இது புதுகதைன்னு யாரும் கண்டிப்பா சொல்ல முடியாது. அதுவும் அடித்தட்டு தமிழ் ரசிகன் கூட குறைஞ்சபட்சம் டப் செய்யப்பட ஹாலிவுட் படத்தை பார்த்து தன்னோட பார்வைய விலாசமாகிட்ட இந்த காலகட்டத்துல , இது மாதிரி ஒரு திருப்பமான கதை வந்ததே இல்லைன்னு சொல்லமுடியாது..தமிழுக்கு இது கொஞ்சம் புதுசு.அவ்வளவுதான்.
அதுக்காக Italian Job , Inside Man மாதிரி இப்படி ஒரு பாங்க் ராபரி கதைல வேகத்தை அப்படியே கொண்டு வந்துடாங்கனு பெருமையும் பட முடியல..இடைல ரெண்டு பாட்டு முதல் பாதியில பொறுமையை சோதிக்க வைக்குது..
அப்புறம் என்ன படத்த காப்பாத்துது..?
அஜித் அஜித் அஜித்
இதுதான் படத்தோட வெற்றி. வேற எதுவும் இல்ல..
கிட்டத்தட்ட ஆறு, ஏழு ஆங்கில படங்களிலிருந்து Copy inspire செய்யப்பட்டு எடுத்த காட்சிகள்-ன்னு நல்லா தெரிஞ்சாலும் , யாரும் அதை பெருசா குறை சொல்ல முடியல. காரணம் - அஜித்
நாலு ஹீரோயின் இந்த படத்துக்கு எதுக்கு..அதுவும் அஞ்சலி , ஆண்ட்ரியா தேவையே இல்ல.. வெறும் ஸ்டார் வேல்யுக்காக இத்தனை பேரை கதைக்குள்ள டைரக்டர் எறக்கியிருக்காருன்னு படத்த கோவிச்சிக்க முடியல. காரணம் - அஜித்.
ஹீரோ நடுத்தர வயசு , அதுவும் கெட்டவன் , முடியெல்லாம் நரைச்சு தனக்கு வயசு நாப்பது ஆகபோகுதுன்னு அவனே சொல்றான், பஞ்ச் டயலாக் எதுவுமே இல்ல , ஹீரோயினோட கடைசியா சேரவே இல்ல..கிளைமாக்ஸ்ல போலீஸ்கிட்ட செமத்தியா அடி வாங்குறான் .. ஹீரோ எப்படி இருக்கணுமோ அப்படி எந்த இலக்கணமும் இந்த படத்துல ஹீரோவுக்கு இல்ல.. என்னடா தமிழ் படம் எடுத்துருக்கீங்கன்னு சத்தம் போட முடியல ..
காரணம் - அஜித்.
அட..அதான் கதைக்கு சப்டைட்டில் கூட-'Strictly No Rules' .
எம்ஜீஆர் கெட்டவரா நடிச்சா மக்கள் ஏத்துக்கமாட்டாங்க .. சிவாஜி டான்ஸ் ஆடி , சண்டை போட்டா கண்டிப்பா எடுபடாது. அடுத்து வந்த ரஜினி இது ரெண்டையும் செஞ்சு சூப்பர் ஸ்டார் ஆனாரு. ( கமல் பாதை வேற.அவர இங்க சேர்க்க வேண்டாம்). ரஜினிக்கு அப்புறம் அந்த வித்தை ஒருத்தருக்கு கைவந்து ,அத மக்களும் ரசிக்கறாங்கன்னா அது அஜித் தான்.
இல்லைனா வாலியும்,அமர்க்களமும் , அட்டகாசம் வெள்ளைசட்டையும்
ஃப்ளாப் ஆகி படுத்துருக்கும். பில்லா ரீமேக் பண்ண யாரும் இருக்க மாட்டாங்க..
முகவரியும் கொடுப்பாரு; தீனாவும் கொடுப்பாரு; ரெண்டுக்கும் கனகட்சிதமா பொருந்துற முகம்.'Good Cop Bad Cop'
விஷயத்தை அழகா நடிப்புல கொண்டுவர ஒரு ஹீரோவ சரியா பயன்படுத்துனா, லாஜிக் முன்னபின்ன இருந்தாலும் படம்
கண்டிப்பா கல்லா கட்டும்னு முதல நிருபிச்சவர் ஷங்கர் - படம் சிவாஜி.அடுத்து அதை அழகா கையாண்டிருக்கார் வெங்கட்பிரபு.
