ஹாலிவுட் படங்களின் தீவிர ரசிகர்களுக்கு டாம் ஹாங்க்ஸ் என்னும் பேர் மயக்கத்தையும் ஆவலையும் உண்டாக்கும். டாம் க்ரூஸ் போல இவர் எந்த ஒரு ஆக்சன் படங்களும் செய்ததில்லை.போலீஸ் வேடத்தில் ஒன்றிரண்டு படங்களில் தோன்றிய போதும் விறைப்பாக கூட நடித்ததில்லை.எப்போதுமே காதல் படங்கள் மட்டுமே செய்வதில்லை. ஆனாலும் அடித்து சொல்லலாம் - ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் ஹாங்க்ஸ்தான்.
அது 'காதல்' படம் வருவதற்கு ஆறு மாதங்கள் முன். தமிழில் நல்ல படங்கள் வருகை குறைந்த வறட்சி காலம்.
தில்,சாமி, தூள் ,ரன் வெற்றியை தொடர்ந்து அரிவாளும் காட்டுக்கத்தலும் தியேட்டரில் நிரம்பியிருந்த காலம்.சரி ஒழியட்டும் .. ஹாலிவுட் பக்கம் பார்ப்போம் என்று இந்த பக்கம் திரும்பி imdb படங்கள் பார்த்து கொண்டிருந்த நான் அதிர்ஷ்டவசமாக கவனித்த நடிகர் - டாம் ஹாங்க்ஸ். படம் 'தி டெர்மினல்' .
நல்ல நடிகரின் படங்களை , நல்ல கதையம்சமுள்ள படங்களை எல்லாம் தமிழில் பார்த்தாயிற்று என்றால் , வாருங்கள் இந்த பக்கம். இங்கு ஒரு அற்புதமான நடிகர் , தர வரிசையாக படங்களை அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டிருக்கிறார். உங்களை சிரிக்க வைக்கிறார். அழ வைக்கிறார். நெகிழ வைக்கிறார். ஆச்சர்யப்பட வைக்கிறார்.பரவசப்பட வைக்கிறார். மொத்தத்தில் கமல் செய்யும் அனைத்தும் செய்கிறார்.
கமல் படங்களுக்கு பிறகு நான் தவறாமல் பார்க்கும் படங்கள் இவருடையதுதான்.
இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள்.
படத்துக்கு படம் வித்தியாசம் - கதையிலும் சரி , தேர்ந்தெடுக்கும் பாத்திரத்திலும் சரி.
நடிப்புக்கு மெனக்கெடுதல் மட்டுமன்றி உச்சரிக்கும் வசனத்தின் அதிர்வுகளிலேயே காட்சியின் விறுவிறுப்பை ஊட்டுவது.
கதையை ஹீரோயசம் ஓவர்டேக் செய்யாமல் கவனமாக கையாளுவது.
இப்படி எத்தனையோ ஒற்றுமைகள்.
நான் பார்த்த முதல் டாம் ஹாங்க்ஸ் படம் - 'தி டெர்மினல்' .அமெரிக்க விமான நிலையத்தில் மாட்டிகொள்ளும் ஒரு அப்பாவி பாத்திரத்தில் டாமின் நடிப்பு என்னை வெகுவாக ஈர்த்தது.
ஆங்கிலம் தெரியாமல் திண்டாடி , வேறு வழியில்லாமல் விமான நிலையத்துக்கு உள்ளேயே வாழ வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு , எல்லார்க்கும் உதவி செய்து , நண்பர்களாக்கி , வேலை செய்து போராடி ஜெயிக்கும் மனிதனாக வாழ்ந்திருப்பார் ஹாங்க்ஸ்.
அது வரை அவரைப் பற்றி எந்த ஒரு அறிமுகமும் இல்லாததால் அவர் நடிப்பு என்னை ஆச்சர்யபடுத்தியது.
தொடர்ந்து அவர் படங்களே பார்க்க முடிவு செய்து அடுத்ததாய் பார்த்த படம் எல்லாருக்கும் நன்கு தெரிந்த 'கேஸ்ட் அவே' .
