வேர்ல்ட் கப் வந்துடுச்சு. இதுல இந்தியன் டீம் எப்படி இருக்கு ? என்ன லெவல்ல இருக்குன்னு அலசி ஆராய்ச்சி பண்ண ஆயிரம் பேரு இருக்காங்க. அட டோனி ராசிக்காரப்பையங்க; எப்படியாவது கோப்பையைத் தூக்கிட்டு வந்துடுவான்.
நமக்கு அந்த அளவுக்கு கிரிக்கெட் ஞானம் கிடையாது.ஆனா இந்த கிரிக்கெட் சீசன் வந்தாத்தான் சில பேரோட இன்னொரு முகத்த பாக்க முடியும் .அதுல்ல நெறைய அனுபவம் இருக்கு.
--------------------------------------------
உலகத்துலயே நம்ம பசங்க ராசி பாக்கறதுன்னா அது கிரிக்கெட்ல தான் . எக்ஸாம்க்கு கூட எரும மாடு எதிர்ல வந்தாலும் கண்டுக்காம போய் பெயில் ஆவான். ஆனா கிரிக்கெட்ல விட்டு கொடுக்க மாட்டான்.
' டேய் .. கால் மேல கால் போடாதடா. சச்சின் அவுட் ஆயிடுவான். '
'மச்சான் .. சொன்னேன்ல.. நான் இந்த சட்டை போட்டா அன்னைக்கு இந்தியா ஜெய்ச்சுடும்டா..'
'டேய் எனக்கு ஒவ்வொரு மெசேஜ் வரும்போது நம்மாளு ஒரு பவுண்டரி அடிக்கராண்டா.. நீ ஒரு மெசேஜ் அனுப்புடா..'
--------------------------------------------
கிரிக்கெட் பாக்கும்போது சில பேரு காரணம் இல்லாம யார் மேலயாவது கோவப்படுவாங்க.அதுல்ல லாஜிக் எல்லாம் இருக்காது..
' இந்த ரவி சாஸ்திரி கமெண்ட் பண்ணுனாவே இப்படித்தான்.. 'Today he is in good form '-னான்.. அடுத்த பால்ல மிடில் ஸ்டெம்ப் பறந்துடுச்சு. அன்னைக்கு அப்படித்தான் 'yuvraj is waiting in pavilion for his turn '-னு சொல்லி மைக்க வெச்சிருக்க மாட்டான் ;நல்லா போய்ட்டு இருந்த பார்ட்னர்ஷிப் ரன் அவுட்ல கவுந்துடுச்சு..'
'எவண்டா அம்பயர செலக்ட் பண்றான்? அதான் ஏற்கனவே ரெண்டு எல்பி கொடுத்தாச்சுல்ல.. மூணாவது இப்போ கொடுத்தே ஆகணுமா ?'
--------------------------------------------
அப்பப்போ சில பேர் , திடீர்னு கிரிக்கெட் சுப்புடு ஆகிடுவான்.
'தடிமாடு மாதிரி நிக்கிறான் பாரு. அவன் அடிச்சதுமே ஓட வேண்டியதுதான? இவனுக்கு பிட்னஸ் கொஞ்சம் கூட இல்லடா'
'ஒரு ஸ்கொயர் கட் அடிக்க தெரியல. இவன போய் பர்ஸ்ட் டௌன்ல ஏறக்கிருக்காணுக..'
'அட பாவி.. ட்ரை பிட்ச்.. பேட்டிங் எடுத்திருக்கணும்டா. சே, டாஸ் வேஸ்ட் பண்ணிட்டானுக.. '
--------------------------------------------
சில பேரு கிரிக்கெட்ட விட்டுட்டு மத்ததைத்தான் பாப்பாங்க. உண்மைலயே கிரிக்கெட்ல பெருசா நாட்டம் இருக்காது.
'ஏன் தம்பி , யாரு இந்த சிங்கு? போன வேர்ல்ட் கப்ல ஒரு பொண்ணு பேசுமே அது பேரு கூட என்னமோ போடின்னு?'
'அதுவா , அது மந்த்ரா பேடிங்க'
'அதான் அதான் .. அதுக்கு எனன ஆச்சு ?'
'இந்த தடவ இவருதாங்க'
'என்னமோ போங்கப்பா..அது எவ்ளோ அழகா பேசிட்டு இருந்துச்சு ? இவன் ஏன் இப்படி இங்கிலிஷ கடிச்சு துப்பறான்..இவனுக்கு எனன தெரியும் கிரிக்கெட்ட பத்தி..?'
'இவர்தான் சித்து. பழைய பிளேயர். '
'சரி வரேன்பா.. அப்போ இந்த தடவ அந்த பொண்ணு கண்டிப்பா வராதா ?'
(எரிச்சலாக ) 'தெரியாது '
'படிப்ப பாருங்கப்பா. கிரிக்கெட்டா மார்க் வாங்கிதரபோகுது. உங்க அப்பா எங்க ?'
--------------------------------------------
இல்லத்தரசிகளை பழிவாங்க நம்ம ஆளுகளுக்கு கெடைச்ச ஒரே ஆயுதம் கிரிக்கெட்தான்.