வெள்ளை கட்டம்போட்ட நீல சட்டை. மேக்கப் இல்லாத , கருப்பு வெள்ளை கலந்த முடி. நரைத்த தாடி. ஒரு சராசரி , அதிக பில்டப் இல்லாத ஆனா ஆண்மைத்தனமான கேரக்டர் . அதிகபடியா அப்பப்போ கூலிங் கிளாஸ்.வெகு அலட்சியமா தம் அடிச்சிட்டே பேசுற வசனம்-ன்னு தனி ஆவர்த்தனம் பண்ணிருக்கார் அஜித்.
அர்ஜுன் இருந்தாலும் உண்மையான ஆக்சன் கிங் அஜித் தான். தண்ணியடிச்சிட்டு அடுத்த நாள் தலைய பிடிச்சிட்டு 'இனி மேல சத்தியமா தண்ணி அடிக்க கூடாது'ன்னு புலம்புவதிலிருந்து , வெகு கத்தலா 'இது என் கேம். நான்தான் ஓவர்னு சொல்லுவேன்'ன்னு போனில் வெளுத்துகட்டுவதிலிருந்து ,காரிலிருந்து வெகு ஸ்டைலாக ஜெயப்ரகாஷை தள்ளிவிடும்வரை பாவனைகளின் அத்தனை பௌண்டரியையும் தொட்டிருக்கிறார் அஜித்.
இந்த படம் வேறு யாரை வைத்து எடுத்திருந்தாலும் முதல் நாளே தியேட்டரை விட்டு ஓடியிருக்கும்.இப்போதோ படம் இமாலய வெற்றி - உபயம் அஜித் .
விஜய் ரசிகர்களும் மனசார பாராட்டும் படம்.
வெங்கட்பிரபு நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார்.ஆனால் அவர் சிரிப்பு மூட்ட வழக்கமாக செய்யும் ஃபார்முலா போர் அடிக்க ஆரம்பிச்சிருச்சு. இந்த படத்திற்கு பெரிய திருஷ்டிபொட்டு பிரேம்ஜி அமரன். தம்பியை கொஞ்சம் அடக்கி வாசிக்க வைச்சு , அவருக்கு வீணா கொடுக்கும் பில்டப்பை ஒதுக்கி வைச்சு அடுத்த படம் கொடுக்கலைனா வெங்கட்பிரபு மறுபடியும் நடிக்க வரும் ஆபத்து ரசிகர்களுக்கு இருக்கு. பார்த்துகோங்க.
தம்பிக்காக காமெடிக்கு
மெனக்கெடரத விட்டுதொலைங்க..எங்களுக்கு இப்போ அவர பாத்தா சத்தியமா சிரிப்பு வரல..
மத்தபடி நீங்க எங்க இருந்தோ கதைய கொண்டு வந்து ரசிகர்களை ரசிக்க வைச்சாலும் 'Spicing it UP' வித்தை உங்களுக்கு நல்லா வருது.வாழ்த்துக்கள்.
மங்காத்தா பேருக்கான அர்தத்த கடைசியா தெரிய வரும்போது கைதட்டல் தெறிக்குது..
ஆக , அத்தனை பேர் இருந்தாலும் , படம் முழுக்க தெரிவது அஜித் தான்.எல்லா பாவத்தையும் கங்கை கொண்டுபோவது மாதிரி , படத்தோட எல்லா குறையையும் அஜித்தோட அசத்தல் நடிப்பு & இமேஜ் தட்டிட்டு போய்டுச்சு.
மங்காத்தா - அஜித்தின் 'சிவாஜி'..
14 comments:
//அஜித் அஜித் அஜித்
இதுதான் படத்தோட வெற்றி. வேற எதுவும் இல்ல..
//
உண்மை
படம் நல்ல speed
Good Review...Good Review...
//தம்பிக்காக காமெடிக்கு
மெனக்கெடரத விட்டுதொலைங்க..எங்களுக்கு இப்போ அவர பாத்தா சத்தியமா சிரிப்பு வரல.//
correct
அஜித் அஜித் அஜித்
இதுதான் படத்தோட வெற்றி. வேற எதுவும் இல்ல..
im impressed
எவ்வளவு பிளாப் படங்கள் கொடுத்தாலும், ஒரே ஒரு ஹிட் படம் கொடுத்தால், அது நாடே அதிரும்படி கொடுப்பார். அது தான் தல.
Nice! Im impressed!!!
money money money
good review,thala pola varuma
நண்பா திரும்ப திரும்ப பார்த்தாலும் சலிக்க மாட்டேங்குது.. தலயின் சிறந்த படங்களுள் ஒன்று.
நான்கு தடவை பார்த்தேன் சளிப்பு இல்லை...................ஆதுவும் தல ஒருவருக பார்த்தேன்...................
boss really super review
my heart beat thala thala thala
good review....i like it
Post a Comment