தூக்குதண்டனையை ரத்து செய்ய கோரி உண்மையான போராட்டம் நடந்து வருகிறது.அதில் கிட்டத்தட்ட வெற்றியும் அடைந்து விட்டோம்.
சீட்டுபெற பேரம் பேசி இரண்டு திராவிட கட்சிகளாலும் ஒதுக்கப்பட்டாலும், எத்தனையோ சறுக்கல்களை சந்தித்தாலும், விமர்சனங்களால் காயப்பட்டிருந்தாலும்,கட்சியை ,அதன் தரத்தை தொண்ணூறு சதவீதம் இழந்திருந்தாலும், இன்னும் எத்தனையோ 'உம்'களுக்கு நடுவிலும் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் மட்டும் கலப்படமில்லாத அக்கறை காட்டி வருகிறார் வைகோ.மனமார்ந்த வாழ்த்துக்கள் போர்வாளே..
இந்த போராட்டத்தில் பழைய வைகோவின் தீரத்தையும் , வேகத்தையும்,நேர்மையையும்
பார்த்தது உண்மை... பொடா சிறைவாசம் எதுவும் இவர் துணிச்சலை துளி கூட குறைக்கவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.
மக்கள் என்ன உங்களை வேண்டுமென்றா ஒதுக்கினார்கள்? தடம் மாறி சென்ற விளைவு அது.. உண்மையில் இப்போது நீங்கள் வனவாசம் முடிந்து வந்தது போலிருக்கிறது போனதெல்லாம் போகட்டும். மற்றவைக்கு எப்படியோ, எங்கள் ஈழ சகோதரர்களை காப்பாற்ற , அவர்களுக்கு குரல் கொடுக்க நீங்கள் கண்டிப்பாக எங்களுக்கு வேண்டும் வைகோ. திரும்பி வந்த உங்களை வரவேற்கிறோம்.
------------------------------------------
தமிழ் புத்தாண்டு இனி மறுபடியும் ஏப்ரல் இல். இதை அறிவித்து , அடுத்த தேர்தலில் அதிமுக ,தனது சாதனை பட்டியலில் 'மாணவர்களுக்கு மீண்டும் ஒரு நாள் விடுமுறை வாங்கி தந்த அதிமுக அரசு' என்று சொல்லி மாணவர்களின் ஓட்டை தாராளமாக வேட்டையாடலாம். உங்களுக்கு அதுக்கு உரிமை இருக்கு அம்மா.
ஹ்ம்ம்..திமுக அறிவிச்சதுல , வேற என்ன மிச்சம் இருக்கு மாத்தறதுக்கு?
--------------------------------------------
பயங்கரம் :
தீவிரவாதம்:
விஜய் ரசிகர்களே,உங்க தலைவர் வாழ்க்கை இப்போ உங்க கைலதான் இருக்கு.. யார் ஆட்சி, காலநேரம் எல்லாம் பாத்துட்டு கட்அவுட் வைங்க..
--------------------------------------------------------------
அமெரிக்காவோட அணு ஒப்பந்தம் போடலாமா வேண்டாமான்னு ஓட்டெடுப்பு எடுக்கும்போது , அலம்பலா பேசி கைத்தட்டு வாங்கிய லாலு , இப்போ அதே மக்களவையில் தூங்கி , காமெடி பீஸ் ஆகியிருக்கார்..
சபாநாயகர் மீராகுமார் அதைப்பார்த்து , லாலு கட்சி எம்பியை அழைத்து ,அவரை எழுப்ப சொல்லியிருக்கிறார். தூங்கி வழிந்து,பின் அசடு வழிந்து அமர்ந்திருக்கிறார் லாலு.
பதினைந்து வருடத்திற்கு முன் ஏதோ ஒரு டப் செய்யப்பட்ட விஜயசாந்தி படத்தில் இதைப்போல ஒரு காட்சியை பார்த்த ஞாபகம்.மேலாக பார்த்தால்
சிரிப்பா இருக்குற இந்த விஷயத்தில , என்னால சிரிக்க முடியல.. அவமானப்பட்டது லாலு அல்ல..அவரை தகுதியானவர்ன்னு தேர்ந்தெடுத்து அனுப்பி வெச்ச தொகுதி மக்கள்.தனிப்பட்டு அவரோட இடத்துல இருந்து பாத்தா இது கூட தப்பு இல்ல..ஆளும்கட்சியோட கூட்டணி வெச்சிருந்தாலாவது எதிர்க்கட்சிய பார்த்து சிரிக்கலாம்,பேச நெறைய நேரம் தருவாங்க..தைரியமா எதிர்த்து பேசலாம்,என்ன பேசினாலும் கைதட்ட ஆள் இருக்கும்..பண்ணைல இருந்தாலாவது ஆடு மாடு கணக்கு பார்த்திருக்கலாம்..
