை உணர வைக்க சிரமப்படபோவது இயற்கை.

தொடர்ச்சியான வகுப்புகளால் மாணவர்களும் ,பெற்றோரும்,ஆசிரியர்களும் களைத்து போவார்கள்.

அதிலும் குறிப்பாக சுமாராக படிக்கும் மாணவர்கள் நிலை பரிதாபம். எதையும் உடனே புரிந்து கொள்ளும் கற்பூர புத்தியுள்ள மாணவனுக்கே இம்முறை சவால் என்றால், புரிந்து கொள்ள நேரம் எடுத்து கஷ்டப்பட்டு விஷயத்தை , பாடத்தை கிரகிக்கும் ஆவரேஜ் மாணவர்கள் இம்முறை மிக கடின உழைப்பை கொடுக்க வேண்டும்.மாணவர்களுக்கு இப்போது தேவை ஆசிரியர்கள் , பெற்றோர்களிடம் இருந்து கிடைக்க வேண்டிய உதவி-ஆதரவும் , தன்னம்பிக்கையும் , கடின உழைப்பும் , சலிப்படையாத கவனமுமே..

இதுபோல இனி நடக்காது என்று நம்புவோம். நடக்க விட கூடாது என்று இம்முறை போல் ஒற்றுமையாய் கைகோர்த்து எண்ணுவோம்.

14 comments:

Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

superb

Thaniyan Pandian said...

தாங்களின் உணர்வுக்கு முதலில் எமது வாழ்த்துக்கள். மேலும் சில பல நெளிவு சுழிவுகள் சொல்ல வேண்டியிருக்கிறது, என்னவென்றால்

///'தமிழர்கள் எந்நாளும் தவறாக நடக்க மாட்டார்கள்'. ///இப்படி சொல்லி சொல்லித் தான் லட்சத்தி எழுபதாயிரம் பேர் கொல்லப்படும்போது கையாலாகாத கயவர்களாக, பணம் பதவி மனம் மானம் இருந்தும் ஒரு துப்புக்கும் துலங்காதவர்களாக நாம் இரையாக்கப் பட்டோம் எதிரிகளால், துரோகிகளால். .

///மாற்றாரும் போற்றும் அந்த நடத்தை நம்மிடம் இருந்ததை உலகமும் கண்டுகொண்டிருந்தது. /// இதை சொல்லி சொல்லி எத்தனை பேர் தான் கொள்ளை அடிப்பார்கள் நம் நாட்டை, உலகம் கொள்ளை அடிக்க ஆசைப்படத் பூமியை இன்றும்...

///சிங்கள படை இனி இதே போல் பழி வாங்க ஆரம்பித்தால்..? /// அவன் தலையை எடுக்க வேண்டியது தான் ஒரே வழி. எவன் இவனுக்கு உரிமை தந்தது எம்மை கொள்வதற்கு. இவர் யார் எம் மேல் கை வைக்க. கொள்ளை அடிக்கும் கூட்டங்கள் இங்கே இருக்கும் வரை அவன் ஆட்டிக்கொண்டு தான் இருப்பான் . சோற்றில் உப்பு போடாத தமிழன் அதை பார்த்துக் கொண்டு வியாக்கியானம் பேசிக் கொண்டு இருக்க வேண்டியது தான். நம்மை கொல்ல வந்தால் உலகில் மிகப் பெரிய இராணுவப் படை கொண்டா இந்தியா எம் மக்களை காக்காமல் பாகிஸ்தான் படையா வந்து பாதுகாக்கும்? சுட்டால் திருப்பி சுடவேண்டியது தான்.

///அவர்கள் வன்முறை செய்கிறார்கள் என்று நாமும் செய்ய கூடாது என்பதற்கு ஒரே காரணம் உண்டு. அங்கு காந்தி என்ற மகான் பிறக்கவில்லை./// காந்தி பிறந்த நாட்டில் தான் இராணுவத்திற்கு அதிக செலவு செய்யப்படுகிறது ஒவ்வொரு நிதி ஒதுக்கீட்டிலும், அகிம்சை நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று என்பது உலக உண்மை என்பது திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. அன்பும் அமைதியும் தான் சிறப்பு என்பதுவும், அதற்க்கு பாதுகாப்பு (Defence) மிக முக்கியம் என்பதும் அவசியம் தெரிய வேண்டிய ஒன்று.

///சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தும் தமிழக அரசிடம் , இது வரை ஏன் அதை நிறுத்தி வைத்தோம் ? என்ற கேள்விக்கு தக்க பதில் இல்லை./// இரண்டு மாத செய்தித்தாள்களை நீங்கள் படிக்கவில்லையோ என்னவோ. கருணாநிதியின் ஆட்சியில் நடந்த எதுவும் எமக்கு வேண்டாம் என்பதே அது. நீதிமன்ற உத்தரவிற்கு பின் தான், உண்மை நிலை மக்களுக்கு பயன்படும் என்றும், தடுக்க வேறு வழியில்லை என்பதாலும் உடனடியாக நிறைவேற்றபடுகிறது இன்று.

உங்களின் நாடு கடந்த உணர்விற்கு, வேர் கொண்ட வார்த்தைகளுக்கு எமது வாழ்த்துக்கள் மறுபடியும்.

அபிமன்யு said...

'எந்த கொள்கையிலும் தெளிவில்லாமல் , வெறும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுக்கு ஆட்பட்ட கூட்டம் இப்படிதான் செய்யும்..' என்ற என் வாதத்திற்கு மேலும் ஒரு உதாரணம் மேலே உள்ள பின்னூட்டம்.. இங்கே வரும் அப்பாவி அயல்நாட்டவரை துன்புறுத்தலாமா ? என்ற என் ஆதங்கத்திற்கு சரி /தவறு என்று பதில் சொல்லாமல் ஏதேதோ உணர்ச்சிவசப்பட்டு எழுதிய பின்னூட்டம்..

நண்பர் பாண்டியன் அவர்களே..

எதை எதையோ கொட்டியுள்ளார்..அத்தனையும் உண்மை.. நூற்றுக்கு நூறு உண்மை.. ஆனால்...

'///சிங்கள படை இனி இதே போல் பழி வாங்க ஆரம்பித்தால்..? /// அவன் தலையை எடுக்க வேண்டியது தான் ஒரே வழி.' என்ற ஒரே கருத்தில் நான் முற்றிலுமாக மாறுபடுகிறேன்.
அன்பாக ஆனால் ஆணித்தரமாக கண்டிக்கிறேன்.இங்கே நான் சொன்னது நம் ஊருக்கு வரும் அப்பாவிகளைப் பற்றி...

அஹிம்சை நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று என்று சொல்லியுள்ளீர்கள்.. அப்படி உதவாத ஒன்றுதான் நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்தது என்பதை மறந்து விட்டீர்கள் போலும்..

ஆனால் பாதுகாப்பு வேண்டும் என்ற தங்கள் வாதத்தை நான் முற்றும் ஆமோதிக்கிறேன்.. மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சிங்கள விஷயத்தில் மேம்போக்காக நடிக்கும் நிகழ்வே மாறி மாறி நடக்கிறது.. மாநிலத்திலும் அப்படித்தான்.. ஆனால் இப்போது மக்கள் குரல் ஓங்கியுள்ளது..விரைவில் எல்லா வழிகளிலும் போராட்டம் நடக்கும் நிலை உருவாகி வருகிறது...ஆனால் அது வன்முறையை கிளறி விட கூடாது.. அது கடைந்தெடுத்த முட்டாள்தனம்...


சமச்சீர் கல்வி விஷயம் - தற்போதைய ஆளும் கட்சியின் ஆணவ போக்கை காட்டுகிறது..கருணாநிதியின் ஆட்சியில் நடந்த எதுவும் எமக்கு வேண்டாம் என்பதே தகுந்த காரணம் இல்லை என்பதே என் வாதம்.மற்றபடி நான் ஒன்றும் திமுக அனுதாபி அல்ல..

உங்கள் குறிக்கோள் மிக நல்லது..அதை அடைய வழியாக வன்முறையை நம்புவதை நான் ஒத்துக்கொள்ள முடியாது..
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி..

Anonymous said...

இப்படி சிலர் கோபமா பேசுதாலத்தான் , எல்லார் மேலும் தப்பான அபிப்ராயம் வருது..
அங்க பிரச்சனை தீயா எறிஞ்சிட்டு இருக்கும்போது இங்க முட்டாள்தனமா அப்பாவிகளை சட்டையை கழுட்ட சொல்லற அனகரீகதுக்கு சப்பகட்டு கட்டறாங்க..
Well replied abimanyu..
sorry for spelling mistakes.. i am not familiar with tamil translation

- Jayaraj Prasanna

அபிமன்யு said...