விமான விபத்தில் யாருமே இல்லாத ஒரு தீவில் தனியாக மாட்டிகொண்டு , உயிர் வாழ தன்னையே மாற்றிக்கொள்ளும் ஒரு மனிதனின் பரிணாமத்தை அவர் நடித்து காட்டிய விதம் என்னை அவர் நடிப்பில் கட்டிபோட்டது.
உடலை வருத்தி , உணவுக்காக மீனைப் பிடிக்க கற்றுக்கொண்டு , நெருப்பு மூட்ட கற்றுக்கொண்டு ,தனிமையை போக்க ஒரு பந்தினை நண்பனாக கற்பனை செய்து பேசிக் கொள்வது , கடைசியில் படகு செய்து தப்பிக்க போராடுவது என அந்த தீவில் உண்மையில் வாழ்ந்திருப்பார் டாம்.
உடலை வருத்தி , உணவுக்காக மீனைப் பிடிக்க கற்றுக்கொண்டு , நெருப்பு மூட்ட கற்றுக்கொண்டு ,தனிமையை போக்க ஒரு பந்தினை நண்பனாக கற்பனை செய்து பேசிக் கொள்வது , கடைசியில் படகு செய்து தப்பிக்க போராடுவது என அந்த தீவில் உண்மையில் வாழ்ந்திருப்பார் டாம்.
'சேவிங் ப்ரைவேட் ரியான் ' - ராணுவ அதிகாரியின் பிம்பத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது. ஸ்பீல்பெர்க் இயக்கமும் டாமின் நடிப்பும் கை கோர்த்துக்கொண்டு படத்தை புகழ் உச்சிக்கு கொண்டு சென்றது.
இறுதியில் குண்டடிபட்டு வீழ்ந்தபோதும் எதிர் வரும் டாங்கியை நோக்கி சுட்டுக்கொண்டே சாகும் காட்சியில் டாமின் கை கூட நேர்த்தியாக நடித்திருக்கும்.
மிக சிக்கலுக்கு உண்டான 'தி டாவின்சி கோட் ' படமும் அதன் பின் வந்த அதன் தொடர்ச்சியான 'ஏஞ்சல்ஸ் அண்ட் டீமான்ஸ் ' படத்திலும் ஒரு ஆராய்ச்சியாளரின் பதிவை நம் முன் கொண்டு வந்திருப்பார் டாம். படத்தின் சுவாரஸ்யம் ,விறுவிறுப்பு துணை கொடுக்க , ஹாங்க்சின் கேரியரில் ஒரு மைல்கல்லாக அமைந்தன இரு படங்களும்..
இவர்தான் டாம் என்று தெரியாதபோது நான் பார்த்த படம் 'கேட்ச் மீ இஃப் யூ கேன்' . மீண்டும் ஒரு முறை பார்த்தேன். டீகப்ரியோ, டாம் இருவரும் போட்டி போட்டு நடித்த படம்.
அடுத்து நான் பார்த்த படம் 'தி கிரீன் மைல்' . வித்தியாசமான , மிக புதிய கதைகளன். சிறை அதிகாரியாக வரும் டாம் மட்டுமல்லாமல் எல்லாரும் அற்புதமாக நடித்திருப்பார்கள்.
'யூ ஹாவ் காட் எ மெயில் ' - இது போன்ற மென்மையான , மோதலில் மலரும் காதல் கதை மிக அபூர்வம். ஒவ்வொரு காட்சியும் டாமின் முக பாவனைகளும், கதை நாயகியை வரும் அற்புதமான நடிகை மெக் ரியான் நடிப்பும் தூள் கிளப்ப படம் எல்லாம் காதலர்கள் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்தது.
இப்படி நான் தொடர்ச்சியாய் பார்த்த படங்கள் அனைத்தும் டாம் நடுத்தர வயதானபின் நடித்தவை.
அதன் பின் அவரை இளமையாக பார்த்த படம் ' Big' (நம் எஸ்.ஜே.சூர்யாவின் 'நியூ' படத்தின் மூலம்) .
இன்னும் பல படங்கள் அவரின் வசீகர நடிப்பின் கட்டுக்குள் என்னை வைத்திருக்கின்றன.'பிலடெல்ப்ஹியா' படத்தில் எய்ட்ஸ் நோயாளியாக , நோயின் வீரியத்தை ஒவ்வொரு காட்சிக்கும் அதிகரிப்பதை உணர்த்தும் நடிப்பை கொடுத்திருப்பார்.
