காலம் இறக்கை கட்டி பறக்கிறது . என் ஆதர்ச எழுத்தாளர் சுஜாதா மறைந்து அதற்குள் மூன்று வருடம் ஓடி விட்டது . என் தலைமுறைக்கும் எனக்கு முந்தைய தலைமுறைக்கும் அவர் கற்பித்தது ஒன்றா இரண்டா ?
எழுத்துலகில் எந்த ஒரு சமாதானமும் அவர் செய்து கொள்ளவில்லை . இவைதான் சொல்ல வேண்டும், இவை சொல்லகூடாது என்ற எந்த வரைமுறையும் அவர் வைத்துக்கொள்ளவில்லை.
அவர் எழுத்தோடு என் முதல் அறிமுகம் சிறுகதைகள் மூலமே. 'எந்த மாதிரியும் இல்லாத புது மாதிரியாக' என்பதற்கு அவர் சிறுகதைகள் மிக சிறந்த உதாரணம்.வேறொருவர் கதை போல் இல்லாமல் இருப்பது அவர் சிறப்பல்ல . அவரின் முந்தய கதையை போலவே அடுத்தது இருக்காது என்பதே அவர் தனி சிறப்பு.
ஆனால் அவர் விஞ்ஞானம் எழுத தொடங்கிய பிறகு எந்த கதை ,எவர் கதை படித்தாலும் ஹார்மோன் , நியுரோஜென் என எதாவது வரி இருந்தால் இது சுஜாதா கதையோ ? என்று இன்று வரை சந்தேகப்பட வைக்கும் சாதனையை படைத்து விட்டார்.
பத்தாவது படிக்கும்போது அவர் கதைகள் படித்து 'இவர் கதை எல்லாம் புரிஞ்சிக்க இன்னும் பக்குவம் வரணும் ' என்று சொல்லிகொண்ட நான் இன்று வரை அந்த பக்குவத்தை தேடிக்கொண்டிருக்கிறேன். பிறகு அப்போது என் கவனம் ராஜேஷ் குமாருக்கும் பி. கே.பிக்கும் தாவியது. சில காலம் கழித்து என் இனிய இயந்திராவும் , 'ஆ' , கொலையுதிர் காலம் , ரத்தம் ஒரே நிறம் ,காந்தளூர் வசந்தகுமாரன் கதையும் என்னை இவரிடம் திரும்ப அழைத்து சேர்த்தது.
'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' என்னை அவர் விரலடியில் கட்டிபோட்டனர் -தப்பிக்க முடியாத பிணைப்பு . அதிலும் குறிப்பாக 'பேப்பரில் பேர் ' , 'ஏறக்குறைய ஜினியஸ்' என இறுக்கமான பிணைப்பில்.
ஒரு கதையாசியராக மட்டும் அவர் இருந்திருந்தால் அவர் உயரம் அங்கேயே தங்கியிருக்கும். அவரின் அடுத்த பரிணாமம் எல்லாரும் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் 'Exceeded the Expectation' வகையில் சேர்ந்து கொண்டது. கணையாழியின் கடைசி பக்கத்தில் வாசகர்களை தன அனுபவ படகில் சுற்றி காண்பிக்க ஆரம்பித்தவர் , 'கற்றதும் பெற்றதும் ' எல்லாருக்கும் எடுத்து சொல்லி அவர் வாசக வட்டத்தை பெருக்கிகொண்டார். அதில் தெரிந்தது அவர் ஒரு அஸ்டாவதானி என்பது.
திரைக்கதை எழுதுவது எப்படி ? க்ரைம் கதையின் இலக்கணம் என்ன ? கதைக்குள் விஞ்ஞானத்தையும் , விஞ்ஞானத்துக்குள் (நம்ப கூடிய ) கதையையும் சரியாக புகுத்த செய்யும் விந்தை என்று எல்லாவற்றையும் அறிந்திருந்ததால் , சினிமா உலகத்துக்குள் எவர் தயவும் இல்லாமல் நுழைந்தவர். காயத்ரி தொடங்கி விக்ரம் , ரோஜா , கன்னத்தில் முத்தமிட்டால் , ஆயுத எழுத்து என்று வலம் வந்தவர் ஷங்கருக்கு குருவாக மாறி இந்தியன் ,முதல்வன்,அந்நியன்,சிவாஜி,ரோபோ வரை ஹிட்டுகளை அள்ளிக்கொடுத்தார்.
சரி எழுத்துலகம் , சினிமா உலகம் இரண்டும் ஜொலித்தாயிற்று .. போதும் என ஒதுங்கவில்லை.. அவரின் உண்மையான சேவைக்கு அடிகோல ஆரம்பித்தார் 'ஏன் ?எதற்கு ? எப்படி?'யில்.
எதை வேண்டுமானாலும் கேளுங்கள் ? கடவுளுக்கு அடுத்து சுஜாதா எல்லாவற்றிற்கும் விடை கொடுப்பார்.
