சரிந்து விழும் சீட்டுக்கட்டுகள் போல விக்கெட்டுகளை கொடுத்து தோல்வியை தழுவி வரும் இந்திய அணியை என்ன சொல்வது?
மீண்டும் ஜனாதிபதி ஆகும் ஆசை இல்லை என்று சொல்லியிருக்கிறார் பிரதீபா பாட்டில். மிக்க மகிழ்ச்சி.
ஒருவர் மிக புகழுடன் அரசாண்டால் பின்னால் வருபவர் எவ்வளவு திறமையாக அரசாண்டாலும் பேர் கிடைக்காது. பாபருக்கு பிறகு ஹுமாயுனுக்கும் ,அக்பருக்கு பிறகு ஜகாங்கீருக்கும் இப்படிதான் ஆனது. ராஜராஜ சோழனுக்கு பிறகு ராஜேந்திர சோழன் தன பெயரை காப்பாற்றி கொள்ள பெரும் பாடுபட்டு புகழடைந்தார்.
-----------------------------------------
ஒன்டே சாம்பியன். டெஸ்ட் தரவரிசையில் முதலிடம். அனுபவம் வாய்ந்த வீரர்கள்.
இப்படி பல பெருமை பெற்றுள்ள இந்திய அணிக்கு இது ஒரு கருப்பு தொடர்தான்.தோற்பது கேவலம் அல்ல. ஆனால் சரணடைவது மிக கேவலம்.
தோனியை கேப்டன் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று சொல்பவர்கள் ,கடந்த முறை அவர் மட்டுமே நின்று கௌரவமாக 77 & 74 ரன்கள் எடுத்ததை நினைத்து பார்க்க வேண்டும். மற்றவர்கள் எடுத்தது மிக சொற்ப ரன்கள்.
ஆக நமக்கு தேவை வேறொரு கேப்டன் அல்ல.. மீண்டும் கேரி கிர்ஸ்டன் போன்ற பயிற்சியாளர்.
இந்தியா மிக மிக திணறுவதை பார்த்தால் முதலிடத்திற்கு தற்போது இவர்கள் தகுதி இல்லை என்பதும் , இங்கிலாந்து வேகமும் ஒட்டுமொத்த டீமின் தற்போதைய பார்மையும்
பார்த்தால் ,அந்த இடத்திற்கு இவர்கள் தகுதியுடையவர்கள்
என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை..அவர்களை பாராட்டவும் நமக்கு மனது வேண்டும்..
வாழ்த்துக்கள்..ஆனால் இதில் ரவி சாஸ்திரியின் பரபரப்பான பேச்சு சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. 'England are not the Bloody Number One' என்று இந்தியாவுக்கு வக்காலத்து வாங்கிய அந்த மனுசனுக்காகவாவது கொஞ்சம் நம் ஆட்கள் முயன்றிருக்கலாம்.
வெற்றி தலைக்கு ஏறியதும் ,
வீரர்களின் திறமையான ஆட்டம் , ஆட்டம் காண்பது இந்திய அணிக்கு உண்டான காலகாலமான சாபம்.
--------------------------------------------
அதே பழைய கதை என்றாலும் சொல்லிய விதமும் அரைத்த மாவுதான் என்றாலும், இந்த படத்தில் ஒரு முக்கிய அம்சம் 'அனிமட்ரிக்ஸ்' முறையில் உருவாக்கிய குரங்கின் நடிப்புதான்..
சோகம்,குதூகலம்,சந்தோசம்,வெறுப்பு,விரக்தி,வஞ்சம்,பெருமை என்ற எல்லா உணர்வுகளையும் அருமையாக முகத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது.
கார்ட்டூன் பாத்திரங்கள் போல , இந்த முறையில் சில பாத்திரங்களை உருவாக்கினால் , அதற்கு கட்டாயம் நல்ல வரவேற்பு இருக்கும்.
----------------------------------------------
அண்மையில் கேள்விப்பட்ட செய்தி அதிர்ச்சியை தந்தது..குவைத்தில் நான்கு இந்தியர்களை , ஒருவர் சுட்டு கொன்ற நிகழ்வு அது.. அதற்கு அவர் சொன்ன காரணம் - ' நோன்பு முடிவதற்கு பத்து நிமிடம் முன்பு உணவு அருந்தியவர்களை தண்டிக்கவே சுட்டேன் ' என்பதுதான்.
அரசு தரப்பில் , சுட்டவர் , அந்நாட்டு உள்துறை இலாகாவில் பணிபுரிவதாகவும் தற்போது மனநிலை பாதிக்கப்பட்டு விடுப்பில் இருப்பதாகவும் மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த நான்கு இந்தியர்கள் யார்? இதன் பின்னணி என்ன? என்ற எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரம் இந்த தகவல் வேறு எங்காவது பரவியிருக்கிறதா என்றும் தெரியவில்லை.இந்த விஷயத்தில் இந்திய அரசின் செயல்பாடு என்ன - ஹுஹும்..தெரியவில்லை.