அனானி ஜெயராஜ்.. அவரவர் சுதந்திரம் அது..நியாயமான கோபமும் நல்லதுதான்.. நன்றி..

Thaniyan Pandian said...

///தமிழக மீனவர்கள் விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்க தொடங்கியிருக்கும் சிங்கள படை இனி இதே போல் பழி வாங்க ஆரம்பித்தால்..? ///என்று சொன்னதற்கு என்னவென்று பொருள் கொள்வது? தெளிவாக எழுதி இருக்கலாம்.
மேலும் எம் மீனவர்களின் கழுத்தை, நாக்கை, பிறப்புறுப்பை வெட்டியெடுத்து, மீன்களுக்கு இரையாகி, கடலுக்கு காவு கொடுக்கப்பட்ட புகைப்படங்களாகப் பார்த்த எம்மை போன்றோர் இது போன்று தான் எழுத முடியும். வெறும் தட்டச்சு புரட்சி செய்யும் மென்பொருள் அல்ல இது வாழ்வியல் துயரம்.

///நம் ஊருக்கு வரும் அப்பாவிகளைப் பற்றி... ///
இத்தனை பேர் இறந்ததை பற்றி ஒரு வரி கூட(தமிழர்களிடம் கொடூரம்) நீங்கள் உங்களின் கட்டுரையில் எழுதாமல் அவர்களுக்கு வக்காலத்து வாங்குவது போல் நாம் இப்படி இருந்தோம், இப்படி நடந்துவிட்டோம், இனிமேல் அவர்கள் இப்படி செய்தால் ஐயகோ என்ன செய்வது போன்ற வார்த்தைகளுக்கு என்னவென்று பதில் சொல்ல முடியும்?

எமது அறவுணர்ச்சி அறிவோடும், உணர்வோடும் உள்ளது. சிறுபுத்தி கொண்டு சுயநலமாக எழுதியது இல்லை. அவன் என் அண்ணன், என் தம்பி. என் சக நாட்டின் மனித உயிர். அவனை அடித்தால் திருப்பி அடிப்பேன் என்பது இம்சை என்றால் அது செவுட்டில் அறையும் போது மட்டும் தான் புரியும். அதை புரியவைப்பது எனது வேலை இல்லை.

///அஹிம்சை நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று என்று சொல்லியுள்ளீர்கள்.. அப்படி உதவாத ஒன்றுதான் நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்தது என்பதை மறந்து விட்டீர்கள் போலும்../// உங்களுக்கு உண்மையான வரலாறு சொல்லிக் கொடுக்கப்படவில்லை தோழரே. தமிழ்நாட்டில் பாடநூல்கள் மட்டும் படித்தவர் இப்படி தான் பேசமுடியும். ஒரு தலைவர் கூறினார் "இந்தியாவிற்கு காந்தியால் தான் சுதந்திரம் வந்தது என்றால் பாலே நடனத்தில் திளைத்துக் கொண்டிருந்த இலங்கைக்கும், மலேயாவுக்கும், சிங்கப்பூருக்கும், பாகிஸ்தானுக்கும், பர்மாவுக்கும் யாரால் சுதந்திரம் கிடைத்தது என்று, மேலும் இரண்டாம் உலகப் போரில் பலத்த அடி வாங்கிய இங்கிலாந்து இனிமேல் காலனியாதிக்கத்தை வைத்து பிழைப்பை சுகமாக நடத்தமுடியாது என கண்டுகொண்டு நமக்கு அளித்தது தான் இந்த சுதந்திரம். மூளிச் சுதந்திரம்" என்று.

மேலும் காமன்வெல்த் (பொதுவான பொருளாதார நடவடிக்கை) கூட்டிணைவு. அதை எதிர்த்து எதுவும் எவரும் செயல்படமுடியாது. சுதந்திரம் வாங்கி மூன்றாண்டுகாலம் நாம் நேரிடையான ஆங்கிலேய பார்வையில் கைப்பாவையாக இருந்தோம். உலகத்தில் சுதந்திர தினம், குடியரசு தினம் என்று இரண்டு இருப்பது நமது அருமை பாரதத்திற்கு மட்டும் தான்.இதெல்லாம் உங்களுக்கு கண்டிப்பாக தெரியாது. தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உலக அரசியல் படித்தால் தான் இது புரியும்.