'இந்த மனுஷனுக்கு நான் சீரியல் பாக்கறது பொறுக்காது. ஆனந்தம்ல முக்கியமான கட்டம் .. பாக்கலாம்னு பாத்தா ,சீக்கிரமே வந்து உயிரை வாங்குது ?'
உண்மை என்னவோ மனுசனுக்கும் கிரிக்கெட் பத்தி எதுவும் தெரியாது ..ஆனா மனைவிய பழிவாங்க வேற வழி.. ?
'ஆ.. சூப்பர் ஷாட்.. என்னமா அடிக்கிறான் பாரு.. நம்ம ஆளுக சாதாரணம் இல்ல..தெரிஞ்சுக்கோ ..'
'என்னங்க சொல்றீங்க .. அந்த நாட்டுக்காரங்க சந்தோசமா கட்டிபுடிச்சுட்டு இருக்காங்க .. ?'
'அது அது ..நம்ம ஆளு நல்லாத்தான் அடிச்சான் .. ஆனா எதோ தப்பா நடந்துருக்கு.. இதுக்குதான் கவனமா பாக்கணும்.. பேச கூடாது.. நீ போய் சமையல் வேலைய பாரு'
--------------------------------------------
இந்த சின்ன பசங்கள வெச்சுகிட்டு கிரிக்கெட் பாக்கறதுக்கும் ஒரு பொறுமை வேணும்.
'அப்பா .. இந்தியா ஜெயிச்சுடுமாப்பா?'
'ஹ்ம்ம்'
'ஹ்ம்ம்னா .. சொல்லுங்க ?'
'பேசாம இருடா'
'அம்மாஆஆஆ அப்பா எனன கார்ட்டூன் பாக்க விடமாட்டீங்கறாரு..'
'டேய் டேய் .. கத்தாத.. இந்தியா ஜெயிக்கும்'
'சச்சின் நூறு அடிப்பாரா ?'
'இப்போதாண்டா 13 ரன் எடுத்துருக்கான்.. தெரியல '
'அம்மாஆஆ '
'ஆமா ஆமா கண்டிப்பா நூறு அடிப்பான்..'
'எனக்கு பேட் வாங்கி தரனும் ..இல்லேன்னா அம்மாவை கூப்புடுவேன்..'
'சரி'
'எப்போ வாங்கி தருவீங்க?'
'ஆண்டவா......'
--------------------------------------------
சில பேரு கிரிக்கெட்ல கொலை வெறியா இருப்பாங்க.. எங்க அப்பாவும் அதுல ஒரு உறுப்பினர்.ஜெயிக்கிற மாட்ச பாத்தா பரவாயில்ல .. தோக்கற மாட்சையும், அதுவும் படு கேவலமா தோக்கற மாட்சையும் Presentation வரைக்கும் பாக்கறது அவங்க பழக்கம்..
'அப்பா.. போதுமப்பா.. பாக்கறதுக்கே கஷ்டமா இருக்கு..சேனல்ல மாத்துங்க..'
'போடா .. எப்போவுமே ஜெயிச்சுகிட்டே இருக்கணுமா எனன ? இது வெளையாட்டுடா. வெற்றியும் தோல்வியும் மாறி மாறித்தான் வரும் '
அதோட நிறுத்திக்கணும் ... 'ஹ்ம்ம்..அப்புறம் ஏன் அழுகறீங்க ?'-னு கேட்டோம்னா , படிக்காதவன் விவேக் மாதிரி 'அது வலி.. வேற டிபார்ட்மென்ட்'னு சொல்லிட்டு டிவி வால்யுமை அதிகப்படுத்துவாரு..
-------------------------------------------
-------------------------------------------
எது எப்படியோ .. இதுல்ல ஒரு சந்தோசமும் திருப்தியும் இருக்கு..ஆனா வர்த்தக ரீதியா யாருக்கு லாபம்னு பாத்தா நம்ம கவர்மெண்டுக்குதான்.. சரக்குல கொள்ளை லாபம் பாப்பாங்க .. காரணம் நம்ம பசங்க ,இந்தியா தோத்தாலும் கவலைல குடிப்பாங்க .. ஜெயிச்சாலும் சந்தோசத்துல்ல அடிப்பாங்க..
நம்மளும் ஜோதில ஐக்கியம் ஆவோம் ..வாங்க..
Get ready for the fun I say ..
2 comments:
மிக அருமைங்க... என்னுடைய சொந்த வாழ்க்கையில் நடந்தவை போலவே இருக்கிறது. முன்பெல்லாம் இந்தியா அடித்து ஆட ஆரம்பித்துவிட்டால் இருக்கும் இடத்தை விட்டு நகரவே மாட்டோம். பாத்ரூம் கூட போகமாட்டோம். நகர்ந்தால் அவுட் ஆகிவிடுவார்களோ என்ற பயம்தான்.
உண்மைதான் பாலா..
சில விஷயங்கள் காலம் கடந்தும் அப்படியே இருக்கும்.. :)
Post a Comment