கடவுளுக்கு ஒரு பொறாமை உண்டு. மிக நல்லவர்களை , அறிவு ஜீவிகளை பூமிக்கு அனுப்பி வைத்தால் வெகு சீக்கிரம் பொறுமை இழந்து விடுவார். உடனே அவர்களை திருப்பி அழைத்துக் கொள்வார். பாரதி ,ஷெல்லி , மொசார்ட்,கணிதமேதை ராமானுஜம் ,ப்ரூஸ்லீ ,மைக்கேல் ஜாக்சன், இப்படி பலர். இப்போது ஸ்டீவ் ஜாப்ஸ் - ஆப்பிள் கணினி நிறுவனர்.
இவரின் எண்ணமும் தொழில் முன்னேற்றமும் எந்த அளவுக்கு அதிக வளர்ச்சியடைந்ததோ அதே அளவுக்கு அவர் உடலில் புற்றுநோய் செல்களும் வளர்ந்து அவரை நாளுக்கு நாள் கொன்று வந்திருக்கிறது.அதை எதிர்த்து இவ்வளவு வருடங்கள் போராடியவர் , போன மாதம்தான் பணியில் இருந்து விருப்ப ஓய்வை அறிவித்தார்.
வேலையில் இருக்கும்போது இவரை அணுக முடியாத மரணம் , ஓய்வை நாடியபோது வெகுசுலபமாக அதன் வேலையை முடித்துவிட்டது.

--------------------
இனி இவரைப் பற்றி வெப்துனியா :
ஐபோன், ஐபாட், ஐடியூன்ஸ் போன்றவைகளை கண்டுபிடித்து ,கணினி தொழில்நுட்பத்தில் மைக்ரோசாப்டுக்கு போட்டியாக ஒரு சகாப்தமாக விளங்கியவர் ஸ்டீவ்.
இவரின் தகுதி என்று பார்த்தால் - பொறியியல் படிப்பில் எந்த முறையான பட்டமும் பெறவில்லை.கல்லூரியில் முதல் செமஸ்டருடனேயே படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு கணினி ஆர்வம் காரணமாக அந்த துறையில் மூழ்க தொடங்கினார்.
பிறந்தது - அமெரிக்கா, சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் , 1955 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ல் . அருகில் உள்ள ஒரு ஊரை சேர்ந்த தம்பதியரால் பிறந்த ஒரு வார காலத்திலேயே தத்தெடுக்கப்பட்டார்.
பள்ளி படிப்பின்போதே கம்ப்யூட்டர் விவகாரங்களில் ஆர்வம் காட்டிய ஸ்டீவ் ஜாப்ஸ், தாம் வசித்த நகருக்கு அருகில் உள்ள பாலோ ஆல்டோ என்ற ஊரில் இருந்த கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் கணினி நிபுணர்கள் உரையாற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஆர்வமுடன் சென்று வருவார்.பின்னர் கோடை விடுமுறையில் ஸ்டீவ் வாஸ்னிக் என்ற பொறியாளருடன் சேர்ந்து பணியாற்றினார்.
இந்நிலையில் போர்ட்லாண்டில் உள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ், முதல் செமஸ்டருடனேயே தமது படிப்புக்கு மங்களம் பாடிவிட்டு கம்ப்யூட்டர் தொடர்பான வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்ட தொடங்கினார்.
இந்த ஆர்வம் அவரை வீடியோ கேம் டெக்னீசியன்களில் முன்னோடி எனக் கூறப்படும் அடாரி என்பவருடன் சேர்ந்து பணியாற்ற வைத்தது.அதன் பின்னர் தம்மை போன்றே கல்லூரி படிப்பை பாதியில்விட்ட வோஜ்னியாக் என்பவருடன் சேர்ந்து கம்ப்யூட்டர் கிளப் ஒன்றில் சேர்ந்தார்.

கம்ப்யூட்டர் மீதான இவர்கள் இருவரது ஆர்வமும் ஒரே அலைவரிசையில் ஒத்துப்போன நிலையில், 1976 ஆம் ஆண்டு இருவரும் சேர்ந்து தொடங்கியதுதான் " ஆப்பிள் கம்ப்யூட்டர்".
இந்த நிறுவனத்தை தொடங்கியபோது ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு வயது 21; அவரது சகாவான வோஜ்னியாக்கின் வயது 26.
பின்னர் 1980 ஆம் ஆண்டு இருவரும் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டரை உருவாக்கி வெளியிட, அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் கணினி தொழில் நுட்பத்தை மாற்றிய பெருமை இவருக்கே உரியது. சாதாரணமான கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமாக உருவாகிய ஆப்பிள் நிறுவனத்தில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஐ பாடு மற்றும் ஐ டியூன்ஸ், ஐபோன் உருவாக்கியவர் இவரே.
2003 ஆம் ஆண்டு ஐ பாடு உருவாக்கபட்ட பிறகு இசை உலகில் ஒரு மாற்றமே ஏற்பட்டது. சுமார் 20 கோடி பேர் இதில் பதிவு செய்து ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட பாடல்களை பதிவிறக்கம் செய்து ரசித்து வருகின்றனர்.
2007 ஆம் ஆண்டு ஐ போனை இவர் உருவாக்கினார்.ஸ்மார்ட் போன் உருவாக இது ஒரு முன்னோடியாக விளங்கியது. 2011ல் உருவாக்கப்பட்ட ஐ டியூன்ஸ் சேவை மேலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து முழு கம்ப்யூட்டர் பயன்பாட்டை கையடக்க வடிவில் கொண்டு வரும் வகையில் இவர் உருவாக்கிய ஐ பேடு வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பம், கணினி யுகத்தில் புதிய வரலாற்றைப் படைத்தது.
கடந்த ஆண்டு வரை பிரபலமாக இருந்த டேப்லட் பிசி என்ற கம்ப்யூட்டரை, ஐ பேடு பின்னுக்குத் தள்ளி, 2010 இறுதியில் ஒன்றரை கோடி விற்பனையானது. இவர் கடந்த ஆகஸ்ட் வரை அதன் தலைவராகவும் இருந்தார்.

சாதனையாளர்களை விதி அதிக நாட்கள் வாழவிடுவதில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது ஸ்டீவ் ஜாப்ஸின் மரணம். ஆனால் அவரது சாதனைகளுக்கு அழிவில்லை!
1 comment:
anna nice one bt itunes 2011 la nu typo iruku.. i guess its in 2001. also u cud ve included about his ousted from Apple.
Post a Comment