நமக்கு எதாவது ஒன்று என்றால் நம் அரசு கவனித்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை பொய்த்து போனால் பிறகு எந்த தைரியத்தில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது?
ஒரு விஞ்ஞானி.மனித சக்தியை தாண்டிய ஒன்றை கண்டுபிடிக்கிறார். அதை பரிசோதிக்க, ஒன்றின் மேல் செலுத்த , அது மிகுந்த புத்திசாலியாய் மாறி உலகத்தை எதிர்க்கிறது..இறுதியில் அதை செயலிழக்க வைக்க வேண்டிய கட்டாயம் விஞ்ஞானிக்கு.. எந்திரன் படம் அல்ல இது.. 'Rise of Planet of the Apes'
அதே பழைய கதை என்றாலும் சொல்லிய விதமும் அரைத்த மாவுதான் என்றாலும், இந்த படத்தில் ஒரு முக்கிய அம்சம் 'அனிமட்ரிக்ஸ்' முறையில் உருவாக்கிய குரங்கின் நடிப்புதான்..
சோகம்,குதூகலம்,சந்தோசம்,வெறுப்பு,விரக்தி,வஞ்சம்,பெருமை என்ற எல்லா உணர்வுகளையும் அருமையாக முகத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது.
இனி எல்லா ஹீரோக்களும் கொஞ்சம் பணிந்துதான் போக வேண்டும். சம்பளமும் , கட்டுபாடுகளும் அதிகம் விதித்தால்,' போடா நீயும், உன் மார்கெட்டும்' என்று இதே போல செயற்கையாக ஹீரோவை உருவாக்கி படத்தை வெற்றிபெற வைத்து விடுவார்கள். நல்ல வரவேற்கத்தகுந்த முன்னேற்றம்..
நடிகர்களே இல்லாமல் வெகு சுலபமாக எந்த மாதிரியான படமும் தயாரிக்கப்படும்.
ஹ்ம்ம் சுஜாதா சொன்னது நடந்துகொண்டே வருகிறது.. திரையுலகை பொறுத்த வரை கமலும் ,சுஜாதாவும் தீர்க்கதரிசிகள்தான் என்பது இன்னொரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது..
----------------------------------------------
அண்மையில் கேள்விப்பட்ட செய்தி அதிர்ச்சியை தந்தது..
அரசு தரப்பில் , சுட்டவர் , அந்நாட்டு உள்துறை இலாகாவில் பணிபுரிவதாகவும் தற்போது மனநிலை பாதிக்கப்பட்டு விடுப்பில் இருப்பதாகவும் மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த நான்கு இந்தியர்கள் யார்? இதன் பின்னணி என்ன? என்ற எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரம் இந்த தகவல் வேறு எங்காவது பரவியிருக்கிறதா என்றும் தெரியவில்லை.இந்த விஷயத்தில் இந்திய அரசின் செயல்பாடு என்ன - ஹுஹும்..தெரியவில்லை.
நயன்தாரா - பிரபுதேவா திருமணம் எங்கு நடைபெறும் என்பதிலும் , அபிதாப் படம் பஞ்சாபில் தடை செய்யபட்டதை பற்றியும் அலசி ஆராயும் இந்திய ஊடகங்கள் ,இந்திய உயிர்கள் சம்பந்தப்பட்ட இந்த முக்கிய நிகழ்வை கண்டுகொள்ளாத காரணம் இன்னும் விளங்கவில்லை.
நமக்கு எதாவது ஒன்று என்றால் நம் அரசு கவனித்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை பொய்த்து போனால் பிறகு எந்த தைரியத்தில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது?
--------------------------------------------
மீண்டும் ஜனாதிபதி ஆகும் ஆசை இல்லை என்று சொல்லியிருக்கிறார் பிரதீபா பாட்டில். மிக்க மகிழ்ச்சி.
ஒருவர் மிக புகழுடன் அரசாண்டால் பின்னால் வருபவர் எவ்வளவு திறமையாக அரசாண்டாலும் பேர் கிடைக்காது. பாபருக்கு பிறகு ஹுமாயுனுக்கும் ,அக்பருக்கு பிறகு ஜகாங்கீருக்கும் இப்படிதான் ஆனது. ராஜராஜ சோழனுக்கு பிறகு ராஜேந்திர சோழன் தன பெயரை காப்பாற்றி கொள்ள பெரும் பாடுபட்டு புகழடைந்தார்.
