'பச்சைக்கிளி முத்துச்சரம் ' தோல்விக்கு கௌதம் மேனன் சொன்ன காரணங்களில் முதன்மையானது - ' இந்த கதைக்கு நான் தேர்ந்தெடுத்த நடிகர் சேரன்.சூழ்நிலை காரணமாக அவர் நடிக்கவில்லை '. அவர் விட்ட வாய்ப்பை கனகச்சிதமாக பற்றிக்கொண்டார் மிஸ்கின்.
தவமாய் தவமிருந்துக்கு பிறகு எங்கள் சேரனைக் காணவில்லை. இப்போதும் ஒரு இயக்குனராக அவருடன் எனக்கு நிறைய முரண்பாடுகள் உள்ளன. ஹீரோயினை 'டா' போட்டு கூப்பிடுவது; முகத்தை மூடிக்கொண்டு அழுவது; ஓவர்டோஸ் செண்டிமெண்ட் - இப்படி பல சறுக்கல்கள் அவர் படத்தில் இருக்கும். இடையில் அவர் நடித்த 'ராமன் தேடிய சீதை' அவருக்கு பொருத்தமான கதாப்பாத்திரமாக அமைந்தது. ஆனால் எத்தனை நாள்தான் ஒரே மாதிரி பாத்திரத்தில் ஒரே நடிகரைப் பார்ப்பது ?. சரி அவரே ஒரு படம் எடுத்து தன் இந்த static இமேஜை உடைப்பார் என்றால் அதுவும் இல்லை.
வந்தார் மிஸ்கின். 'ஒரு டைரக்டரா இல்லாம நடிகனா நான் சொல்ற மாதிரி நடிங்க; நல்ல மாற்றத்துக்கு நான் கேரண்டி' என்று சொல்லியிருப்பார் போல. பொக்கிஷம் எடுத்து புலம்பிக்கொண்டிருந்த சேரனும் , சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதுவும் இல்லாததால் ஒத்துக்கொண்டிருப்பார் போல .சொன்னதை காப்பாற்றிய மிஸ்கினுக்கும் , தன் ஈகோ எல்லாவற்றையும் விட்டுத்தள்ளி சொன்னபடி ஒத்துழைத்த சேரனுக்கும் வாழ்த்துக்கள்.
'சேரன், இதற்கு பிறகும் ஆட்டோக்ராப் 3 , பொக்கிஷம் 2 - உனக்கு நான் திருப்பிகொடுத்த காய்ந்த ரோஜாக்கள் - சாக்லெட் வ்ரேப்பர்கள் என்று மீண்டும் தடம் மாற மாட்டீர்கள் என நம்புவோமாக' ..
உண்மையான யுத்தத்தை செய்திருக்கிறார்கள். சேரனின் நடையுடை பாணிக்கு எங்கும் அலையாமல் முந்திய தன் பட நாயகன் நரேனிடம் கடன் வாங்கிக் கொடுத்திருகிறார் இயக்குனர். ஆனால் அதை சேரன் செய்யும்போது புதிதாக தெரிவது பிளஸ் பாயிண்ட். த்ரில்லர் பாணி கதைக்கு ஹீரோயின் வேண்டாம் என்று உதறியது இன்னொரு பிளஸ். எல்லாவற்றையும் விட மிகபெரிய பிளஸ் சேரனை காக்கிச்சட்டை போடாமல் காட்டியிருப்பதுதான்.
விறுவிறுப்பாக போகும் படத்துக்கு பாடல்கள் வேகத்தடையாகும் என்பதை புரிந்து பாதி பின்னிசையிலும் மீதி மௌனத்திலும் எடுத்தாண்ட விதம் அருமை. இசை சுந்தர் சி.பாபு அல்ல ; யாரோ கே . யார் என்று தெரியவில்லை; இந்த கதைக்கு பொருத்தமாக இசை கொடுத்திருக்கிறார். குட்.