///அது வன்முறையை கிளறி விட கூடாது./// என்னவொரு இரக்க சிந்தனை வேண்டுகோள்!!!!!!!. இறந்து போன உயிர்கள் பற்றி, இன்று முள்வேலியில் தரமான வாழ்வு, உணவு, உறைவிடம், சுகாதாரம், வேலை, கல்வி என எதுவும் இன்றி, பலாத்காரம் பால்பிறழ்ச்சி போன்ற இத்தனை பிரச்சனைகளில் உங்களுக்கு வன்முறையாக தெரியவில்லை?. நீங்கள் எல்லாம் இது போன்ற மேலோட்டமாக அரசியலை பார்ப்பதால் தான், இன்று தமிழினம் கேட்பாரற்று கிடக்கிறது.

///தற்போதைய ஆளும் கட்சியின் ஆணவ போக்கை காட்டுகிறது./// அருமை நண்பருக்கு எந்த அரசியல்கட்சி ஆனாலும் [காட்சி] மாறும் பொது இது தான் நடக்கும் என்பது தமிழகம் அறிந்த உண்மை. ஆணவம் என்றால் அது உங்கள் பார்வை. அவ்வளவே.

Thaniyan Pandian said...

திரு. ஜெயராஜ் பிரசன்னா ///பிரச்சனை தீயா எறிஞ்சிட்டு இருக்கும்போது /// ஐயா நீங்கள் என்ன அறிவாளித்தனமாக செய்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? ஒரு நாட்டில் மக்கள் சக்தியை இருபது ஆண்டுகளுக்கு மேல் அவர்களின் ஆதரவோடு இராணுவம், கல்விக்கூடங்கள், பல்கலைக்கழகம், மருத்துவமனை, போக்குவரத்து, உலக அரசியல் நடவைக்கைகள் என மிகப் பெரிய அறிவு ஊக்கத்தை, உண்மை தமிழரின் சமதர்ம செயல்களை செய்தவன் தமிழன். நான் விடுதலைப் புலிகளை தான் சொல்கிறேன். (ராஜீவ் படுகொலைக்குப் பிறகு, 26/11ற்கு பிறகு ஏற்பட்ட உலக மாற்றங்கள் எமக்கும் புரியும்.) அவருக்கு நாங்கள் உணர்வுப்பூர்வமாக கை கொடுக்காமல் "நீ இறப்பது உன் விதி, நானும் இறக்க விரும்பவில்லை, நான் பிழைத்தால் போதும்" என்று அறிவு பேச்சு பேசச் சொல்கிறீர்களா? குறைந்த பட்ச வரிகளை கூட உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நீங்கள் எல்லாம் களத்தில் வந்தால்.... என்னவென்று சொல்வது!!!

பணியிடத்தில் சக பணியாளர் ஒருவரிடம் "உங்களோட அம்மா, தங்கை கால் வேறு, கை வேறு என பிய்க்கப்பட்டு கிடக்கும் போது, அதை பார்க்கும் போது தான் தான் உங்களுக்குப் புரியுமா?"என்று கேட்டவுடன் தான் அவருக்கு உரைத்தது. அதுவரை உங்களைப் போன்று மேதாவியாக, அகிம்சை தான் பேசிக்கொண்டிருந்தார் மற்றும் ஏக வசனம் தான் அவர்களிடம். விடுதலை புலிகள் அமைப்பு வந்ததே செல்வா போன்றவர்களின் அகிம்சை தோற்றுப் போனதால் தான். பட்டவனுக்குத் தான் தெரியும் புரியும் அந்த வலி. சிறிது உண்மை தெரிந்து, வலி உணர்ந்து, உணர்வோடு எழுதுங்கள். இல்லையென்றால் அமைதியாக கூட இருக்கலாம். இது எனது வேண்டுகோள்.


இறுதியாக ///இங்கே வரும் அப்பாவி அயல்நாட்டவரை துன்புறுத்தலாமா ? என்ற என் ஆதங்கத்திற்கு/// கண்டிப்பாக கூடாது. மாற்றுக்கருத்து இல்லை.

Anonymous said...