இந்தியாவை பொறுத்தவரை அப்துல் கலாம் மட்டுமே ஜனாதிபதி பதவியை வெறும் ரப்பர் ஸ்டாம்பாக பயன்படுத்தாமல் துடிப்பாக தன்னால் இயன்ற வரை எல்லா இடங்களிலும் சென்று தன் பேச்சினாலும் , செயலாலும் பேர் வாங்கினார். குறிப்பாக மாணவர்கள் பல பேருக்கு தன்னம்பிக்கையை விதைத்தவர்.
ஆனால் ,கலாம் விட்டு சென்ற இடத்தை ,பலத்த எதிர்பார்ப்புக்கு இடையில் எடுத்துகொண்டாலும் , இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெயரை தவிர வேறு எதுவும் செய்யவில்லை திருமதி பாட்டில்.
பாஜக செய்த மிக சில நல்ல காரியங்களில் , கலாமை ஜனாதிபதி ஆக்கியது முதன்மையானது. இனி யார் வருவார்களோ தெரியாது..
யாரை இருந்தாலும் கலாம் கலாம்தான்...--------------------------------------------
சுதந்திர தின வாழ்த்துக்கள்..
-----------------------------------------
லகான் திரைப்படத்தில் , ரஹ்மானின் இசையில் , ஆஷா போஷ்லே , உதித் நாராயண் வசீகர குரலில் எழுந்த இந்த கிளாசிக் பாடல் நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்..
மொழி தெரியாவிட்டாலும் இந்த பாடல் ஏற்படுத்திய தாக்கத்தை இன்னும் வேறு எந்த ஹிந்தி பாடலும் எனக்கு ஏற்படுத்தவில்லை. பாடல் நடனமும் மிக அற்புதம்.. அமீர் கான் இந்த பாடலில் மிக இளமையாக அழகாக தெரிந்தாலும், அவரை மிக எளிதாக ஓவர்டேக் செய்து விடுகிறார் கிரேசி சிங்.நம் ஊர் ஷோபனா மாதிரி அற்புதமான கிளாசிக் டான்சர்.
கூடவே இந்த பாடலில் அவரின் முக பாவனைகளும் , சடசடவென
மனதிலுள்ள உணர்ச்சிகளை கோபமும்,காதலும் கலந்த வேகத்தில் ஆடும் நடனமும் இந்திய நடனதிறமையின் உச்சகட்டம்.
இசையமைப்பாளர் , பாடகர்கள், நடிகர்கள் எல்லாருமே உச்சகட்ட திறமையை வெளிக்காட்டினால் ஒரு பாடல் எப்படி சாகாவரம் பெறும் என்பதற்கு இந்த பாடல் ஒரு சிறந்த உதாரணம்..
6 comments:
Super popcorn
Super popcorn
பாப்கார்ன் அருமை. இந்திய அணிக்கு இது சரிவுதான். வீழ்ச்சி அல்ல. மீண்டு வரும் என்று நம்புவோம்.
அந்த லகான் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். உதித் நாராயண் குரலுக்காகவே கேட்கலாம். ஜனாதிபதி என்றாலே இன்றும் ஞாபகம் வருவது கலாம்தானே?
Bodies of two laborers from Andhra Pradesh, who were shot dead by a police officer in Kuwait because he found them eating 10 minutes before the Iftar on August 1, send to Chennai airport last day.
The body of another labourer from AP would be arriving Chennai airport today (August 16).
Bodies of Nallagutta Ramaniah and Masannagari Obul Reddy were send to Chennai in a Qatar Airways flight and from Chennai, shifted to their native villages. Ramanaiah hailed from Aggivaaripalle village in Kambhamvaaripalle mandal of Chittoor district.
The body of Obul Reddy, who belonged to Dudhyala village in Sambepalle mandal of Kadapa district, also reached Chennai later and was shifted to Sarvepally village in Venkatachalam mandal in Nellore.
The body of Tokala Naresh Kumar of Naguvarivandlapalle in Gaaliveedu mandal in Kadapa will be flown to Chennai airport on Tuesday morning.
Indian Ambassador to Kuwiat HE Satheesh C Mehta earlier said that the embassy is working closely with the local authorities for sending the mortal remains back to India and for early investigation and justice and to address the humanitarian aspects.
Read more at http://indiansinkuwait.com/ShowArticle.aspx?ID=12314&SECTION=0#ixzz1VBloAmIB
Thanks Anony for the update..
Very much Appreciated..
-Abimanyu
வெற்றி தலைக்கு ஏறியதும் ,
வீரர்களின் திறமையான ஆட்டம் , ஆட்டம் காண்பது இந்திய அணிக்கு உண்டான காலகாலமான சாபம்.
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
Post a Comment