முந்தய படங்கள் போல நகைச்சுவைக்கு எங்கும் இடம் வைக்கவில்லை. ஆனால் தனக்கே உரிய பாணியான - சிறு சிறு பாத்திரத்தையும் மனதில் பதிய வைப்பதை இதிலும் விட்டுகொடுக்கவில்லை. சரி கதைக்கு வருவோம்;
கதை ஒன்றும் புதியது அல்ல ; ஆனால் எடுத்த விதம் கிட்டத்தட்ட புதியது; நிறைய படங்களில் சொன்ன அதே தொடர் கொலைகளும் கற்பழிப்புகளும் , அதை தொடர்ந்து நடக்கும் போலீஸ் விசாரணைதான் ஒன் லைன்.Who is the culprit? சஸ்பென்ஸ் பாதி படம் வரை கடைபிடிக்கப்பட்டிருக்கிறது.நடுத்தர வர்க்கத்திற்கு அநியாயம் நேர்ந்தால் , வெற்றி பெறுகிறோமோ இல்லையோ , எதிரிக்கு கூடிய வரையில் வலியை உணர்த்திக்காட்டுவோம் என்பதை வலியுறுத்தியிருக்கிறார்கள்.புது கோணம்.
படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்தது மிக பொருத்தம் - ரத்தமும் வன்முறையும் ,அதையும் தாண்டிய உயிரோட்டமான போஸ்ட் மார்டம் காட்சிகள் என படம் முழுக்க அடிவயிறை பதம் பார்க்கும் நிகழ்வுகள். வீட்டில் குழந்தைகள் அடம் பிடித்தால் , காவலனுக்கோ குட்டிச்சாத்தானுக்கோ அழைத்துச் செல்லுங்கள் - இந்த பக்கம் தனியாக வாருங்கள்.
சண்டைக்காட்சிகள் மிக நேர்த்தி. ஒரு பாலத்தில் நடக்கும் சண்டையும் , பிறகு ஒரு கத்தியை வைத்துக்கொண்டு எதிராளியின் நெஞ்சில் , எந்த உணர்ச்சியும் காட்டாமல் குத்திவிட்டு செல்வது என சேரன் சிறப்பாக செய்திருக்கிறார். மிஸ்கினின் படங்களில் வரும் சண்டைகள் எப்போதும் நம்பத்தகுந்த அளவில் மிதமான ஹீரோயசத்துடன் இருக்கும் ; இதிலும் அப்படியே.
படத்தில் ஒரு இடத்தில ,சில நொடித்துளிகள் மட்டும் எழுத்தாளர் சாரு வருகிறார். நோ கமெண்ட்ஸ்.
இயக்குனரிடம் கேட்க வேண்டிய ஒரே கேள்வி - 'எல்லாம் சரி மிஸ்கின்.. உங்க திறமையில் யாருக்கும் இப்போது சந்தேகம் இல்லை. சித்திரம் பேசுதடிக்கு பிறகு உங்களை திரையுலகம் கண்டுகொள்ளவில்லை என்பதற்கு 'அஞ்சாதே','நந்தலாலா' கொடுத்து உங்களை நிருபித்து விட்டீர்கள். மற்றவர்களுக்கு (சர்ச்சைக்குரிய ) ஆலோசனையும் சொல்லுகிறீர்கள். ஆனால் எதற்காக குத்து பாட்டு ஒன்று எப்போதும் இடைச்செருகலாக.. ? நீங்களும் செண்டிமெண்ட் பார்க்கறீர்களா? இந்த குத்து பாட்டு எல்லாம் கதையிலும் தன்னிலும் நம்பிக்கையில்லாத இயக்குனர்கள் செய்வது. உங்களுக்கு வேண்டாமே ?.இதை தொடர்வது என்றால் அடுத்தவருக்கு ஆலோசனைகள் சொல்வது வேண்டாமே ? Let it be a mutual understanding '
கல்பாத்தி குடும்பத்திற்கு ஒரு High 5 . இப்போதெல்லாம் நீங்கள் கொடுக்கும் படங்கள் தரமானதாக இருப்பதற்கு உங்கள் தேர்ந்தெடுக்கும் திறமையும்
, ஸ்டார் வேல்யூவை மட்டும் நம்பாததும் ஒரு காரணம்.மகிழ்ச்சி.
ஆக மொத்தத்தில் இது மிஸ்கினுக்கு தொடரும் வெற்றி ; சேரனுக்கு புது வசந்ததிற்க்கான தொடக்கம்.
யுத்தம் செய் - வெற்றி முழக்கம்..
3 comments:
இசை கே கே வென்று ஒரே இரைச்சல் இவ்வளவு மோசமான ஒரு பின்னணி இசையை நான் கே ட்டதேயில்லை
படத்தின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்! ஒரு இடத்திலும் இசை உறுத்தவே இல்லை.
தமிழில் எடுக்கப்பட்ட முதல் தர த்ரில்லர் யுத்தம் செய்!
Good Review.
Post a Comment