இன்னும் பல படங்கள் அவரின் வசீகர நடிப்பின் கட்டுக்குள் என்னை வைத்திருக்கின்றன.'பிலடெல்ப்ஹியா' படத்தில் எய்ட்ஸ் நோயாளியாக , நோயின் வீரியத்தை ஒவ்வொரு காட்சிக்கும் அதிகரிப்பதை உணர்த்தும் நடிப்பை கொடுத்திருப்பார்.
குழந்தைகளும் நாமும் விரும்பி பார்க்கும் ' டாய் ஸ்டோரி ' தொடர் படங்களின் ஹீரோ வூடியின் குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான்.
ஹாங்க்சின் வெற்றிக்கு காரணமே அவரின் அலட்டிக்கொள்ளாத நடிப்பும் , கதையின் தன்மையை உணர்ந்து பாத்திரத்தை உள்வாங்கி கொள்ளும் திறனே. பின்பு அதை நடிப்பில் வெளிக்காட்டும்போது அது பாராட்டப்படுவது ஒன்றும் ஆச்சர்யம் இல்லையே..
நல்ல கலைஞர்கள் எங்கு இருந்தாலும் பாராட்டப்பட வேண்டியது நல்லது.அதுவே நல்ல ரசிகர்களுக்கான அடையாளமும் கூட.
மொழி தாண்டி , கலாசாரம் தாண்டி , கலையினால் நம்மை ஈர்க்கும் மனிதர்கள் வரிசையில் டாம் ஹாங்க்ஸ்-க்கு தனி இடம் உண்டு.
மொழி தாண்டி , கலாசாரம் தாண்டி , கலையினால் நம்மை ஈர்க்கும் மனிதர்கள் வரிசையில் டாம் ஹாங்க்ஸ்-க்கு தனி இடம் உண்டு.
என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு சினிமா ரசிகனும் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்கள் இவருடையது.
ஐம்பத்தைந்து வயது தாண்டி இன்னும் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் கிரீடத்தை தக்க வைத்திருக்கும் டாம் ஹாங்க்ஸ்க்கு இன்று பிறந்தநாள்.
எப்போதும் நல்ல படங்களை மட்டுமே கொடுத்து, ரசிகர்களை என்றைக்கும் ஏமாற்றாத நடிகருக்கு வாழ்த்துக்கள்.
டிஸ்கி : இரண்டு நாள் முன்னால் எழுதிய பதிவு.. :)
டிஸ்கி : இரண்டு நாள் முன்னால் எழுதிய பதிவு.. :)
9 comments:
Super post.. i like his movies too .. checkout .. Sleepless in Seattle .. if u haven't yet.. :)
Hello dear,
have you seen forest gumb it is also a nice movie-totally a different character.
நீங்கள் குறிப்பிட்ட டாம் படங்கள் அனைத்துமே பார்த்து விட்டேன்.
எனக்கு மிகவும் பிடிக்கும் நடிகர்.
இன்னும் நல்ல படங்கள் அவர் மூலமாக நமக்கு கிடைக்க கடவுள் அவருக்கு நீள் ஆரோக்கியம்,மங்காத புகழை கொடுக்கட்டும்
நல்ல நடிகர்..
ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் இவர் நடித்த தி டெர்மினல் படத்தை பார்த்துள்ளேன்..நல்ல நடிப்பை தந்திருப்பார்..
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களுள் ஒருவர். மனதினுள் என்ன நினைக்கிறார் என்பதை முகத்தில் கொண்டுவந்து அப்படியே வெளிப்படுத்தி விடுவார். பல காட்சிகளில் வசனம் பேசாமலேயே புரிய வைத்து விடுவார்.
please see the movie Forrest Gump
try philadelphia movie.
நீங்கள் சொன்ன அனைத்து படங்களையும் பார்த்து விட்டேன் நண்பர்களே..
எனக்கும் பிடித்த ஒரு அருமையான நடிகர் அவரின் cast a way படம் பார்த்து நான் மிரண்டு போனான்
Post a Comment