@pandiyan
//வெறும் தட்டச்சு புரட்சி செய்யும் மென்பொருள் அல்ல இது வாழ்வியல் துயரம்.//

blog writer software companynaa neenga enna senjurukeenganu therinjukkalaamaa? I guess from your reply you may also work in software company only..if not you have no rights to speak. You are also the same தட்டச்சு புரட்சி guy..

இதெல்லாம் உங்களுக்கு கண்டிப்பாக தெரியாது. தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உலக அரசியல் படித்தால் தான் இது புரியும்.

oh avangalaiyae avanga methavaaivu nu sollikira kootathula irunthu vanthavara neenga..?

--------------
@abimanyu

i also have a second thought...
Are you against ADMK?
I agree the pain for students but you have no rights to comments on CM's comment...
Even MK will say these kind of jokes before..

other than that... good job.. continue..

- Jayapandi Rasuthevar

Thaniyan Pandian said...

///அஹிம்சை நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று என்று சொல்லியுள்ளீர்கள்.. அப்படி உதவாத ஒன்றுதான் நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்தது என்பதை மறந்து விட்டீர்கள் போலும்../// என்று சொன்னதற்கு தான் எனது பதில் இதற்குமுன் பதிந்தது. அதை நீங்கள் வேறுவிதமாக எடுத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

///இப்படி சிலர் கோபமா பேசுதாலத்தான் , எல்லார் மேலும் தப்பான அபிப்ராயம் வருது../// இது வெறும் கோபம் அல்ல உள்ளுணர்வு, ஆறாவது அறிவு என்பதை தான் விளக்கினேன் அன்றி அவரை தூற்றும் எண்ணம் சிறிதும் எனக்கு இல்லை. அது எனது நோக்கமும் இல்லை.

///if not you have no rights to speak
but you have no rights to comments on CM's comment...///என்று சொல்லுமளவிற்கு நான் கடும் விமர்சகன் இல்லை. I'am not working as Human Rights Commissioner, Sir.

Anonymous said...

விடுங்கா பாண்டியன்.. இவன் வெளிநாட்ல சம்பாதிக்ரா computer engineer .அப்படிதான் பேசுவான். காலைல என்திர்ச்சதும் இவன என்ன திட்டிட்டு..

these ppl are not worth for shouting..soon time will change..recession came...haha

அபிமன்யு said...

தனியனின் உணர்வுக்கும்,மக்கள் மீது வைத்திருக்கும் நேசத்திற்கும் தலைவணங்குகிறேன்..

காமன்வெல்த் தொடங்கி பல விசயங்களை இதில் சொல்லியிருக்கும் அவரின் பரந்த அறிவுக்கும் என் பாராட்டுக்கள்..மற்றபடி அவர் விருப்பம் போல தலையை எடுக்க வேண்டியது தான் ஒரே வழி என்று எண்ணுவதை தடுக்க எனக்கு உரிமை இல்லை.. அது அவரவர் சுதந்திரம்..

எல்லார் எண்ணமும் ஒன்றுதான். தமிழர்க்கு போராடுவது.. அந்த ஒரு புலியில் மட்டுமே அவரோடு என்னால் ஒத்து போக முடியும்..

ஆனால் தட்டச்சு புரட்சி மட்டும் பத்தாது என்றால் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும் , தலை எடுப்பதை தவிர..

jayapandi,
நான் அதிமுகவிற்கு எதிரானவனா என்று என் முந்தைய திமுக பற்றிய அலசல்களை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

anony அன்பரே,

நான் வெளிநாட்டில் சம்பாதிக்கும் கணினி துறை சார்ந்தவன்தான்..recession பற்றி நீங்கள் மகிழும் புத்தி ,உங்கள் மனதை,அதன் தன்மையை காட்டுகிறது.. தாராளமாக சிரிக்கலாம்..

Thaniyan Pandian said...
This comment has been removed by the author.
Thaniyan Pandian said...

///...உணர்வுக்கும்,மக்கள் மீது வைத்திருக்கும் நேசத்திற்கும்.../// இது ஒன்று தான் அனைத்து மக்களிடமும் நாம் எதிர்பார்ப்பது. மற்றவை எல்லாம் கிளைகளே, நம் கவனம் வேர்களில் தான், அதன் இலைகளில் இல்லை. நன்றி.

Post a Comment