இப்போ என்னத்த பேசி,என்ன பண்ண..பேசாம அமைதியா கவனிக்கலாம்னா பாதி புரியவே மாட்டீங்குது..அவரும் என்ன செய்வார் பாவம்..
-------------------------------------------------பெரிய சூதாட்டம்..
சன் பிக்சர்ஸ் -> ஸ்டுடியோ கிரீன் -> க்ளவுட் நைன் -> ராடான் பிக்சர்ஸ் -> மறுபடியும் சன் பிக்சர்ஸ்.
வசூல் வெளுத்துக்கட்டுது. நாலு ஃப்ளாப்க்கு நடுவே ஒரு ஹிட் படம் கொடுத்தாலும் நச்சுனு அடுத்த ரெண்டு வருஷம் பேசப்படற மாதிரி அத கொடுக்கறதுதான் அஜித் ஸ்பெசாலிட்டி.
விஜய்க்கு வேலாயுதம் கை கொடுத்து , போட்டியை சமப்படுத்துவாரா ,இல்ல இந்தியா கிரிக்கெட் டீம் மாதிரி சரணடைவாரானு படம் வரவரைக்கும் காத்திருக்கலாம்.
Ajith Fans , Ya Damn sure U can open the bottle...
என் அம்மாவோட எதாவது புது கோவிலுக்கு போனா கடவுளைப் பார்த்து கும்பிட்டு, என்கிட்ட சொல்லுவாங்க - ' ரெம்ப சக்தியான சாமிடா.. நல்லா கும்பிட்டுக்கோ'
எனக்கு சிரிப்பு தாங்காது - 'ஏம்மா? சாமினாலே சக்தியோட இருக்குற ஒன்னுதான ? அது என்ன ரொம்ப சக்தியான சாமி..? அப்போ மத்த சாமிக்கெல்லாம் சக்தி கம்மியா இருக்கா?'
'அதிகப்ரசங்கி..எதிர்பேச்சு பேசாம சாமிய கும்பிடுடா..'
பேச்சுவாக்கில சில சமயம் நாம சொல்லற வசனங்கள் அர்த்தம் இல்லாததா இருக்கும்.சிரிப்பாகவும் இருக்கும்..
'அன்னா ஒரு நேர்மையான காந்தியவாதி..' - காந்தியவாதினாவே அவர் நேர்மையாதானப்பா இருந்தாகணும்.
இந்த மாதிரி ஒரே அர்த்தத்த தொனிக்கிற இரு வார்த்தைகளை தொடர்ந்து சொல்லுறதுக்கு ஆங்கிலத்துல ஏதோ பேர் .. மறந்து போய்டுச்சு..
இதெல்லாம் நம்ம அன்றாட வாழ்க்கைய அழகாக்குற சிறு தவறுகள்..
அனுமதிக்கலாம்..
-------------------------------------இசையில் சாதனையின் உச்சம்..
ஏற்றஇறக்கம்தான் இசையின் தரத்தையும் அதன் மயக்கத்தையும் அதிகரிக்கும் ஒரே விஷயம்.அதை தியாகம் செய்துவிட்டு ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரு பாடலை காலம் தாண்டி மக்களை ரசிக்க வைத்திருப்பது இசைஞானியைத் தவிர யாரால் முடியும்?
------------------------------------------
2 comments:
இளையராஜவுடைய இசையை பொறுத்த வரை, தனிப்பட்ட நிலையில் தனிப் பாடலாக அவரது பாடல்கள் நன்றாக இருக்கும். ஆனால், திரைப்படத்தோடு ஒன்றிணைந்து பார்த்தால், படத்தில் இருந்து வேறுபட்டு, தனியே துருத்தி கொண்டு இருக்கும். நீங்கள் போட்டு இருக்கும் இந்த பாடலே ஒரு உதாரணம். கிராமத்தில் கூத்து கட்டும் நாடக கலைஞன், தன் காதலியிடம் ஆயிரம் பியானோக்கள் முழங்க 'தென்றல் வந்து தீண்டும் போது' என்றுதானா பாடுவான்? இந்த விசயத்தில், இளையராஜா கொஞ்சம் தன் மைந்தர் யுவனிடம் பாடம் கற்கலாம்.
நண்பா, இந்த பதிவுல எனக்கு பிடிச்சது:
1). விஜய் ரசிகர்களுக்கான கமெண்ட்,
2). தலயின் 'மங்காத்தா மற்றும்
3). கடைசியாக இருந்த இளையராஜாவின் 'அவதாரம்' பத்தின் பாடல்.
பகிர்வுக்கு நன்றி.
Post a Comment