- கர்நாடிக் மியூசிக்கா ? கேளுங்க ..
- பௌதீக விளக்கமா ? எடுத்துக்கோங்க..
- உடல் ஆரோகியமா ? உடலின் எந்த பாகமும் எப்படி செயல்படுகிறது ? இதானே கேள்வி.. இந்தாங்க பதில் ..
- அரசியல் நிலவரமா?- உள்ளூர் அரசியலா ?உள்நாட்டு அரசியலா ? உலக அரசியலா? - நான் கட்சி சார்பற்றவன்.. ஆனாலும் இதுதான் பதில்... திருப்தியா ?
- ஆகாயத்துல அப்படி என்னதாங்க இருக்கு ? .. இதோ பதில் ..இதுதாங்க நம்ம யுனிவர்ஸ்.
- இலக்கியமா ? பழைய கவிதை முறைக்கும் புதுக்கவிதைக்கும் என்ன வித்தியாசம் ? - இதோ எடுத்துக்காட்டு ..
இப்படி அவர் தொடாத இடம் , கற்பிக்காத சப்ஜெக்ட் , சொல்லாத கேள்வி என்று எதுவும் இல்லை . அமான்யுச விசயங்களை அலசி அதிலும் கரை கண்டு , மறுக்க முடியாத பதில் சொல்பவர்.
கடவுள் இருக்கிறாரா இல்லையா ? என்று ( ஆத்திகனாக இருந்துக்கொண்டே ) சிந்தித்து அதை எடுத்து கூறியவர். (எனக்கு புரியல )
EVC எனப்படும் எலக்ட்ரானிக் வோட்டிங் மெசினின் தந்தை ; பின் மூளை ..
ஆக மொத்தம் இவர் சும்மா இருக்கவே மாட்டார்.
சுஜாதா சார் .. எதுவும் தெரியாமல் யார் யாரோ அரசியலில் இருந்து கொண்டு மக்களுக்கு புரிய வைக்காததை உங்கள் பேனாவும் தட்டச்சு எந்திரமும் புரிய வைத்தது.
அது சரி .. மக்களுக்கு எல்லாம் புரிந்தால் அரசியல்வாதிகள் பாடு திண்டாட்டம்..எழுத்தாளனுக்கு நல்ல இலக்கணம் வகுத்தது நீங்களே..
காலம் எல்லாவற்றையும் மறக்க வைக்கும் என்று சொல்வீர்கள்.இந்த மூன்று வருடங்கள் உங்களை எதுவும் எங்களிடம் இருந்து பிரிக்கமுடியவில்லை.
இப்போது எங்கு இருக்கறீர்கள் ? இப்போதும் ' மரணத்துக்கு பிறகு..' என்னவென்று ஆராய்ச்சி செய்து கொண்டோ அல்ல உங்கள் ஆசைப்படி நரகத்தை, நரக வாழ்கையை அனுபவித்து எழுதிகொண்டிருக்கறீர்களா? மறுபிறவி உண்டா என்று கண்டுபிடித்து விட்டீர்களா ? ஆம் என்றால் சீக்கிரம் வாருங்கள் .உங்கள் இடம் காலியாகவே இருக்கிறது .. ஆனாலும் அதிசயம் , அது காலியாக இருந்தாலும் இன்று வரை ஏதோ ஒன்றை கற்றுகொடுத்துக்கொண்டே இருக்கிறது..
6 comments:
சுஜாதா பற்றி தாக்கத்தை அதிகப்படுத்தியது
நன்றி
குருநாதரின் இழப்பு மிகப்பெரியது .. :(
இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும் !-விஞ்ஞான விளக்கம்
காலம் மாறினாலும் அவரின் எழுத்துகளுக்கு இன்னும் இளமை மாறவில்லை
சுஜாதா புக்ஸ் படிக்கும் ஆர்வம் உள்ளவர் ஆனால் இங்க வாங்க
http://gundusbooks.blogspot.com/
நன்றி நண்பர்களே .. நீங்கள் அறிமுகபடுத்திய பக்கங்கள் மிக அருமை ..
அருமையான சுஜாதா நினைவுகள். தமிழ்படிக்கத்தெரிந்த அனைவருமே அவரின் எழுத்துக்கு அடிமைகள்தான்.
இன்னும் கடந்து போக வேண்டும்...
ஒரு முக்கியமான ஆதங்கம் உங்கள் பதிவு .
ஆனால்அங்கேயே நின்று விடாதீர்கள்.
சுஜாதாவின் படைப்பில் உங்களுக்குள் தாக்கம் இருப்பின்
அது அவரை தாண்டி படிப்பதுதான் .இதுவே அவரின் நமக்கு காட்டிய வழியும்கூட.
ஆனால் அந்த இடம் இப்போது வேறு பரிணாமம் அடைந்து இருக்கிறது .
இன்னும் கடந்து போக வேண்டும் பல காத தூரம் நண்பரே !
--
என்றென்றும் அன்புடன் ,
சுகி ...
Post a Comment